in the beginning ஆதி, ஆதியிலே
“ஆதி”, “ஆதியிலே”
தொடர்பு வசனங்கள்
- ஆதி 1:1
- சங் 33:6, 9; 102:25;
- ஏசாயா 42:5; 45:18;
- யோவான் 1:2-3;
- எபிரேயர் 1:2;
- வெளி 4:11 .
ஆதி 1:1
- ஆதி அல்லது ஆதியிலே – இது முழு பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறதா அல்லது பூமிக்கான தேவனின் திட்டத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறதா என்று உறுதியாகக் கூற முடியாது.
- மற்றும் இந்த ஆரம்பம் எப்போது நடைபெற்றது என்று நமக்குத் தெரியாது.
- இது சில கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்று திட்டமாக சிலர் கூறுகின்றனர்.
- பிறர் இது வெறுமனே சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் என்று நினைக்கிறார்கள்.
- இங்கு, ஆரம்பத்தின் காலம் முக்கியமான காரியம் அல்ல, ஆனால் இதைப்பற்றிய உண்மைதான் முக்கியம்.
- சிருஷ்டிப்பில் தேவனைத் தவிர எதுவும் நிலைத்த பொருள் கிடையாது (சங் 90:2. )
- சிருஷ்டிப்புக்கு முன்பே தேவன் இருந்தார், அவருடைய வார்த்தையாலும், சர்வவல்லமையாலும் ஒன்றுமில்லாமையிலிருந்து தேவன் இந்த உலகத்தை சிருஷ்டித்தார்.
- சிறந்த சிருஷ்டிகர் வேதாகமத்தின் முதல் வசனத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறார் மற்றும் அவர் இந்த முதல் அதிகாரத்தில் ஏறக்குறைய 30 தடவைகள் குறிப்பிடப்படுகிறார்.
- இந்த முழு வேதாகமும் அவருடைய கூற்று. இது அவருடைய சில வல்லமைமிக்க செயல்களையும், அருமையான வார்த்தைகளையும் நமக்குத் தருகிறது.
- தனிச்சிறப்பாக இது மனிதகுலத்தோடு அவரின் நடவடிக்கை குறித்த கதையினையும், அவரைப்பற்றிய உண்மைகளைக் கற்றுக்கொடுக்க என்ன செய்தார் என்பது பற்றியும் நமக்குச் சொல்கிறது.
- மேலும் எவ்வாறு அவரை அணுகுவது, எவ்வாறு அவரை ஆராதிப்பது என்றும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
- தேவன் இருக்கிறார் என்ற கூற்றுகளோடு வேதாகமம் ஆரம்பமாகவில்லை. அது அவரை வெறுமனே செயலில் காட்டுகிறது.
- அவருடைய செயல்கள் அவர் இருப்பதைப்பற்றிப் பேசுகிறது.
- மேலும் அவர் உண்டாக்கிய பொருள்களின்மூலம் அவர் எவ்வாறு இருக்கிறார் என்பதை சிறிது கற்றுக்கொள்கிறோம்.
காண்க:-
- சங் 19:1-2;
- ஏசாயா 40:25-26;
- ரோமர் 1:20.
சங்கீதம் 33:6
விஞ்ஞானிகள் மற்றும் தத்துவ ஞானிகளின் அனைத்து யூகங்களையும் விட உலகத்தின் தோற்றம் குறித்த இந்த ஒரு வசனத்தில் அதிக உண்மை உள்ளது.
காண்க:-
- சங் 148:5;
- ஆதி 1:1;
- ஏசாயா 40:25-26;
- யோவான் 1:1-2;
- எபிரேயர் 11:3.
சங் 102:25-27
- எபிரெயுவில் ஏவப்பட்டு எழுதிய ஆசிரியரின்படி (எபிரேயர் 1:10-12. ) “ஆதி”, “ஆதியிலே” இந்த வார்த்தைகள் அவர் மனிதனாய்ப் பிறப்பதற்கு முன் அவரிடம் பேசப்பட்டவை.
- வ 24 ன் எபிரெய வார்த்தை தேவனுக்கான வழக்கமான பழைய ஏற்பாட்டு சொல்.
- புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்கள் இயேசுவை தேவனாக, பழைய ஏற்பாட்டின் யேகோவா மனித உருவெடுத்தவர், பிரபஞ்சத்தைப் சிருஷ்டித்தவர், என்பதாகக் கருதியதற்கு இது மேலும் ஒரு சான்றாகும்.
யோவா 1:1-2
“ஆதியிலே”-
- யோவா 1:1; 17:5;
- ஆதி 1:1;
- 1 யோவான் 1:1-2.
விளக்கம்:-
- தேவன் அண்டத்தைப் சிருஷ்டித்த போது ‘வார்த்தை’ ஏற்கனவே இருந்துகொண்டிருந்தது.
- அண்டத்துக்கு ஒரு துவக்கம் இருந்தது. ஆனால் வார்த்தை நித்தியமாயிருந்தது, அனைத்தையும் சிருஷ்டித்தவரோடு ஒன்றாயிருந்தது.
- அந்த வார்த்தை கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்பதை தொடர்ந்து வருகின்ற வசனங்கள், குறிப்பாக 14ம் வசனம் தெளிவாக்குகிறது.
- ‘வார்த்தை’ தொடர்பு, பேச்சு என்று பொருள்படுத்துகிறது. கர்த்தராகிய இயேசு, தேவனுடைய சிந்தை தேவனுடைய இருதயத்தின் முழு வெளிப்பாடு, தேவனுடைய இயல்பு ஆகியவைகளாகும் (வ 18; 10:30; 14:9; 1:3).
- இந்த வசனங்களில் ‘தேவன்’ என்பது (‘வார்த்தை தேவனாயிருந்தது’ என்கிற சொற்றொடரைத் தவிர்த்து, பிதாவாகிய தேவன் என்பதைத் தெளிவாகப் பொருள்படுத்துகிறது
கூடுதல் தகவல் : ஆதி BEGINNING
- ஆதி என்பது இயேசுகிறிஸ்துவிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் திருநாமம்.
- காலங்கள் ஆரம்பமாவதற்கு முன்பாகவே இயேசுகிறிஸ்து இருக்கிறார் என்பது இதன் பொருளாகும்.
- யோவான் சுவிசேஷத்தில் இயேசு கிறிஸ்து ஆதியிலே பிதாவோடு இருந்தாக எழுதியிருக்கிறார்.
- ஆகையினால் இவர் சர்வகாரியங்களையும் சிருஷ்டித்தவர் (யோவா 1:2).
- இயேசுகிறிஸ்து ஆதி எனவும் (கொலோ 1:18). தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியாயிருக்கிறவர் எனவும் (வெளி 344). ஆதியும் அந்தமுமானவர்
- எனவும் அழைக்கப்படுகிறார். (வெளி1:8;21:6;22:13)
- “ஆதி” என்பதற்கான எபிரெய வார்த்தை- ray-sheeth’ 7225 என்பதாகும்.
- ஆதி” என்பதற்கான கிரேக்க வார்த்தைகள் – – anoothen 509, – prootos – 4413 – என்பனவாகும்.
English
“Beginning” –
- Gen 1:1
- Ps 33:6, 9; 102:25;
- Isa 42:5; 45:18;
- John 1:2-3; 1:16;
- Heb 1:2; Rev 4:11.
Gen 1:1
We do not know for certain whether this refers to the beginning of the whole universe, or only the beginning of God’s plan for the earth. And we do not know when this beginning took place. Some seem sure that it was some billions of years ago. Others think that it was only some thousands of years ago. See the additional note on all this at the end of Genesis.
Here the time of beginning is not the important thing, but the fact of it. Nothing in creation is eternal, only God is (Ps 90:2). Before creation there was God, and God made the world out of nothing by His Word and almighty power.
The great Creator appears in the first verse of the Bible and He is referred to some 30 times in this first chapter alone. The whole Bible is His narrative. It gives us some of His mighty acts and wonderful words. Especially it gives us the story of His dealings with mankind, and what He has done to teach them the truth about Himself. He teaches us also how we can come to Him, and how to worship Him.
The Bible does not begin with proofs of God’s existence. It simply presents Him in action. His works speak of His existence and we learn something of what He is like by the things He has made. See Ps 19:1-2; Isa 40:25-26; Rom 1:20.
Ps 33:6
There is more truth in this one verse concerning the origin of the universe than in all the speculations of scientists and philosophers combined. See 148:5; Gen 1:1; Isa 40:25-26; John 1:1-2; Heb 11:3.
Ps 102:25-27
According to the inspired writer to the Hebrews (Heb 1:10-12) these words were spoken to the Lord Jesus before His incarnation. In the Hebrew of v 24 there is the usual Old Testament word for God. This is further proof that the writers of the New Testament regarded Jesus as God, the incarnation of Jehovah of the Old Testament, the great Creator of the universe.
Joh 1:1
“Beginning”– joh 17:5; Gen 1:1; 1 John 1:1-2. When God made the universe the “Word” was already in existence. The universe had a beginning but the Word was eternal, one with the Creator of all things. The verses which follow, especially v 14, make it clear that the Word is the Lord Jesus Christ. “Word” suggests communication, speech. The Lord Jesus is the full expression of the mind of God, the complete revelation of God’s heart, God’s nature (v 18; 10:30; 14:9; Heb 1:3). “God” in these verses (except for the phrase “the word was God”) evidently means God the Father (note at Matt 5:16).
ஆதியாகமம் புத்தகத்தின் அறிமுகம்