ஆரான் – HARAN
“ஆரான்” என்னும் எபிரெய பெயருக்கு “இளைப்பாறுதல்” “rest, cessation” என்று பொருள்.
மெசப்பத்தோமியாவின் வடக்கு பகுதியிலுள்ள ஒரு பட்டணம். இங்கு ஆபிரகாமும் அவருடைய தகப்பன் தேராகுவும் சிறிது காலம் வாசம் பண்ணினார்கள் (ஆதி 11:31-32; 12:4-5). ஆபிரகாமின் சகோதரன் நாகோரும் இந்த பட்டணத்தில் குடியிருந்தார். யாக்கோபும் அவருடைய மனைவி ராகேலும் இங்கு குடியிருந்தார்கள் (ஆதி 28:10; 29:4-5). இந்த பட்டணம் நினிவேயிலிருந்து வடமேற்கே 240 மைல் தூரத்திலும் தமஸ்குவிலிருந்து வடகிழக்கே 280 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. ஆரானில் குடியிருந்தவர்கள் சீன் என்னும் நிலா தெய்வத்தை வழிபட்பார்கள். பிற்காலத்தில் அசீரியர்கள் இந்த பட்டணத்தை கைப்பற்றினார்கள் (2இராஜா 19:12). ஆரானின் மறுபெயர் “Charran” என்பதாகும் (அப் 7:24).
ஆரான் மெசப்பதோமியாவில்
(Mesopotamia) வடகிழக்கில் உள்ள பகுதி. இது பேலியாஸ் (Belias) நதிக்கரையில் அமைந்திருக்கிறது. இந்த நதியில் ஐபிராத்து நதி கலக்கிறது. நினிவேயிலிருந்து (Ninevah) கர்கெமிஷிற்கு (Carchemish) செல்லும் பாதையிலுள்ள வியாபார மையம். (எசே 27:23). இந்த இடத்திலுள்ள ஜனங்கள் சந்திரனைச் சீன் (Sin) என்னும் தெய்வமாக வழிபடுகிறார்கள். ஈசாக்கும், யாக்கோபும் இந்தப் பகுதியிலிருந்து தங்களுக்கு மனைவிகளைத் திருமணம் செய்கிறார்கள். (ஆதி 24:1-35:29, 2இராஜா 19:12; ஏசா 37:12; அப் 7:24)
2இராஜாக்கள் 19: 12 என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும் ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும், அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?
ஏசாயா 37: 12 என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7: 24 அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான்.
ஆரானிலே சவதரித்த ஜனங்கள்
ஆரானில் உள்ள ஜனங்கள் விக்கிரகாராதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களில் பலரை ஆபிராம் விக்கிரகாராதனையிலிருந்து விடுவித்து, மெய்யான தேவனை ஆராதிக்கும் மார்க்கத்திற்கு வழிநடத்தினான். இவர்களும் ஆபிராமோடு புறப்பட்டுச் செல்ல விரும்பினார்கள். தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கும் ஆசீர்வாதங்களில் பங்குபெற விரும்பினார்கள். இவர்களில் பலர் அடிமைகள். ஆபிராமோடு கானான் தேசத்திற்குப் புறப்பட்டுப் போனவர்களில் கைபடிந்தவர்களாகிய 318 ஆட்களும் இருந்தார்கள். இதுதவிர, லோத்தின் மனுஷரும் ஆபிராமோடு கானான் தேசத்தில் சேர்ந்தார்கள். (ஆதி 14:14), ஆயிரக்கணக்கான பேர் ஆபிராமோடு கானான் தேசத்திற்கு வந்து சேர்ந்திருப்பார்கள்.
அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப் போனார்கள். தேவனுடைய அழைப்பை ஆபிராம் ஊரில் பெற்றபோது அவன் எங்கு போக வேண்டுமென்று அவனுக்குத் தெரியாது. (அப் 7:3; எபி 11:8)
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7: 3 நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.
எபிரெயர் 11: 8 விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.
காமின் குமாரனாகிய கானானின் பெயரால் இந்தத் தேசம் அழைக்கப்படுகிறது. கானானின் சந்ததியார் இந்தத் தேசத்தில் குடியேறினார்கள். (ஆதி 15:18-21; யோசு 12). வேதாகமத்தில் “கானான் தேசம்” “The land of Canaan” என்னும் வாக்கியம் 66 தடவைகள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆதியாகமத்தில் மட்டும் 35 தடவைகள் இந்த வாக்கியம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் ஐந்தாகமம், யோசுவா ஆகிய புஸ்தகங்களைத் தவிர மற்ற புஸ்தகங்களில் ஐந்து தடவைகள் மட்டுமே இந்த வாக்கியம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டில் இந்த வாக்கியம் ஒரு தடவை கூட பயன்படுத்தப்படவில்லை.