கிறிஸ்துவில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்
பெண்ணின் வித்து
ஆதியாகமம் 3: 15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
கலாத்தியர் 4: 5 காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
ஆபிரகாமின் சந்ததி
ஆதியாகமம் 22: 18 நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
கலாத்தியர் 3: 16 ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள்பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.
யூதாவின் சந்ததி
ஆதியாகமம் 49: 10 சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
எபிரெயர் 7: 14 நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.
மோசேயைப்போன்ற தீர்க்கதரிசி
உபாகமம் 18: 15
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3: 21
உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3: 22
மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3: 23
அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்.
கிறிஸ்துவுக்கு எதிர்ப்பு.
சங்கீதம் 2: 1
ஜாதிகள் கொந்தளிப்பானேன்? ஐனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?
சங்கீதம் 2: 2
கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 25
புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 26
கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 27
அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 28
ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.
உயிர்த்தெழுதல்
சங்கீதம் 16: 10
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.
மாற்கு 16: 14
அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:24-32
ஏளனம்பண்ணப்படுதல்
சங்கீதம் 22:6-8
மத்தேயு 27:39-43.
ஆடைகள் பங்கிடப்படுதல், சீட்டுப்போடுதல்
சங்.22:18
யோவா.19:23-24.
எலும்புகள் முறிக்கப்படுவதில்லை
சங்.34:20
யோவான்.19:33-36.
நண்பன் துரோகியாதல்
சங்.41:9
மத்.26:14-16.
பரலோகத்திற்கு ஏறிப்போதல்
சங்.68:18
அப்.1:9; எபே.4:8. மத்.27:34.
கசப்பு கலந்த காடி கொடுக்கப்படுதல்
சங்.69:21
மத்தேயு 27:34
வலதுபாரிசத்தில் உட்காருதல்
சங்.110:1
மாற்.16:19; எபி.1:13. எபி.7:17-20.
மெல்கிசேதேக்கின் முறையில் பிரதான ஆசாரியர்
சங்.110:4
எபிரேய 7:17-20
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல் மூலைக்குத் தலைக்கல் ஆகுதல்
சங்,118:22
அப்:4:11-12.
கன்னியின் மகனாகப் பிறந்தல்
ஏசா.7:14
மத்தேயு.1:20-25.
செபுலோன் நப்தலி பகுதிகளில் ஊழியம்
ஏசா.9:1-2
மத்.4:12-16.
பாலகன் பிறந்தார், குமாரன் கொடுக்கப்பட்டார்
ஏசா.9:6
லூக்.2:11-12; 1 யோவா.4:9,
சீயோனில் திட அஸ்திபாரமுள்ள மூலைக்கல்
ஏசா.28:16
1பேது.2:6.
பிரியமானவர்
ஏசா.42:1
மத்.3:17, 19
முகத்தில் துப்பப்படுதல்
ஏசா.50:6
மத்.26:67-68; 27:30.
அசட்டைபண்ணப்படுதல்
ஏசா.53:3
யோவான்.1:11.
வியாதிகளையும் பாடுகளையும் சுமத்தல்
ஏசா.53:4-5
மத்.8:16-17.
நமது பாவங்களுக்காகப் பாடுபடல்
ஏசா.53:5
1 பேதுரு .2:24.
பணக்காரரின் கல்லறையில் அடக்கம்
ஏசா.53:9
மத்தேயு.27:57-60.
ஆத்துமாவை மரணத்தில் ஊற்றுதல்
ஏசா.53:12
லூக்.23:46.
தேவனுடைய ஆவியானவர் அவர்மேல் இருத்தல்
ஏசா.61:1
லூக்.4:18-21.
தாவீதின் சந்ததி
எரே.23:5
மத்.1:1; ரோம.1:4-5
மேசியா சங்கரிக்கப்படுதல்
தானி.9:26
மாற்.15:25.
எகிப்தினின்று திரும்புதல்
ஓசி.11:1
மத்.2:14,21,
பெத்லகேமில் பிறத்தல்
மீகா 5:2.
லூக்.2:5-7.
கழுதையின்மீது பவனி’
சக.9:9
மத்.21:4-9.
கிரயம் 30 வெள்ளிக்காசுகள்
சக.11:12
மத்.26:15.
வெள்ளிக்காசுகள் ஆலயத்தில் எறியப்படுதல், குயவனின் நிலம் வாங்கப்படுதல்
சக.11:13
மத்.27:5-10,
தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்த்தல்
சக.12:10
யோவான். 19:34-37.
மேய்ப்பனை வெட்டு, மந்தைகள் சிதறடிக்கப்படும்
சக.13:78
மத்.26:31.