இரத்தVideos
Audio Player
அக்கெல்தமா – ACELDAMA, AKELDAMA
“அக்கெல்தமா” என்னும் கிரேக்கப் பெயருக்கு “இரத்த நிலம்” “field of blood” என்று பொருள். இந்த நிலம் எருசலேம் பட்டணத்தின் அலங்கங்களுக்கு வெளியே உள்ளது. மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் இந்த நிலத்தைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. யூதாஸ்காரியோத்து இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்தான். இதற்காக அவன் பிரதான ஆசாரியத்திடத்தில் 30 வெள்ளிக்காசுகளைப் பெற்றுக் கொண்டான். இயேசு கிறிஸ்து ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டார். இதைக் கண்ட யூதாஸ் காரியோத்து மனஸ்தாபப்பட்டு அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும், மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து கொடுத்தான். ஆனால் அவர்களோ அந்தக் காசை அவனிடமிருந்து பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். யூதாஸ்காரியோத்து அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி, ஆலோசனை பண்ணினபின்பு, அந்நியரை அடக்கம் பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள். இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் இரத்தநிலம் என்று என்னப்படுகிறது. (மத் 27:3-10)
லூக்கா இந்த நிலத்தைப் பற்றி எழுதும்போது யூதாஸ்காரியோத்து “அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்தான்” (அப் 1.18-19) என்று குறிப்பிட்டிருக்கிறார். யூதாஸ் இந்த இடத்திலேயே தலைகீழாக விழுந்து செத்தான். யூதாஸ் இந்த நிலத்தைச் சம்பாதித்தான் என்று கூறப்பட்டுள்ள போதிலும் இவன் தன்னிடமிருந்த முப்பது வெள்ளிக்காசினால் இந்த நிலத்தை நேரடியாக விலைக்கு வாங்கினான் என்று கூறுவதற்கு வாய்ப்பில்லை. அநீதியினால் பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக்காசு இந்த நிலத்தை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது என்று பொருள்கூறுவது சிறப்பாக இருக்கும்.
தற்பொழுது அக்கெல்தமா இன்னோம் பள்ளத்தாக்கிற்கு எதிரே உள்ள மலைப்பகுதியில் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.