தானியேல் 2 விளக்கவுரை

தானியேல் 2 விளக்கவுரை

தானியேல் 2 விளக்கவுரை

2ம் அதிகாரம் (சிலைகனவு)

தானியேல் 2 விளக்கவுரை: பாபிலோன்ராஜா, நேபுகாத்நேச்சார் சொப்பனம்கண்டு. கலங்கி. அதன் அர்த்தத்தை சொல்லவேண்டுமென்று சாஸ்திரிகளையும். ஜோசியரையும், சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைத்தான்.

(1) சாஸ்திரிகள் (Astrologist) :-

வானத்து நட்சத்திரங்களைப் பார்த்து. எதிர்காலத்தை கணித்துச் சொல்பவர்கள் இயேசு பிறந்தபோதுவந்த சாஸ்திரிகள் இப்படிப்பட்டோர்தான். திருமணம். நல்லநாள் எல்லாவற்றையும் கணிப்பவர்கள். சிருஷ்டிகரைப் பாராமல், சிருஷ்டிகளைப் பார்க்கிறவர்கள்.

(2) ஜோஷ்யர்கள்:-

பூமியிலே உள்ள காரியங்களை வைத்து. எதிர்காலத்தை சொல்பவர்கள். இதில் பலதரப்பட்டவர்கள் உண்டு.

(a) பழைய காலத்தில் களிமண்ணால் ஈரலின் படிமங்களை உருவாக்கி, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் எழுதி வைப்பார்கள். பலன் சொல்ல வேண்டுமென்றால். ஆட்டைப் பலியிட்டு ஈரலை எடுத்து. அதன் படிமத்தின் தோற்றப்படி உள்ள களிமண் படிமம் சம்பந்தமான பலனைச் சொல்வார்கள்.

(b) தண்ணீரை பாத்திரத்தில் எடுத்து, அதிலே எண்ணெய் ஊற்றி. எண்ணெய்ப் படல உருவத்துக்கேற்ற பலன் சொல்வார்கள்.

(c) கிளியை வைத்து ஜோஷ்யம் சொல்வார்கள்.

d) கழுதை கத்துதல், பல்லி கத்துதல். பூனை குறுக்கே வரல். விதவை எதிரில் வரல், கால் தட்டுதல். மணி அடித்தல், தும்முதல், தாயக் கட்டை உருட்டுதல் போன்றவைகளை வைத்து பலன் கூறுவார்கள்

தற்கால கிறிஸ்தவர்களும்கூட, 66 வேதப்புத்தகங்கள் இருந்தும். தங்கள் எதிர்காலத்தை இப்படிப்பட்டவர்கள் மூலமே கேட்க ஓடுகின்றனர்.

3) தானியேல் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் விளக்கவுரை

சூனியக்காரர்கள்:-

வானத்தை வைத்தோ.பூமியை வைத்தோ அல்ல. மரித்து போனவர்களின் ஆவிகளோடு பேசி. எதிர்காலம்பற்றி சொல்கிறோம் என்பவர்கள். சாத்தானின் பெரும் வஞ்சகங்களில் ஒன்று, இறந்து போனவர்களின் ஆவிகளோடு பேசமுடியும் என்பது. அப்படியானால் பிர.12:7 பொய்யா? அன்றைக்கு சவுவிடம் ஆனியக்காரி செய்த ஏமாற்றுவேலை இதுதானே! இதுகுறித்து ஆசிரியரின், “சாமுவேலின் ஆவியை அஞ்சனக்காரி. எழுப்பினாளா?” என்ற செய்தியை, “தெரிந்து கொள்ளுங்கள் – பாகம் – 2′ என்ற நூலில் வாசிக்கவும்.

4) கல்தேயர்:-

(Neumaralogy) பாபிலோனிய பல்கலைக்கழகத்தில், கணித்துறையில் பட்டம் பெற்று. எண்களை கூட்டி வகுத்து, கழித்து. பெருக்கி, அதை வைத்து எதிர்காலம் சொல்பவர்கள். நமது ஆவிக்குரிய சபைகளிலும், இப்படிப்பட்டவர்கள், அமெரிக்கா விலிருந்து இறக்குமதியாகியிருக்கின்றனர்.

ராஜாவின் ஆணை

சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் அறிவியாமற் போனால் துண்டித்துப் போடப்படுவீர்கள் என்று ராஜா ஆணையிட்டான். சொப்பனத்தையே அறியாமல், எப்படி விளக்குவது என்று அவர்கள் தவித்தனர். இதுவரை இப்படி எந்த ராஜாவும் கேட்டதில்லை என்று ராஜாவிடமே சொல்லி. மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய. ராஜசமூகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள் (தானி.2:10.11). மாம்சமான நம்மோடு வாசம் பண்ணுகிற நம் தேவனால் இதுகூடும் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள். ராஜா கோபம் கொண்டு. அவர்கள் எல்லோரையும் (தானியேலையும் அவன் தோழரையும் சேர்த்து ) கொல்ல.தலையாரிகளுக்கு அதிபதிபதியாகிய ஆரியோகோடுக்கு உத்திரவிட்டான். இந்த விஷயத்தை தானியேல் அறிந்து. ஆரியேகோடிடம், சொப்பனத்தையும் அர்த்தத்தையும் சொல்ல ராஜாவிடம் தவணை கேட்கச் சொன்னான். தவணையும் கிடைத்தது.

தவணையின் காலத்தில், தானியேலும். அவன் நண்பர்களும். மறைபொருளை விளக்கும்படி தேவனிடம் வேண்டினார்கள். இராக்கால தரிசனத்தில் மறைபொருள் வெளிப்பட்ட உடனேயே. தேவனைத் துதித்தான். அவருடைய குணாதிசயங்களை (character). அவருடைய வல்லமையை (power), அவருடைய மகத்துவத்தை (mighty) புகழ்ந்தான் (தானி.2:20.21). ” பாபிலோனின் ஞானிகளை அழிக்க வேண்டாம். என்னை ராஜா முன் கொண்டுபோ. அர்த்தத்தை தெரிவிப்பேன்” என்று தானியேல், ஆரியோகோடிடம் சொல்ல. அவனும் ராஜாவிடம் அழைத்துப் போனான். “சொப்பனத்தையும். அதின் அர்த்தத்தையும் சிறைப்பட்டு வந்திருக்கிற, யூதா தேசத்தானாகிய உன்னால் சொல்ல முடியுமோ? “என்று ராஜா ஏளனமாய்க் கேட்டான்.” ஞானிகளால் கூடாதது. பரலோக தேவனால் கூடியது” என்று தானியேல் பதிலளித்து தேவனை மகிமைப்படுத்தினான் (தானி.2:27.28).

தானியேல் சொன்ன சொப்பனத்தின் மறைபொருளாவன:

ராஜா, பெரிய பிரகாசமான சிலையைக் கண்டான். அதன் தலை பொன்: மார்பும் புயமும் வெள்ளி; வயிறும் தொடையும் வெண்கலம்: கால்கள் இரும்பு: பாதங்களும் விரல்களும் பாதிஇரும்பு பாதிகளிமண். ஒருகல் மலையிலிருந்து உருண்டுவந்து சிலையின் பாதங்களில் மோதி. மொத்த சிலையையும் நொறுக்கிப்போட்டது. பின், அது பெரிய பர்வதமாகிய பூமியெல்லாம் நிரப்பிற்று (தானி.2:31-35).

விளக்கம் :-

பொன்னான தலை பாபிலோன் ராஜ்யம் (நேபுகாத்நேச்சார்). அதற்குப் பின் ஒன்றன்பின் ஒன்றாய், வெள்ளி போன்ற ராஜ்யம், வெண்கலம் போன்ற ராஜ்யம், இரும்பு போன்ற ராஜ்யம் எழும்பும். கடைசியில் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமான ராஜ்யம் வரும் ஆனால் இந்த ராஜ்யத்தில் எல்லாரோடும் சம்பந்தங்கலப்பார்கள்: ஆனாலும் இரும்பும் களிமண்ணும் போல ஒருவரோடொருவர் ஒட்டிக் கொள்ள மாட்டார்கள். காலம் மாற மாற ஒவ்வொரு ராஜ்யங்களின் மதிப்பும், பலமும். வல்லமையும் எப்படி குறைகிறது என்று பாருங்கள். கடைசியாய் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார். எப்படி? ஒரு கல் வந்து. இவைகளை நிர்மூலமாக்கி பூமியெங்கும் நிற்கும். ஆமென்!

இது குறித்து சரித்திரம் என்ன சொல்கின்றது என்று பார்ப்போம்?

(சரித்திரம். விஞ்ஞானம், பூகோளம் எல்லாவற்றாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரே வேதம் நம் வேதம்).

கி.மு. 606 முதல். இதுவரை உலகிலே 4 சாம்ராஜ்யங்கள்தான் எழும்பியுள்ளன.

  • 1. பாபிலோன் (கி.மு.606 முதல் 538 வரை)
  • 2. மேதிய – பெர்சிய (கி.மு.538முதல் 330 வரை)
  • 3. கிரேக்கம் (கி.மு.330 முதல் 325வரை). அதன்பின் இது.திரேஸ். மெசபத்தோமியா, சிரியா, எகிப்து என்று நான்கு பிரிவாய் பிரிந்து இயங்கியது. இதிலுள்ள எகிப்தை. ரோமர் கி.மு.30ல் பிடித்தனர்.
  • 4. ரோமர் (கி.மு.168 முதல் ஆண்டாலும் இஸ்ரேலரை கி.மு.63 முதல் கி.பி 364 வரை ஆண்டது);

இந்த ரோம ராஜ்யம், கிபி.364ல். கிழக்கத்திய ரோம் என்றும். மேற்கத்திய ரோம் என்றும் இரண்டாய்ப் பிரிந்தது. கி.பி.476ல் மேற்கு ரோமராஜ்யம் வீழ்ந்துபோனது. கி.பி.1453ல் கிழக்கு ரோமராஜ்யம் வீழ்ந்துபோனது.

இதைத்தான் வெளி.13ல் சொல்லப்பட்ட சாவுக்கேதுவான காயமாகும். இதற்குப் பிறகு எந்த ஒரு உலக சாம்ராஜ்யமும் இதுவரை எழும்பவில்லை. இயேசுவாகிய கல் இறுதியில் வரும்போது. பாதிகளிமண் பாதி இரும்பு -10 ராஜா (பாதங்களின் 10 விரல்கள்) கொண்டு ராஜ்யம் இருக்கும்.(இது குடியாட்சியும் சுயாட்சியும் நிறைந்த Autocratic Democracy யாக இருக்கும்) இதைத்தான் தானி.7:7.8ல் 10 கொம்பு (மிருகம்) என்றும், வெளி. 17:12ல் 10 கொம்பு என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த 10 ராஜ்யங்கள் – ராஜாக்களிலிருந்துதான். ஒருவன் – ஒரு சின்ன கொம்பு -எழும்புவான். அப்போதுதான்.

இயேசுவாகிய கல். இந்த ஒரு ராஜாவையும். அந்த சிலை சம்பந்தப்பட்ட அத்தனை புறஜாதி ராஜ்யங்களையும் அழித்துப்போடும் (see. மத்.21:44). இந்த ஒரு ராஜாவோடு, புறஜாதியார் காலம் முடிந்துபோகும் (sec லூக்.21:24). இது அர்மகதோன் யுத்தத்தில் நிறைவேறும். அதன்பின் இயேசுவின் ராஜ்யம் பூமியெங்கும் பரவும்.

தானி.2:5ல், ‘

‘இனிமேல் சம்பவிக்கப் போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார். சொப்பனமானது நிச்சயம். அதின் அர்த்தம் சத்தியம்'” என்று தானியேல் சொன்ன உடனேயே. ராஜா. தானியேல் முன் முகங்குப்புற வணங்கி. காணிக்கை செலுத்தவும். தூபங்காட்டவும் தொடங்கினான். அடிமையாய் சிறைப்பிடிக்கப் பட்டவனுக்கு. அறிவை உணர்த்தி, சக்கரவர்த்தியையே வணங்கும்படி செய்த நம் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை. எந்த ராஜா.தானி. 2:26ல். தானியேலை ஏளமாய்க் கேட்டானோ, எந்த ராஜா. தேவனின் பெயரை மாற்றி தானியேலுக்கு தன் தெய்வப் பெயரை வைத்தானோ. எந்த ராஜா.

விக்ரகங்களுக்குப் படைக்கப்பட்டதை உணவாய்த் தந்தானோ, எந்த ராஜா தன் பாஷையைக் கற்றுக் கொள்ளச் சொன்னானோ. அந்த ராஜா. ‘தானியேலின் தேவனே தேவன் என்றான் (தானி. 2:47) அல்லேலூயா!

வெகுமதிகளைக் கொடுத்தான்; பாபிலோன் முழுவதுக்கும் அதிகாரியாகவும், சகலஞானிகள் மேலும் பிரதான அதிகாரியுமாக்கினான்: தானியேலின் வேண்டுதலின்படி. அவனது நண்பர்கள் மூவரும் பாபிலோன் மாகாண காரியங்களை விசாரிக்கும்படி ஆக்கப்பட்டார்கள். தானியேலோ ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான்.

இதை தியானிக்கும் தேவபிள்ளையே! தேவனை முன்னிறுத்தி. தேவனுக்காய் உண்மையும் உத்தமுமாயிருந்தால். அவர் சகல ஞானத்தையும், மகிமையையும் அருளுவார்: துன்பங்களோடே இம்மையிலே நூறத்தனை ஆசிர்வாதமும் தருவார் (மாற்.10:30) ஆமென்! இந்த சிலை. கல், நொறுக்குதல். பூமியை நிரப்புதல் பற்றியெல்லாம் இன்னும் அதிகமான விளக்கங்கள். வரக்கூடிய அதிகாரங்களில் கிடைக்கும்.

 

Leave a Reply