தானியேல் அதிகாரம் 3
3ம் அதிகாரம் (சிலை வணக்கம்)
தானியேல் 3 விளக்கவுரை : உலகின் முதல் சாம்ராஜ்யமான பாபிலோன் சாம்ராஜ்ய ராஜா. நேபுகாத்நேச்சார், 60 முழ உயரமும், 6 முழ அகலமுமுடைய ஒரு பொற்சிலையை உண்டுபண்ணி தூரா என்னும் சமபூமியில் நிறுத்தி.
அதன் பிரதிஷ்டைக்கு. தேசாதிபதிகள். அதிகாரிகள். தலைவர்கள். நியாயாதிபதிகள். பொக்கிஷதார். நீதிசாஸ்திரிகள், விசாரிப்புக்காரர், உத்தியோகஸ்தர் யாவரையும் அழைப்பித்தான்.
எல்லோருக்கும் முன்பாக கட்டியக்காரன் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை. சுரமண்டலம். தம்புரு முதலான கீதவாத்யங்கள் முழங்கும்போது, அனைவரும் ராஜா உருவாக்கின சிலையைப் பணியவேண்டும்.
மீறினால். எரிகிற அக்கினிச் சூளையில் போடப்படும் என்று உரத்த சத்தமிட்டான். இந்த கீதவாத்தியங்கள் எல்லாம். தமிழ்நாட்டுத் தஞ்சாவூருக்கு சொந்தமானது என்று அறிக.
மேலும். எசே.28:13; வெளி.5:8 போன்ற வசனங்களை வாசித்தால். இதே கீதவாத்தியங்கள்தான் பரலோகிலும் இருக்கிறது என அறிகிறோம். ஆக, தமிழுக்கும் – தமிழருக்கும்.
நம் தேவனுக்குமுள்ள ஐக்கியத்தைப் பாருங்கள்! தமிழர்களாகிய நாம் பாக்கியவான்கள் அல்லவா! இயேசுவின் சீஷன் தோமா வந்த பூமியாயிற்றே!
சிலை, சுரூபம், விக்ரகம் உருவாக்குவதும். வணங்குவதும். ஒன்றான மெய்த்தேவனின் மகிமையை மறுதலிப்பதாகும்.
இப்படிச் செய்வது பிசாசின் கிரியை. தற்கால அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்களின் சிலை வணக்கம், இந்துக்கள். புத்தர்கள் போன்றோரின் சிலை வணக்கம் எல்லாமே இப்படிப்பட்டதுதான்.
நம் தேவன் தன்னுடைய மகிமையை யாருக்கும் கொடார் (ஏசா.48:11) அப்படியிருக்க இந்த விக்ரகங்களுக்கு கொடுப்பாரா? தற்கால ஆவிக்குரிய சபைககளிலேயே சிலுவை.
புறா.மற்றும் இயேசு போன்ற விக்ரகம் வைப்பதும், அதற்கு மரியாதை கொடுப்பதும் சர்வசாதாரணமாகிவிட்டது. ஜாக்கிரதை யுள்ளவர்களாய் இருங்கள். சீனாய் மலையில். 2ம் கற்பனையிலும் (யாத்.20:4.5).
புதிய ஏற்பாட்டிலும் ரோ. 1:22,23ம் இந்த செயல் கண்டிக்கப்பட்டிருக்கிறது; பாவமாக்கப்பட்டிருக்கிறது.
இந்த விக்ரக ஆராதனை எண்ணம் ராஜாவுக்கு எப்படி வந்தது?
(1) கனவிலே தானி 2ல் கண்ட ராஜ்யங்களிலே முதன்மையானது பொன்னான தனதுராஜ்யம்.
(2) தானியேல் சொன்னான்: உமக்குப் பிறகு கீழ்த்தரமான வேறு ராஜ்யம் எழும்பும் என்று (தானி.2:39).
(3) இன்னும் தானியேல் சொன்னான்:- பரலோக தேவன்.உமக்கே ராஜரீகம், பராக்கிரமம். வல்லமையும் அருளினார் என்று (தானி.2:37)
இதனாலேயே ராஜாவுக்கு. பெருமை – மேட்டிமை வந்து.பொற் சிலையை உருவாக்கியிருக்கிறான் என்று கணிக்க வாய்ப்புண்டு.
மேலும். இஸ்ரேலரை ஆளும் புறஜாதி பாபிலோன் ராஜ்யம் முதற்கொண்டு புறஜாதிகளின் முடிவுரை இஸ்ரேலர் சரித்திரத்தில் வரும் ராஜ்யங்களில், இந்த விக்ரக ஆராதனை – man made image worship – இருந்து கொண்டு இருக்கிறது. அன்று முதல் பலநாடுகளுக்கும் இது பரவியது. Babylonian Cultsல் இதுவும் ஒன்று.
உதாரணத்திற்கு.
1. ரோம சக்கரவர்த்தி வணக்கம்
2. ஜப்பானிய ஷின்டோ வணக்கம்
3. காந்தி, அண்ணா, பெரியார் வணக்கம்
4. கடைசி நாளில் நடக்கப்போகும் அந்தி கிறிஸ்துவின் சிலை வணக்கம் (வெளி.13:14.15.14:8-11) (இதை வணங்கியவர்களின் நிலை வெளி.19:20லும், வணங்காதவர்களின் நிலை வெளி.20:4லும் சொல்லப்பட்டிருப்பதை வாசியுங்கள்).
கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்ட உடனே, பொற்சிலையின் பிரதிஷ்டைக்கு வந்த அனைவரும் சிலையை வணங்கினர். ஆனால் அடிமைகளாய் வந்து.
பாபிலோன் மாகாண காரியங்களை விசாரிக்க ராஜாவால் ஏற்படுத்தின. யூத இளைஞர்களாகிய, அன்னியா. மிஷாவேல். அசரியா மட்டும் ஆராதனை செய்யவில்லை. இவர்கள் மேல் ஏற்கெனவே பொறாமையும்.
கோபமும் கொண்டிருந்த கல்தேயர். ராஜாவிடம் புகார் கூறினார் (தானி.3:12). சிலையைப் பணிந்து கொள்ளாதது மட்டுமல்ல; ராஜாவின் தேவர்களையும் ஆராதிப்பதில்லை என்று அவர்கள் இருப்பதைக் கேட்ட ராஜாவுக்கு உக்கிர கோபம்.
உடனேயே அவர்களை அக்கினிச் சூளையில் போடவில்லை. அவர்களை அழைத்து. விசாரித்து, மறுபடியும் சிலையை வணங்க 2வது தருணம் கொடுத்தான்.
அவர்கள் வணங்கா விட்டால். எரிகிற அக்கினிச் சூளையில் போடப்படுவார்கள் என்றும். ராஜாவின் கைக்கு அவர்களை தப்புவிக்கப் போகிற தேவன் யாரென்றும். ராஜா கேட்டான்.
அடிமையாய் வந்திருக்கும் இம்மூவரும் கர்த்தர்மேல் விசுவாசம் உள்ளவர்களாய் சொன்ன விசுவாச பதில்களைப் பாருங்கள் (தானி.3:16-18).
விசுவாச பதில்கள்
1. நாங்கள் இதுபற்றி பதில் சொல்ல அவசியமில்லை; ஆனாலும் கேளும்! (தைரிய வார்த்தை).
2. நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களை விடுவிப்பார் (இது விசுவாச வார்த்தை: It brings suecess).
3. தானி.3:18ஐ வாசித்தால், “தேவன் விடுவிப்பார்” என்ற விசுவாச வார்த்தையைச் சொன்னவர்கள்.
‘விடுவிக்காமற் போனாலும் என்ற அவிசுவாச வார்த்தையை சொல்வார்களா என்பதை தியானிக்கலாம்.
அவர்கள் தேவன் விடுவிக்காமல் போனால் என்ற அவிசுவாச வார்த்தையை சொல்லியிருந்தால். அவர்கள் அக்கினிச் சூளையிலே வெந்து போவார்கள் அல்லவா!
பின்பு எப்படி. “ராஜாவின் தேவர்களுக்கு ஆராதனையும் ராஜாவின் சிலையைப் பணிவதும் இல்லை” என்று சொல்ல முடியும்? மரித்தபின் ஆராதனை செய்ய முடியுமா? சிந்தியுங்கள். தானி. 3:17,18 இரண்டையும் தியானத்தோடு வாசித்தால், மூலப்பிரதியில் உள்ளது புரியும்.
அதாவது, ராஜா, இம்மூவரையும் விடுவிக்காமற் போனாலும். தேவன் விடுவிப்பார். தேவனால் விடுவிக்கப்படும் நாங்கள் சிலைய வணங்கமாட்டோம் என்றனர்.
இப்படியாய், விசுவாசப் பதில் கொடுத்த, இம்மூவரும். அந்திகிறிஸ்துவின் கால. மீதமான இஸ்ரேலருக்கு நிழலாட்டமாய் காணப்படுகிறார்கள் (ஏசா. 1:9: ரோ.11:5; சங்.2:5; வெளி.7:14).
இந்த மூவருக்கும் ராஜா 2வது தருணம் கொடுக்க, தேவனால் வழிநடத்தப்பட்டதற்கு காரணம்:
1. இவர்களின் விசுவாச வார்த்தைகள் ராஜாவின் காதுகளில்
2. படவேண்டும். அதன் பின்னால் நடக்கும் காரியங்களையும் ராஜா அறிய வேண்டும்: உணர வேண்டும்.
இவர்களின் தைரியமான விசுவாசப் பதிலைக் கேட்ட ராஜா கடுங்கோபங் கொண்டு, சூளையை 7 மடங்கு சூடாக்கச் சொல்லி, அவர்களை சூளைக்குள் போடக் கட்டளை இட்டான். சூளை மிகவும் சூடாயிருந்தபடியால், அவர்களைத் தூக்கிக் கொண்டுபோய் போட்ட புருஷர் எரிந்து மாண்டனர்.
ஆனால் உள்ளே கட்டுகளினின்று. போட்ட 3பேர் மட்டுமல்ல. 4 பேர் சூளைக்குள் விடுதலையாய் உலாவுகின்றனர். அந்த 4வது ஆள் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருப்பதை ராஜா கண்டு பிரமித்தான்.
யார் இந்த தேவபுத்திரனுக்கு ஒப்பானவர்? இது கேள்வி. மூலபாஷையில். “a son of God” என்று போட்டிருப்பதால். “it is an angel or super human being” என அர்த்தமாகிறது.
தேவகுமாரன் என்றால், மரியாளிடம் பிறக்கப்போகும் இயேசு என்று ராஜாவுக்கு தெரியாது. (லூக்.1:35). ஆனால், ராஜா இந்த தேவபுத்திரருக்கு ஒப்பானவரை. தேவதூதன் என்று தானி. 3:28ல் சொல்கிறான்.
இஸ்ரேல் மூலமாய் கேள்விப்பட்டது இவனுக்குள் இருக்கிறது. நிச்சயமாய் இவர். குமாரனாகிய கர்த்தர்தான். இஸ்ரேலர் இவரை அறிந்திருந்தனர்.
எனவேதான். தானியேல் இங்கே இப்படியாய் பதிய வைக்கிறான். (இது குறித்து. ஜூலை 2016 ‘விசுவாச முழக்கம்” இதழில் உள்ள. “பிசாசுக்கும் யாருக்கும் போராட்டம்?” என்ற செய்தியையும், “உங்களுக்குத் தெரியுமா? என்ற நூலில் பக்கம் (52)ல் உள்ள “பழைய ஏற்பாட்டில் உள்ள கர்த்தருடைய தூதனானவர் யார்?’ என்ற செய்தியையும் வாசியுங்கள்).
பிரமித்த ராஜா, உடனே அக்கினிச் சூளையின் வாசலுக்கு அருகே வந்து, “உன்னதமான தேவனுடைய தாசர்களே வெளியே வாருங்கள்” என்றான்.
எந்த தேவனாலும் தப்புவிக்க முடியாமல் மாண்டுபோங்கள் என்று அக்கினியில் தள்ளிய ராஜா, நம்தேவனின் மகிமையை கண்ணாரக்கொண்டு. “உன்னதமான தேவன்’ என்று புகழும் நிலைக்கு மாற்றிய நம் தேவனுக்கு தோத்திரம். நம் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை. ஆமென்.
இவர் தம்முடைய விசுவாசப் பிள்ளைகளை தப்புவிப்பவர்: சாட்சியாய் நிறுத்துபவர்: அதன் மூலமாய் தம் மகிமையை வெளிப்படுத்தி. எதிரியையும் விசுவாசிக்க வைக்கிறவர். அங்கே வந்தவர்கள் அத்தனை பேரும் இந்த மூவருக்கும் அக்கினியால் ஒரு சேதமும் இல்லாததைக் கண்டார்கள் (தானி. 3:27).
அப்போது ராஜா சொன்னதைப் பாருங்கள் (தானி. 3:28,29). முதலில் நம் தேவனை துதித்தான். இவ்விதமாய் இரட்சிக்கிறதேவன் வேறொருவர் இல்லை என்றான்.
இந்த மூவருக்கும் விடுதலை கிடைத்த காரணத்தை ராஜாவே கூறுவதைப் பாருங்கள். இங்கு தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவிக்கப் பணியாமல். அவரையே நம்பி ராஜாவின் கட்டளையைத் தள்ளி. தங்கள் சரீரங்களை ஒப்புக் கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி தம்முடைய தாசரை விடுவித்தார்.
நம்மைப்பற்றி மற்றவர்கள் இப்படியாய் சாட்சி சொல்ல வேண்டும். இதை வாசிக்கும் தேவஜனமே! உங்கள் சாட்சி வாழ்க்கையால் இந்த ராஜாபோல் மனம்மாறியோர் எத்தனை பேர்?
ராஜா இட்ட ஆணையைப் பாருங்கள் (Decree. தானி.3:29)
1. இந்த தேவனுக்கு விரோதமாய் தூஷண வார்த்தையை யார் சொன்னாலும் துண்டிக்கப்படுவர்.
2. அவன் வீடு எருக்களமாக்கப்படும்.
3. இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை. ராஜா இம்மூவரையும் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.
இங்கே பலருடைய கேள்வி:
1. இந்த சிலை வணக்கத்தின்போது தானியேல் என்ன ஆனான்?
2. அவன் சிலையை வணங்கிவிட்டானா?
3. தானியேலும், அவனோடு சேர்ந்த மற்ற அடிமைப்பட்ட யூதர்கள் என்ன ஆனார்கள்?
ஆவியானவர் மூலமாய் நாம்தரும் பதில்:
1. தானி.2:49ன் படி தானியேல். ராஜாவின் கொலுமண்டபத்தில், ராஜாவுக்கு அடுத்த நிலையில் பணிபுரிவதால். அவனை யாரும் கண்டுகொள்ளாதிருந்திருக்கலாம். அல்லது
2. அவசரப் பணியினிமித்தம் வேறு ஊர் போயிருக்கலாம். அல்லது
3. மற்ற யூதர்களும், தானியேலும் இந்த பிரதிஷ்டைக்கு வராதிருந்திருக்கலாம். அல்லது
4. இந்த மூன்று பேர் மாத்திரமே கல்தேயரின் கண்களில் பட்டடிருக்கலாம். அல்லது
5. இம்மூவரும் எரிந்துபோனபின், உயர்பதவியிலுள்ள தானியேலைப் பற்றி புகார் செய்ய காத்திருந்திருக்கலாம். அதற்குள். பெரிய அதிசயம் நடந்து, அதை அனைவரும் கண்டு பிரமித்து. ராஜாவே மனம்மாறி ஆர்டர் போட்டதால் அவர்களுடைய எண்ணம் செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம்.
எது எப்படியோ. இம்மூவரின் விசுவாசம் (எபி.11:34) இந்தக் கடைசி நாட்களில் நமக்குத் தேவை. இதனால் நம் ராஜாக்களின் மனம் மாற்றப்பட வேண்டும் ஆமென்.
குறிப்பு :-
கத்தோலிக்க பைபிளில். தானியேல் 3ம் அதிகாரத்தில், 1 முதல் 100 வசனங்கள் இருக்கின்றன.
அவைகளில் வசனம் 24 முதல் 90 வரை உள்ளவை நமது பைபிளில் இல்லை: தள்ளப்பட்டிருக்கிறது. அந்த வசனங்கள் வெறும் ஜெபமும், பாடலும்தான்.
கத்தோலிக்க பைபிளின் கடைசி மூன்று வசனங்கள். 4ம் அதிகாரத்துக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது.