சபை வளர்ச்சியில் ஊழியரின் பங்கு

ஊழியர்கள்

சபை வளர்ச்சியில் ஊழியரின் பங்கு

ஊழியர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இந்த தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திச்சொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம் (கொலோ 1:28)
ஊழியர்கள் எல்லாரும் தேவன் தங்களைப் பொறுப்பாய் வைத்திருக்கிற திருச்சபை வளர்ந்து பெருக வேண்டுமென்று விரும்புவதும், ஜெபிப்பதும், பிரயாசப்படுவதும் உண்டு. இதன் பலனாக இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையில் சேர்த்துக் கொண்டு வருகிறார் (அப் 2:47). சபை எண்ணிக்கையிலும், தரத்திலும் வளருவதோடு மட்டுமல்லாமல் சபை ஆரம்பிக்கும்போது இருக்கிற விசுவாசிகள் முடிவுபரியந்தம் சபையில் நிலைத்து நிற்க வேண்டும். அத்துடன் புதிதாய் வருகிற விசுவாசிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கீழே வேர்பற்றி மேலே கனிகொடுத்து கிறிஸ்துவின் சாயலைப் பிரதிபலித்து ஆத்தும ஆதாயம் செய்கிற வர்களாய் சபையோடும் தரிசனத்தோடும் இணைந்து செயலாற்றினால் தான் சபை நாளுக்குநாள் வளர்ந்து பெருகும். ஒருசமயம் ஒரு திருச்சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஜெப முகாமிற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். அவ்விடத்தில் இந்த சபை ஆரம்பிக்கும்போது இருந்த விசுவாசிகள் தங்கள் கைகளை உயர்த்தும்படி கேட்டுக் கொண்டபோது ஒருவர்கூட கைகளை உயர்த்தவில்லை. விசாரித்தபோது சபை ஆரம்பித்தபோது இருந்த விசுவாசிகள் தற்போது இல்லை என்பதை அறிந்து கொண்டேன். சில வருடங்கள் மட்டும் சபையில் ஐக்கியப்பட்டிருந்து, பின்பு ஏதோவொரு காரணத்தினால் பிரிந்துபோகிற அனுபவம் அந்த சபையிலிருந்ததை நான் அறிந்து கொண்டேன்.

ஆதி திருச்சபை நாட்களில் சபை வளர்ச்சி…


அனுதினமும் சபையில் சேர்க்கப்பட்டார்கள் (அப் 2:47)

 • தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார். அப்போஸ்தலர் 2:47


3,000பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் (அப் 2:41)

 • அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அப்போஸ்தலர் 2:41


ஏறக்குறைய 5,000பேர் விசுவாசித்தார்கள் (அப் 4:4)

 • வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள். அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. அப்போஸ்தலர் 4:4


அதிகதிகமாய் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் (அப் 5:14)

 • திரளான புருஷர்களும் ஸ்திரிகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். அப்போஸ்தலர் 5:14

அநேக ஜனங்கள் கர்த்தரிடத்தில் திரும்பினார்கள் (அப் 11:21)

 • கர்தருடைய கரம் அவர்களோடே இருந்தது. அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். அப்போஸ்தலர் 11:21


திரளான ஜனங்கள் ஊழியரிடம் சேர்ந்துகொண்டனர் (அப் 17:4)

 • அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும், கனம் பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்து கொண்டார்கள். அப்போஸ்தலர் 17:4


அநேக ஜனங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் (அப் 11:24)

 • அவன் நல்லவனும், பரிசுத்தஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். அப்போஸ்தலர் 11:24


திரளான ஜனங்கள் சேர்ந்துகொண்டார்கள் (அப் 14:1)

 • இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள். அப்போஸ்தலர் 14:1


அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறார்கள் (அப் 21:20)

 • அதை அவர்கள் கேட்டுக் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் அவனை நோக்கி; சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள். அப்போஸ்தலர் 21:20

விசுவாசித்தவர்களில் அநேகர் (அப் 19:18)

 • விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். அப்போஸ்தலர் 19:18

அநேகர் விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப் 18:8)

 • ஜெபஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவைரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள். அப்போஸ்தலர் 18:8

ஊழியர்கள் சிந்தனைக்கு

உங்களுக்கு தேவனால் சொல்லப்படும் வார்த்தைகளையும், கொடுக்கப்படும் தரிசனத்தின் காலத்தையும் நேரத்தையும் நோக்கத்தையும் உன்னிப்பாய்க் கவனியுங்கள்.

ஊழியர்களுக்கு சில ஆலோசனைகள்

 • ஆராதிக்கும் சபை வளரும்
 • தேவனால் நடத்தப்படுகிற சபை வளரும்
 • காணாமற்போன ஆடுகளைத் தேடுகிற சபை வளரும்
 • மேய்ப்பன் மாதிரியாயிருக்கிற சபை வளரும்
 • மேய்ப்பன் தகப்பனாயிருக்கிற சபை வளரும்
 • ஊழியரின் மனைவி தாயாயிருக்கிற சபை வளரும்
 • ஒருவருக்கொருவர் தோள்கொடுக்கிற சபை வளரும்
 • ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்ட சபை வளரும்
 • தேவ சத்தம் கேட்கும் சபை வளரும்
 • தேவ சித்தம் செய்யும் சபை வளரும்
 • தேவ சமூகத்தில் காத்திருக்கும் சபை வளரும்
 • தேவனுக்கு கொடுக்கிற சபை வளரும்
 • மறுரூப பார்வையுடைய சபை வளரும்
 • சீஷர்களைக் கொண்ட சபை வளரும்
 • தேவ ஜனங்களை பயிற்றுவிக்கும் சபை வளரும்
 • தேவ ஜனங்களை பழக்குவிக்கும் சபை வளரும்
 • தேவ ஜனங்களை பயன்படுத்தும் சபை வளரும்
 • ஊழியம் செய்யும் சபை வளரும்
 • சுவிசேஷம் அறிவிக்கும் சபை வளரும்
 • ஒருமனதைக் காத்துக்கொள்ளும் சபை வளரும்
 • பரிசுத்த வாஞ்சையுள்ள சபை வளரும்
 • உலகத்திற்கு ஒத்துபோகாத சபை வளரும்
 • திறப்பில் நிற்கும் சபை வளரும்
 • மிஷனரிகளை தாங்கும் சபை வளரும்
 • சிறுமைப்பட்டவர்களை ஆதரிக்கும் சபை வளரும்
 • இணைந்து செயல்படும் சபை வளரும்
 • உபத்திரவங்களை சகிக்கும் சபை வளரும்
 • ஆவியானவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சபை வளரும்
 • சத்தியத்தை போதிக்கும் சபை வளரும்

ஊழியர்கள் சிந்தனைக்கு

ஊழியம் என்பது குறுகிய வட்டம் போட்டு வாழ்வதல்ல; நேரத்தைத் திட்டமிட்டு வாழ்வது. நாளை என்பது அலட்சியம்; ஊழியம் ஜெயமாக இருக்க நேரத்தைச் சரியாய்க் கையாள வேண்டியது அவசியம்.

வளரும் திருச்சபை Growing Church

Leave a Reply