மனுஷிகத்தின் இரகசியம்
மனுஷிகத்தின் இரகசியத்தில் இதில் ஆத்துமா குறித்து அறிந்து கொள்ளலாம்.
1தெச 5:23 இன் படி இயேசு கிறிஸ்துவின் வருகையில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமானால் அவனுடைய ஆவி ஆத்துமா சரீரம் குற்றம் அற்றதாக இருக்க வேண்டும்.
குற்றமற்றதாக என்றால் பாவம் இல்லாததாக இருக்கவேண்டும்.
மனிதன் என்பவன் யார்?
சகலவற்றையும் படைத்த தேவன் அவைகள் எல்லாவற்றையும் வார்த்தையை கொண்டு படைத்தார். ஆனால் மனிதனைப் படைப்பதற்கு முன்பதாக பூமியை நனைக்க மூடுபனி வர வைத்தார். இந்த மூடுபனி என்பது பூமியில் உள்ள மண்ணை நனைத்து அந்த மண் பிசைக்கிற அளவுக்கு தக்கதாக ஈரப்பதம் உண்டாகும்படி தேவனால் பொழியப்பட்டது.
இதன் இரகசியம்
எந்த ஒரு படைப்பை தேவன் படைக்கும் போதும் அவைகளை மூன்று கூறுகளின் அடிப்படையில் படைப்பதாக வேத அறிஞர்கள் கூறுகின்றனர். அந்த அடிப்படையில் மனிதனும் தேவனால் படைக்கப்பட்டான்.
அதாவது,
மண், காற்று, நீர் ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டு மனிதன் படைக்கப்பட்டான். மூடுபனியாகிய நீர், மண், தேவனுடைய சுவாசமாகிய காற்று.
மனிதன் ஒருவன் அவனுடைய மனுஷிகம் மூன்று
மனுஷிகம் என்பது ஆள் தத்துவத்தை குறிக்கிறது ஆள் தத்துவம் என்பது குணாதிசயங்கள்.
I. ஆத்துமா
ஆத்துமாவைக் குறித்த சில பார்வைகள்
பிற மதத்தினரின் நம்பிக்கை:
- முதலாவது நமது நாட்டில் உள்ள எல்லா மதத்தினரும் மனிதனுடைய ஆத்துமா கண்ணுக்குப் புலப்படாததாயும், அழியாததாயும் உள்ளதோடு, மனிதனுடைய மரணத்தில் அந்த ஆத்துமா உடலில்
- இருந்து விடுதலையாகி மறு ஜென்மம் எடுத்து புதிய உடலில் புகுந்து பின் பரம ஆத்துமாவோடு இணையும்வரை இவ்வாறு புணர்ஜென்மம் எடுக்கும் என நம்புகின்றனர்.
இஸ்லாமியரின் நம்பிக்கை:
- மேற்கு ஆசியா நாடுகளில்(இஸ்லாமிய விசுவாசம்), கடவுள் அநேக ஆத்துமாக்களை உருவாக்கி அவைகளை மனித உடலில் வைத்து பூமிக்கு அனுப்பி தம்மை மகிமைப்படுத்துகிறார்களா? என்று பார்க்கிறார்.
- இந்த ஆத்துமாக்களும், ‘கண்ணுக்குப் புலப்படாததும், அழியாததும், அழிக்க முடியாததுமாகும்”
- கடவுளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் ஆத்துமாக்கள் மோட்சத்திற்கும் மற்றவை எரிநரகத்திற்கும் செல்லும் என நம்புகின்றனர்.
ரோமன் கத்தோலிக்க சபையின் நம்பிக்கை:
கிறிஸ்தவர்களின் விசுவாசத்திற்கு வரும்போது ரோமன் கத்தோலிக்க சபையின் விசுவாசம் என்னவெனில் அவர்களும் ஆத்துமா கண்ணுக்குப் புலப்படாததும் அழியாததும் மரணத்தில் உடலிலிருந்து விடுபட்டு தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு முன்பாக, நன்மை செய்திருந்தால் பரலோகத்திற்கும் தீமை செய்திருந்தால் நரகத்திற்கும், பாதி நன்மை, பாதி தீமை செய்திருந்தால் உத்தரிக்கும் ஸ்தலத்திற்கும் செலவதாக நம்புகின்றனர்.
அனைத்து புராட்டஸ்டண்ட் பிரிவினரின் நம்பிக்கை:
அனைத்து புராட்டஸ்டண்ட் பிரிவினர் கூட ஆத்மா கண்ணுக்குப் புலப்படாததும் அழியாததுமானதும் உயிர்த்தெழுதலில் மீண்டும் எழும்போது இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் பரலோகத்திற்கும், மற்ற அனைவரும் நரகத்திற்கும் செல்வதாக அவர்களும் நம்புகின்றனர்.
விஞ்ஞானத்தின் அறிக்கை:
- விஞ்ஞானிகளும் மனித ஆத்துமாபற்றி புரியாத புதிராக இருந்தாலும்கூட அநேக பரிசோதனைகளுக்கு பின்பு அவ்வாறே நம்புகின்றனர்.
- மரணத்தருவாயில் இருக்கும் ஒரு நபரை காற்றுப்புகாத கண்ணாடிப்பெட்டியில் வைத்துவைத்தனர்.
- அந்நபர் மரிக்கும்போது என்ன நடக்கும் என்பதை கவனிப்பதற்கு கேமராக்களை பொருத்திப் பார்த்தபோது, விரிசல் விட்டு அந்த ஆத்துமா மரித்த சரீரத்தைவிட்டு வெளியேறினதை அனைவரும் அறிவர் (Ref. Discovery Channel ‘Believe it or not” என்னும் நிகழ்ச்சியில்)
ஆக ஏறத்தாழ உலகின் ஒட்டுமொத்த ஜனங்களும் மனித ஆத்துமா கண்ணுக்குத் தெரியாததும் (Invisible) அழிக்க முடியாததுமாயிருக்கிறது(Immortal) என நம்புகின்றனர்.
ஆத்துமாவைக் குறித்த சில தவறான உபதேசங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை கவனமாக வாசியுங்கள்
- எசேக்கியேல் 18:4,20 ல், ‘பாவம் செய்கிற ஆத்துமா சாகும்
- 2 நாளாகமம் 6:36ல் “பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே”
- ரோமர் 3:9-12ன்படி, தேவனுடைய பார்வையில் ‘நீதிமான் ஒருவனாகிலும் இல்லை”
- சங் 22:29ல், ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக்காக்கக் கூடாதே”
- சங்கீதம் 33:19ல்,’தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்”
- சங்கீதம் 56:13 ல் ‘நீர் என் ஆத்துமாவை மரணத்திற்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?”
- யாக்கோபு 5:20ல்,தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களைமூடுவானென்று அறியக்கடவன்”
மேலே உள்ள வசனங்களை வைத்து ஆத்துமா சாகக் கூடிய ஒன்று அது நிரந்தரமற்றது என்று கூறுகின்றனர்.
உண்மையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனங்கள் அனைத்தும் பாவம் செய்த அல்லது மரணத்திற்கு ஏதுவான ஆத்துமாவை குறித்ததாக உள்ளது.
பாவம் செய்கிற ஆத்துமா சாகும் அல்லது மரிக்கும் இதன் பொருள் என்ன?
இந்தக் கேள்விக்கான பதிலை காண்பதற்கு முன் மரணம் என்றால் என்ன என்பதை அறிய வேண்டும்.
மரணம் என்றால் என்ன அல்லது சாவு என்றால் என்ன?
மரணம் என்றால் பிரிக்கப்படும் என்று பொருள். மூன்று வித மரணத்தைக் குறித்து வேதத்தில் காணலாம்.
- 1. சரீர மரணம்
- 2. ஆவிக்குரிய மரணம்
- 3. இரண்டாம் மரணம்
1. சரீர மரணம் என்றால் என்ன?
சரீர மரணம் என்பது மனிதனுடைய சரீரத்தை விட்டு ஆவியையும் ஆத்துமாவையும் பிரித்தெடுப்பது ஆகும். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால் ஆவியும் ஆத்துமாவும் சரீரத்தை விட்டு பிரிந்து போதலே சரீர மரணமாகும்.
- உதாரணம்: நாம் அன்றாட வாழ்க்கையில் சகமனிதர்களின் மரணத்தை நம் கண்களினால் காண்கிறோம்.
2. ஆவிக்குரிய மரணம் என்றால் என்ன?
இந்த மரணம் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு தற்காலிகமாக துண்டிக்கப்படும் போது ஏற்படுகிறது. மனிதன் தேவனிடம் தொடர்பு கொள்ளக்கூடாது படிக்கு பாவம் தடைசெய்கிறது.
- உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. ஏசாயா 59:2
தேவன் செய்ய வேண்டும் என்று சொல்லியதை செய்யாமல் இருப்பதும் செய்யக்கூடாது என்று சொல்லியதை செய்வதுமே பாவமாகும். சுருக்கமாக கூற வேண்டுமானால் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் இருப்பதே பாவமாகும்.
உதாரணம்:
- ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதியாகமம் 2:17
- அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான். ஆதியாகமம் 3:6
- அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது. அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள். ஆதியாகமம் 3:7
இந்த வசனங்களில் தேவன் சொல்லியது புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்பதாகும். ஆதாமும் ஏவாளும் அந்தப் பழத்தை புசித்த பிறகு சரீர மரணம் அடையவில்லை. ஆனால் ஆவிக்குரிய மரணம் அடைந்தார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாததால் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டார்கள் அந்த மரணத்தை குறித்து தான் அங்கு சொல்லப்பட்டுள்ளது. அதன்பிறகு ஆதாம் பல நூற்றாண்டுகள் உயிரோடு இருந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்து பிறகு சரீர மரணத்தை அடைந்தான்
- ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம், அவன் மரித்தான்.ஆதியாகமம் 5
3. இரண்டாம் மரணம்
இரண்டாம் மரணம் என்பது ஆவிக்குரிய மரணத்தை போன்றது அல்ல. பாவம் செய்யும்போது ஆவிக்குரிய மரணம் அடைகிறோம் அந்த மரணம் தற்காலிகமானது. பாவம் செய்த மனிதன் தேவனிடம் மனம் திருந்தி தன் பாவத்தை உணர்ந்து பாவத்தை அறிக்கை செய்தால் தேவன் அவனை அந்த மரணத்தில் இருந்து விடுவித்து விடுகிறார்.
ஆனால் இரண்டாம் மரணம் என்பது அப்படி அல்ல. அது தேவனை விட்டு நிரந்தரமாக பிரிக்க கூடிய ஒன்றாக உள்ளது. இதைத்தான் வேதம் நித்திய ஆக்கினை , நரகாக்கினை , நரகம் என்று சொல்லுகிறது.
- பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.வெளிப்படுத்தினத விசேஷம் 21
எனவே பாவம் செய்கிற ஆத்துமா சாகும் என்று சொல்லப் பட்டுள்ள இடங்கள் எல்லாம் சரீர மரணம் அல்லது ஆவிக்குரிய மரணத்தை குறித்தே பேசுகிறது. இரண்டாம் மரணமாகிய நரகத்தில் கூட ஆத்துமா சாவது இல்லை என்று வேதம் கூறுகிறது.
ஆத்துமா அழியாதது
- 1. இருதயத்தில் மறைந்திருக்கிற குணம் அழியாது. (1பேதுரு 3:4).
- 2. கீழே இருக்கிற பாதாளம் உன் நிமித்தம் அதிர்ந்து உன் வருகைக்கு எதிர்கொண்டு வருகிறது. (ஏசா 14:9-11).
- 3. அவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு (யோவான் 3:15-16; யோவான் 6:5458; யோவான் 17:2-3).
- 4. மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட் பட்டிருக்கிறார்கள். (யோவான் 5:24;யோவான் 6:40,47).
- 5.என்றென்றைக்கும் பிழைப்பான். (யோவான் 6:51).
- 6. அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை. (யோவான் 10:28.
- 7. என்றென்றைக்கும் மரியாமல் இருப்பார்கள். (யோவான் 11:25-26).
- 8. மனுஷன் ஆத்துமாவைக் கொல்ல வல்லவன் அல்ல. (மத் 10:28; லூக்கா 12:5).
- 9. மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். (மத் 17:3; உபா 346).
- 10. அங்கே அவர்கள் புழு சாவாமல் இருக்கும். (மாற்கு 9:43-49).
- 11. பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிற போது தன் கண்களை ஏறெடுத்தான். (லூக்கா 16:19-31).
- 12. எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்கள். (லூக்கா 20:37-38)
- 13.எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்து, உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. (2கொரி 4:16-18).
- 14. இந்தத் தேகத்தை விட்டு குடிபோகவும், கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம். (2கொரி 5:8).
- 15. தேகத்தை விட்டுப் பிரிந்து கிறிஸ்துவுடனே கூட இருக்க எனக்கு ஆசையுண்டு.. (யாக் 2:26, பிலி 1:21-24).
- 16.நாம் விழித்திருப்பவர்களானாலும் நித்திரையடைந்தவர்களானாலும் அவரோடேகூட ஏகமாய் பிழைத்திருப்போம். (1தெச 5:10).
- 17. பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளிடத்திற்கு வந்து சேர்ந்தீர்கள். (எபி 12:22-23).
- 18. இதற்காக மரித்தோரானவர்கள் தேவன் முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக (பேதுரு 4.6).
- 19. தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். யோவான் 2:47).
- 20.நாம் சகோதரரிடத்தில் அன்பு கூருகிறபடியால், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம். (1யோவான் 3:14-15).
- 21. தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார்கள். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது. (1யோவான் 5:11),
- 22. குமாரனையுடையவன் ஜீவனையுடையவன். (1யோவான் 5.12; 1யோவான் 2:24-25).
- 23.உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும். (சங் 22:26).
- 24.நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசம் போலிருக்கும். (நீதி 418).
- 25. ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன். (வெளி 6.9-11).
ஆத்துமா எங்கு இருக்கிறது?
அவை உணர்வுகளோடு தொடர்புடையது. எல்லா உணர்வுகளும் இருதயத்தோடு தொடர்பு உடையவை ஆகும்.
குணம்
- இருதயத்தில் மறைந்திருக்கிற குணம் அழியாது. (1பேதுரு 3:4).
விசுவாசம்
- …… உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். ரோமர் 10:9
- நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், ரோமர் 10:10
அன்பு
- நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூறுவாயாக. உபாகமம் 6:5
- இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக, மத்தேயு 22:37
இங்கு குணம் , விசுவாசம் , அன்பு ஆகிய உணர்வுகள் இருதயத்தோடு தொடர்புடையது ஆகும். எனவே வேதம் ஆத்துமாவை இருதயம் என்றும் குறிப்பிடுகிறது.
இருதயத்தை பரிசுத்த வேதாகமம் மனது
- உள்ளம்
- நெஞ்சம்
- உள்ளந்திரியம்
என்று கூறுகிறது.
மனது – (இருதயம்) ஆத்துமா
- ……. ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாய் இருந்தார்கள். அப்போஸ்தலர் 4:32
- …… அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் எபிரேயர் 10:16
- ….. உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், திடமனதாயிருந்து, சங்கீதம் 27:14
உள்ளம் – (இருதயம்) ஆத்துமா
- ……. இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும். மாற்கு 7:21
- பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். மாற்கு 7:23
- …… உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். யாக்கோபு 1:21
- ….. சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங்கீதம் 51:10
- …… அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, ….. எரேமியா 31:33
நெஞ்சம் – (இருதயம்) ஆத்துமா
- ….. உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும், உன் நெஞ்சின் வழிகளிலும், …..பிரசங்கி 11:9
உள்ளந்திரியம் – (ஆத்துமா) ஆத்துமா
- …. உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே,….. எரேமியா 11:20
- ….. தேவரீர் இருதயங்களையும் உள்ளந்திரியங்களையும் சோதித்தறிகிறவர். சங்கீதம் 7:9
இருதயம், மனம், உள்ளம், நெஞ்சம், உள்ளந்திரியம் ஆகிய இவைகளைத்தான் பரிசுத்த வேதாகமம் உள்ளான மனிதன் என்று கூறுகிறது. அந்த உள்ளான மனிதனைத்தான் ஆத்துமா என்கிறோம்.
- …. உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், எபேசியர் 3:16
- …. இருதயங்களில் வாசமாயிருக்கவும், எபேசியர் 3:17
- …. உள்ளான மனுஷனுக்கேற்றபடி ரோமர் 7:22
- …. என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற …..ரோமர் 7:23
தேவன் மனிதனையே ஆத்துமா என்று கூறுகின்றார் வேதமும் அதையே போதிக்கிறது.
- ….. மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7
- …… ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக யாத்திராகமம் 12:4
- ….. உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, யாத்திராகமம் 16:16
ஆத்துமா என்பது மனிதனின் இருதயத்தில் வைக்கப்பட்டுள்ள பார்க்க முடியாத ஒரு அமைப்பு ஆகும்.
பார்க்க முடியாத ஆத்மாவை தேவன் மட்டுமே உருவாக்க முடியும்.
ஆத்துமா ஒன்றுதான் நிரந்தரமாக நிலைத்திருக்கக் கூடியது.
ஆத்துமா என்ன வேலை செய்கிறது
ஆத்துமாவின் செயல்பாடுகள் எண்ணங்கள்
- யோசனைகள்
- நினைவுகள்
- சிந்தனைகள்
- சித்தம் (முடிவெடுக்கும் திறன்)
இவைகள் அனைத்தும் இருதயத்தில் நடைபெறுகிறது.
உதாரணங்கள்:
சிந்தனைகள்:-
- ….. நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து, உபாகமம் 30:1
- …. உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? மத்தேயு 9:4
நினைவுகள்:-
- …..இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: ….மத்தேயு 9:4
- …..அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ ….நீதிமொழிகள் 23:7
- …. அவன் இருதயத்து நினைவுகளின் …ஆதியாகமம் 6:5
- … இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், …மத்தேயு 15:19
- சங் 139:23; லூக் 1:51; நியா 5:15; எபி 4:12; ஆதி 8:21
யோசனைகள்:-
- … இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ..லூக்கா 9:4
- …., இருதயங்களின் யோசனைகளையும் … 1கொரிந்தியர் 4:5
- நீதி 16:9; எபி 4:12; பிர 2:22
என்னங்கள் :-
- ….. அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று. அப்போஸ்தலர் 7:23
- …. உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். அப்போஸ்தலர் 8:22
மேலும், ஞானம், புத்தி, அறிவு, பொறாமை, கேடு, கபடு, மகிழ்ச்சி, சந்தோஷம்……, போன்ற எல்லாம் இருதயத்தில் நடைபெறுகிறது.
- போஜனம் பண்ணும் ஆவல் (உபா 12:20-21)
- அன்பு (உன் 1:7)
- தேவபக்தி (சங் 631)
- சந்தோஷம் (சங் 86:×4)
- அறிவு (சங் 139:4)
- ஞாபகசக்தி (புல 3:20)
ஆகியவற்றிற்கு ஆத்துமாவே ஆதாரமாகும்.
ஆத்துமாவும் சரீரமும்
ஆத்துமாவிற்கும் சரீரத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு.
ஜீவனைப் பிடித்திருப்பது ஆத்துமாவே. ஜீவிய நிலைப்பு, ஜீவிய நெகிழ்வு, ஜீவிய இழப்பு ஆகியவை தொடர்புடைய அனைத்திலும் ஆத்துமா வெளிப்படுகின்றது. இதனால் தான் பல இடங்களில் “ஆத்துமா” என்னும் சொல் “ஜீவன்” என்று மொழிபெயர்ப்பு செய்யப் பட்டுள்ளது.
- ஆதி 9:5;
- 1இராஜா 2:23; 19:3;
- நீதி 7:23;
- யாத் 21:23,30; 3012;
- அப் 15:26
சரீரம் ஆத்துமாவுடன் கலந்து பரவியுள்ள தன்மையே ஜீவன் எனப்படும். ஆத்துமா பிரிந்து சென்ற பிறகு சரீரம் வாழ்வதில்லை. ஆத்துமா பிரிந்த பிறகு எஞ்சியிருப்பது வெகுவிரைவில் அழுகிப்போகும் நிலையிலுள்ள சில தாதுப்பொருட்கள் மட்டுமே!
சரீரத்தின் ஒவ்வொரு அவயவத்திற்குள்ளும் ஆத்துமா உட்புகுந்து பரவிவாசம் செய்து ஓரளவு அனைத்துப் பகுதிகளையும் நேரடியாகவே ஆளுகை செய்கின்றது. வேதவாக்கியம் உணர்ச்சிகளை இருதயம், உள்ளிந்திரியங்கள் குடல், வயிறு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துகின்றன.
- சங் 16:7; 73:21;
- யோபு 15:35; 1613; 20:23; 38:36;
- புல 1:20; 2:11; 313;
- உன் 5:4;
- நீதி 27:16;
- ஏசா 16:11;
- எரே 4:19; 12:2;
- ஆப 316;
- யோவான் 7:38;
- பிலே 12
ஆத்துமா சரீரத்தில் பல செயல்களைச் செய்வதாகப் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது ஆத்துமா சரீரத்தினுள் ஊடுருவிப் பரவியுள்ளது.
- ஆதி 44:30;
- எண் 21:4;
- நீதி 13:4;
- ஏசா 32:6;
- எரே 16:16;
- எசே 23:17,22,28
ஆத்துமா ஊடுருவிப் பரவியுள்ள உள் உறுப்புகளுக்கு “உள்ளம்” என்னும் பொதுவான சொல்லே பயன்படுத்தப்படுகின்றது.
- ஏசா 16:11; 269;
- சக 12:1;
- இராஜா 3:28;
- சங் 51.46;
எல்லா செயல்களும் நடக்கும் இடம்
எண்ணம், ஆவிக்குரிய அனுபவம், ஞானம் ஆகியவற்றின் மையப்பகுதி உள்ளம் என்று இந்த வேத வசனங்கள் விளக்குகின்றன.
நம் உடலிலுள்ள தசை அணுக்கள் சிந்திக்கவுமில்லை, உணரவுமில்லை. இந்த அணுக்கள் வாயிலாகச் செயல்படும் ஆத்துமாவே சிந்திக்கின்றது, உணருகின்றது.
தசையாலான இருதயம் எதையும் உணராது; ஆத்துமா இருதயத்தின் வாயிலாக உணருகின்றது.
சரீரத்தின் வாயிலாக ஆத்துமா வெளி உலகத்திலிருந்து அதனுடைய எண்ணப் பதிவுகளைப் பெற்றுக் கொள்கின்றது.
புலன்கள் வாயிலாக எண்ணப் பதிவுகள் ஒன்று சேர்க்கப் படுகின்றன. பார்வை, கேட்டல், ருசி, முகர்தல், தொடுதல் ஆகியவை. இவை மூளைக்கு நரம்பு மண்டலம் வாயிலாக அனுப்பப்படுகின்றன.
மூளையின் வாயிலாகவும், அறிவு அனுமானம், ஞாபக சக்தி, கற்பனை ஆகிய செயல்களினாலும் ஆத்துமா இந்த எண்ணப் பதிவுகளை விரிவாக்குகின்றது. இதன்பிறகு இவ்வெண்ணப்பதிவின் மீது, ஆத்துமா செயல்படுகிறது.
இதற்கான கட்டளைகளை மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றின் வாயிலாக சரீரத்தின் பல்வேறு உறுப்புக்களுக்கும் ஆத்துமா அனுப்புகின்றது.
ஆத்துமா சரீரத்தின் வாயிலாகவே இவ்வுலகத்துடன் தொடர்பு கொள்கின்றது. சரீரமே ஆத்துமாவின் கருவியும் உபாயமும் ஆகும். உணர்தல், நினைத்தல், விரும்புதல், மற்றும் பல செயல்களும் ஒரே ஆத்துமாவின் செயல்களே!
ஓர் அவயவம் பழுதடையும் பொழுது அதன் வாயிலாக ஆத்துமா திறம்படச் செயல்பட இயலாது. மூளை பழுதடையுமானால் பைத்தியம் தான் பிடிக்கும். இதுபோன்ற நிலையில் ஆத்துமாவின் நிலை எவ்வாறு இருக்குமென்றால், நல்ல திறமையுடைய இசைக்கலைஞர், தன் கையில் உடைந்துபோன இசைக்கருவையை வைத்துக்கொண்டு திண்டாடுவதுபோல் இருக்கும்.
மூளை யோசிக்கவில்லை
உலகத்தில் அனைவரும் அறிவியலும் கூட மனிதனின் மூளை தான் சிந்திக்கிறது யோசிக்கிறது என்று சொல்லுகிறார்கள் ஆனால் உண்மை அது அல்ல.
மூளை யோசிக்க வில்லை என்பதற்கான ஆதாரங்கள்:
- … இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன். எரேமியா 17:10
- . உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, …எரேமியா 11:20
- மத் 6:21; லூக் 12:34; உபா 30:6;10:16; ரோம 2:29
ஆத்துமாவை எப்படி பரிசுத்தமாக்குவது?
- ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். 1 பேதுரு 1:22
- துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். எபிரேயர் 10:22
வேதத்தில் இருதயம் என்று சொல்லப்பட்டு இருக்கும் இடங்கள் எல்லாம் ஆத்மாவைக் குறிக்கிறது. இந்த ஆத்மாவை பரிசுத்தம் செய்வது என்றால் தேவனுடைய வார்த்தையாகிய சத்தியத்தைக் கொண்டு சிந்தனைகள் நினைவுகள் கேடு கபடு பொல்லாப்பு பொறாமை பெருமை ஆகியவைகளை பகுத்து பிரித்து எரிப்பதாகும்.
- தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. எபிரேயர் 4:12
- என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 23:29
- அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு, லூக்கா 24:32
- என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது, நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது, அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன். சங்கீதம் 39:3
சத்தியத்தின் இரகசியம்
முறையான இறையியல் 3