ஆதியாகமம் புத்தகத்தின் அறிமுகம்

ஆதியாகமம் புத்தகத்தின் அறிமுகம் (The Book of Genesis Introduction ) தலைப்பு

நாம் இந்த பதிவில் ஆதியாகமம் புத்தகத்தின் ஆசிரியர் , எழுதப்பட்ட காலம் , வரலாறு , பொருளடக்கம் , தொல்பொருள் ஆராய்ச்சி போன்ற பல தகவல்களை அறிந்து கொள்ள இருக்கிறோம்.

 • எபிரெய வேதாகமத்தின் முதல் நூலிற்கு “Genesis” என தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
 • Genesis என்னும் ஆங்கிலத் தலைப்பானது லத்தீன் வேதாகமத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.
 • அது பழைய ஏற்பாட்டின் கிரேக்க வடிவமான செப்துவஜிந்தில் உள்ள Yévert) என்பதின் ஒலிபெயர்ப்பாகும்.
 • புனித நூல்களில் ஒரு படைப்பின் முதல் சொல்லை வைத்துப் பெயரிடுவது யூதப் பழக்கமாக இருந்தது, எனவே தான் இந்நூலுக்கு எபிரெய மொழியில்nuxa (Bre ‘shith) என பெயரிடப்பட்டுள்ளது, பாரம்பரியப் பழக்கப்படி “ஆதியிலே” என அர்த்தம் கொள்ளும்படி எழுதப்பட்டுள்ளது.

ஆதியாகமம் அறிமுகம். நூலாசிரியரும் காலமும்

 • ஆதியாகமத்தின் நூலாசிரியர் மற்றும் காலத்தைக் கண்டறிவது சிக்கலான விஷயமாகவே இருக்கிறது.
 • இந்நூலை எழுதியவர் யார் என்பதும் எப்போது எழுதப்பட்டது என்பதும் இதில் சொல்லப்படவில்லை.
 • தங்களது படைப்புகளைத் தொகுக்க, பல்வேறு ஆதாரங்களைப் பழங்கால எழுத்தாளர்கள் பலர் பயன்படுத்தியதாக பழைய ஏற்பாட்டின் பல பகுதிகளிலிருந்து நாம் அறிகிறோம்.
 • ஆசிரியர்கள் கேனான் முறைமைக்கு தொடர்பில்லாத நூல்களில் இருந்தும் மேற்கோள் காட்டியிருப்பார்கள்:
 • எண்ணாகமம் 21:14, 15 ஆகிய வசனங்களில் அதன் ஆசிரியர் “கர்த்தருடைய யுத்த புஸ்தகம்” என்பதை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
 • யோசுவா 10:13 வசனத்தில் யோசுவா நீண்ட பகல்பொழுதை ஏற்படுத்தியது பற்றிய வாக்கியம் “யாசேரின் புஸ்தகத்தில்” இருப்பதாகக் அதன் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
 • மேலும், 2 சாமுவேலின் நூலாசிரியர், சவுல் அரசனும் அவனது மகன்களும் கில்போவா மலையில் மரணித்த போது தாவீது பாடிய புலம்பலை “யாசேரின் புஸ்தகத்திலிருந்து” பெற்றதாகக் குறிப்பிடுகிறார் (2 சாமு. 1:18-27).
 • 1 மற்றும் 2 இராஜாக்கள், 1 மற்றும் 2 நாளாகமம் எஸ்றா, நெகேமியா ஆகிய நூல்களின் ஆசிரியர்களும் தங்கள் நூல்களை பல்வேறு நூலாதாரங் களிலிருந்து பெற்று எழுதினார்கள்.
 • புதிய ஏற்பாட்டில், கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றி லூக்காவுக்கு நேரடியாகப் பார்த்த அனுபவம் இல்லாவிட்டாலும், தனது சுவிசேஷப் படைப்பைத் தொகுப்பதற்கு செவிவழியாகவும் எழுத்து மூலமாகவும் கிடைத்த ஆதாரங்களைப் பயன்படுத்தியதாக எழுதியிருக்கிறார் (லூக். 1:1-4).
 • ஆகையால் வேதாகம நிகழ்வுகளை நூலாசிரியர்கள் நேரடியாகக் காணாவிட்டாலும், கர்த்தரிடமிருந்து நேரடியாக வெளிப்பாடு பெறாவிட்டாலும் (தீர்க்கதரிசிகளைப்போல).
 • வேத வசனங்களை எழுதுவதற்கு வேறு மூலங்களைப் பயன்படுத்தும்படி பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
 • ஆதியாகம நூலின் ஆசிரியருக்கு தேவன் வெளிப்படுத்தினார், இந்நூல் பின்வரும் தலைமுறைகளுக்காகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
 • ஆதியாகமத்தின் ஆசிரியர் யாரென்று பார்க்கையில், ‘சீனாய் மலையில் மோசே கர்த்தருடைய சட்டத்தைப் பெற்றுக்கொண்டார்”2 என ஆதிகால யூத பாரம்பரியம் சொல்கிறது. அச்சட்டத்தில் வேதாகமத்தின் முதல் புத்தகம் மட்டுமல்லாது ஐந்து ஆகமங்களின் மற்ற புத்தகங்களான யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் மற்றும் உபாகமம் ஆகியவையும் அடங்கும். இந்தத் தொகுப்பு வேதாகமத்தின் பல பகுதிகளில் “மோசேயின் நியாயப்பிரமாணம்” [அல்லது “புஸ்தகம்”] என்று அழைக்கப்பட்டுள்ளது.”
 • இஸ்ரவேல் ஜனங்களுடன் நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்தில் செலவிட்டபடியால் ஐந்து ஆகமங்களை எழுதுவதற்கு மோசேக்கு நிச்சயமாக நிறைய காலம் கிடைத்திருந்தது. “மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு” (அப். 7:22) என்று குறிப்பிட்டுள்ளதற்கேற்ப, அவருக்கு இப்பணிக்கான தகுந்த கல்விப் பின்னணியும் இருந்தது.
 • ஒப்பற்ற தீர்க்கதரிசியுமானதால் (உபா. 34:9, 10), அவர் தேவனிடமிருந்து உறுதியாக பல நியாயப்பிரமாணங்களையும் அறிவுரைகளையும் பெற்றிருந்தார் (யாத். 24:4; உபா. 31:9ஐப் பார்க்கவும்).
 • மேலும், இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணம் செய்த இடங்களைப் பற்றிய பயணப்பதிவுகளையும் அவ்விடங்களில் நடைபெற்ற சில நிகழ்வுகளையும் அவர் எழுதி வைத்திருந்தார் (யாத். 17:14; எண். 33:2-37),
 • அதுபோல குறைந்த பட்சம் ஒரு பாடலையும் எழுதினார் (உபா. 31:22).
 • சங்கீதம் 90 மோசேயினால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. இருப்பினும், ஐந்து ஆகமங்களின் வேத வசனப் பகுதிகளுக்கு மட்டும் தான் மோசே பங்களித்தார் என்று முடிவு செய்துவிட முடியாது, ஏனெனில் கண்ணால் கண்ட சாட்சியாகவும் பல நிகழ்வுகளில் அவரே நேரடியாகப் பங்கேற்பதாலும் அவரது வார்த்தைகள் யூத ஜனங்களுக்கு பெரும் மதிப்பிற்குரியதாக இருந்தது. மோசே எழுதியதாகக் கூறப்படும் ஐந்து ஆகமங்களின் பிற நூல்களின் பகுதிகளோடு ஒப்பிடும்போது, ஆதியாகமத்தின் எந்தப் பகுதியும் அவர் தான் அதன் நூலாசிரியர் எனக் குறிப்பிடுவதில்லை. மேலும், ஆதியாகமத்தின் சில பகுதிகள் மோசேக்குப் பின்வரும் காலத்தைப் பற்றி குறிப்பிடுகிறது.
 • உதாரணமாக, கானான் தேசத்தின் பகுதியான சீகேமுக்கு ஆபிராம் வந்ததைக் குறிப்பிடும்போது, “அக்காலத்திலே கானானியர் அத்தேசத்திலே இருந்தார்கள்” (12:6) என்கிற வார்த்தைகளை ஆசிரியர் பயன்படுத்துகிறார்.
 • இதைக் கவனித்திருந்த எழுத்தாளர்/ஆசிரியர் மோசே வாழ்ந்த காலகட்டத்துக்குப் பின் வாழ்ந்து கொண்டிருந்தவர் என்பதை இந்த வாக்கியம் உணர்த்துவதாகக் காணப்படுகிறது. அதாவது அக்காலத்தில் கானானியர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்றி அதில் ஆட்சி புரியவில்லை.
 • மெசொப்பொத்தோமியாவின் நான்கு அரசர்களால் யோர்தான் பள்ளத்தாக்கு கைப்பற்றப்பட்டதாக மற்றொரு பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை ஆபிராம் தனது சொந்தப் படைகளைக் கொண்டு வீழ்த்தியதில் “தாண் என்னும் ஊர் மட்டும்” தொடர்ந்தான் எனச் சொல்லப்பட்டுள்ளது (14:14).
 • இருந்தாலும், நியாயாதிபதிகளின் ஆசிரியரைப் பொருத்தவரை, பட்டணத்திற்கு முன்பு இருந்த பெயர் லாயீஸ் அந்தப் என்பதாகும், நியாயாதிபதிகளின் பிந்திய காலகட்டத்தில் தாண் புத்திரரால் அந்த ஊர் கைப்பற்றப்படும் வரை அதற்கு “தாண்”” என்ற பெயர் கொடுக்கப்படவில்லை (நியா. 18:27-29).
 • ஆதியாகமத்தில் இதுபோன்ற மற்ற குறிப்புகளைப் போல, பல கால கணிப்பின் முரண்பாடுகள் காலப்போக்கில் கண்டறியப்பட்டன, அவற்றை (11:28, 31; 34:7; 36:31) வசனங்களில் பார்க்கலாம்.
 • ஆதாரங்களைப் பார்க்கையில் மோசேயின் காலகட்டத்திற்குப் பின் சில திருத்தங்கள் செருகப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது. எனினும் இந்த செருகல்களால் வேதவசனங்களின் இறைத்தன்மையும் அதிகாரப்பூர்வமும் கேள்விக் குறியாக்குவதில்லை.
 • கி.மு. பதினைந்தாம் மற்றும் பதிமூன்றாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆதியாகமத்தில் பாரம்பரியமாக நம்பப்பட்டு வந்த மோசேயின் ஆசிரியத்துவமும் பாதிக்கப்படவில்லை.
 • ஆதியாகமத்தில் இப்போது நாம் கொண்டிருக்கும் பகுதிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை நம்மால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.
 • எனினும் மோசே அல்லது அவரது தலைமையில் (யோசுவா போன்றோர்) செவிவழியாகவோ எழுத்துப்பூர்வமாகவோ கிடைத்த மூலங்களைக் கொண்டு இந்நூலின் சிலவற்றை தொகுத்திருக்கலாம் என்பது புலனாகிறது.
 • பின்னொரு காலத்தில் யாரோ ஒரு எழுத்தாளரோ/ஆசிரியரோ? பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலோடு, அவரது சமகால் வாசகர்களுக்கு ஏற்ப சில பெயர்களையும் இடங்களையும் சேர்த்திருக்கிறார்.
 • எனினும், பகுத்தறிவான வேதாகம விமர்சகர்கள் அவர்களது இறையியல் கருத்து உருவாக்கங்களுடன் இந்த இடைச்செருகல்களின் சாத்தியநிலையைப் பயன்படுத்துவதுண்டு, மேலும் வேதவசனங்களின் ஆதாரப்பூர்வத்தன்மை மற்றும் இறைத்தன்மையை மறுக்கவும், மோசே காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆதியாகமம் (ஐந்து ஆகமங்களின் மற்ற புத்தகங்களையும்) எழுதப்பட்டதான காரணமற்ற மூலங்களை உருவாக்கவும் பயன்படுத்துகிறார்கள். இந்த “மூல விமர்சகர்கள்” பலரைப் பொறுத்தவரையில், முற்பிதாக்கள் மற்றும் மோசேயின் கதைகள் அனைத்தும் அடிப்படை வரலாற்றுப்பூர்வ உண்மைகள் இல்லாத கட்டுக்கதைகளாகக் கருதப்படுகின்றன.
 • இந்த ஆவணப் புனைவுத்தன்மை” பற்றி விளக்கமாக ஆராய்வது இந்த விளக்கவுரையின் நோக்கமில்லை என்றாலும், ஆதியாகமத்தை விளக்குவதற்கான சில முக்கிய கருத்துகளில், புனைவுத்தன்மை குறித்த பலவீனங்களும் சற்று விளக்கப்பட்டுள்ளன.
 • வேதாகமத்தின் முதல் புத்தகத்தின் அடிப்படையான ஒருங்கிணைப்பையும் உண்மைத் தன்மையையும் கொடுக்கும்பொருட்டு விமர்சகர்கள் எல்லா நீள அகலங்களிலும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 • எனினும், ஆதியாகமமும் ஐந்து ஆகமங்களின் பெரும்பாலானவையும் மோசேயால் எழுதப்படவில்லை என்று ஆதாரப்பூர்வமாகக் காட்டக்கூடிய நியாயமான விஷயங்கள் எதையும் இதுவரை முன்வைக்கவில்லை.
 • அவர்களது கோட்பாடுகள் விஷயத்துக்குரிய வழிகளால் நிரூபிக்க முடியாத மதசார்பற்ற கருத்துகள் கொண்ட முன் யூகங்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
 • ஆதியாகமம் புத்தகத்தை உருவாக்க பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்திய எழுத்தாளரையும் அதன் காரணிகளையும், பற்றி வேதாகமம் எந்தத் தகவல்களையும் வழங்காத பட்சத்தில், அவை வேதாகம விசுவாசத்திற்கு முக்கியமானதல்ல என்று நம்புவது நியாயமானதாகவே இருக்கிறது. என்கிற வேறுவிதமாக பார்ப்போமானால், முற்பிதாக்களைப் பற்றிய பழங்கால வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டுகள் மற்றும் பிற புராதனச் சின்னங்கள் மூலம் நாம் எவ்வளவு அதிகமாக அறிந்து கொள்கிறோமோ அவ்வளவு அதிகமாக வேதாகமக் கதைகள் நிஜமானவை என்கிற உண்மையை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
 • அவை யூத ஜனங்களுக்காக மகத்துவமும், சிறப்பும் கொண்ட கடந்த காலத்தைச் சித்தரிக்கக்கூடிய சரித்திரப் பிரபலங்களாகிய ஆண்கள் மற்றும் பெண்களின் கட்டுக்கதைகள் அல்ல. உண்மையில், ஆதியாகமத்தின் (மற்றும் ஐந்து ஆகமங்களின்) நிஜமான நாயகன் தேவனே ஆவார், அவரே சிருஷ்டிகர், தம்முடைய கிருபையுள்ள இரக்கத்தால் பாவமுள்ள மனித இனத்தை அழைத்து ஆசீர்வதித்தார்.
 • பாவத்திலிருந்து மனித குலத்தை இரட்சிக்க இவ்வுலகிற்கு ஒரு நாள் தமது சொந்த குமாரனை அளிக்கும்பொருட்டு மனிதர்கள் செய்யும் தவறுகளையும் தாண்டி தமக்கென்று ஜனங்களை உருவாக்க அவர்களைப் பயன்படுத்தினார்.
 • ஆதியாகமம் புத்தகமானது நேர்மையான ஆனால் தவறாக வழிநடத்தப்பட்ட தனிநபர்களால் உருவாக்கப்பட்ட “பக்திசார்ந்த மோசடி” அல்ல. மாறாக அது, உலகத்தின் “தொடக்கத்தைப்” பற்றியும்,  மனிதகுலத்தின் உருவாக்கம் பற்றியும், பாவமும் அதன் விளைவுகள் பற்றியும், தொடர்புடைய ஏவப்பட்ட தேவனுடைய வார்த்தை ஆகும்.
 • முதன்மையாக, வேதாகமத்தின் எஞ்சிய பகுதி முழுவதும் தொடரக்கூடிய மனித சரித்திரத்திலேயே தெய்வீக மீட்பின் வரலாற்றின் துவக்கத்தை அது அளிக்கிறது.
 • இங்கே தொடங்குவதைக் காணலாம். மீட்பின் உச்ச கட்டமாக எல்லா காலத்துக்கும் மீட்கப்பட்ட காட்சி – ஆனால் அது ஏதேன் தோட்டத்து பரதீசில் இல்லாமல், பரலோகத்தின் பரதீசில் தேவாதி தேவனின் சிங்காசனத்தைச் சுற்றி, திரியேக தேவனுடனான ஐக்கியத்தில் அவருடைய ஜனங்களுடன் நித்திய நித்தியமாக மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியானவரின் (இயேசுவின்) பாடலையும் பாடி ஆனந்தமாய் ஆரவாரிப்பதை வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் கொண்டுள்ளது.

பொருளடக்கம்

டோல்டோத் (Toledoth) பகுதிகள்

 • ஆதியாகமத்தை பத்து பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொன்றும் எபிரெயச் சொல்லான (ni7zin, toledoth அல்லது tholedoth) எனத் தொடங்கும், அதற்கு “தொகுப்பு:” “வம்சங்கள்,” “தலைமுறைகள்,” அல்லது “வம்சவரலாறு” என்று அர்த்தமாகும் (2:4; 5:1; 6:9; 10:1; 11:10, 27; 25:12, 19; 36:1; 37:2 வசனங்களைப் பார்க்கவும்).
 • ஒவ்வொரு பிரிவிலும், வம்சவரலாறு (டோல்டோத்) என்பது ஒரு அறிமுகச் சொற்றொடராகப் பயன் படுத்தப்படுகிறது, அது அப்பகுதியின் தந்தையை அல்லது முக்கிய கதாப்பாத்திரத்தை அடையாளப்படுத்துகிறது. 2:4ஆம் வசனம் விதிவிலக்காக அமைந்திருக்கிறது.
 • சிலர் மட்டுமே இதில் 2:5-25 வசனங்களின் அறிமுகமாக பார்ப்பதற்குப் பதிலாக, அதை 1:1-2:3 வசனங்களுக்கான முடிவாக பார்க்கின்றனர். சில இடங்களில், வம்சவரலாறு என்னும் சொல் பகுதிக்கு உள்ளேயே வருகிறது (10:1, 32; 25:12, 13:36:1,9).
 • ஆதியாகமத்தின் பத்து பகுதிகளில் வம்சவரலாறு என்பது தொடக்கத்தில் வரும்போது, NASB பதிப்பு வேதாகமம் 2:4 வசனத்தில் மட்டும் அதை “தொகுப்பு” என்றும், மற்ற இடங்களில் “தலைமுறைகள்” என்றும் அர்த்தம் கொள்கிறது. KJV பதிப்பில் அச்சொல் “வம்சங்கள்” என்று தொடர்ச்சியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; RSV பதிப்பில் முதல் நான்கு பத்திகளில் “வம்சங்கள்” என்றும் அடுத்த ஐந்தில் “தலை முறைகள்” என்றும் கடைசி பத்தியில் “வரலாறு” என்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
 • ஐந்து பகுதிகளில், வம்சவரலாறு என்பதைத் தொடர்ந்து ஒரு விரிவுரை (கதை) வருகிறது, மற்ற ஐந்தில் அது ஒரு வம்சத்தைக் குறிப்பிடும் தலைப்பாக அமைந்திருக்கிறது. பின்வருவது, பத்து வம்ச வரலாறு பிரிவுகளின் ஒரு மேற்பார்வை:

அறிமுகம்: வானமும் பூமியும் படைக்கப்படுதல் (1:1-2:3).

வேதாகமத்தின் வெள்ளத்திற்கு முன் வாழ்ந்த குடும்பங்களின் தொகுப்பு

 • 1. வானங்களையும் பூமியையும் பற்றிய விரிவுரை (தொகுப்புரை) (2:4-4:26)
 • 2. ஆதாமின் வம்சவரலாறு (5:1-6:8)
 • 3. நோவாவின் முன்னோர்களின் விரிவுரை (6:9-9:29)
 • 4. நோவாவின் குமாரர்களின் வம்சவாலாறு (10:1-11:9)
 • 5. சேமின் வம்சவரலாறு (11:10-26) ஆபிரகாமின் குடும்ப வரலாறு
 • 6. தேராகுவின் முன்னோர்களின் விரிவுரை (11:27-25:11)
 • 7. இஸ்மவேலின் வம்சவரலாறு (25:12-18)
 • 8. ஈசாக்கின் முன்னோர்களின் விரிவுரை (25:19-35:29)
 • 9. ஏசாவின் வம்சவரலாறு (36:1-43)
 • 10. யாக்கோபின் முன்னோர்களின் விரிவுரை (37:1-50:26

நூலமைப்பு

நூலமைப்பாக இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டிருக்கிறது:

 • (1) அதிகாரங்கள் 1 முதல் 11 வரை மற்றும்
 • (2) அதிகாரங்கள் 12 முதல் 50 வரை

முதல் பகுதி படைப்பு முதல் பெருவெள்ளம் வரையிலும் உள்ளடக்கியுள்ளது. தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதில், அவருடைய ஜனங்கள் உருவாவதை, இரண்டாவது பகுதியானது கொண்டுள்ளது.

அதிகாரங்கள் 1-11.

 • முதல் பகுதி அதன் நோக்கில் உலக முழுவதற்குமானதாக அமைக்கப்பட்டு, பழங்கால வரலாற்றை வானங்களையும் அதிலுள்ள எல்லா மண்டலங்களையும், பூமியையும், அதிலுள்ள கடலில் வாழும் உயிரினங்கள் முதல் நிலத்தில் வாழ்பவை மற்றும் ஆகாயத்தில் பறக்கும் ஜீவராசிகள் வரை அனைத்தும் அடங்குகின்றன.
 • மிகவும் உன்னதப்படைப்பான ஆண், பெண் மனிதர்களான, மனிதகுலப் படைப்பு – தேவ சாயலின் படைப்பைக் குறித்து விரிவுரையானது விரைவாக கடந்து செல்கிறது. கர்த்தர் அவர்களுடைய தேவைகள் அனைத்தையும் சந்தித்து, தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வழியைத் தேர்வுசெய்து கொள்ளும் அருமையான சூழலையும் சுதந்திரமான சிந்தனையையும் வழங்கியிருந்தார் (1:1-2:25).
 • சிருஷ்டிப்பிற்குப் பின், ஆதாம் ஏவாள் வழியாக பாவத்தின் தொடக்கம் வந்தது, காயீன் தனது சகோதரனான ஆபேலைக் கொலை செய்ததன் மூலம் மனித இனம் முழுவதுக்கும் பாவம் தொடர்ந்தது. இதனால் நெருக்கடியான வாழ்க்கையையும் தவிர்க்க முடியாத மரணத்தையும் நோக்கி மனிதன் போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது (3:1-5:32).
 • மனிதன் பாவத்தில் வீழ்ந்ததால் பாவம் வாதையைப் போல் பூமியைச் சூழ்ந்தது, பூமியெங்கும் வன்முறையும் பேரழிவும் நிரம்பியது. ஆனால் மனிதனின் துர்க்குணத்தால் தேவன் மனிதனைத் தண்டிக்க அனுப்பிய பெருவெள்ளத்தில் தேவனுடைய கிருபையால் ஒரு மனிதனும் அவனது குடும்பத்தினரும் காக்கப்பட்டனர் (6:1-9:29).
 • பின் மனிதர்கள் தங்களுக்கென்று ஒரு பெயரை உண்டாக்க வானம் அளவு எட்டக்கூடிய பாபேல் கோபுரத்தைக் கட்டினார்கள், ஆனால் தேவன் அவர்களது முயற்சிகளை முறியடித்து, அவர்கள் பாஷைகளைத் தாறுமாறாக்கி, அவர்களைப் பூமியெங்கும் சிதறிப்போகப் பண்ணினார் (10:1-11:32).

அதிகாரங்கள் 12-50.

உலகத்திற்குள் பாவமும், தண்டனைகளும் வந்த பகுதிகளுக்குப் பின்பு, இரண்டாவது முக்கியப்பகுதியை ஆதியாகமம் உற்றுநோக்குகிறது. இந்த சந்தர்பத்தில், மனித இனத்தின் கீழ்ப்படியாமையால், அவர் அளித்த சாபங்களை மேற்கொள்ளும் வாக்குத்தத்தங்களை கர்த்தர் வெளிப்படுத்துகிறார்.

இந்த அதிகாரங்களில் தான் மொத்த நூலின் மையப்பொருளும் அடங்கியுள்ளது, அது தேவனுடைய ஜனங்களின் ஆரம்ப காலம், குறிப்பாக ஆபிராம்/ஆபிரகாம் மற்றும் அவரது சந்ததியினரின் முற்பிதாக்களின் வரலாறு இடம்பெற்றுள்ளது.

 • 1.இந்தப் பகுதி ஆபிரகாமை தேவன் அவனது சொந்த ஊரான ‘ஊர்’ஐ (தெற்கு மெசொபொத்தாமியாவில்) விட்டுப் புறப்பட்டு அவருக்காக பல ஆசீர்வாதங்களை பெற இருக்கும் கானான் தேசத்திற்குப் போகச் சொல்கிறார். அவைகளின் மத்தியில் நிலம், பெரிய பெயர் மற்றும் தேசம் (அந்த வேளையில் அவன் பிள்ளையில்லாதிருந்த போதிலும்) மற்றும் பூமியிலுள்ள குடும்பங்களெல்லாம் அவனுக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்ற சத்தியமும் இருந்தது. ஆபிரகாம் தன் விசுவாசத்தில் போராடிக் கொண்டிருந்து, ஆண்டுகளாய் பல பலவீனமாக இருந்தாலும், தேவன் மீதுள்ள நம்பிக்கையில் கொஞ்ச காலத்திற்குப் பிறகு, அவனுடைய விசுவாசத்தில் வளர்ந்து, ஈசாக்கு என்னும் வாக்குத்தத்தம் பெற்ற மகனைப் பெற்றான் (அதிகாரம் 21; அதிகாரங்கள் 12-23 ஐப் பார்க்கவும்).
 • 2. ஆபிரகாமுக்கும் யாக்கோபுக்கும் இடையில் ஈசாக்கு ஒரு இடைப்பட்ட மனிதனாக வருகிறார். அவருடைய வாழ்க்கை மிகவும் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆரானுக்கு ஆபிரகாம் அனுப்பிய விசுவாசமுள்ள ஊழியக்காரன் மூலமாக (அங்கே இன்னமும் தன் தகப்பன் வீட்டாரில் சிலர் வாழ்கிறார்கள்). ஈசாக்கிற்கு “ரெபேக்காள்'” என்னும் மனைவி கிடைத்தாள். அவள் பல ஆண்டுகளாக மலடியாக இருந்தாள்; ஆனால் அவளுக்காக ஈசாக்கு ஜெபித்த போது, அவர்களுக்கு இரட்டைக் குமாரர்களைக் கொடுத்து கர்த்தர் ஆசீர்வதித்தார். ஏசாவும் யாக்கோபும். மேலும், ஈசாக்கிற்கு அருளிய உடன்படிக்கை வாக்குத்தத்தங்களைப் புதுப்பித்தார்; ஆனால் இந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற கர்த்தர் வைத்திருந்த திட்டம் ஈசாக்கின் விருப்பங்களுக்கு முரணாக இருந்தன. அவர்களுடைய சந்தானத்துக்கான ஆசீர்வாதங்கள் அவருக்குப் பிரியமான மகனான ஏசாவின் மூலம் தொடராமல் இளைய மகனான யாக்கோபின் மூலம் தொடருவதாக இருந்தது (24:1-25:26).
 • 3. யாக்கோபின் கதையானது ஒரு மனிதன் தன் வாழ்வின் பெரும்பகுதியை தன் நேர்மைக்காகப் போராடுவதைக் காட்டுகிறது. அவன் தனது வாழ்க்கையில், சதி செய்கிறவனாகவும் ஏமாற்றுகிறவனாகவும் காணப்பட்டான். அவனது இளம் பிராயத்தில், ஏசா பசியாக இருந்தபோது அவனது பிறப்புரிமையை விற்கும்பொருட்டு யாக்கோபு அவனை ஏமாற்றினான். அவனது தந்தை வயதாகி குருடனாக இருக்கும்போது (அவனது தாய் ரெபேக்காளோடு சேர்ந்து) ஈசாக்கிடமிருந்து அவனது மரணப்படுக்கையின் ஆசீர்வாதத்தை ஏசா பெற்றுக்கொள்ளாதபடி அவனை ஏமாற்றி அவன் பெற்றுக் கொண்டான். பின் அவனது சகோதரனின் கோபத்திலிருந்து தப்பிக்க, மெசொபொத்தோமியாவிற்கு மேலே உள்ள ஹாரானுக்கு யாக்கோபு தப்பிச் சென்றான். அந்த தூர தேசத்தில் அவனைப் போலவே பொய்யனாகவும் எத்தனாகவும் வாழ்ந்து வந்த அவனது மாமா லாபானைச் சந்தித்தான். அவன் தனது மகள்களான ராகேலையும் லேயாளையும் திருமணம் செய்ய பதினாலு வருடம் யாக்கோபைத் தனது வேலையாளாக வைத்திருந்தான். மேலும் ஆறு வருடம் பணிசெய்தால் நிறைய கால்நடைகளைத் தருவதாக வாக்களித்து மீண்டும் பொய்யுரைத்தான். இருப்பினும், கர்த்தர் யாக்கோபோடு கூட இருந்து, அவனுக்கு நிறைய ஆடுகளும் மந்தைகளும் கிடைக்கும்படி ஆசீர்வதித்தார். அவனது மனைவிகளோடு சேர்த்து, அவர்களது இரண்டு அடிமைப் பெண்களையும் மறுமனையாட்டிகளாக யாக்கோபு பெற்றான். மொத்தமாக, இந்த நான்கு பெண்களும் யாக்கோபுக்கு பதின்மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர் (பன்னிரண்டு குமாரர்களும் ஒரு குமாரத்தியும்). யாக்கோபின் மூலமாகவும் தமது உடன்படிக்கையைக் கர்த்தர் உறுதிசெய்து, ஏசாவுடன் ஒப்புரவாகும்படி அவனை மீண்டும் கானானுக்கு வழிநடத்தினார் (25:27-35:15).
 • 4.ராகேல், யாக்கோபின் பிரியமுள்ள மகனான யோசேப்பைப் பெற்ற பின், அவனது இளைய மகனான பென்யமீனையும் பெற்று மரித்துப்போனாள். யோசேப்பு அவனது தகப்பனால் செல்லமாக வளர்க்கப்பட்டான், இதனால் அவனது சகோதரர்களின் பெருஞ்சினத்துக்கு ஆளானான். உதாரணமாக, அவர்களைப் பற்றி தன் தகப்பனிடம் மோசமான புகார்களைத் தெரிவிப்பான். தன் குடும்பத்திலுள்ள அனைவரும் ஒரு நாள் அவனைப் பணிந்து கொள்வார்கள் என்று கனவுகளைச் சொல்லியதால் ஒட்டுமொத்த குடும்பமும் அவன் மேல் கோபமாக இருந்தது. யோசேப்பிற்கு பதினேழு வயதானபோது, எகிப்திற்குப் பிரயாணப்பட்டுப் போகும் போட்டார்கள்; ஏதோ ஒரு கொடிய மிருகம் யோசேப்பைத் தின்றுவிட்டதாக அவனது தகப்பனை நம்பவைத்தார்கள் (35:16-37:35).
 • 5.எகிப்தில், யோசேப்பு முதலில் பார்வோனின் படைத்தலைவனான போத்திபாருக்கு அடிமையாகப் பணிபுரிந்தான். போத்திபாரின் மனைவியிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாகப் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால், சிறையில் அடைக்கப் பட்டிருந்தான். எனினும், யோசேப்பின் இந்த சோதனைக் காலத்தில் தேவன் அவனோடு இருந்தார். எனவேதான் அவனால் மற்ற இரண்டு சிறைக்கைதிகளின் கனவுகளுக்கு அர்த்தம் சொல்ல முடிந்தது. இறுதியில், பார்வோனின் கனவுகளுக்கும், எகிப்தில் ஏழு ஆண்டுகள் வளமையும் ஏழு ஆண்டுகள் பஞ்சமும் உண்டாயிருக்கும் என்று அர்த்தம் கூறினான். யோசேப்பின் தேவன் தான் அவனுக்கு அதை வெளிப்படுத்தினார் என்பதை பார்வோன் உணர்ந்தபோது, அவனை எகிப்தின் இரண்டாவது அதிபதியாக நியமித்து அடுத்து வரவிருக்கும் பஞ்சத்தின் ஆண்டுகளுக்கு தயார்ப்படுத்தும்படி முழு அதிகாரமளித்தான்.

காலப்போக்கில், தென்கிழக்கு மத்தியதரை நாடுகளில் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டது. யாக்கோபு அவனது குமாரர்களைத் தானியம் வாங்குவதற்காக எகிப்துக்கு அனுப்பி வைத்தான். யோசேப்பு அவர்களை அடையாளம் கண்டுகொண்டான், ஆனால் அவர்களுக்கோ அவனை அடையாளம் தெரியவில்லை, அதனால் அவன் அவர்களைப் பரிசோதிக்கத் தொடங்கினான். முதலில், அவர்கள் வேவுபார்க்க வந்தவர்கள் என்று குற்றம்சாட்டி, அனைவரையும் சிறையில் அடைத்தான். தன் சகோதரர்களுக்கு நிறைய உணவுப் பொருட்களை வழங்கி தங்கள் தகப்பனிடம் அனுப்பி வைத்தான், ஆனால் பென்யமீனோடு வந்தால் தான் சிமியோனை விடுவிப்பதாகச் சொல்லியனுப்பினான். தானியங்கள் எல்லாம் தீர்ந்தபின், பென்யமீனை எகிப்துக்கு அழைத்துச் சென்று மேலும் பல பொருட்களை வாங்கிவருவதற்கு யாக்கோபு சம்மதித்தான்.

இறுதியில், தனது சகோதரர்கள் பல ஆண்டுகளுக்கு முன் தனக்குச் செய்ததற்காக வருந்தி திருந்திவிட்டதை யோசேப்பு உணர்ந்துகொண்டான். அதனால், தான் யார் என்பதை வெளிப்படுத்தி, தங்கள் தகப்பனையும் குடும்பத்திலுள்ள மற்றவர்களையும் கானானிலிருந்து வரவழைத்து தன் அருகிலே இருக்கும்படி கோசேனிலே குடியமர்த்தினான். தங்கள் தகப்பனின் மரணத்துக்குப் பின் யோசேப்பு தன் என்ன சகோதரர்களுக்கு வாக்குறுதியளிப்பதோடு ஆதியாகமம் நிறைவடைகிறது. அவர்களுக்குத் தீங்கு செய்ய மாட்டேன் என்று வாக்களித்து, “வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு” தேவன் நன்மையாக முடியப்பண்ணினார் என்பதை வலியுறுத்தினான் (50:20) தனது மரணத்துக்கு முன், தேவன் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும்.

யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிறபடியே உண்மையுள்ளவராய் இருப்பார் என்று தன் சகோதரர்களுக்கு நினைவூட்டினான். அவர் நிச்சயமாய் உங்கள்மேல் கரிசனையுள்ளவராயிருக்கிறார், ஒரு நாள் அவர்களை நிச்சயமாக இந்த தேசத்தை விட்டு கானானுக்குத் திரும்பகொண்டுபோவார் என்றும் குறிப்பிட்டான். எகிப்து தேசம் அவர்களது சொந்த பூமி இல்லை என்பதால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குத் திரும்பும்போது தனது எலும்புகளை அவர்களுடன் கொண்டு போகும்படி ஆணையிட்டான். இந்த இறுதி வார்த்தைகள் 12 ஆம் அதிகாரம் முதல் 50 ஆம் அதிகாரம் வரை உள்ளவற்றை ஒன்றிணைத்து, வாசிப்பவரை அடுத்து வரும் நிகழ்வுகளுக்குத் தயார்ப்படுத்துகின்றன.

ஆதியாகமும் வரலாறும்

 • ஆதியாகமத்தில் வரும் மிகப் பழமையான சம்பவங்கள், வம்ச வரலாறுகள் (அதிகாரங்கள் 1-11),
 • மற்றும் முற்பிதாக்கள் பற்றிய விளக்கங்களில் (அதிகாரங்கள் 12-50),
 • தனிநபர்களை நிஜ வரலாற்றுப் புருஷர்களாகவும் அவர்கள் காலத்தில் நடந்த சம்பவங்களாகவும் நூலாசிரியர் எழுதியுள்ளார்.
 • வரலாற்றுத் தன்மையைப் பலர் சந்தேகித்திருந்தாலும், வசனங்களை நேரடியாக வாசிக்கும்பொழுது, வேதாகமத்தில் வரும் பாத்திரங்கள் கற்பனையானவையாகவோ வளமான உருவாக்கப்பட்டவையாகவோ தெரிவதில்லை.
 • பழங்கால வரலாறு என்பது ஒரே தடவையாக தனிநபர்கள் மற்றும் தேசங்களின் வார்த்தைகளையோ அல்லது சம்பவங்களையோ மறுபடியும் செயல்படுத்தி பார்ப்பது என்பதோ அல்லது நிச்சயமாக சோதித்துப் பார்ப்பது என்பதோ சாத்தியமில்லாதபடியினால், வரலாறானது எப்போதும் வாய் மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ விசுவாசத்தின் சம்பவங்களை தொகுத்துக் கொடுக்கப்பட்டு உண்மையுடன் பாதுகாக்கப் பட்டதாகும்.
 • நாம் அறிய வேண்டுமென்று தேவன் விரும்புகிறவைகளான இந்த அகில உலகத்தையும், மனுக்குலத்தையும், தேவன் படைத்தது பற்றியும், பாவம் மற்றும் அதன் விளைவுகளின் தொடக்கத்தைப் பற்றியும், மீட்பின் திட்டத்தைப் பற்றியும், ஆபிரகாம் மற்றும் அவனது சந்ததியினரின் வாழ்க்கைகள் மூலமாகக் கர்த்தர் செயல்படத் தொடங்கினார் என்பதையும் வேத வசனங்களின் வெளிப்படுத்தல் மற்றும் அதிகாரப்பூர்வமாகவும் பாதுகாக்க வேதாகம எழுத்தாளர்கள், பரிசுத்த ஆவியால் வழிநடத்தப் பட்டார்கள் என்ற உண்மையை விசுவாசிகள் ஏற்றுக் கொண்டனர்.
 • ஆதியாகம நூலில் வரும் முற்பிதாக்களைப் பற்றி குறிப்பிடும் எந்த நாணலில் எழுதப்பட்ட திருமணச்சான்றிதழோ, தோல் சுருளோ, களிமண்ணால் உண்டான பலகையோ அல்லது கல்வெட்டோ கண்டுபிடிக்கப்படவில்லை.
 • ஆதிநாட்களில் மிகவும் குறைவான எழுத்தாக்க தகவல்களே எழுதப்பட்டுள்ளன என்பது கொஞ்சம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
 • மிகவும் குறைவான எழுத்தாக்க தகவல்களையே நாம் பெற்றுள்ளோம் என்றும், இன்னும் உயிருடனுள்ள எழுத்தாக்க தகவல்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று தொல்பொருள் ஆய்வாளர்களும் நிபுணர்களும் நம்புகின்றனர்.
 • மேலும் ஆதியாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மிகவும் பணக்காரர்களாகவோ பழங்காலக் கிழக்கு நாடுகளைச் சுற்றிப் பிரபலமானவர்களாகவோ இருந்ததாகத் தெரியவில்லை;
 • அவர்கள் பெரியளவில் வெளியே தெரியப்படாத நாடோடிகளாகவே ஒவ்வொரு பகுதிக்கும் பயணித்துள்ளனர்.
 • இதில் பார்வோனால் அதிபதிக்கு அடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட யோசேப்பு மட்டுமே விதிவிலக்கானவன்.
 • அவனுடைய பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தால் கூட, அது வெறுக்கப்பட்ட ஹிக்ஸாஸ் சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட பகுதியில் யோசேப்பு இருந்திருந்தால் அழிக்கப்பட்டிருக்கும். இவர்கள் சிரியா மற்றும் கானானை 100 முதல் 150 ஆண்டுகள் வரை ஆட்சி செய்த எகிப்தியர் அல்லாதவர்களாவர்.
 • அவர்கள் விரட்டியடிக்கப்பட்ட போது எகிப்தில் அவர்கள் இருந்ததற்கான அனைத்து தடயங்களையும், பெயர்களையும் எகிப்தியர் அழித்தனர்10 யோசேப்பு ஹிக்ஸாஸ் அரசர்களின் ஆட்சிக்கு முன் வாழ்ந்ததால் இது நேரிட்டிருக்கலாம்.

தொல்லியல் ஆராய்ச்சியும் முற்பிதாக்களின் பெயர்களும்

தனிப்பட்ட முற்பிதாக்களின் வரலாற்றை தொல்லியல் துறை உறுதிப்படுத்தாத அதே வேளையில், சில வேதபண்டிதர்கள் மிகுதியான வைராக்கியத்தின் காரணமாக வேதாகம தொகுப்பையும் மற்றும் பண்டைய மொசபொத்தோமியாவின் சமுதாய வழக்கங்களையும் ஒரு இணை கோடாக வரைகின்றனர், ஆதியாகம புத்தகத்தில் காணப்படும் அநேக விவரங்கள், பண்டைய பழக்கங்களுடன் ஒத்துப்போவதை நிரூபிக்கின்றன. கிடைக்கப் பெற்றுள்ள ஆதாரங்கள் மிகவும் எதிராகவே உள்ளது, அவர்கள் சொல்லுகிற காலக்கட்டங்களுக்கு 1000 அல்லது 1500 ஆண்டுகளுக்கு பின்பு யூத எழுத்தாளர்கள் சும்மா உருவாக்கிய தொகுப்பு, என்று சில எதிர்வாத பண்டிதர்கள் வாதிடுகிறார்கள். மாறாக, பண்டைய எழுத்தாக்கங்களின் நம்பகத்தன்மையானது வேதாகம வரிசையோடு ஒத்துப்போகிறது.

 • முதலாவதாக, கி.மு. இரண்டாவது ஆயிரம் ஆண்டுகளின் முற்பகுதி யில் மொசபொத்தோமியாவில் பயன்படுத்தப்பட்ட பெயர்களின் வகை முற்பிதாக்களின் சம்பவங்களின் பெயர்களுடன் மிகவும் சரியாக பொருந்தி யுள்ளன. உதாரணமாக, கொள்ளுப்பாட்டன்), “நாகோர்” (ஆபிரகாமின் சகோதரன்), மற்றும் “செரூகு” (ஆபிரகாமின்
 • “யாக்கோபு” (ஆபிரகாமின் பேரன்) போன்ற பெயர்கள்.
 • இரண்டாவதாக, யூப்ரட்டீஸின் கீழ்பகுதியில் ஊர்-ல் தான் தேராகு, ஆபிரகாம், நாகோர் என்பவர்களின் உண்மையான வீடு இருந்ததாக வேதாகம தொகுப்பு அறிவிக்கிறது, தேவனுடைய அழைப்பிற்கு முன், “அவர்கள் மற்ற தெய்வங்களை சேவித்தனர்” (யோசுவா 24:2).
 • “லாபான்,” “சாராள்,” “மில்க்காள்,” “தேராகு,” போன்ற பெயர்கள் சந்திரனின் ஆராதனைக்கு தொடர்புடையதாக தெரிகிறது,
 • அவர்களுடைய பிரதான தெய்வம் மற்றும் தேவதைகளாக இருந்த பண்டையகால நகரம், ஆரான் ஆகும், பிற்காலத்தில் அங்கே தான் ஆபிரகாமின் குடும்பம் வாழ்ந்தது.
 • மூன்றாவதாக, இந்தப் பெயர்கள் ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்மவேல், யாக்கோபு, யோசேப்பு, செபுலோன், ஆசேர், இசக்கார், பென்யமீன் மற்றும் பல பெயர்கள், இதே காலகட்டத்தில் மத்திய மற்றும் மேல் யூப்ரட்டீஸிலிருந்து வரும் எண்ணற்ற வெளியீடுகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
 • இந்தப் பெயர்களில் சில முதல் ஆயிரம் ஆண்டுகளின் பிரதிகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும்கூட, அவைகளின் பழைமை மங்கிப்போவதற்கு வழியே இல்லை,
 • காரணம் இந்தப் பெயர்கள் பண்டைய காலத்தவைகள். இந்தப் பெயர்களின் பிரசித்தம் இரண்டாயிரம் ஆண்டுகளின் முதல் பாதியின் எந்தக் காலக்கட்டத்துடனும் இணையாக இருக்க முடியாது.

தொல்லியல் ஆராய்ச்சியும், முற்பிதாக்களின் கலாச்சார நடை முறைகளும்

 • ஆதியாகமத்தில் குடும்ப விவகாரங்கள் முக்கியத்துவம் பெறுவதால், திருமணம், வாரிசு, அடக்கம் செய்தல் போன்ற ஆதிவழக்கங்களை அறிஞர்கள் பழங்கால மெசொபொத்தோமியாவில் வாழ்ந்த பலரது குறிப்புகளில் உள்ள கலாச்சார நடைமுறைகளுடன் ஒப்பிட்டுள்ளனர்.
 • ஆயினும், ஒருவர் இந்தக் கோணத்தில் ஆழ்ந்து படித்தால், பலவந்தமான பார்வையினால் ஆதியாகமமும், பண்டையகால பழக்க வழக்கங்களுக்கும் இடையே தவறாக ஒப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்.
 • இன்னொரு கோணத்தில் பார்த்தால், முற்பிதாக்களின் கலாச்சார பழக்கங்கள், பிந்திய காலத்திற்குப் பதிலாக கிறிஸ்துவுக்கு முன் இரண்டாயிரம் ஆண்டுகளில் இருந்ததைக் காட்டும் மூன்று உள்ளன.
 • முதலாவதாக, ஆதியாகமம் 25:23 ல் எபிரெய வார்த்தை 27 (rab) என்பது மூத்த மகனைக் குறிக்கப் பயன்படுத்தபட்டது, அதில் கர்த்தர் ஏசாவையும் யாக்கோபையும் குறிக்கும்போது “மூத்தவன் இளையவனை சேவிப்பான்” என்றார்.
 • இதே வார்த்தை கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகளின் மத்தியில் வேறு அநேக பழங்கால உரைகளிலும் மூத்த ஒருவருக்கு வழங்கப்பெறுகிறது.
 • எதுவாயினும், பின்னர் இந்த வார்த்தை பல நிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது மற்றும் ஆதியாகமம் வரலாறு எவ்வளவு பழமையானது என்று மிக உறுதியாக சுட்டிக் காட்டுதலாக இருக்கிறது.
 • இரண்டாவது, முற்பிதாக்கள் காலத்தில் ஒரு அடிமையைத் தத்தெடுத்து வாரிசாக்குதல் என்பது வழக்கமாகும். நூஸி கல்வெட்டின்படி, பிள்ளை இல்லாத தம்பதியினர் ஒரு மகனைத் தத்தெடுக்கலாம்.
 • மேலும் அந்த பெற்றோர் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவன் அவர்களை ஆதரிக்க வேண்டும்.
 • அவர்கள் இறக்கும் போது, அவன் அவர்களுக்கு முறையான அடக்கம் செய்து, துக்கம் கொண்டாட வேண்டும். பதிலுக்கு, அந்த வளர்ப்பு மகன் அவர்கள் சொத்துகளை ஆண்டு கொள்ளலாம்.
 • ஆபிரகாமிற்கு அதுவரை ஆண் வாரிசு இல்லாததால், தமஸ்குவிலுள்ள எலியாசரிடம் இதைத்தான் செய்ய இருந்தான் என்பது தெளிவாக இருந்தது (15:2-4).
 • அப்போது அவன் எண்பத்தைந்து வயதுடையவனாயிருந்தான் (12:4 16:3 பார்க்க).
 • இருப்பினும், இந்த நடை முறை கிறிஸ்துவுக்கு முன் முதல் ஆயிரம் ஆண்டுகளின் நடைமுறைக்குப் பொருந்துவதில்லை, ஏனெனில் மோசேயின் பிரமாணத்தின்படி இஸ்ரவேல் வாக்களிக்கப்பட்ட தேசத்தைச் சுதந்தரிக்கும் போது, அந்த சுதந்திரம் ஒரே ஜனங்கள் கோத்திரத்தாருக்குள்ளேயே இருக்க வேண்டியதாக இருந்தது (எண். 27:1-11; 36:1-12).
 • மூன்றாவதாக, முற்பிதாக்களின் வழக்கங்கள் மத ரீதியாகவும், நெறிமுறைகளின்படியும் மோசேயின் பிரமாணத்தின் கீழ் இல்லாமல் அதற்கு முன்பே வாழ்ந்தவர்களின் வழக்கங்களைப் பிரதிபலிக்கிறது;
 • உண்மையில், மோசேயின் பிற்கால பிரமாணங்களுக்கு எதிர்மறையாக அவை இருக்கிறது.
 • ஆதியாகமம் 20:12ல் ஆபிரகாம், தன் தகப்பனின் மகள் சாராவை மணந்திருந்தான் என்பது ஆதாரவிளக்கமாக உள்ளது, ஆயினும், மோசேயின் பிரமாணம் லேவியராகமம் 18:9 இதை தடைசெய்கிறது கூடுதலாக ஆதியாகமம் 29:21-30 யாக்கோபு இரு சகோதரிகளையும் திருமணம் செய்ததாகக் கூறுகிறது: ராகேல், லேயாள் இதுவும் கடுமையாக லேவியராகமம் 18:18ல் விலக்கப்பட்டது.
 • மேலும் ஆதியாகமம் 28:10-19 யாக்கோபிற்கு கனவில் “கர்த்தர்” தரிசனமாகி ஆசீர்வதித்தார் என்று கூறுகிறது; முற்பிதா எழுந்தவுடன், தேவன் தரிசனமானதை நினைவுகூரும்படி, ஒரு கல்தூணை அந்த இடத்தில் எழுப்புகிறான்.
 • முற்பிதாக்கள் இம்மாதிரியாக செய்வதைக் கடுமையாக ஆகமங்களின் விதிகள் கண்டித்தன.
 • ஏனென்றால் இவ்வாறான நடைமுறைகள் இஸ்ரவேலரிடம் வந்தால் அவர்கள் விக்கிரக ஆராதனை சம்பந்தப்பட்ட கானானிய சடங்குகளில் ஈடுபடும் அபாயமும் ஏற்படலாம் (லேவி. 26:1; உபா. 16:21, 22).
 • இந்த கணிப்புகள் எல்லாம் முற்பிதாக்களின் வரலாற்றுக் கதைகள் சரித்திர சம்பந்தப்பட்டவைகளே தவிர, முதலாம் ஆயிரமாவது ஆண்டுகளின் பிற்பட்ட யூத ஆசிரியரின் கண்டுபிடிப்பு அல்ல என்பதை வலிமையாகக் கூறுகிறது.

மத போதனை

சிருஷ்டிப்பில் தேவனின் நோக்கம் (அதிகாரம் 1)

 • முழு வேதாகமத்திற்கும் தேவன் கருப்பொருளாய் இருப்பது போல, ஆதியாகமத்திற்கும் இருக்கிறார்.
 • தமது செயல்கள் மூலம், தமது இயல்பான குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறவராகிய, படைப்பின் சர்வசுதந்திரராயிருக்கிறார்.
 • இயங்கும் இயங்காப் பொருள்கள் அனைத்தும் மனிதனின் ஆசீர்வாதத்திற்காக படைத்தார்.
 • அவர் படைப்பை “நல்லது” என்று மட்டுமல்ல, “மிகவும் நல்லது” என்று பாரட்டினார் (1:4, 10, 12, 18, 21, 25, 31).
 • மேலும் தேவன் அவருடைய நன்மையையும் அன்பையும் மனிதனை தன் சொந்த சாயலில் படைத்ததின் மூலம் இரண்டையும் செயல்முறைப் படுத்தியதன் மூலம் அவனை ஆசீர்வதித்து, தனிப்பட்ட உறவு கொண்டிருக்கிறார்.
 • கண்காணியாக, மனிதனின் வேலை எல்லா சிருஷ்டிகள் மீதும் ஆளுகை செய்வதும், அவற்றைக் கர்த்தருடைய சித்தத்தின்கீழ் கொண்டு வருவதேயாகும்.
 • ஆனால் அவன் முதலில், சர்வ சிருஷ்டிகரின் சித்தத்தின்படி நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தன் சிருஷ்டிப்புகளுக்காக தேவன் ஏற்படுத்திய வசதிகள் (அதிகாரங்கள் 2; 3)

 • தேவன் வானத்தையும் பூமியையும் அதிலுண்டான எல்லாவற்றையும் படைத்தபிறகு ஓய்ந்திருந்தார்.
 • மனிதனுக்கேற்ற நேர்த்தியான சூழ்நிலையாக, ஒரு அழகிய தோட்டத்தையும் அதில் எல்லாவிதமான மிருகங்களையும், பறவைகளையும் அவர் வழங்கினார்.
 • மனிதனுக்கேற்ற துணையாக மனிதனோடு தொடர்பு கொண்டிருக்கவும், அவன் ஆழமான மனித அன்போடு தனிப்பட்ட உறவு கொண்டிருக்கவும், அவர் பெண்ணைப் படைத்தார்.
 • கூடுதலாக தேவன் அவர்கள் நலத்தை செழிக்கச் செய்வதற்காக ஒவ்வொரு மரமும் எல்லாவகையான இனிய கனிகளைத் தர வளரச்செய்து, அந்தத் தோட்டத்தின் நடுவே ஜீவவிருட்சமாகிய மரத்தையும் அவற்றோடு வைத்திருந்தார்.
 • தேவன் மனிதனை தோட்டத்தைக் கவனிக்கவும், பராமரிக்கவும் கட்டளை தந்திருந்தார். நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை மட்டும் புசிக்கலாகாது என்பதே.
 • அவர் மனிதனுக்கும், மனுஷிக்கும் கொடுத்த ஒரே விலக்காயிருந்தது.
 • இருப்பினும், ஆதாமும் ஏவாளும் தேவனைப்போல் இருப்பதில் ஆர்வமாகவும், அவர் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க மறுத்தது மூலம், மனுக்குலத்தின் முரட்டாட்டத்திற்கும் வன்முறைக்கும் ஒரு மாதிரியாகி, அதே துன்பகரமான முடிவுக்குள்ளானார்கள். தேவனிடமிருந்து அந்நியப்பட்டார்கள்.
 • பாவத்திற்கான தேவனின் விளைவு. மரணம்.

பாவத்திற்கு விரோதமான தேவ கோபம் அதிகாரங்கள் 4-8)

 • ஆபேல் போல, மனிதர்களின் சில உண்மையான அர்ப்பணிப்பும், ஆராதனையும் குணாதிசயங்களே சிருஷ்டி கருக்குப்பதில் செயலாயிருந்தன.
 • காயீனைப்போல, தன் சகோதரனைக் கொன்று, தேவ சமூகத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டு, ஏற்கமுடியாத மத ரீதியான செயல்களும் இருந்தன.
 • காயீன் ஒரு நாடோடியாய் அலைபவனாய் தேவனுடைய தண்டனையை அனுபவித்து வருந்தினான்.
 • என்னதான் அவனுடைய மரபுவழியினர் கலாச்சார துவக்கமாகவும் இசை, கலை உலோகம் பயன்படுத்துவராயும், நகரத்தைக் கட்டுபவராய் இருந்தாலும் – பாவத்தின் சாபம் அவர்கள்மீது இருந்தது.
 • சிருஷ்டி கருக்குப்பதில் தலைமுறைகள் கழித்தும்கூட காயீனின் சந்ததியினர் தற்பெருமை யுள்ளவர்களாயும் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர் களுமாயிருந்தால், பாவத்தின் பிரசன்னம் அவர்கள் மத்தியில் காணப்படுகிறது.
 • அவர்கள் இருதயத்தில் கசப்பும், வெறுப்பும் இருந்ததால் இந்த உலகம் தீயது என்றெண்ணினர்.
 • எடுத்துக்காட்டாக, அவர்களுக்குள் ஒருவரான லாமேக், பழிவாங்கும் எண்ணம் நிறைந்தவனாய் மூர்க்கம் கொண்டு வெறுமனே தன்னை அடித்ததற்காக ஒரு இளைஞனைக் கொன்றான் (4:23, 24).
 • அநேகரின் வாழ்வுகளும் வெறும் சரீர ரீதியான நிலைப்பாடு மட்டுமே கொண்டவர்களாய் விவரிக்கப்பட்டுள்ளனர், அதாவது,
 • தேவனோடு தொடர்பு இல்லாதவர்களாக வெளிப்படையாக அவர்கள் பிறந்தார்கள்.
 • பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டனர். மரித்தனர் (அதிகாரம் 5).
 • அவ்வாறு, தேவனில்லாத நிலையானது, மனுக்குலத்தின் வாழ்க்கையை, பொருளற்றதும், நோக்க மின்மைக்கும் இட்டுச்சென்றது, முடிவிலே அது தெய்வீகமற்ற முறையில் தேவகுமாரரும் மனுஷக்குமாரத்திகளும் இணையும் விளைவை ஏற்படுத்தியது (6:2).
 • மனிதனுடைய எல்லா நினைவும், கற்பனையும் பொல்லாதாததாயிருந்தவரை, வீழ்ச்சியே விளைவாக இருந்தது.
 • அதாவது, பூமி முழுவதும் கொடுமையால் நிறைந்திருந்தது (6:5).
 • அதன் விளைவாக, மனிதன் தன்னையும், தன் சொந்த உலகையும் அழித்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியதால், தேவன் அதை ஒரேயடியாக முடித்து விட எண்ணி, கோபத்தின் வக்கிரம் இறங்கியதால், ஒரு வெள்ளத்தை அனுப்பி உலகை அழித்தார் (அதிகாரங்கள் 6-8).

தேவனின் நியாயத்தீர்ப்பும் அவருடைய உலகைப் புதுப்பித்தலும் (அதிகாரங்கள் 9-11)

 • தேவனுடைய கிருபையால், நோவாவும் அவன் குடும்பத்தாரும் வெள்ளத்திலிருந்து தப்பினர்.
 • இதுவரை பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அவர்களுடைய மரபு வழியினரே.
 • இந்த உண்மையின் வெளிச்சத்தில், மக்களுக்கு இன ஏற்றத்தாழ்வு கொள்ள எந்த வேதாகம அடிப்படையும் இல்லை. ஏனென்றால் இயல்பாகவே எந்த இனத்து மக்களும் வேறு எந்த இனத்து மக்களுக்கும் தாழ்ந்தவர்களல்ல.
 • மேலும், வெள்ளத்துக்கு முன்பிருந்த முரட்டாட்டமும் வன்முறையும் நிறைந்த உலகை முற்றிலுமாக தூய்மைப்படுத்தி கழுவிவிட்டு, மனிதனுக்குத் தேவன் உலகில் ஒரு புதிய துவக்கத்தைத் தந்தார்.
 • ஆதியில் சிருஷ்டிக்கப்பட்ட ஒழுங்கு முறையை தேவன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
 • வருடத்தின் பருவங்களும், பகலும் இரவும் ஒழுங்காக தொடரச் செய்தார்.
 • அத்தோடு, நோவாவையும் அவனுடைய குமாரர்களையும் ஆதி சிருஷ்டிப்பின் ஆசீர்வாதத்தால் “பலுகிப்பெருகி, பூமியை நிரப்புங்கள்” (9:1; காண்க 1:28) என்றார்.
 • மற்றும் முழு உலகையும் அழிக்கக்கூடிய வெள்ளத்தை இனி அனுப்புவதில்லை என்று வாக்களித்தார்.
 • வெள்ளம் முழு பழைய உலகையும் அதற்கு அடையாளமாயிருந்த பாவிகளையும் அழித்தாலும் கூட, தப்பிப்பிழைத்தவர்கள் பாவத்தின் பாதையிலேயே தொடர்ந்தனர்.
 • நோவா ஒரு திராட்சைத்தோட்டத்தை நாட்டினான்.
 • அதிகமாகக் குடித்து விட்டு கூடாரத்துக்குள் மூடாது படுத்திருந்தான், காம் தந்தையின் துணியற்ற நிலையை சகோதரர்களுக்கு அறிவித்தான் (பரியாசப்படுத்தும் விதமாக), தந்தைக்கு அவமரியாதை செய்தவனாய் தன் தலைமுறையினருக்கு ஒரு சாபத்தை, தன் மகன் கானான் மூலம் கொண்டு வந்தான்.
 • பாபேலின் மக்கள் தங்களுக்கு தற்புகழ்ச்சியை உண்டுபண்ணும்படிக்கு ஒரு பெயரை உருவாக்க முயற்சிக்கிறார்கள் (நிச்சயமாய் விக்கிரக ஆராதனைக்காரர்கள்).
 • வானத்தின் உச்சியைத் தொடுமளவு வடிவமைக்கப்பட்ட ஒரு கோபுரத்தைக் கட்டினர்.
 • பாபேல் மக்களின் பாஷைகளைக் குழப்பமாக்கியும், உலகம் முழுவதும் சிதறடித்தும் தேவன் அவர்கள் வேலையைக் கண்ணோக்கினார். எல்லா மனிதரும் தேவனைப் போலாக வேண்டிய முயற்சியில் சுதந்திரம், சுயக்கட்டுப்பாடு.
 • சுயம் விருப்பம் நிறைவேற்றப்படுதலானது அதாவது, பூமி முழுவதும் கொடுமையால் நிறைந்திருந்தது (6:5).
 • அதன் விளைவாக, மனிதன் தன்னையும், தன் சொந்த உலகையும் அழித்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியதால், தேவன் அதை ஒரேயடியாக முடித்து விட எண்ணி, கோபத்தின் வக்கிரம் இறங்கியதால், ஒரு வெள்ளத்தை அனுப்பி உலகை அழித்தார் (அதிகாரங்கள் 6-8).
 • தேவனுடைய கிருபையால், நோவாவும் அவன் குடும்பத்தாரும் வெள்ளத்திலிருந்து தப்பினர்.
 • இதுவரை பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அவர்களுடைய மரபு வழியினரே.
 • இந்த உண்மையின் வெளிச்சத்தில், மக்களுக்கு இன ஏற்றத்தாழ்வு கொள்ள எந்த வேதாகம அடிப்படையும் இல்லை.
 • ஏனென்றால் இயல்பாகவே எந்த இனத்து மக்களும் வேறு எந்த இனத்து மக்களுக்கும் தாழ்ந்தவர்களல்ல.
 • மேலும், வெள்ளத்துக்கு முன்பிருந்த முரட்டாட்டமும் வன்முறையும் நிறைந்த உலகை முற்றிலுமாக தூய்மைப்படுத்தி கழுவிவிட்டு, மனிதனுக்குத் தேவன் உலகில் ஒரு புதிய துவக்கத்தைத் தந்தார்.
 • ஆதியில் சிருஷ்டிக்கப்பட்ட ஒழுங்கு முறையை தேவன் மீண்டும் உறுதிப்படுத்தினார். வருடத்தின் பருவங்களும், பகலும் இரவும் ஒழுங்காக தொடரச் செய்தார்.
 • அத்தோடு, நோவாவையும் அவனுடைய குமாரர்களையும் ஆதி சிருஷ்டிப்பின் ஆசீர்வாதத்தால் “பலுகிப்பெருகி, பூமியை நிரப்புங்கள்” (9:1; காண்க 1:28) என்றார்.
 • மற்றும் முழு உலகையும் அழிக்கக்கூடிய வெள்ளத்தை இனி அனுப்புவதில்லை என்று வாக்களித்தார்.
 • வெள்ளம் முழு பழைய உலகையும் அதற்கு அடையாளமாயிருந்த பாவிகளையும் அழித்தாலும் கூட, தப்பிப்பிழைத்தவர்கள் பாவத்தின் பாதையிலேயே தொடர்ந்தனர்.
 • நோவா ஒரு திராட்சைத்தோட்டத்தை நாட்டினான்.
 • அதிகமாகக் குடித்து விட்டு கூடாரத்துக்குள் மூடாது படுத்திருந்தான், காம் தந்தையின் துணியற்ற நிலையை சகோதரர்களுக்கு அறிவித்தான் (பரியாசப்படுத்தும் விதமாக), தந்தைக்கு அவமரியாதை செய்தவனாய் தன் தலைமுறையினருக்கு ஒரு சாபத்தை, தன் மகன் கானான் மூலம் கொண்டு வந்தான்.
 • பாபேலின் மக்கள் தங்களுக்கு தற்புகழ்ச்சியை உண்டுபண்ணும்படிக்கு ஒரு பெயரை உருவாக்க முயற்சிக்கிறார்கள் (நிச்சயமாய் விக்கிரக ஆராதனைக்காரர்கள்).
 • வானத்தின் உச்சியைத் தொடுமளவு வடிவமைக்கப்பட்ட ஒரு கோபுரத்தைக் கட்டினர்.
 • பாபேல் மக்களின் பாஷைகளைக் குழப்பமாக்கியும், உலகம் முழுவதும் சிதறடித்தும் தேவன் அவர்கள் வேலையைக் கண்ணோக்கினார்.
 • எல்லா மனிதரும் தேவனைப் போலாக வேண்டிய முயற்சியில் சுதந்திரம், சுயக்கட்டுப்பாடு.
 • சுயம் விருப்பம் நிறைவேற்றப்படுதலானது மேலும் பாவம், துன்பம், விரக்தி, தேவனிடமிருந்தும், பிற மனுக்குலத்தினரிடமிருந்தும் அந்நியப்படுத்தப்படுதலுக்கு மாத்திரமே வழிநடத்திற்று.

விசுவாசத்தில் நடப்பதற்கான தேவனின் அழைப்பு (அதிகாரங்கள் 12-22)

 • தேவனோடுள்ள தனிப்பட்ட உறவு மூலமே, அர்த்தமுள்ள வாழ்க்கையும், நோக்கம் நிறைந்த முடிவையும், அடைவதற்கான நம்பிக்கை உள்ளது, அது விசுவாசத்தின் மூலமே துவக்கப்பட வேண்டும்.
 • தேவன் ஒரு துவக்கத்தை முன்னெடுத்து, விசுவாச நடக்கையை துவக்க ஆபிரகாமை அழைத்தார் அவர் தனது குடும்பத்தாருடனும், ஒரு விக்கிரக ஆராதனைக்காரராயும் இருந்தார் (யோசுவா 24:2).
 • ஆபிரகாமின் விசுவாசம் தடுமாறினாலும் ஆண்டுகளினூடாக வளர்ந்தது, அவனுடைய உண்மையான கீழ்ப்படிதலாலோ அல்லது வேறு எந்தச் சிறப்பான செயலினாலோ அல்ல, ஆனால் தேவனுடைய கிருபையினாலும், விசுவாசத்தைக் கொண்டும், அவனுக்கு நீதியாக எண்ணினபடியால் தேவன் அவனை ஏற்றுக் கொண்டார் என்று அறிந்து கொண்டான் (15:6).
 • ஆபிரகாமின் சொந்த நன்மைக்காக மட்டும் அவனை தேவன் இரட்சிக்கவில்லை, அவன் மூலமாக, பெரியஜாதிக்கும் எண்ணற்ற மக்களுக்கும், ஏறத்தாழ பூமியில் உள்ள எல்லா ஜாதிகளுக்கும் ஆசீர்வாதங்களின் கால்வாயும், வாய்க்காலுமாயிருக்கும்படிக்கு தேவன் விரும்பினார். இரட்சிப்பு என்பது ஆபிரகாமை மட்டும் முதன்மையாக சார்ந்ததல்ல.
 • கர்த்தரின் கிருபையினாலான செயலானது, அந்த ஒரு மனிதனுக்கானது மட்டுமல்ல மாறாக, அவன் மூலம் முழு உலத்திற்குமானது. ஆபிரகாமை அவன் வீட்டையும் குடும்பத்தையும் உ விட்டு அவனை இதுவரை கண்டிராத தேசத்துக்குப் போகும்படி, தேவன் அழைத்த போது விசுவாசத்தில் நடக்கத்துவங்கி, அவன் வாழ்வு முழுதும் நடந்தான் (எபி.11:8).
 • விசுவாசமுள்ள தகப்பனின் வாழ்வை ஆராய்ந்து பார்க்கும்போது, ஒரு மனிதனின் உச்சகட்ட சோதனையானது, தேவன் மனிதனுக்கு என்ன செய்வார் என்ற ஒரு மனிதனின் நம்பிக்கையிலில்லை.
 • மாறாக, அவன் தேவனுக்காக என்ன செய்கிறான் மற்றும் அவருக்கு என்ன தரப்போகிறான் என்பதைப் பொறுத்ததேயாகும்.
 • ஆபிரகாம் விஷயத்தில், அது அவனுடைய பிள்ளையின் வாக்குத்தத்தம் ஆக இருந்தது (அதிகாரம் 22).

ஆபிரகாமின் விசுவாசத்திற்கான பலன்கள் (அதிகாரங்கள் 23; 24)

 • ஆபிரகாம் சாராளைப் புதைத்த போது, கானானியர்கள் மத்தியில் அவன் அறுபது வருஷங்களுக்கு மேலாக வாழ்ந்திருந்தான்.
 • அவர்கள் தேவன் அவனை ஆசீர்வதித்திருக்கிறார், செலவந்தனாக மாற்றி அதிகாரமுள்ள இளவரசனைப் போல் உருவாக்கியுள்ளார் (எழுத்தின்படி “ஒரு மகா பிரபு”: 23:6) என்பதை உணர்ந்து கொண்டார்கள்.
 • கானான் தேசத்தாருக்கு முன்பாக நீதியின் வாழ்க்கை வாழ்ந்தது (மத்.5:16), மூலம் ஆபிரகாம் தன் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்தார் என்பதே பெரும்பான்மையான அங்கமாயிருக்கிறது.
 • கூடுதலாக, அந்தத் தேசத்தில் நிச்சயமாக மிகப் பெரிய தனிப்படையை அவர் கொண்டிருக்க வேண்டும்.
 • அது பிறர் அவர் மேல் பயமும், மதிப்பும் கொள்ளச் செய்திருக்க வேண்டும்.
 • ஈசாக்கு திருமணம் முடிக்கும் சமயம் வந்தபோது, ஆபிரகாம் தன் மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்க்கும்படிக்கு, தனக்கு நம்பிக்கையான ஒரு ஊழியக்காரனை, மெசபொத்தோமியாவிலுள்ள தன் உறவினர்களிடத்தில் அனுப்பினார்.
 • புறப்படும் முன்பு ஊழியக்காரன், ஒரு பெண் கானானுக்குத் தன்னோடு வரமறுத்து விட வழி இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு கேட்டான்.
 • அப்படி நேர்ந்தால், அவன் ஆபிரகாமிடம் ஈசாக்கை, தன்னோடு மெசபொத்தோமியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று கேட்டான்.
 • அந்த ஊழியக்காரன் கண்டிப்பாக ஈசாக்கை அங்கே அழைத்துச் செல்லக் கூடாதென்று எஜமானன் தடுத்தான்.
 • ஈசாக்கு புறப்பட்டுப் போய், கானானுக்கு திரும்பாவிட்டால், தேவனின் வாக்கு நிறைவேறுவதில் இக்கட்டை ஏற்படுத்தும் என்று ஆபிரகாம் உணர்ந்திருந்தான் தேவனுடைய பிள்ளைகளுக்கு, தேவன் தமது பிள்ளைகளை எங்கே வாழும்படி அழைத்தாரோ, அங்கிருந்து திரும்பிப் போகக்கூடாது என்பதை ஆபிரகாம் அறிந்திருந்தார்.
 • வல்லமையான ஜெபத்திலும், ஆரானில் தன் எஜமானின் மகனுக்கேற்ற பெண்ணைத் தேடிக்கண்டு பிடித்தலில் தெய்வீக நடத்துதலிலும் ஆபிரகாமின் ஊழியக்காரன் விசுவாசத்தை வெளிப்படுத்தினான்.
 • ஆபிரகாமின் சகோதரர் நாகோரின் குடும்பத்திலிருந்து ரெபெக்காளைத் தேர்ந்தெடுக்குமாறு தேவன் அவனை வழி நடத்தினார்.
 • இந்த ஊழியக்காரன் அவளை ஈசாக்குக்கு ஒரு மனைவியாக கானானுக்கு அழைத்து வந்தான் (அதிகாரம் 24).
 • ஆபிரகாமின் குணாதிசயம், அர்ப்பணிப்பு பற்றிய தேவனுடைய கூற்றுக்கள் அனைத்தையும் இது ஊர்ஜிதப்படுத்துகிறது:
 • “கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேறும்படியாய், அவன்தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும் நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து.
 • கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்” (18:19).
 • ஆபிரகாமின் விசுவாசம் மிகவும் உண்மையானது அதை அவன் தன் பிள்ளைகளுக்கும் மாத்திரமல்ல தனக்கு பின்வரும் “தன் வீட்டாருக்கும்” அதாவது தன் வேலைக்காரர்களுக்கும் (அடிமைகள்) ஆகவே அவர்கள் “கர்த்தருடைய வழியைக் காத்து நடக்கும்படி” பகிர்ந்தளித்தான்.

மனிதனின் விதியைப் பற்றிய தேவனின் முன்னறிவு அதிகாரங்கள் 25-28)

 • ஏசாவுக்கும் யாக்கோபுக்கும் பிறப்பதற்கு முன்பே போராட்டம் ஆரம்பித்தது (25:22, 24-26), மற்றும் தேவன் அதனை தெளிவாக ரெபேக்காளிடம் கூறினார்:
 • “இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது, இரண்டு வித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும் அவர்களில் ஒரு ஜனத்தார், மற்ற ஜனத்தாரைப் பார்க்கிலும் பலத்திருப்பார்கள்; மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்” என்றார் (25:23).
 • இவைகளின் ஊடே, இவ்வாறாக இப்பகுதியானது அடிக்கடி விளக்கப்படுத்தப்பட்டிருந்தாலும், இது யாக்கோபோ, ஏசாவோ நித்திய இலக்கை அடைவதற்கும் இதற்கும் எந்தவித சம்மந்தமுமில்லை.
 • அந்தத் தீர்க்கதரிசனம் குழந்தையாக அவர்களையோ, அல்லது தனிப் பட்டவரையோ குறிக்கவில்லை, ஏனென்றால் ஏசா, யாக்கோபைச் சேவிக்கவேயில்லை, மாறாக, அந்த மேற்குறிப்பு அவர்கள் தலை முறையினரைக் குறித்தது (“இரு ஜாதிகள்”), அது மீட்பின் வரலாற்றில் நிகழ்வுப்படுத்தும்.
 • யாக்கோபு வழி வந்தவர்கள் “இஸ்ரவேலர்கள்” என்றும், ஏசா வழி வந்தவர்கள் “ஏதோமியர்” என்றும் அழைக்கப்பட்டனர்.
 • பிந்தியவர்கள் தாவீதின் காலத்தில், அவன் ஆளுகைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டு, சேவிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் (2சாமு. 8:14).
 • இதன், திருப்பமாக, “இரு ஜனத்தாரு” க்குமிடையேயான தொடர் சண்டையானது. பழைய ஏற்பாட்டு காலம் முதல் உலகிற்கு கிறிஸ்துவின் வருகை வரை வரலாறு நகர்வது தொடர்கிறது.
 • அந்தத் தீர்க்கதரிசனத்தின் அர்த்தத்தையும் முழுவதுமாக அறிந்தார்களோ, இல்லையோ, யாக்கோபுவும் ஏசாவும், தனிப் பட்டவர்களாய், தங்கள் வாழ்விற்கான தேவனுடைய செயல்களையும், நோக்கங்களையும் தங்கள் வழியில் காண போராடினர், தேவனோ அவர்கள் பிறப்பதற்கு முன்பே எதிர்பார்த்திருந்தார்.
 • இரண்டு சிறுவர்களும், பெற்றோர்களும் தேவனுடைய சித்தத்தை ஏற்றுக் கொள்ளவோ, அல்லது எதிர்க்கவோ முயன்றிருந்தபோது, குடும்ப உறவுகளில் ஈடுபட்ட அனைவருக்கும் மனமுடையத்தக்க முடிவுகளே கிடைத்தது.
 • அதனால் அவன் சந்தித்த கஷ்டங்கள், ஆபத்துகள், குணத்திலுள்ள பெலவீனங்கள், எல்லாவற்றின் மத்தியிலும், தேவன் தன் வாக்குத்தத்தங்களில் உண்மையாகவே இருப்பார் என்ற விசுவாசத்துடனும், உண்மையுடனும் இருந்தபடியாலும், யாக்கோபின் பெரும்பான்மையான வாழ்நாள் போராட்டமாகவே இருந்தது.
 • மறுபக்கம், ஏசா தன் வாழ்நாளில் தேவனுடைய வழிகாட்டுதலை எதிர்த்தான்.
 • அவன் கானானிய மனைவிகளைத் தேர்ந்தெடுத்தான். அவர்கள் அவனுடைய தாய்க்கும் தகப்பனுக்கும் கசப்பான தாக்கத்திற்கு வழியாயிருந்தார்கள் (26:34, 35; 27:46; 28:8).
 • கொஞ்சக்காலம், மரணப்படுக்கையில் தகப்பனின் ஆசீர்வாதத்தைத் திருடியதற்காக யாக்கோபின் மேல் காழ்ப்புணர்வுடன் இருந்து, ஆனால் அவனைக் கொலை செய்யலாமென்று நினைத்து, தன்னைத் தேற்றிக் கொண்டான் (27:41).
 • ஏசா, தன் நிலைக்காக தேவனை குறை கூறியிருக்கலாம். ஏனென்றால் வேதம் வெளிப்படுத்துவதைப் பார்க்கும்போது, அவன் விசுவாமில்லாமல் வாழ்ந்தான்.
 • எபிரெய எழுத்தாளர், அவனை சீர்கெட்டவன் தேவனற்றவன் (பக்தியற்றவன்) என்று எழுதுகிறார் (எபி. 12:16).
 • இவை எல்லாம் நமக்கு என்ன கூறுகிறது என்றால் வாழ்வதற்கு ஒரு மேம்பட்டமுறை இருக்க வேண்டும் தேவனுடைய சித்தத்தை ஏற்றுக் கொள்ளும் இன்னதென அறியும் முறை அது அறியப்படும் அளவு வரையும் அதற்குக் கீழ்ப்படிந்து பதிலளிக்க வேண்டும்.
 • ஏசாவைப் போன்றவர்கள், தேவனுடைய சித்தத்திற்கு எதிராக கசப்பான போராட்டத்திலேயே தங்கள் வாழ்வை வாழ்ந்து வருகிறவர்கள் அவர்கள் அனுபவிக்கும் விரக்திக்கு, ஏமாற்றத்திற்கும் அவர்கள் தங்களைத்தான் குற்றம் சொல்லவேண்டும்.
 • நித்திய குயவனிடம் தங்களை அர்ப்பணிப்பதை தவிர்ப்பது மூலம், அவர்களுடைய வாழ்வை பயனுள்ளதும், அழகுள்ளதுமாக உருவாக்கும் அவருடைய திட்டத்தை அவர்கள் அழித்தார்கள் பார்க்கவும் எரே. 18:1-12; 2 தீமோ. 2:20-22).

பலதார மணத்தின் எதிர்மறை முடிவுகள் குறித்த வெளிப்பாடு (அதிகாரங்கள் 29;30)

 • யாக்கோபின் மனைவிகளான லேயாள், ராகேல் இடையே இருந்த சண்டை, சச்சரவு, மற்றும் பதட்டம் ஏற்பட்ட சூழ்நிலைக்கு எதிரிடையாக ஒருத்தனுக்கு ஒருத்தி என்னும் ஒருதார உறவு முறையை உருவாக்கிய தேவஞானம் தனித்து நிற்பதை பார்க்கிறோம்.
 • யார் அதிக குழந்தைகள் பெறுகிறார்களோ அவள்தான் கணவனின் பிடித்தமான மனைவி என்று ராகேலும் லேயாளும் எண்ணினார்கள்;
 • அதனால், காலப்போக்கில் அவர்கள் மாத்திரமன்று அவர்கள் தன் தன் வேலைக்காரிகளையும் யாக்கோபின் மூலம் பிள்ளை பெறச் செய்தார்கள். அதன் மூலம் அந்த குழந்தைகளையும் தன் குழந்தைகளாக கணக்கெடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினார்கள்.
 • இந்தப் போட்டி யாக்கோபின் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஆபத்தான விளைவுகளை உருவாக்கி யாக்கோபுக்கு பல வருடங்களாக, குறிப்பாக, யோசேப்பு இறந்துவிட்டான் என்று யாக்கோபு நினைத்தபோது மிகுந்த துயரத்தை உருவாக்கியது.
 • ஊக்கமாக தேவனிடம் ஜெபித்தலின் முக்கியத்துவம் (அதிகாரங்கள் 28;32)
 • 28:20-22 இல் உள்ள யாக்கோபின் ஜெபம் உண்மையில் அவன் தேவனோடு செய்த “ஆனால் அப்பொழுது போன்ற ஒரு நிபந்தனையோடு கூடிய பேரமாகும்.
 • ஆனால், நாம் தேவனுக்கு என்ன செய்தோம் என்பதை சொல்லி அதற்கு கைமாறாக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள முடியாது!
 • அல்லது ஒரு தேவதூதனோடு போராடி வெற்றி பெற்று அந்தப் பலத்தைக் காட்டி தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறமுடியாது.
 • ஏசாவினுடைய நானூறு படை வீரர்களிடமிருந்து தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்ற முடியாது என்று உணர்ந்த போதுதான், அவன் உண்மையான விடுதலை அனுபவித்தான் (பார்க்க 33:1),
 • எந்தவித தந்திரமும், சூழ்ச்சியும், பொய்யும் அவனுக்கு உதவாது. அவன் 32:22-32-ல் தேவதூதனோடு (தேவனுடைய பிரதிநிதியாகிய) விடாப்பிடியாக வேண்டியது போல் – இந்த தருணத்திலும் தேவனை பற்றிக்கொண்டு வேண்டி அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவது ஒன்றுதான் ஒரேவழி என்பதை உணர்ந்தான்.
 • விசுவாசத்துடன் கூடிய விடாப்பிடியான ஜெபம் ஒன்றுதான் ஜெபத்திற்கு பதில் அளிக்கும் திறவுகோல்; மற்றும் தேவனை நம் விண்ணப்பத்திற்கு பதிலளிக்க வைக்க மிகப்பெரிய முயற்சி தேவைப்படுகிறது என்பதால் அல்ல.
 • மாறாக விடாப்பிடியான ஜெபம் தேவன்தான் ஆசீர்வாதத்தின் ஊற்று என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறது; மேலும், உடைந்த உள்ளத்தோடு தேவ உதவி வேண்டும் என்று கெஞ்சும் போது, ஒருவன் அதை அருளும் கர்த்தரின் நன்மையிலும் கிருபையிலும் நம்பிக்கை வைப்பதை காட்டுகிறது.

தெய்வாதீனமான தேவசெயல் அதிகாரங்கள் 37-50)

 • தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற தேசங்களிலும், மனிதர்களுடைய வாழ்க்கையிலும், பின்னணியிலிருந்தும் எப்படி செயல்படுகிறார் என்பதை யோசேப்பின் சம்பவம் நமக்கு வெளிப்படுத்துகிறது, அதே நேரத்தில், அவர் மனிதர்களுடைய சுதந்திர எண்ணத்தில் குறுக்கிடுவதில்லை. தெய்வீக சதுரங்கக் கட்டத்தில் நகர்த்தப்படும் காய்களைப் போன்றவர்கள் அல்ல மனிதர்கள், முதலாவது ஒரு திசையிலும், பின்பு வேறுதிசையிலும் தேவனால் நகர்த்தப் படுவதில்லை.
 • இதற்கு எதிரிடையாக, மக்கள் செய்யும் நன்மை மற்றும் தீமையான காரியங்களை எடுத்துக்கொண்டு அதன் மூலம் அவருடைய இறுதி நோக்கங்களை நிறைவேற்றுகிறார் (ரோமர் 8:28).
 • யோசேப்பின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், ஆபிரகாமின் சந்ததியான அவன் யாக்கோபின் குலத்திற்கும், எகிப்தியருக்கும் மற்றும் பண்டைய மத்திய தரைக்கடல் பகுதி மக்கள் யாவருக்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும் வாகனமாக தேவன் அவனைக் குறித்து சித்தம் கொண்டார்.
 • மனிதர்களின் ஆணவமிக்க சுயநலமான தீயசெயல்களிலும் கூட தேவன் தம் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதை யோசேப்பின் வரலாறு தெள்ளத்தெளிவாக காட்டுகிறது –
 • ஆனால், சில நேரங்களில் அதற்கு நீண்ட சிரமமான போராட்டம் தேவைப்படலாம் தன் சகோதரனை எகிப்தில் அடிமையாக விற்றுப்போட்ட சூழ்நிலை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
 • தேவசித்தத்தை தேடும் ஒவ்வொருவரையும் தேவன் நன்கு பயன்படுத்த முடியும், ஆனாலும், அவருடைய கை அவர்கள் வாழ்வில் செயல்படுவது வெளியரங்கமாக தெரியாது.
 • தேவனின் தெய்வீக அக்கறையை ஒருவனுடைய வாழ்க்கையை திரும்பிப்பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் (45:5-7; 50:20).

தெய்வீக பண்புகளை வடிவமைப்பதில் நன்னெறியின் முக்கியப் பங்கு (அதிகாரம் 39)

 • யோசேப்பு எகிப்தில் அடிமையாயிருந்த காலத்தில், போத்திபாரின் மனைவி அநேகந்தரம் அவனை பாவஞ்செய்ய தூண்டியபோது, அவன் இரண்டு காரியங்களின் அடிப்படையில் அதை மறுத்தான்.
 • அவன் கூறியதாவது, உங்கள் கணவர் உங்களைத் தவிர அனைத்தையும் என்னுடைய பொறுப்பில் கொடுத்திருக்கிறார்: ஆகையால், அவர் அவருடைய எந்த உடைமைகளைக் குறித்தும் கவலை இல்லாமல் இருக்கிறார்.”
 • வேறு வார்த்தைகளில் சொல்வதானால், “போத்திபார் என்னை நம்புகிறார். அவருடைய மனைவியோடு பாலியல் உறவு கொள்வது அவருக்குச் செய்யும் பயங்கரமான நம்பிக்கைத்துரோகமாகும்.”
 • மேலும், பிறனுடைய மனைவியோடு விபச்சாரம் கொள்வது தேவனுக்கு விரோதமான பாவமாகும் என்று கூறினான்.
 • யோசேப்பு எப்படி இத்தகைய உறுதியான நேர்மையையும், நன்னெறியையும் வளர்த்துக் கொண்டான் என்பது குறித்து ஒரு அனுமானமாக கணிக்கலாம். ஒரு வேளை அவனுடைய தந்தை யாக்கோபும், தாய் ராகேலும் பொய் புரட்டினால் அவர்களும் அவர்களின் பெற்றோர்களும் பட்ட வேதனைகளையும் சோதனைகளையும் பற்றியும், பாலியல் காரியங்களில் தேவன் அவருடைய மக்களிடம் எதிர்பார்க்கும் நெறிமுறைகளையும் அறிவுறுத்தியிருக்கலாம்.
 • விபச்சாரம் என்பது எளிதாக நியாயப்படுத்தக்கூடிய சமூக விவேகமற்ற செயல் மாத்திரமல்ல; இத்தகைய செயல்களை அவர் எப்போதும் அறிந்திருக்கிறார், அது தேவனின் இயல்புக்கு எதிரான கொடிய பாவமாகும்.

தேவ மன்னிப்பும் ஒப்புரவாகுதலும் அதிகாரங்கள் 42-45)

 • மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது, யோசேப்பு அவன் சகோதரர்களை கடுமையாகவும் சூழ்ச்சியாகவும் நடத்திய விதம் அவன் பல ஆண்டுகளாக எகிப்தில் பட்ட கஷ்டங்களுக்கு பழிவாங்கும் முயற்சியாக செய்தது போன்று தோன்றலாம்.
 • ஆனால், ஒருவேளை அவர்களை இன்னும் பால்ய பருவத்தில் கொண்டிருந்த அதே குணாதிசயங்களோடுதான் இருக்கிறார்களா என்று சோதிப்பதற்காக இருக்கலாம்.
 • அவர்கள் தங்கள் இளைய சகோதரனுக்குச் செய்த காரியங்களைக் குறித்து மனஸ் தாபப்பட்டார்களா? ஒப்புரவாகுதல் சாத்தியமா? மறுபடியும் ஒரு குடும்பமாக ஆவார்களா?
 • நிச்சயமாக, அவனுடைய மூத்த சகோதரர்கள் உண்மையாய் மனந்திரும்பினால் மாத்திரமே அவர்களோடு ஒப்புரவாகுதல் சாத்தியமாகும் ஒரு தடவைக்கும் மேலாக, எகிப்திலே அந்த சகோதரர்கள் துன்பங்களை சந்தித்த போதெல்லாம் அவை அவர்கள் யோசேப்பை நடத்திய விதத்துக்கு தேவன் கொடுத்த சரியான தண்டனை என்றே நம்பினார்கள்.
 • இறுதியாக, யோசேப்பு தன் சகோதரர்களுக்கு தன்னை வெளிப்படுத்தி அவர்களை மன்னித்துவிட்டதாக உறுதியளித்த போது அது அவர்கள் மேல் உள்ள அன்பினால் மாத்திரமல்ல அவர்கள் வாழ்க்கையைக் குறித்த தேவனின் நோக்கம் நிறைவேறுகிறது என்று உணர்ந்ததினாலும்தான் என்று தெளிவாக கூறினான்.

எதிர்காலத்தின் திறவுகோலாக நம்பிக்கை உள்ளது அதிகாரங்கள் 49;50)

 • யாக்கோபு அவனது மகன்களுக்கு கொடுத்த ஆசீர்வாதங்கள் முதலில் தனிப்பட்ட மனிதர்களாகிய அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும், விரிவான கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது, அவனுடைய வார்த்தைகள் அவர்களைத் தாண்டி அவர்களுடைய சந்ததிகளாகிய கானான் தேசத்தில் இருந்த பன்னிரெண்டு இஸ்ரவேல் கோத்திரத்திற்குமான ஆசீர்வாதமாகவே அமைந்தது.
 • ஆபிரகாமுக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை சுமந்துகொண்டிருந்த, அவர்கள் தேவன் அவர்களுக்கும், அவர்கள் பிள்ளைகளுக்கும், உலகம் பரிசுத்தமான அழைப்பை முழுவதுக்கும் கொடுத்த உயர்ந்த ஒரு காலத்திலும் மறக்கக் கூடாதவர்களாயிருந்தார்கள் (12:1-3).
 • ஒவ்வொரு தலைமுறையும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு தாங்கள் யாரென்றும், யாருடையவர் களென்றும், தாங்கள் ஏன் இங்கு இருக்கிறோம் (வாழ்வின் நோக்கம் என்னவென்றும்) கற்றுக்கொடுக்க வேண்டும்.
 • வாக்குத்தத்தங்களையும் பொறுப்புகளையும் நிராகரிக்காமல் காப்பாற்றுபவர்களிடம் தான் எதிர்காலம் உள்ளது.
 • ஏற்கனவே, யூதா கோத்திரத்திலிருந்து மக்கள் (புறஜாதிகள்) யாவரும் கீழ்ப்படிந்து பின்பற்றும் ஒரு ஆட்சியாளர் உருவாவார் என்ற எதிர்கால நம்பிக்கை யாக்கோபின் ஆசீர்வாதங்களில் தெளிவாக உள்ளது (49:10).
 • யோசேப்பு ஆபிரகாமின் வாக்குத்தத்தங்களை அவனுடைய சகோதரர்களிடம் நினைவூட்டியதுடனும், அவர்கள் நிரந்தர வீடல்லாத எகிப்தை விட்டுப்போகும்போது இறுதிக்கட்டமாக அவனுடைய எலும்புகளை எடுத்துச் செல்ல அறிவுறுத்தியதுடனும் இந்தப் புத்தகம் நிறைவு பெறுகிறது.
 • அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் தேவ கட்டளையை நிறைவேற்ற வேண்டிய மக்களாயிருந்தனர் (50:24,25)

புறக்குறிப்பு

ஒரு அணுகுமுறை இந்தப் புத்தகத்தின் இரு பெரிய பகுதிகளை கவனத்தில் எடுத்துக்கொள்கிறது. முதல் பகுதி வரலாற்றின் முந்தியகால நிகழ்வுகளை வலியுறுத்தும் வேளையில், இரண்டாவது பகுதி முற்பிதாக்களின் கதைகளை விவரிப்பதாக உள்ளது: ஆபிரகாம். ஈசாக்கு, யாக்கோபு மற்றும் யோசேப்பு

பகுதி 1

I.உலகின் தொடக்ககால வரலாறு (1:1-11:32)

 • A. சிருஷ்டிப்பின் துவக்கமும், நிறைவும் (1:1-2:3)
 • B. மனிதன் தோட்டத்தில் வாழ்தலும் மனுஷி சிருஷ்டிக்கப்படுதலும் (2:4-25)
 • C. மனிதன் விழுந்து போகுதல் (3:1-24)
 • D. தோட்டத்திற்கு வெளியே ஆதாம், ஏவாள் குடும்பம் (4:1-16)
 • E. இரு வம்சங்கள் (4:17-26)
 • F. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய முற்பிதாக்கள் (5:1-32)
 • G. பெருவெள்ளம்: அழிக்கப்படுதலும், காப்பாற்றப்படுதலும் (6:1-22)
 • H. பெருவெள்ளம் வருதல் (7:1-24)
 • I. புதிய மனிதவர்க்கம் தோன்றுதல் (8:1-22)
 • J. புதிய உலகத்திற்கான தேவனுடைய கட்டளையும் உடன்படிக்கையும் (9:1-29)
 • K. நோவாவின் சந்ததியினர் (10:1-32)
 • L. தேசங்கள் பரவுதல்: மொழிகளின் குழப்பங்களும் வம்சங்களும் (11:1-32)

பகுதி 2

II. ஆபிரகாமின் வரலாற்றுத் தொகுப்பு (12:1-25:18)

 • A. ஆபிரகாம் புதிய தேசத்திற்குச் செல்ல அழைக்கப்படுதல்: கானான் (12:1-20)
 • B. ஆபிரகாமும், லோத்தும் பிரிதல் மற்றும் வாக்குத்தத்தங்களைப் புதுப்பித்தல் (13:1-18)
 • C. ஆபிரகாம் போரில் ஈடுபடுதல் மற்றும் இரு இராஜாக்களை சந்தித்தல் (14:1-24)
 • D. ஆபிரகாமுடன் நிலத்தைப் பற்றிய தேவனுடைய உடன்படிக்கை (15:1-21)
 • E.ஆகார்,மற்றும் இஸ்மவேலின் கதை (16:1-16)
 • F. ஆபிரகாமோடு தேசத்தைப் பற்றிய தேவனுடைய உடன்படிக்கை (17:1-27)
 • G. தேவன் ஆபிரகாமை சந்திக்க வருதல் (18:1-33)
 • H. சோதோம், கொமோராவின் அழிவு (19:1-38)
 • I. ஆபிரகாமும், சாராளும் கேராரில் இருத்தல்: தேவனுடைய வாக்குத்தத்தங்களைக் காத்துக்கொள்ளுதல் (20:1-18)
 • J. ஈசாக்கின் பிறப்பு (21:1-7)
 • K.ஈசாக்குக்கும்,இஸ்மவேலுக்குமிடையேயான பதட்டம் (21:8-21)
 • L. அபிமலேக்கோடு ஆபிரகாமின் ஒப்பந்தம் (21:22-34)
 • M. ஆபிரகாமின் விசுவாசம் சோதிக்கப்படுதல்; அவனுடைய மகன் ஈசாக்கைப் பலியிட அழைப்பு (22:1-24)
 • N. சாராளின் இறப்பு (23:1-20)
 • 0. தேவனுடைய கொடுத்தல் வெளிப்படுதல்: ஈசாக்குக்காக ஒரு LD 6376376 (24:1-67)
 • P. ஆபிரகாமின் இறுதி நாட்கள் (25:1-11) Q. இஸ்மவேலின் வாரிசுகள் (25:12-18)

III. ஈசாக்கின் வரலாற்றுத் தொகுப்பு (25:19-28:9)

 • A.ஏசாயாக்கோபின் பிறப்பு (25:19-26)
 • B. யாக்கோபு, சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற ஏசாவுடன் வாதிடுதல் (25:27-34)
 • C. ஈசாக்கு பெலிஸ்தர் நடுவே வாழ்தல் (26:1-33)
 • D. ஈசாக்கும், ரெபேக்காளும் ஏசாவின் ஏத்தியப் பெண்களான மனைவியர் குறித்து துக்கம் அடைதல் (26:34,35)
 • E.ஏசாவின் ஆசீர்வாதங்களை யாக்கோபு திருடுதல் (27:1-45)
 • F. ஆரானுக்குப் போகும் முன் ஈசாக்கு யாக்கோபிடம் உரைத்தது (27:46-28:5)
 • G. ஈசாக்கைப் பிரியப்படுத்த ஏசாவின் காலந்தாழ்த்திய திருமணம் (28:6-9)

IV. யாக்கோபின் வரலாற்றுத் தொகுப்பு (28:10-36:43)

 • A. பெத்தேலில் யாக்கோபு: ஒரு தரிசனமும், பொருத்தனையும் (28:10-22)
 • B. யாக்கோபின் திருமணங்கள் (29:1-30)
 • C. ராகேலுக்கும் லேயாளுக்குமிடையேயான பகை (29:31-30:24)
 • D. யாக்கோபு மந்தைகளுக்காக லாபானிடம் செய்த ஒப்பந்தம் (30:25-43)
 • E. லாபானிடமிருந்து யாக்கோபும் அவன் குடும்பமும் பிரிந்து செல்லுதல் (31:1-55)
 • F. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு யாக்கோபுவும் ஏசாவும் திரும்பக்கூடுதல் (32:1-33:17)
 • G. யாக்கோபும் அவன் குடும்பமும் சீகேமுக்குப் போதல் (33:18-34:31)
 • H. பெத்தேலுக்குத் திரும்புதல் (35:1-15)
 • I. பெத்தேலுக்குப் பின் (35:16-29)
 • J.ஏசாவின் வம்சாவழியினர் (36:1-43)

V. யோசேப்பின் வரலாற்றுத் தொகுப்பு (37:1-50:26)

 • A. கானான் தேசத்தில் யோசேப்பு (37:1-36)
 • B. யூதாவும், அவனது மருமகள் தாமாரும் (38:1-30)
 • C. போத்திபாரின் வீட்டில் அடிமையாக யோசேப்பு (39:1-23)
 • D. சிறைச்சாலையில் யோசேப்பு (40:1-23)
 • E. பார்வோனின் புலனாகாத கனவுகள் (41:1-57)
 • F. எகிப்தில் யோசேப்பின் சகோதரர்கள் (42:1-38)
 • G. சகோதரர்கள் எகிப்துக்குத் திரும்புதல் (43:1-34)
 • H. ஆபத்தில் பென்யமீன் (44:1-34)
 • I. யோசேப்பு அவனுடைய சகோதரர்களோடு சேர்தல் (45:1-28)
 • J. யாக்கோபின் குடும்பம் எகிப்துக்குக் குடிபெயர்தல் (46:1-47:12)
 • K. தொடர்ந்து கொண்டிருந்த பஞ்சம் (47:13-26)
 • L. யாக்கோபின் கடைசி நாட்கள் (47:27-48:22)
 • M. மரணப்படுக்கையில் யாக்கோபு மகன்களை ஆசீர்வதித்தல் (49:1-27)
 • N. யாக்கோபின் மரணமும் அடக்கமும் (49:28-50:14) 0. யோசேப்பின் இறுதி ஆண்டுகள் (50:15-26)

This Post Has One Comment

 1. Duraisamy

  அருமையான விளக்கத்துடன் கூடிய ஆராய்ச்சி .

Leave a Reply