தானியேல் 1 விளக்கவுரை
1ம் அதிகாரம்
தானியேல் 1 விளக்கவுரை: யூதாவின் ராஜாவகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே (எபிரேய கணக்கின்படி அது 4ம் வருஷம் – எரே.25:1) பாபிலோன் ராஜா. நேபுகாத்நேச்சார் எருசலேமைப் பிடித்து. தேவாலயப்பாத்திரங்களையும். ராஜாவையும் மற்றும் தானியேல் போன்ற யூதர்களையும் சிறைப்பிடித்துப் போனான். இது கி.மு. 604ல் நடந்தது. இரண்டாம் சிறைப்பிடிப்பு கி.மு.597யிலும், 3ம் சிறைப் பிடிப்பு கி.மு. 586லிலும் நடந்தன. எருசலேம் தேவாலயப் பாத்திரங்களை சினேயாரில் ராஜா தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான். இஸ்ரேல் புத்திரருக்குள்ளே. ராஜா குலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும். ராஜாவின் அரண்மனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர் களுமாகிய சில வாலிபர்களையும் ராஜா தெரிந்து கொண்டான். அவர்களில், தானியேல், அனனியா. மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தனர். ராஜாவின் உத்திரவுப்படி.
பிரதானிகளின் தலைவன் அஸ்பேனாஸ் என்பவன். அவர்களுக்கு.
- (1) கல்தேயர் பாஷையை கற்றுக் கொடுத்தான்.
- (2) ராஜாவின் போஜனமும். குடிக்கும் திராட்சைரசமும் பரிமாறினான்.
- (3) தன்தெய்வப் பெயர்களை. தானியேலுக்கு பெல்தெஷாத்சர் என்றும். அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும். அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் இட்டான்.
இதன் தாற்பரியத்தைப்பாருங்கள்:-
மொழி. உணவுமுறை. பெயர் போன்றவை எந்த அளவுக்கு ஒரு மனிதனின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், தெய்வீகம் போன்றவற்றில் கலந்திருக்கிறது என்பதை உணருங்கள். பாபிலோனிய ராஜா இதை உணர்ந்திருக்கிறான்.
நம்மவர்களோ இதைப்பற்றி சிந்திப்பதே இல்லை (கிறிஸ்தவனான பின்னும் அந்நிய தெய்வப் பெயரால்தான் அழைக்கப்படுகின்றான்).மூன்று வருடமுடிவில் இவர்களை வளர்த்து. கொழுமையாக்கி ராஜாவிடம் கொண்டுவர வேண்டும் என்பது அல்பேனாசுக்கு கட்டளை.
ஆனால், இந்த 4பேர் மட்டும் ராஜாவின் போஜனமும் பானமும் தீட்டுப்படுத்தும் என்று பிரதானியிடம் சொன்னபோது, அவன் ராஜாவுக்குப் பயந்தான். எப்படி இது தீட்டாகும்? அசைவ உணவு என்பதால் அல்ல, (சில சபையார்.
இவர்களைக் காரணம் காட்டி அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்கின்றனர்). ஏதேனில் தேவன் மனிதனை வாழ வைத்தபோது அவரின் பரிபூரணசித்தம் சைவ உணவுதான். (ஆதி. 1:29.30); ஆனால், உலக சூழ்நிலைகளின் நிமித்தம், நோவா இலப்பிரளயத்துக்குப்பின், அசைவமும் தேவன் அனுமதித்தார்.
40 வருட வனாந்திர வாழ்க்கையில் கூட மன்னா மட்டுமே கொடுக்கப்பட்டும்; இஸ்ரேலரின் வேண்டுதலினிமித்தமே இறைச்சி கொடுக்கப்பட்டது. 1000 வருட ஆட்சியிலும், நித்தியத்திலும் அசைவம் இல்லை. அசைவம் சாப்பிடுவது பாவமல்ல. அது மனித சரீரத்தை. சுபாவங்களை கெடுத்துவிடக்கூடாது. அதனால்தான் இறைச்சிகளிலே சுத்தமான மிருகம். அசுத்தமான மிருகம் என்று தேவன் பிரித்துக் காட்டினார். அந்த நாலுபேரும்.
ராஜாவின் போஜனம் விக்ரகத்துக்குப் படைக்கப்பட்ட அசைவ உணவு என்பதாலும், புறஜாதியார் மத்தியிலே தாங்கள் யாரென்று காட்ட வேண்டும் என்பதாலும், (see 1 கொரி.10:28) அதைப் புசிக்க மறுத்தனர். இதனால் ராஜாவுக்கு பயந்த. விசாரிப்புக் காரணான. மேல்ஷாரிடம்.
“10 நாள் வரை பருப்பு முதலான மரக்கறியையும். தண்ணீரையும் கொடும். அதன் பின் எங்கள் முகங்களைப் பாரும்; உம் இஷ்டப்படி அப்போது செய்யும் என்று தானியேல் கேட்டுக் கொண்டான். 10 நாள் சென்றபின்பு. ராஜ போஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப் பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும். சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது (தானி.1:15).எனவே. மரக்கறி உணவே தொடரப்பட்டது. அடிமை நிலையில் இருந்தாலும் அப்.2:40 ன்படி. மாறுபாடுள்ள சந்ததியை விட்டு எல்லாக் காரியத்திலும் விலகியிருந்தனர்.
தேவநாமத்தைப் பரிசுத்தப்படுத்தினால் (Setapart – பிரித்தெடுத்தல். பிரத்யேகம் பண்ணுதல்) அவர் உன்னை வித்தியாசமாய் நடத்துவார். அதன்படியே, இந்த 4 பேருக்கும் கர்த்தர் சகல எழுத்திலும். ஞானத்திலும். அறிவிலும், சாமார்த்தியத்தைக் கொடுத்தார். (தானி.1:17) தானியேலை சகலதரிசனங்களையும், சொப்பனங்களையும். அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். குறித்த நாட்கள் முடிந்தபின் அவர்கள் ராஜாவிடம் கொண்டு வரப்பட்டார்கள்.
அவர்கள எல்லோருக்குள்ளும் இந்த 4 பேரைப் போல வேறொருவரும் காணப்படவில்லையாதலால். ராஜா இவர்களை தன் சமூகத்திலேயே வைத்துக்கொண்டான். அந்த நாட்டிலுள்ள சகல சாஸ்திரிகளிலும், ஜோஸ்யர்களிலும், இவர்கள் பத்துமடங்கு ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த விஷயத்தில் சமர்த்தராய் இருந்தனர் (தானி.1:20).
இதை வாசிக்கும் தேவபிள்ளையே! நீ எங்கே எந்த நிலையில் இருந்தாலும் தேவனைச் சார்ந்து வாழ்ந்தால் தேவன் உன்னை உயர்த்துவார். அல்லேலூயா! அதனால்தான். தானியேல். மேதிய பெர்சியராஜா கோரேஸ் காலம் வரைக்கும் அரண்மனையில் இருந்தான் (தானி.1:21: 10:1).
தானியேல் 1 விளக்கவுரை