மெசொப்பொதாமியா (Video
மெசொப்பொதாமியா Audio Player
வேதாகம இடங்கள்: மெசொப்பொத்தாமியா MESOPOTAMIA
மெசொப்பொதாமியா (Mesopotamia), பண்டைய அண்மை கிழக்கின் தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான வண்டல் மண் பகுதியாகும். அதாவது “மெசொப்பொத்தாமியா” என்னும் எபிரெய பெயருக்கு ‘Aram Naharayim “இரண்டு நதிகளின் அராம்” “Aram of the two rivers” என்று பொருள்.
இதன் வடக்குப் பகுதிகளை மேல் மெசொப்பொத்தேமியா என்றும், தெற்குப் பகுதிகளை கீழ் மெசொப்பொத்தேமியா என்றும் பிரிப்பர்.
இது இன்றைய ஈராக், சிரியா மற்றும்
வடமேற்கு ஈரான், துருக்கியின்
தென்கிழக்குப் பகுதிகளை இது
உள்ளடக்கியிருந்தது. இதன் மேற்கில் சிரியப் பாலைவனத்தாலும், தெற்கில்
அராபியப் பாலைவனத்தாலும்,
தென்கிழக்கில் பாரசீக வளைகுடாவினாலும், கிழக்கில்
சக்ரோசு மலைத்தொடர்களாலும், வடக்கில் சிஞ்சார் மலைகளாலும் சூழப்பட்ட மேற்சொன்ன டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறுகளின் சமவெளிகள் முழுவதையும், சுற்ற
தாழ்நிலப் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பழைய சுமேரிய நாகரிகம், அக்காதிய நாகரீகம், பாபிலோனிய நாகரிகம் மற்றும் சாலடிய நாகரிகம் போன்ற பண்டைய நாகரிகங்கள் தழைத்தோங்கியிருந்த இடம் என்ற
வகையில் மிகவும் புகழ் பெற்றது. மெசொப்பொதேமியாவில் சுமேரியர்கள் அறிமுகப்படுத்திய
ஆப்பெழுத்து எழுத்து முறைமை,
உலகின் மிகப் பழைய எழுத்து முறைமைகளுள் ஒன்று. இது
மெசொப்பொத்தேமியா உலக நாகரிகத்தின் தொட்டில் என்று
புகழப்படக் காரணமாயிற்று.
சமயம் மற்றும் தத்துவம்
மெசொப்பொத்தேமியா, சுமேரியர், அக்காதியர்,அசிரியர் மற்றும் பபிலோனியர் போன்றோரின் நாகரிகங்களையும் உள்ளடக்கிய பல பண்டைய நாகரிகங்கள் வளர்ந்தோங்கிய ஒரு இடமாகும்.
இப்பிரதேசத்துக்குள் எப்பொழுது நுழைந்தார்கள் என்பதில் அறிஞர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், சுமேரியர்களே இங்கு முதன் முதலில் குடியேறியவர்களென நம்பப்படுகிறது. மெசொப்பொத்தேமியா சமயமே முதலில் பதியப்பட வேண்டியதாகும். மெசொப்பொத்தேமியர்கள் உலகம் தட்டையானது. அது மிகப்பெரிய வெளியில் சூழப்பட்டுள்ளது. அதற்குமேல் சொர்க்கம் உள்ளதென நம்பினர். அதே போன்று நீரானது மேலே,கீழே மற்றும் பக்கங்களிலென எல்லா இடத்திலும் இருப்பதாகவும் நம்பினர். பிரபஞ்சமானது கடலிலிருந்து பிறந்தாக நம்பினர். அவர்கள் மதத்தையும் பின்பற்றினார்கள். மெசொப்பொத்தேமியாவெங்கும் பிராந்திய வேறுபாடுகள் இருப்பினும் மதம் சார்ந்த நம்பிக்கைகள் பொதுவாக ஒன்றாகவே இருந்தன.
சுமேரியச் சொல்லான “அன்-கி” என்பது “அனு” என்ற ஆண்கடவுளையும் “கி” என்ற பெண்கடவுளையும் குறிக்கும்.. அவர்களுடைய மகன் என்லில் வாயுக் கடவுளாவார்.என்லில் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் என அவர்கள் நம்பினர். இவரே பாந்தியன்களின் முதன்மைக் கடவுளாவார்.இவர் கிரேக்கக் கடவுளர்களான சூயஸ், ரோமானியக் கடவுளான ஜூபிடர் ஆகியோருக்கு இணையாகக் குறிப்பிடப்படுகிறார். மேலும் நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? இங்கு எப்படி பிறந்தோம்? போன்ற தத்துவ வினாக்களும் சுமேரியர்களிடையே இருந்தன. இதற்கான விடைகளும் விளக்கங்களும் அவர்களின் கடவுளிடமிருந்து வந்தவை என நம்பினர். தத்துவங்களின் தோற்றமெனக் கருதக் கூடியப் பண்டைய மெசொப்பொத்தேமியா தத்துவங்கள் அவர்களின் ஆழ்ந்த அறிவைப் புலப்படுத்துகின்றன.
அரசர்கள்
மெசொப்பொத்தேமியர்கள் தங்களுடை அரசன், அரசி ஆகியோரைக் நகரின் கடவுளர்களாக நம்பினர். ஆனால் பண்டைய எகிப்தியர்கள் தங்களுடை அரசர்களை எப்போதும் கடவுளாக நம்பியதில்லை.[36] பெரும்பாலான மன்னர்கள் ‘பிரபஞ்சத்தின் மன்னர்’ ‘பேரரசர்’ போன்ற பெயர்களைத் தாங்களாகவே சூட்டிக்கொண்டனர். மற்றொரு பொதுவான பெயர் ‘மேய்ப்பர்’ ஆகும் தன் மக்களைப் பாதுகாப்பதால் அவ்வாறு அழைக்கப்பட்டார்.
அதிகாரம் தொகு
அசிரியா பேரரசாக வளர்ச்சியுற்றபோது, மாகாணங்கள் என்ற இரண்டு பகுதிகளாகப் பிரிந்தது.அவை ஒவ்வொன்றும் அதன் முக்கிய நகரத்தின் பெயரால் அழைக்கப்பட்டன. நினெவே, சமாரியா, டமாஸ்கஸ், அர்பத் ஆகியன அவற்றில் சிலவாகும். ஒவ்வொரு நகரமும் அதற்கெனத் தனிப்பட்ட ஆளுநரால் நிருவாகிக்கப்பட்டது. இவர்கள் மக்கள் செலுத்த வேண்டிய வரிகளைக் கண்காணித்தனர். இவ்வாளுநர்கள் போர்க்காலங்களின் படைவீரகளை வைத்திருக்கவும் கோவில் கட்டுமானத்திற்கான பணியாட்களை வழங்கும் அதிகாரமும் பெற்றிருந்தனர். இவர்கள் அரசின் சட்டங்களை அமலாக்கும் பொறுப்பில் இருந்தனர். எனவே மிகப்பெரிய கட்டுக்கோப்புடன் வைத்திருக்க எளிதானதாக இருந்தது. பாபிலோனியா சுமேரியர்களின் மிகவும் அமைதியான, இறையாண்மை மிக்க நகரமாகும். இது ஆட்சியாளர் ஹமுராபியின் ஆட்சி காலத்தில் மிகப்பெரிய குறிப்பிடத் தக்க வளர்ச்சியினை அடைந்தது. இவர் சடடத்தை உருவாக்கியவராக அறியப்படுகிறார். விரைவில் பாபிலோன் மெசொப்பொத்தேமியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக ஆனது. பின்னாளில் இது கடவுளர்களின் நுழைவாயிலென அழைக்கப்பட்டது.
மெசொப்பொத்தேமியாவின் நகரங்கள்:
பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்
நினிவே, நிம்ருத், அசூர், ஊர், பாபிலோன், ஈலாம்
வேதாகமத்தில் மெசொப்பொத்தாமியா
ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்குக்கு பெண் பார்ப்பதற்காக தன் வேலைக்காரனை நாகோரிடம் மெசொப்பொத்தாமியாவுக்கு அனுப்பினார் (ஆதி 24:10).
பின்பு அந்த ஊழியக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டுபோனான்; தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும் அவன் கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊரில் சேர்ந்து,
ஆதியாகமம் 24:10
பிலேயாம் மெசொப்பொத்தாமியாவிலுள்ள பேத்தோரிலிருந்து வந்தவன் (உபா 23:4).
நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும், தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினிமித்தமும், உன்னைச் சபிக்கும்படியாய் மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் குமாரன் பிலேயாமுக்குக் கூலி பேசி அவனை அழைப்பித்ததினிமித்தமும் இப்படிச் செய்யவேண்டும்.
உபாகமம் 23:4
நியாயாதிபதிகளின் காலத்தில் எபிரெய ஜனங்களை ஒடுக்குவதற்காக தேவன் மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான் ரிஷதாயீம் என்பவனை அனுப்பினார் (நியா 3:8, 10).
கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள்.
நியாயாதிபதிகள் 3:8
அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்பண்ணப் புறப்பட்டான்; கர்த்தர் மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவன் கை கூசான்ரிஷதாயீமின்மேல் பலங்கொண்டது.
நியாயாதிபதிகள் 3:10
எமோரியர் தாவீதின் மீது யுத்தம்பண்ணியபோது அவர்கள்மெசொப்பொத்தாமியாவிலிருந்து இரதங்களையும் குதிரை வீரர்களையும் கூலிக்கு அமர்த்தினார்கள் (1நாளா 19.6).
அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஆனூனும் அம்மோன் புத்திரரும் மெசொப்பொத்தாமியாவிலும் மாக்காசோபா என்னும் சீரியரின் தேசத்திலுமிருந்து தங்களுக்கு இரதங்களும் குதிரை வீரரும் கூலிக்கு வரும்படி ஆயிரம் தாலந்து வெள்ளி அனுப்பி,
1 நாளாகமம் 19:6
பெந்தெகொஸ்தே நாளின் போது எருசலேமில் கூடியிருந்த ஜனங்களில் மெசொப்பொத்தாமியா ஊராரும் இருந்தார்கள் (அப் 2:9).
பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
அப்போஸ்தலர் 2:9
ஆபிரகாம் கல்தேயருடைய பட்டணமான ஊரைச் சேர்ந்தவர் இது செசொப்பொத்தாமியாவிலுள்ளது (அப் 7:2).
அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:
அப்போஸ்தலர் 7:2