ஆதியாகமம் – Genesis Outline

Genesis Outline

ஆதியாகமம் விரிவான குறிப்புகள் Genesis Outline

உலகத்தின் தொடக்க கால வரலாறு (ஆதியாகமம் 1:1-11:32)

சிருஷ்டிப்பின் துவக்கமும், நிறைவும் (1:1-2:3)

“தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்” (1:1, 2)

  • நாள் 1: வெளிச்சம் உண்டாக்கப்பட்டு இருளிலிருந்து பிரிக்கப்பட்டது (1:3-5)
  • நாள் 2: தண்ணீரானது வெட்டாந்தரை யிலிருந்து பிரிக்கப்பட்டது (1:6-8)
  • நாள் 3: நிலம், செடிகள் மற்றும் மரங்கள் சிருஷ்டிக்கப்பட்டன (1:9-13)
  • நாள் 4: சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் வானத்தில் வைக்கப்பட்டன (1:14-19)
  • நாள் 5: நீர்களும், ஆகாயமும் கடல் ஜந்துக் களாலும், பறவைகளாலும் நிரப்பப்பட்டன (1:20-23)
  • நாள் 6: விலங்குகளும், மனிதனும் சிருஷ்டிக்கப்பட்டன (1:24-31)
    • நாட்டு மிருகங்கள் சிருஷ்டிக்கப்படுதல் (1:24,25)
    • தேவ சாயலாக மனிதன் சிருஷ்டிக்கப்படுதல் (1:26-28)
    • தேவன் மனுக்குலத்துக்கும், விலங்குகளுக்கும் ஆகாரம் அளித்தது (1:29,30)
    • சிருஷ்டிப்பைக் குறித்து தேவனுடைய மதிப்பிடுதல் (1:31)
  • நாள் 7: தம்முடைய சிருஷ்டிப்பிலிருந்து தேவன் ஓய்ந்திருந்தார் (2:1-3)

மனிதன் தோட்டத்தில் வாழ்தலும், மனுஷி சிருஷ்டிக்கப்படுதலும் (ஆதியாகமம் 2:4-25)

  • “வானமும், பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு” (2:4)
  • ஏதேன் தோட்டமும் மனிதனும் (2:5-7)
  • ஏதேன் தோட்டத்தில் மனிதனின் வாழ்க்கை (2:8-17)
  • மிருக ஜீவன்களுக்கு மத்தியில் மனுஷனுக்கு ஏற்ற துணை இல்லாதிருந்தது (2:18-20)
  • மனிதனுக்காக மனுஷி சிருஷ்டிக்கப்படுதல் (2:21-25)

மனிதன் விழுந்து போகுதல் (ஆதியாகமம் 3:1-24)

  • சோதிக்கப்படுதலும் விழுந்து போகுதலும் (3:1-7)
  • விழுந்துபோன இணையை தேவன் சந்தித்தல் (3:8-13)
  • விழுந்துபோனதின் விளைவுகள் (3:14-19)
  • புதிய பெயர் மற்றும் புதிய ஆடை: ஆதாமின் விசுவாசமும் தேவனுடைய கிருபையும் (3:20,21)
  • தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படுதல் (3:22-24)

தோட்டத்திற்கு வெளியே ஆதாம், ஏவாள் குடும்பம் (ஆதியாகமம் 4:1-16)

  • காயீன் மற்றும் ஆபேலின் பிறப்புகள் (4:1,2)
  • மறுமொழியும் (4:3-7)
    ஆபேலைக் காயீன் கொலை செய்தல் (4:8-16)
  • இரு வம்சங்கள் (4:17-26)
  • காயீனின் குடும்பம் மற்றும் கலாச்சாரத்தின் தோற்றம் (4:17-24)
  • சேத்தும் அவனுடைய குடும்பமும் (4:25, 26)

ஜலப்பிரளயத்திற்கு முந்தைய முற்பிதாக்கள் (5:1-32)

  • சிருஷ்டிப்பும் ஆசீர்வாதமும் (5:1, 2)
  • சேத்திலிருந்து ஏனோக்கு வரையிலான ஆதாமின் புதிய வம்ச வரலாறு (5:3-20)
  • ஏனோக்கிலிருந்து நோவா வரையிலான வம்ச வரலாறு (5:21-32)

பெருவெள்ளம்: அழிக்கப்படுதலும், காப்பாற்றப்படுதலும் (6:1-22)

மனிதர்களுடைய துன்மார்க்கம் விவரிக்கப்படுதல்:

  • தேவகுமாரர்களும் மனுஷ குமாரத்திகளும் (6:1-4)
  • மனிதர்களுடைய துன்மார்க்கம் சுருக்கிக் கூறப்படுதலும், தேவனுடைய நியாயத்தீர்ப்பு வழங்கப்படுதலும் (6:5-7)
  • நீதிமானாகிய நோவா பாவமான உலகிலிருந்து முரண்படுதல் (6:8-12)
  • வெள்ளம் வரப்போவதாக அறிவித்தலும், பேழை செய்வதற்கான தேவனுடைய அறிவுரைகள் வழங்கப்படுதலும் (6:13-22)

பெருவெள்ளம் வருதல் (ஆதியாகமம் 7:1-24)

  • பேழைக்குள் செல்லும்படி தேவனுடைய உத்தரவு (7:1-10)
  • வெள்ளத்தின் துவக்கம் (7:11-16)
  • நீரின் அளவு தலைக்குமேல் உயர்வு (7:17-24)

புதிய மனிதவர்க்கம் தோன்றுதல் (8:1-22)

  • பெருவெள்ளத்தின் அளவு குறைதல் (8:1-5)
  • வறண்டநிலம் தோன்றுதல் (8:6-14)
  • பேழையை விட்டு வெளியே வர தேவனின் உத்தரவு (8:15-19)
  • பூமியின் மேல் மீண்டும் பெருவெள்ளம் கொண்டு வரமாட்டேன் என்ற தேவனின் வாக்குத்தத்தம் (8:20-22)

புதிய உலகத்திற்கான தேவனுடைய கட்டளையும்,உடன்படிக்கையும் (9:1-29)

  • புதிய உலகத்திற்கான தேவனுடைய பராமரிப்பு (9:1-7)
  • தேவ உடன்படிக்கை மற்றும் அடையாளம் (9:8-17)
  • நோவாவின் சாபமும், ஆசீர்வாதங்களும் (9:18-29)

நோவாவின் சந்ததியினர் (10:1-32)

  • நோவாவின் வம்சங்களின் பதிவுகள் குறித்து அறிமுகம் (10:1)
  • யாபேத்தின் குமாரர் (10:2-5)
  • காமின் குமாரர் (10:6-20)
  • சேமின் குமாரர் (10:21-31) நோவாவின் குமாரர் குறித்து சுருக்கமான அறிக்கை (10:32)

தேசங்கள் பரவுதல்: மொழிகளின் குழப்பங்களும் வம்சங்களும் (11:1-32)

  • மகிமையைப் பெற்றுக்கொள்ள பெரிய கோபுரத்தைக் கட்டுதல் (11:1-4)
  • மனிதர்களின் பெருமையை தேவன் தண்டித்தல் (11:5-9)
  • சேமின் வம்ச வரலாறு (11:10-26)
  • தேராவின் குடும்பம் (11:27-32)

ஆபிரகாமின் வரலாற்றுத்தொகுப்பு (12:1-25:18)

  • ஆபிரகாம் புதிய தேசத்திற்குச் செல்ல அழைக்கப்படுதல்: கானான் (12:1-20)
  • ஆபிரகாமின் அழைப்பு (12:1-3)
  • தேவ அழைப்புக்கு ஆபிரகாமின் மறுமொழி (12:4-9)
  • எகிப்தில் ஆபிரகாமும், சாராளும்(12:10-20)

ஆபிரகாமும், லோத்தும் பிரிதல், வாக்குத்தத்தங்களைப் புதுப்பித்தல் (13:1-18)

  • ஆபிரகாம் கானானுக்கு திரும்புதல் மற்றும் லோத்தோடு அவனுடைய போராட்டம் (13:1-7)
  • ஆபிரகாமின் தாராளமான முன்மொழிதல் மற்றும் லோத்து முடிவெடுத்தல் (13:8-13)
  • தேசத்தைக் குறித்த வாக்குத்தத்தத்தை தேவன் புதுப்பித்தலும், மற்றும் ஆபிரகாமின் மறு மொழியும் (13:14-18)

ஆபிரகாம் போரில் ஈடுபடுதல் மற்றும் இரு இராஜாக்களை சந்தித்தல் (14:1-24)

  • இராஜாக்களின் போர் (14:1-12)
  • ஆபிரகாம் லோத்தையும் பிற கைதிகளையும் மீட்டல் (14:13-16)
  • ஆபிரகாம் இரு இராஜாக்களை சந்தித்தல் (14:17-24)

ஆபிரகாமுடன் நிலத்தைப் பற்றிய தேவனுடைய உடன்படிக்கை (15:1-21)

  • தெய்வீகவாக்குத்தத்தங்களும், விசுவாசத்தின் மறுமொழியும் (15:1-6)
  • உடன்படிக்கைக்கு தயாராகுதல் (15:7-11)
  • உடன்படிக்கைக்கான தீர்க்கதரிசனம் (15:12-16)
  • உடன்படிக்கை நிறைவேறுதல் (15:17-21)

ஆகார், மற்றும் இஸ்மவேலின் கதை (16:1-16)

  • ஆபிரகாமின் குடும்பத்தில் குழப்பம் (16:1-6)
  • இஸ்மவேலின் பிறப்பு (16:7-16)

ஆபிரகாமுடன் தேசத்தைப் பற்றிய தேவனுடைய உடன்படிக்கை (17:1-27)

  • ஆபிராமின் புதிய பெயர் (17:1-8)
  • உடன்படிக்கையின் அடையாளம்: விருத்தசேதனம் (17:9-14)
  • சாராய்க்கான புதிய பெயரும், ஈசாயின் வாக்குத்தத்தமும் (17:15-22)
  • உடன்படிக்கையின் முத்திரை; ஆபிரகாம் வீட்டாரின் விருத்தசேதனம் (17:23-27)

தேவன் ஆபிரகாமை சந்திக்க வருதல் (18:1-33)

  • மூன்று பரலோக விருந்தினரை ஆபிரகாம் உபசரித்தது (18:1-8)
  • சாராள், ஒரு அவிசுவாசத்துடன் விருந்தளிப்பவள் (18:9-15)
  • கர்த்தருக்கும் இரு தூதர்களுக்கும் இடையே நடந்த உரையாடல் (18:16-22)
  • சோதோம், கொமோராவுக்காக ஆபிரகாம் பரிந்துரைத்தது (18:23-33)

சோதோம், கொமோராவின் அழிவு (19:1-38)

  • மக்களின் துன்மார்க்கம் விவரிக்கப்படுதல் (19:1-11)
  • தேவனுடைய மனதுருக்கத்தின் வெளிப்பாடு: லோத்து மீட்கப்படுதல் (19:12-22)
  • கர்த்தரின் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது (19:23-29)
  • லோத்து தன் குமாரத்திகளோடு பாவம் செய்தல் (19:30-38)

ஆபிரகாமும், சாராளும் கேராரில் இருத்தல்: தேவனுடைய வாக்குத்தத்தங்களைக் காத்துக் கொள்ளுதல் (20:1-18)

  • ஆபிரகாமின் தந்திரமும், அபிமலேக்கின் அறியாமையும் (20:1-7)
  • ஆபிரகாமுடன் அபிமலேக்கின் தீர்வு (20:8-18)
  • ஈசாக்கின் பிறப்பு (21:1-7)
    ஈசாக்குக்கும், இஸ்மவேலுக்குமிடையேயான பதட்டம் (21:8-21)
  • சாராளின் பொறாமை (21:8-14)
  • ஆகாருக்குரிய தேவ வாக்குத்தத்தம் (21:15-21)
  • அபிமலேக்கோடு ஆபிரகாமின் உடன்படிக்கை (21:22-34)

ஆபிரகாமின் விசுவாசம் சோதிக்கப்படுதல்: அவனுடைய மகன் ஈசாக்கைப்பலியிட அழைப்பு (22:1-24)

  • ஆபிரகாமின் உண்மை (22:1-14)
  • தேவனின் வாக்குத்தத்தம் புதுப்பிக்கப்பட்டது (22:15-19)
  • ஆபிரகாமின் குடும்பம் பற்றிய செய்தி அறிக்கை (22:20-24)

சாராளின் இறப்பு (23:1-20)

  • சாராளின் இறப்பும், ஆபிரகாமின் துக்கமும் (23:1, 2)
  • ஆபிரகாம் அடக்கம் பண்ணுவதற்குரிய நிலத்தை விலைக்கு வாங்குதல் (23:3-16)
  • சாராள், மக்பேலா குகையில் அடக்கம் பண்ணப்படுதல் (23:17-20)

தேவ வழங்களின்வெளிப்பாடு: ஈசாக்குக்கான மனைவி (24:1-67)

  • ஆபிரகாம் வேலையாளிடம் கட்டளை தருதல் (24:1-9)
  • வழி நடத்துதலுக்காக வேலையாளின் ஜெபம் (24:10-14)
  • ரெபெக்காள் கிணற்றண்டை வருகை (24:15-27)
  • ரேபெக்காள் குடும்பத்தினரின் மறுமொழி (24:28-33)
  • வேலையாளின் கதை (24:34-49) பிரயாணத்தின் வெற்றி (24:50-61)
  • ஈசாக்கு மற்றும் ரெபெக்காள் இவர்களின் திருமணம் (24:62-67)

ஆபிரகாமின் இறுதி நாட்கள் (25:1-11)

  • கேத்தூராள் வழியாக வந்த ஆபிரகாமின் குடும்பமும்,
  • ஈசாக்குக்கா சுதந்தரமும் (25:1-6)
  • ஆபிரகாமின் மரணமும் அடக்கமும் (25:7-11)
  • இஸ்மவேலின் வாரிசுகள் (25:12-18)
  • ஈசாக்கின் வரலாற்றுத் தொகுப்பு (25:19-28:9)
  • ஏசா,மற்றும் யாக்கோபின் பிறப்பு (25:19-26)
  • யாக்கோபு, சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற ஏசாவுடன் வாதிடுதல் (25:27-34)

ஈசாக்கு பெலிஸ்தர் நடுவே வாழ்தல் (26:1-33)

கேராரில் (26:1-22)

  • ஈசாக்குக்குத் தேவனின் வாக்குத்தத்தங்கள் (26:1-5)
  • அவனுடைய மனைவியைக் குறித்து ஈசாக்கின் வஞ்சகம் (26:6-11)
  • பெலிஸ்தர்கள் ஈசாக்கின் செல்வம் குறித்து பொறாமைப்படுதல் (26:12-17)
  • பெலிஸ்தர்களோடு ஈசாக்கின் கிணறுகள் குறித்து வாக்குவாதம் (26:18-22)
  • பெயெர்செபாவில் (26:23-33)
    பெயெர்செபாவில் ஒரு தரிசனம் (26:23-25)
  • ஈசாக்கு அபிமலேக்குடன் ஒப்பந்தம் செய்தல் (26:26-33)
  • ஈசாக்கும், ரெபெக்காளும் ஏசாவின் ஏத்தியப் பெண்களான மனைவியர் குறித்து துக்கம் அடைதல் (26:34,35)

ஏசாவின் ஆசீர்வாதங்களை யாக்கோபு திருடுதல் (27:1-45)

  • ஈசாக்கின் ஆசீர்வாதத்திற்கான சதியும், எதிர்சதியும் (27:1-17)
  • வஞ்சிக்கப்பட்டபின் யாக்கோபுக்கு ஈசாக்கின் ஆசீர்வாதங்கள் (27:18-29)
  • ஏசாவுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் ஒரு சாபம் போன்றது (27:30-40)
  • யாக்கோபைக் கொலை செய்ய ஏசா திட்டமிடல் (27:41-45)
  • ஆரானுக்குப் போகும் முன் ஈசாக்கு யாக்கோபிடம் உரைத்தது (27:46-28:5)
  • ஈசாக்கைப் பிரியப்படுத்த ஏசாவின் காலந்தாழ்த்திய திருமணம் (28:6-9)

யாக்கோபின் வரலாற்றுத் தொகுப்பு (28:10-36:43)

  • பெத்தேலில் யாக்கோபு: தரிசனமும், ஒரு பொருத்தனையும் (28:10-22)

யாக்கோபின் திருமணங்கள் (29:1-30)

  • யாக்கோபு ராகேலை நேரில் சந்தித்தல் (29:1-14)
  • லேயாள், ராகேல் குறித்து லாபான் யாக்கோபை வஞ்சித்தல் (29:15-30)

ராகேலுக்கும் லேயாளுக்குமிடையேயான பகை (29:31-30:24)

  • லேயாளின் மூத்த குமாரர்கள் (29:31-35)
  • ராகேலின் வேலைக்காரிக்குப் பிறந்த குமாரர்கள் (30:1-8)
  • லேயாளின் வேலைக்காரிக்குப் பிறந்த குமாரர்கள் (30:9-13)
  • தூதாயிம் கனிகளுக்காக வாதிடுதலும், லேயாளின் இளைய குமாரர்கள் பிறப்பும் (30:14-21)
  • ராகேலின் மகன் (30:22-24)
  • யாக்கோபு மந்தைகளுக்காக லாபானிடம் செய்த ஒப்பந்தம் (30:25-43)
  • யாக்கோபுக்கு ஒதுக்கப்பட்ட விலங்குகள் (30:25-36)
  • யாக்கோபின் தந்திரமான திட்டம் (30:37-43)

லாபானிடமிருந்து யாக்கோபும் அவன் குடும்பமும் பிரிந்து செல்லுதல் (31:1-55)

  • யாக்கோபு புறப்பட்டுப்போகும்படிக்கு தேவனிடமிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்படுதல் (31:1-16)
  • யாக்கோபின் இரகசிய புறப்பாடு (31:17-21)
  • லாபான் துரத்திப் பிடித்தலும், விசாரணையும் (31:22-35)
  • யாக்கோபு, தன் மாமனுக்கு அளித்த கோபமான மறுமொழி (31:36-42)

யாக்கோபுக்கும் லாபானுக்குமிடையே செய்யப்பட்ட உடன்படிக்கை (31:43-55)

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு யாக்கோபுவும் ஏசாவும் திரும்பக்கூடுதல் (32:1-33:17)

  • யாக்கோபு, வீட்டிற்குத் திரும்புகையில் தேவதூதர்களைச் சந்தித்தல் (32:1, 2)
  • யாக்கோபு ஏசாவைச் சந்திக்க ஆயத்தப்பட்டு தேவனிடம் ஜெபித்தல் (32:3-12)
  • யாக்கோபின் தந்திரமான திட்டம் (32:13-21)
  • யாபோக் ஆற்றங்கரையில் யாக்கோபு தேவதூதனோடு போராடுதல் (32:22-32)
  • யாக்கோபு ஏசாவோடு ஒப்புரவாகுதலும், அவர்கள் பிரிதலும் (33:1-17)

யாக்கோபும் அவன் குடும்பமும் சீகேமுக்குப் போதல் (33:18-34:31)

  • அவர்களுடைய பிரயாணம் (33:18-20)
  • தீனாளைக் கெடுத்தல் (34:1-7)
  • சீகேமின் மனிதர்கள் மீது யாக்கோபின் குமாரர்கள் வைக்கும் கோரிக்கை (34:8-17)
  • மனிதர்களின் கபடற்ற ஒப்புதல் (34:18-24)
  • சீகேமின் மனிதர்கள் அழிக்கப்படுதல் (34:25-31)

பெத்தேலுக்குத் திரும்புதல் (35:1-15)

  • யோசேப்பின் குடும்பம் சுத்திகரிக்கப்படுதல்: அனைத்து அந்நிய தெய்வங்களையும் வெளியே தூக்கிப்போடுதல் (35:1-4)
  • பெத்தேல் சம்பவங்கள்: தேவனின் தரிசனமும், தேவனுடைய வாக்குத்தத்தத்தை மறுஉறுதிப்படுத்துதலும் (35:5-15)
  • பெத்தேலுக்குப் பின் (35:16-29)
  • பென்யமீன் பிறக்கும் போது ராகேல் இறத்தல் (35:16-21)
  • யாக்கோபின் மறுமனையாட்டியுடன் ரூபன் பாவம் செய்தல் (35:22)
  • யாக்கோபின் குமாரர்கள் (35:22-26)
  • ஈசாக்கின் மரணம் (35:27-29)

ஏசாவின் வம்சாவழியினர் (36:1-43)

  • ஏசாவின் குடும்பமும் பேரப் பிள்ளைகளும் (36:1-14)
  • ஏசாவின் வம்சாவழியினரின் பிரபுக்கள் (36:15-19)
  • ஓரியனான சேயீர் பிரபுக்களும், அவர்களுடைய குமாரர்களும் (36:20-30)
  • ஏதோமின் இராஜாக்களும், பிரபுக்களும் (36:31-43)

யோசேப்பின் வரலாற்றுத் தொகுப்பு (37:1-50:26)

கானான் தேசத்தில் யோசேப்பு (37:1-36)

  • யோசேப்பின் இளமைக் கால கனவுகள் (37:1-11)
  • யோசேப்பு தன்னுடைய சகோதரர்களைத் தேடுதல் (37:12-17)
  • அவனுடைய சகோதரர்களால் யோசேப்பு காட்டிக்கொடுக்கப்படுதல் (37:18-28)
  • சகோதரர்கள், யாக்கோபை ஏமாற்றுதல் (37:29-36)

யூதாவும், அவனது மருமகள் தாமாரும் (38:1-30)

  • கானானிய பெண்ணுடன் யூதாவின் திருமணமும், அவர்களது மாரர்களும் (38:1-5)
  • இரு கணவர்களுடன் தாமாரின் துரதிர்ஷ்டம் (38:6-11)
  • யூதாவின் பாவமும், தாமாரின் வஞ்சனையும் (38:12-23)
  • யூதாவின் அறிக்கையிடுதலும், தாமாரின் உரிமையை நிலைநிறுத்துதலும் (38:24-30)

போத்திபாரின் வீட்டில் அடிமையாக யோசேப்பு (39:1-23)

  • போத்திபாரின் வீட்டில் யோசேப்பு விசாரணைக்காரனாக பதவி உயர்வு பெறுதல் (39:1-6)
  • போத்திபாரின் மனைவி யோசேப்பை பாவம் செய்ய தூண்டுதல் (39:6-18)
  • பொய் குற்றம் சாட்டப்பட்டதால், யோசேப்பு சிறை வைக்கப்படுதல் (39:19-23)

சிறைச்சாலையில் யோசேப்பு (40:1-23)

  • பார்வோனின் அதிகாரிகளும் சிறைவைக்கப்படுதல் (40:1-8)
  • பானபாத்திரக்காரனின் கனவும், யோசேப்பு விளக்கம் கூறுதலும் (40:9-15)
  • சுயம்பாகியின் கனவும், யோசேப்பு விளக்கம் கூறுதலும் (40:16-19)
  • கனவுகளின் நிறைவேற்றம் (40:20-23)

பார்வோனின் அந்தரங்கக் கனவுகள் (41:1-57)

  • பார்வோனின் கனவுகளின் பொருளை விளக்கிக் கூற மந்திரவாதிகளால்; இயலவில்லை (41:1-8)
  • பானபாத்திரக்காரன் யோசேப்பை நினைவுகூருதல் (41:9-13)
  • பார்வோன் அவன் கனவுகளை பொருள் விளக்கிக் கூற யோசேப்பை அழைத்தல் (41:14-32)
  • யோசேப்பின் ஞானமுள்ள திட்டம் (41:33-36)
  • பார்வோனிடமிருந்து யோசேப்புக்கு வெகுமதி (41:37-45)
  • ஏழு வருடங்களின் செழுமையில் யோசேப்பின் சேமிப்பு (41:46-49)
  • எகிப்தில் யோசேப்பின் சந்ததி (41:50-52)
  • ஏழு வருட பஞ்சகாலத்தில் யோசேப்பின் உணவுப் பொருட்கள் அளித்தது (41:53-57)

எகிப்தில் யோசேப்பின் சகோதரர்கள் (42:1-38)

  • தானியம் வாங்கும்படி எகிப்திற்கு பிரயாணம் பண்ணுதல் (42:1-5)
  • எகிப்தில் யோசேப்பை சகோதரர்கள் சந்தித்தல் (42:6-17)
  • சகோதரர்கள் எகிப்தை விட்டுப்போவதற்கு முன் ஒரு பிணை கோருதல் (42:18-25)
  • சகோதரர்கள் சிமியோனின்றி தானியத்துடன் வீட்டுக்கு வந்தனர் (42:26-34)
  • சூழ்நிலைக்கு ஏற்ப யாக்கோபின் எதிர்செயல் (42:35-38)

சகோதரர்கள் எகிப்துக்குத் திரும்புதல் (43:1-34)

  • யூதா யாக்கோபிடம் பென்யமீனை எகிப்துக்கு அனுப்ப வேண்டுதல் (43:1-15)
  • யோசேப்பின் விசாரணைக்காரனிடம் சகோதரர்கள் விண்ணப்பித்தல் (43:16-25)
  • யோசேப்பும், சகோதரர்களும் உணவு பகிர்தல் (43:26-34)

ஆபத்தில் பென்யமீன் (44:1-34)

  • வெள்ளிப்பாத்திரம் பற்றிய சம்பவம் (44:1-17)
  • யோசேப்பிடம் யூதாவின் தன்னலமற்ற விண்ணப்பம் (44:18-34)

யோசேப்பு அவனுடைய சகோதரர்களோடு சேர்தல் (45:1-28)

  • யோசேப்பு அவனுடைய சகோதரர்களுக்கு தன்னை வெளிப்படுத்துதல் (45:1-15)
  • குடும்பத்தை எகிப்துக்கு நகர்த்துவதற்கு பார்வோனின் அழைப்பு (45:16-20)
  • யோசேப்பின் வழங்குதல்களும் அவனது சகோதரர்கள் யாக்கோபிடம் திரும்புவதும் (45:21-28)

யாக்கோபின் குடும்பம் எகிப்துக்குக் குடிபெயர்தல் (46:1-47:12)

  • பெயர்செபாவில் கர்த்தர் யாக்கோபுக்கு ஆறுதல் அளித்ததும், எகிப்துக்குப் பயணமும் (46:1-7)
  • யாக்கோபின் வம்சாவழி (46:8-27)
  • யோசேப்பு யாக்கோபையும் அவன் குடும்பத்தையும் வரவேற்றல் (46:28-34)
  • யாக்கோபின் குடும்பம் பார்வோனுக்கு முன்பாகவும், மற்றும் அவர்கள் போய் கோசேனில் குடியமர்த்தப்படுதலும் (47:1-12)
  • தொடர்ந்து கொண்டிருந்த பஞ்சம் (47:13-26)
  • கவலைப்பட்ட மக்கள் (47:13-19)
  • யோசேப்பால் விதிக்கப்பட்ட புதிய வரிகள் (47:20-26)

யாக்கோபின் கடைசி நாட்கள் (47:27-48:22)

  • மக்பேலாவிலுள்ள குகையில் அடக்கம் பண்ணுவதற்கான யாக்கோபின் வேண்டுதல் (47:27-31)
  • பன்னிருவர் நடுவே யோசேப்பின் இரு குமாரரை யாக்கோபு நியமித்தல் (48:1-7)
  • எப்ராயீம், மனாசே என்பவர்களுக்கான ஆசீர்வாதம் (48:8-22)

மரணப்படுக்கையில் யாக்கோபு மகன்களை ஆசீர்வதித்தல் (49:1-27)

  • கவனிக்க வேண்டிய அழைப்பாணை (49:1,2)
  • லேயாளின் மகன்கள் (49:3-15)
  • மறுமனையாட்டிகளின் மகன்கள் (49:16-21)
  • ராகேலின் மகன்கள் (49:22-27)

யாக்கோபின் மரணமும் அடக்கமும் (49:28-50:14)

  • யாக்கோபின் மரணம் (49:28-33) கானானில் யாக்கோபை அடக்கம் செய்தல் (50:1-14)
  • யோசேப்பின் இறுதி ஆண்டுகள் (50:15-26)
  • பயந்துபோயிருந்த தனது சகோதரர்களுக்கு யோசேப்பு உறுதியளித்தல் (50:15-21)
  • யோசேப்பின் அடக்கம் குறித்த அறிவுரைகளும், அவனது மரணமும் (50:22-26)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *