சத்தியத்தின் இரகசியம்

சத்தியத்தின் இரகசியம் 

ஆதார வசனம் : யோவான் 8:32

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். 

யோவான் 8:32

இந்த வசனம் எந்த விடுதலை குறித்து பேசுகிறது?

 1. ஆத்துமாவின் விடுதல
 2. ஆவியின் விடுதலை
 3. சரீரத்தின் விடுதலை 

சத்தியத்தின் முக்கியத்துவம்:

யோவான் 18:37

அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான், சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன், சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.

இயேசு கிறிஸ்து சத்தியம் என்ன என்பதை இந்த உலகம் அறிய வேண்டும் என்பதற்காகவே பூமிக்கு வந்ததாக இந்த இடத்தில் குறிப்பிடுகிறார்.

1 தீமோத்தேயு 2:4

 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்

இந்த வசனத்தில் எல்லா மனிதரும் சத்தியத்தை அறிய வேண்டும் அதுதான் தேவனுடைய சித்தம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சில தகவல்கள்:

மத்தேயு 7:21

 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 

ஒரு மனிதன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க வேண்டும் என்றால் அவன் பிதாவின் சித்தத்தின்படி செயல்பட வேண்டும்.

பிதாவின் சித்தம் என்றால் என்ன?

1 தீமோத்தேயு 2:4

 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

ஒரு மனிதன் இரட்சிப்பும் சத்தியத்தை அறிகிற அறிவை பெறுவதுமே பிதாவின் சித்தம் ஆகும்.

இரட்சிப்பு என்றால் விடுதலை என்று பொருள். பாவத்திலிருந்து சாபத்திலிருந்து வியாதியில் இருந்து கட்டுகளிலிருந்து விடுதலை பெறுவது மட்டுமே இரட்சிப்பு அல்ல. இந்த உலகத்தைக் கடந்து தேவனுடைய ராஜ்யத்தில் பங்கு அடைவதுதான் உண்மையான இரட்சிப்பு. இதைத்தான் கீழே உள்ள வசனம் விளக்குகிறது.

மத்தேயு 24:13

 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். 

இந்த இரட்சிப்பு ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டுமென்றால் அவன் சத்தியத்தை அறிய வேண்டும்.

இந்த சத்தியத்தை அறியாமல் இருப்பவர்களை தான் இயேசு கீழ் உள்ள வசனங்களில் குறிப்பிடுகிறார்.

மத்தேயு 7:22

 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 

மத்தேயு 7:23

 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். 

சத்தியம் என்பது என்ன என்று கூட தெரியாமல் நாம் செய்யும் எந்த காரியமும் பிதாவின் சித்தத்தை அல்ல நம்முடைய சுய சித்தத்தை நிறைவேற்றுகிறதாகவே இருக்கும். சத்தியம் அறியாமல் எவ்வளவு பெரிய காரியங்களை நாம் செய்தாலும் அது தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது அல்ல. அப்படி நாம் செய்யும் எல்லா செயல்பாடுகளையும் தேவன் அறியேன் என்று சொல்லிவிடுகிறார். எனவே சத்தியத்தை அறிவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக வேதவசனங்கள் குறிப்பிடுகிறது.

வேதாகமத்தில் 21 தேவனுடைய சித்தத்தை குறித்து சொல்லப்பட்டுள்ளது இவைகளில் பிரதானமானது கீழே உள்ள சித்தம் ஆகும்.

 1 தீமோத்தேயு 2:4

 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

சத்தியம் என்றால் என்ன?

பரிசுத்த வேதாகமத்தையும் தேவனையும் தான் சத்தியம் என்கிறது பரிசுத்த வேதாகமம்.

குறிப்பு:-

எரேமியா 5:1

 நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டு பிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள், காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன். 

மனு குலத்தில் சத்தியத்தை தேடுகிறவன் இல்லை என்பதே தேவனுடைய அங்கலாய்ப்பு

எவைகளை வேதம் சத்தியம் என்று கூறுகிறது:-

வேதமே சத்தியம்

ஓசியா 8:12

 என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். 

சத்தியம் என்பது என்ன என்பதை நமக்கு விளக்கிக் காட்டுவது அல்லது வெளிப்படுத்திக் காட்டுவது பரிசுத்த வேதாகமம் மட்டுமே அதை நாம் அறிய தக்க விதத்தில் அறியாததால் பரிசுத்த வேதாகமத்தை அன்னிய காரியமாக எண்ணுகிறோம் அதற்கு கொடுக்க வேண்டிய கணத்தை கொடுக்க மறக்கிறோம்.

சத்தியம் என்பது யாரைக் (எதை) குறிக்கிறது

 1. பிதாவாகிய தேவனே சத்தியம்
 2. குமாரனாகிய இயேசுவே சத்தியம்
 3. பரிசுத்த ஆவியானவரே சத்தியம்
 4. எழுத்துக்களே சத்தியம் 
 5. தேவ வார்த்தையே சத்தியம்
 6. வேத வசனமே சத்தியம்
 7. பரிசுத்த வேதாகமம் முழுவதும் சத்தியம்

1. பிதாவாகிய தேவனே சத்தியம்

கீழே கொடுக்கப் படும் வசனங்கள் எல்லாம் பிதாவாகிய தேவனை குறிப்பதாக உள்ளது. எனவே இந்த வசனங்கள் பிதாவாகிய தேவனே சத்தியம் என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

ஏசாயா 65:16

 அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான், பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன்பேரில் ஆணையிடுவான், முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோயின. 

யோவான் 7:28

 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள், நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். 

யோவான் 8:26

 உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார். 

சங்கீதம் 86:15

 ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன். 

யாத்திராகமம் 34:6

 கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர். இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். 

2. குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே சத்தியம்

இயேசு கிறிஸ்துவே சத்தியம் என்பதற்கான ஆதாரம் வசனங்கள்

யோவான் 14:6

 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். 

1 யோவான் 5:20

 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார் 

வெளிப்படுத்தினத விசேஷம் 19:11

 பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன், இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர், அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். 

மத்தேயு 22:16

 தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம். 

3. பரிசுத்த ஆவியானவரே சத்தியம்

ஆதார வசனங்கள்

யோவான் 16:13

 சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். 

யோவான் 14:16

 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 

யோவான் 14:17

 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும்.இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது, அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். 

1 யோவான் 5:6

 இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறார். 

4. எழுத்துக்களே சத்தியம்

தானியேல் 10:21

 சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன். உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத் தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை. 

சத்திய எழுத்து என்றால் என்ன?

நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் அல்லது அண்டசராசரங்கள் தேவனால் படைக்கப்படுவதற்கு முன்பு தேவன் தன்னுடைய ஆதீனத்தில் தன்னுடைய சர்வம் ஞானத்தில் எவைகளையெல்லாம் யோசித்து சிந்தித்தாரோ அவைகளை செயல்படுத்துவதற்காக பரலோகத்தில் உள்ள சர்வ சேனையின் சங்கத்தில் உள்ள 24 மூப்பர்களும் ஒரு புத்தகத்தில் பதிவு செய்தனர் அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களே சத்திய எழுத்து என்று அழைக்கப்படுகிறது. இந்த சத்திய எழுத்துக்கள் உள்ள புத்தகத்தில் என்ன எழுதப்பட்டதோ அவைகளே இன்றைக்கு நாம் காண்கிற யாவும் நடந்தேறி வருகிறது. வானத்திலும் பூமியிலும் அண்ட சராசரங்களும் பரலோகத்திலும் என்ன நடக்க வேண்டும் என்ன நடக்கக் கூடாது என்பவைகள் எல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டவை. சத்திய எழுத்துக்கள் அடங்கிய புத்தகத்திற்கும் நம்முடைய கையில் உள்ள பரிசுத்த வேதாகமத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது இவைகள் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவைகள் ஆகும்.

காரணம் இவைகள் இரண்டையும் எழுதினது சத்தியம் உள்ள தேவன் ஆவார்.

2 தீமோத்தேயு 3:15

 கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். 

2 தீமோத்தேயு 3:16

 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, 

5. தேவனுடைய வார்த்தையே சத்தியம்

ஆதார வசனங்கள்

2 சாமுவேல் 7:28

 இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன். உம்முடைய வார்த்தைகள் சத்தியம். தேவரீர் உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம்பண்ணினீர். 

நீதிமொழிகள் 22:20

 சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை மறுமொழியாகச் சொல்லும்படிக்கும், 

6. வேத வசனமே சத்தியம்

ஆதார வசனங்கள்

சங்கீதம் 119:160

 உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். 

யோவான் 17:17

 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்: உம்முடைய வசனமே சத்தியம். 

7. பரிசுத்த வேதாகமம் முழுவதும் சத்தியம்

ஆதார வசனம்

சங்கீதம் 119:142

 உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம். 

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்பதன் பொருள் என்னவென்றால் தேவனையும் தேவனுடைய வார்த்தையையும் அறியுங்கள் அப்பொழுது விடுதலை பெறுவீர்கள் என்பதாகும். நாம் ஏற்கனவே பார்த்தபடி இந்த விடுதலை என்பது ஆவி ஆத்துமா சரீரம் ஆகிய மூன்றிற்க்கான விடுதலை ஆகும். இந்த விடுதலையை பெற்றவர்களுக்கே நித்திய ஜீவன் கொடுக்கப்படுகிறது.

பரிசுத்த வேதாகமம்

பரிசுத்த வேதாகமம் என்பது ஒரு மத புத்தகமுமோ அல்லது கிறிஸ்தவர்களின் வார்த்தைகள் அடங்கிய புத்தகமோ அல்ல.

அவை:

யோவான் 1:1

 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 

வார்த்தையே தேவன், தேவனே வார்த்தை இரண்டும் ஒன்றே.

தேவன் தம்மை மனிதர்களுக்கு வெளிப்படுத்த சித்தமான போதெல்லாம் வார்த்தையின் மூலமாகவே வெளிப்பட்டார்

சில உதாரணங்கள்

1 சாமுவேல் 3:21

 கர்த்தர் பின்னும் சீலோவிலே தரிசனம் தந்தருளினார். கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார் 

ஆதியாகமம் 3:9

 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். 

ஆதியாகமம் 3:10

 அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான். 

யாத்திராகமம் 3:4

 அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான். 

1 சாமுவேல் 3:4

 அப்பொழுது கர்த்தர் சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன் இதோ, இருக்கிறேன் என்று சொல்லி, 

தேவனும் வேதமும் ஒன்றே என்பதற்கு சில ஆதாரங்கள்

1.  சமாதானம்

தேவன் சமாதானத்தை தருகிறார்:

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.  யோவான் 14:27

வேதம் சமாதானத்தை தருகிறது:

 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு, அவர்களுக்கு இடறலில்லை.  சங்கீதம் 119:165

2.விடுதலை

வேதம் விடுதலை தருகிறது:

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.  யோவான் 8:32

தேவன் விடுதலை தருகிறார்:

ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.  யோவான் 8:36

3. பரிசுத்தம் (சுத்திகரிப்பு)

வேதம்:

 நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.  யோவான் 15:3

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்: உம்முடைய வசனமே சத்தியம்.  யோவான் 17:17

தேவன்:

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.  1 யோவான் 1:7

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.  1 யோவான் 1:9

4. மீட்பு, மன்னிப்பு

தேவன்:

 (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.  கொலோசெயர் 1:14

வேதம்:

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்: உம்முடைய வசனமே சத்தியம்.  யோவான் 17:17

5. அன்பு கூற வேண்டும்

தேவனிடம்:

இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக,  மத்தேயு 22:37

வேதத்தில்:

 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம். அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.  1 யோவான் 5:3

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.  சங்கீதம் 1:2

6. வெளிச்சம்

வேதம்:

 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.  சங்கீதம் 119:105

தேவன்:

 நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.  யோவான் 9:5

 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.  யோவான் 8:12

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, மத்தேயு 4:15

7. நன்மை

வேதம்:

 யாக்கோபு வம்சம் என்று பேர் பெற்றவர்களே, கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைதானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?  மீகா 2:7

தேவன்:

 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.  அப்போஸ்தலர் 10:38

8. கனி

வேதம்:

2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.  சங்கீதம் 1:2

அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.  சங்கீதம் 1:3

தேவன்:

நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.  யோவான் 15:5

9. ஜீவன்

வேதம்:

 அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன், ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.  யோவான் 12:50

தேவன்:

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.  யோவான் 14:6

முடிவுரை:

சத்தியம் என்றால் என்ன சத்தியம் என்பது யாரைக் குறிக்கிறது அல்லது எதை குறிக்கிறது என்பதை மேலே பார்த்தோம். இப்பொழுது கடைசியாக சத்தியத்தை எப்படி அறிவது என்பதை பார்க்கலாம்.

சத்தியத்தை அறிவது எப்படி?

சத்தியத்தை அறிந்துகொள்ள பரிசுத்த வேதாகமத்தில் தேடி வாசிக்க வேண்டும்.

சில உதாரணங்கள்:

 ஏசாயா 34:16

கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள், இவைகளில் ஒன்றும் குறையாது, இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது, அவருடைய வாய் இதைச் சொல்லிற்று, அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும். 

சங்கீதம் 1:2

 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 

யோவான் 5:39

 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. 

அப்போஸ்தலர் 17:11

 அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயி;ல் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். 

கடைசியாக:

 எஸ்றா 7:10

 கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். 

ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளைகளும் எஸ்றாவை போல இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம். 

எஸ்றா

 1. வேதத்தை ஆராய்ந்தான்
 2. அதன்படி செய்தான்
 3. பிறகு அதை உபதேசித்தான்

எஸ்றா

1. நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்:

எஸ்றா 7:6

 இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான். அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான். 

2. வேதத்தை படித்துத் தேறின வேதபாரகனாயிருந்தான்:

எஸ்றா 7:11

 கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும், படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, ராஜாவாகிய அர்தசஷ்டா கொடுத்த சன்னத்தின் நகலாவது: 

3. வேதத்தை போதிக்கிற உத்தம வேதபாரகனாயிருந்தான்:

எஸ்றா 7:12

 ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *