தெய்வீகத்தின் இரகசியங்கள் Secrets of Divinity

தெய்வீகத்தின் இரகசியங்கள்

தெய்வீகம் என்றால் என்ன?

தெய்வீகம் என்பது தேவனுடைய ஆள்த்துவம் (குணாதிசயம் , தன்மைகள் , செயல்பாடுகள் [ஆக்கல் , காத்தல் , அழித்தல் ]) ஆகும்.

தேவன் ஒருவரா மூவரா?

GOD – EL, ELOHIM 

EL – ஒருமை 

ELOHIM – பன்மை 

தெய்வீகத்தை தேவன் மட்டும் தான் வெளிப்படுத்த முடியும் என்று வேதம் சொல்கிறது. 

தேவன் ஒருவரே. இந்த சத்தியத்தை ஒரு மனிதனுக்கு தேவன் வெளிப்படுத்தினால் ஒழிய ஒரு மனிதனாலும் இதை விளங்கிக் கொள்ளவோ உணர்ந்து கொள்ளவோ அறிந்து கொள்ளவோ முடியாது.

லூக்கா 10:22

 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது, பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார். 

உதாரணம்: மத்தேயு 16:17

 • இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 

மாம்சம் இரத்தம் என்பது என்ன?

சுய அறிவு, சுய அறிவின் மூலம் தேவனுடைய தெய்வீகத்தை அறிந்து கொள்ள செய்யப்படும் முயற்சி

வசனங்கள் தெரிந்தால் கூட மனக்கண் திறக்கப்படாமல் தெய்வீகத்தின் ரகசியங்களை அறிய முடியாது.

பிதா யார் என்பதை குமாரன் மட்டுமே வெளிப்படுத்துகிறார்

 

 • யோவான் 17:25

நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன், நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். 

 

 • யோவான் 17:26

நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார். 

எப்பொழுது இதை அறிந்து கொள்ள முடியும்?

 

 • லூக்கா 24:45

அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: 

 1. ஒரு மனிதன் தெய்வீகத்தின் சத்தியத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால் அவனுடைய மனக்கண் திறக்கப்பட வேண்டும். 
 1. சீஷர்கள் வேதத்தை தெரிந்து வைத்திருந்தார்கள் ஆனால் அவர்களுடைய மன கண்களோ திறக்கப்படாமல் இருந்தது. வேதவாக்கியங்களை வெளிப்படுத்துகிறவர் பரிசுத்த ஆவியானவர். அவர் வெளிப்படுத்தும் வேத வாக்கியங்களின் ரகசியத்தை அறிந்துகொள்ள மனக் கண்கள் திறக்கப்பட வேண்டும்.
 1.  மனக் கண்கள் திறக்கப்பட்ட உடனே இயேசுவை அவர்கள் அறிந்து கொண்டார்கள்.

A. தேவன் ஒருவர் அவரின் தெய்வீக மூன்று

I. தேவன் ஒருவரே என்பதற்கான ஆதாரம் வசனங்கள்

 

 • உபாகமம் 6:4

இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். 

 

 • மாற்கு 12:29

இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். 

 

 • ஏசாயா 45:5

நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை. 

 

 • ஏசாயா 45:6

என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன், நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. 

 

 • ஏசாயா 44:6

நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே, என்னைத்தவிரத் தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். 

 

 • ஏசாயா 44:8

8 நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள், அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததும் இல்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள், என்னைத்தவிரத் தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே, ஒருவனையும் அறியேன். 

 

 • ஏசாயா 46:9

முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை. 

II. தெய்வீகம் மூன்று என்பதற்கான ஆதாரம் வசனங்கள்

 

 • 1 யோவான் 5:7

 (பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். 

இயேசுவுக்கு மூவரும் சாட்சி கொடுத்தனர்

 

 • யோவான் 8:17

இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. 

 

 • யோவான் 8:18

நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார். 

 

 • யோவான் 15:26

பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார். 

கூடுதலாக…

 

 • மத்தேயு 3:16

இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது, தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். 

 

 • மத்தேயு 3:17

அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. 

ஏன் தெய்வீகம் மூன்றாக வெளிப்படுத்தப்படுகிறது? 

தேவன் ஒருவரே என்றாலும் அவர் ஒருவராக இருந்து செயல்படுவதை விட மூவராக செயல்படுவதுதான் வேதத்தில் நாம் அனேக இடங்களில் காண்கிறோம் இதற்கான காரணங்களை கீழே காணலாம்.

நம்மிடத்தில் உள்ள பரிசுத்த வேதாகமம் தேவ ஆவியினால் அருளப்பட்டவை. இந்த வேதாகமத்தில் முழுவதுமாக அநேக சட்டங்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.

தெய்வீகத்தோடு தொடர்புடைய சட்டங்களை நாம் ஆராய்வதின் வழியாக தெய்வீகத்தை விளங்கிக் கொள்ளலாம் 

மூன்று சட்டங்கள்

சட்டம் ஒன்று: 

 • எந்த ஒரு காரியமும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளினால் உறுதிப்படுத்தப்படும். 

இந்த உலகம் முழுவதும் வானத்திலும் பூமியிலும் எந்த ஒரு காரியங்கள் நடந்தாலும் அதை உறுதி செய்வதற்கு மூன்று சாட்சிகள் அவசியம் மூன்று சாட்சிகள் இல்லாத எந்த ஒரு காரியமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது இந்த சட்டம் பரிசுத்த ஆவியானவர் மூலம் தேவன் எழுதி கொடுத்தவை.

உதாரணங்கள்

 

 • 2 கொரிந்தியர் 13:1

இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன். சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும். 

 

 • உபாகமம் 19:15

ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாந்தீர்க்கக்கூடாது, இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும். 

 

 • உபாகமம் 17:6

சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படவன், ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலைசெய்யப்படலாகாது. 

இந்த சட்டத்தை எழுதிய தேவன் தான் எழுதிய சட்டத்தை ஒருபோதும் மீறுவது இல்லை எனவே மனுக்குலத்தின் விடுதலைக்கு தாமே மனிதனாக பூமிக்கு வர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது தான் ஒரு தேவன் என்பதை மூன்று சாட்சிகள் மூலம் உறுதிபட வேண்டும் தேவனை ஒருவனும் ஒருக்காலும் அறிந்தது இல்லை ஆகவே தேவனை குறித்து மனிதன் அல்ல தேவனே சாட்சி கொடுக்க வேண்டியது இருக்கிறது இந்த சூழலில்தான் தேவன் தம்மை குறித்து மூன்று சாட்சிகள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் என்று மூவராக பிரிந்து காட்சி கொடுத்தார்.

இதே சட்டத்தின் படி தான் பூமியிலும் மனிதர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் கூடி தேவனை நோக்கி கூப்பிட்டால் அவர் அந்த இடத்திற்கு வருகிறார் அவர் வருவதும் அவர் எழுதிய சட்டத்தின்படி நடக்கவே நிறைவேற்றவே ஆகும்.

 

 • மத்தேயு 18:20, 16

ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.

 • மத்தேயு 18:16

அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. 

சட்டம் இரண்டு

 • இரட்சிப்பின் திட்டம் (இரத்தம் சிந்துதல்) குறித்த சட்டம்

எபிரேயர் 9:22

 நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. 

லேவியராகமம் 17:11

 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது, நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்,; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. 

நாம் மேலே வாசித்த வேத வசனங்கள் ஒரு மனிதனுடைய பாவமன்னிப்பு ரத்தம் சிந்துதல் அவசியம் என்கிற சட்டத்தை தேவன் எழுதிக் கொடுத்தார். பழைய ஏற்பாடு காலத்தில் அவனவன் செய்த பாவத்துக்கு தக்கதாக மிருகங்களை பலியிட கட்டளை கொடுத்தார். பலியின் நோக்கம் தான் செய்த பாவத்திற்காக எந்த பாவத்தையும் அறியாத ஒரு மிருகம் பலியிட படுகிறதே என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் வரவேண்டும் தான் தண்டிக்கப்பட வேண்டிய இடத்தில் தனக்கு பதிலாக ஒரு மிருகம் பலி இடப்படுகிறதே என்ற குற்ற உணர்வு அடைந்து அவன் மனம் திரும்ப வேண்டும் என்பதே ஆகும்.

ஆனால் காலப்போக்கில் மனிதர்கள் பலி செலுத்துவதை சடங்காக மாற்றி விட்டனர் பாவம் செய்தால் வலி இட்டால் போதுமானது பாவ நிவாரணம் கிடைத்துவிடும் என்று எண்ணி துணிகரமாக பாவம் செய்ய துவங்கினர் எனவே தேவன் என்ன நோக்கத்திற்காக மிருகங்களை பலியிட சொன்னாரோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை சடங்காக செய்யப்படும் அந்த பலியிலும் பாவ நிவர்த்தி பூரனப்படவில்லை. எனவேதான் தான் எழுதின சட்டத்தை நிறைவேற்ற மனிதர்களுக்கு பூரணமான பாவநிவர்த்தி உண்டாக தாமே ரத்தம் சிந்த தேவன் சித்தமானார். இந்த இரண்டாம் சட்டத்தின்படி மனிதர்களுக்கு பாவ நிவர்த்தி உண்டாக்க வேண்டும் என்றால் தேவன் மரிக்க வேண்டும்.

சட்டம் மூன்று

 • தேவன் சாவாமை உடையவர்

1 தீமோத்தேயு 6:16

 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். 

வெளிப்படுத்தினத விசேஷம் 1:4

 யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்குமுன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், 

மேலே உள்ள வசனங்கள் தேவன் எல்லா காலத்திலும் இருக்கிறவர் அதாவது மூன்று காலத்திலும் (இறந்த காலம், நிகழ், காலம் எதிர் காலம்). அவருக்கு மரணம் என்பது இல்லை அவர் சாவாமை உடையவர். என்பதை இந்த மூன்றாவது சட்டம் வலியுறுத்தி கூறுகிறது.

நாம் இப்பொழுது இரண்டாவது சட்டத்தையும் மூன்றாவது சட்டத்தையும் கவனித்துப் பார்த்தால் தேவன் இரண்டாவது சட்டத்தின்படி பாவமன்னிப்புக்காக ரத்தம் சிந்த மரிக்க வேண்டும். அதேவேளையில் மூன்றாவது சட்டத்தின்படி அவர் சாவாமை உடையவராகவும் இருக்க வேண்டும். இந்த இரண்டு சட்டங்களும் ஒரே நேரத்தில் நிகழ வேண்டும் அதாவது தேவன் மரிக்கவும் வேண்டும் அவர் மரிக்கும் சமயத்தில் அவர் மரிக்காமலும் இருக்கவும் வேண்டும். தேவன் எழுதின இந்த இரண்டு சட்டங்களை நிறைவேற்ற குமாரனாக பூமியில் இயேசு மரிக்க சித்தமானார் அதே சமயத்தில் பிதாவாக பரலோகத்தில் உயிரோடு இருக்கவும் சித்தமானார். எனவேதான் தேவன் ஒருவராக இருந்தாலும் தெய்வீகத்தில் மூவராக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 

பிதாவாக தெய்வம் பரலோகத்தில் உயிரோடு இருக்கிற அதே வேளையில் குமாரனாக தெய்வம் பூமியில் இரட்சிப்பின் திட்டத்தின் படி மரித்தார். 

இந்த படி உருவாக்கப்பட்ட இரட்சிப்பில் மனிதன் நிலை கொண்டு இருக்க பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டிருக்கிறார் அவரே சபையை வழிநடத்துகிறவர்.

இதற்காகவே தேவன் தெய்வீகத்தில் மூன்றாக செயல்படுகிறார். 

மூன்று தேவன் அல்ல. ஒருவரில் மூவராகவும் மூவரும் ஒருவராகவும் இருக்கிறார். 

தெய்வீகம் மூன்று என்பதற்கு சில கூடுதல் ஆதாரங்கள் 

ஆதி 1:26 

பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். 

ஆதி 3:22

பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான். இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றென்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, 

1 கொரிந்தியர் 12:4

 வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. 

1 கொரிந்தியர் 12:5

 ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. 

1 கொரிந்தியர் 12:6

 கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. 

சகரியா 3:2

 அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக. சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக. இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளியல்லவா என்றார். 

வெளி  4:8

 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

ஏசாயா 6:3

 ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். 

மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள் என்பதற்கான  ஆதார வசனங்கள்

யோவான் 10:30

 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். 

யோவான் 14:9

 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? 

யோவான் 14:10

 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். 

யோவான் 17:11

 நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள், நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். 

யோவான் 17:21

 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். 

யோவான் 17:23

 ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். 

 • பிதாவும் குமாரனும் தனித்தனி ஆழ்த்துவம் உள்ளவர்கள் என்றாலும் ஒன்றாகவே இருக்கிறார்கள். 
 • இந்த தெய்வீகத்தை அறிவது தான் நித்தியஜீவன். 

யோவான் 17:3

 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். 

 • பிதாவையும் குமாரனையும் அறிவது தான் நித்திய ஜீவன். 
 • அதை அரிய பண்ணுவது பரிசுத்த ஆவியானவர். 
 • பரிசுத்த ஆவியானவர் தான் போதித்து சகல சத்தியத்திற்குள்ளும் நடத்தி தெய்வீகத்தை அறிகிற அறிவை உண்டு  பண்ணுகிறார். 

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் தனித்தனியே ஆள்தத்துவம் உள்ளவர் 

 • ஆள்தத்துவம் என்றால் ஆவி ஆத்துமா சரீரம் ஆகிய இம்மூன்றும் இணைந்து செயல்படுதல் என்று பொருள்.
 • மூவருக்கும் தனித்தனி  ஆள்தத்துவம் உள்ளது இவைகளை புரிந்து கொள்ள அவர்களின் நாமங்களை ஆராய்ந்து அறிய வேண்டும்.

B. பிதா , குமாரன் , பரிசுத்த ஆவியானவரின் நாமங்கள்

தேவன் ஒருவரில் மூவரும், மூவரும் ஒருவராக இருந்தாலும் சில சமயங்களில் சில வேலைகளை செய்வதற்கு தனித்தனியாக செயல்படுகின்றனர் இந்த செயல்பாடுகளின் அடிப்படையில் அவர்களுக்கு சில காரணப் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. இந்தக் காரண பெயர்களை கவனித்துப் பார்த்தால் பிதாவுக்கு கொடுக்கப்பட்டது குமாரனுக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் பொருந்தாது, குமாரனுக்கு கொடுக்கப்பட்ட பெயர்கள் பிதாவுக்கும் பரிசுத்த ஆவியானவரும் பொருந்தாது, பரிசுத்த ஆவியானவருக்கு கொடுக்கப்பட்ட பெயர்கள் பிதாவுக்கும் குமாரனுக்கும் பொருந்தாது.

உதாரணங்கள்

பிதாவுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பெயர்கள

 

 • ஜீவனுள்ள பிதா – யோவான் 6:57

ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். 

 

 • சோதிகளின் பிதா – யாக்கோபு 1:17

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. 

 

 • நீதியுள்ள பிதா – யோவான் 17:25

நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன், நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். 

 

 • மத்தேயு 3:17

அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. 

குமாரனுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பெயர்கள்

 

 • தேவகுமாரன் – 1 யோவான் 4:15

இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். 

 

 • மனுஷ குமாரன் – லூக்கா 5:24

பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 

 

 • தாவீதின் குமாரன் – லூக்கா 18:37

நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள், அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். 

பரிசுத்த ஆவியானவருக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பெயர்கள்

 

 • பரிசுத்த ஆவியானவர் – லூக்கா 12:12

நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார். 

 

 • சத்திய ஆவியானவர் – யோவான் 14:16

நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 

 

 • யோவான் 16:13

சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார், அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். 

 

 • நித்திய ஆவியானவர் – எபிரேயர் 9:14

நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! 

 • இந்தப் பெயர்களின் வழியாக மூவருக்கும் தனித்தனியான ஆள் தத்துவம் உள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடியும் 

எ.கா. 

 • பிதா பரலோகத்தில் ஜீவனோடு இருந்த அதே நேரத்தில் குமாரன் பூமியில் மரித்தார். 
 • பரலோகத்தில் இருந்த பிதாவுக்கும் ஆள் தத்துவம் இருந்தது 
 • பூமியில் குமாரனுக்கும் ஆள் தத்துவம் இருந்தது. 
 • அப்படியே பரிசுத்த ஆவியானவருக்கும் ஆள் தத்துவம் உள்ளது. 

வேலைகள் பொறுப்புகள் 

 • தெய்வீகத்தில் மிக முக்கியமான வேலைகள் ஆக்கல் காத்தல் அழித்தல் 
 • இவற்றில் இவர்கள் இணைந்தும் தனித்தனியாகவும் நிறைவேற்றுகிறார்கள் 
 • அதிகாரம் ஆளுகை வல்லமை மூவருக்கும் சமம்
 • மூன்று விதங்களில் செயல்படுகின்ற பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் இவர்களுக்குள் அதிகாரம் ஆளுகை வல்லமை சமமாகவே இருக்கிறது. 

எ.கா.

 • பிதா – திட்டமிடுகிறவர் 
 • குமாரன் – செயல்படுத்துகிறவர் 
 • பரிசுத்த ஆவியானவர் – காக்கிறவர் (பாதுகாக்கிறவர்) 

இரட்சிப்பின் திட்டம் 

 • மனிதன் பாவம் செய்து தேவனை விட்டு பிரிந்து சென்ற போது அவனை மீண்டும் தேவனிடத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்காக இரட்சிப்பு என்கிற ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. அந்த திட்டம் ரத்தம் சிந்துதல் வழியாக செயல்படுத்த வேண்டும் என்றும் உருவாக்குகிறார் 
 • இந்தத் திட்டத்திற்கு இரட்சிப்பின் திட்டம் என்று பெயர்.

இந்தத் திட்டத்தில் மூவரும் இணைந்தும் தனித்தனியாகவும் செயலாற்றுகிறார்கள். 

 • திட்டத்தை உருவாக்கினவர் பிதா 
 • மாம்சத்தில் வெளிப்பட்டு ரத்தம் சிந்தி அந்த திட்டத்தை செயலாக்கத்திற்கு கொண்டு வந்தவர் குமாரன் 
 • குமாரனால் உண்டாக்கப்பட்ட அந்தத் திட்டத்தை இயேசுவின் இரண்டாம் வருகை வரை ஜனங்களுக்கு போதித்து கண்டித்து உணர்த்தி அதில் நிலை கொண்டு இருக்க வழிநடத்தி பாதுகாக்கிறவர் பரிசுத்த ஆவியானவர்.

உலகத்தில் உண்டாக்கப்பட்டிருக்கிற அத்தனை படைப்புகளிலும் இப்படி செயல்படுவதை பார்க்க முடியும். இதுதான் 

 • தெய்வீகம் இயங்கும் விதம் (இயங்குகிறார்)
 • தெய்வீகம் இயக்கும் விதம் (இயக்குகிறார்)
 • தெய்வீகம் முடிக்கும் விதம் (முடிக்கிறார்)

C. திரியேகத்தில் மூவரும் தேவன் மூவரும் கர்த்தர்

இயேசு தேவன் என்பதற்கான ஆதாரம் வசனங்கள்

 

 • மத்தேயு 1:23

அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். 

 

 • 1 யோவான் 5:20

அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார் 

 

 • தீத்து 2:13

நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. 

 

 • அப்போஸ்தலர் 20:28

ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். 

பரிசுத்த ஆவியானவர் தேவன் என்பதற்கான ஆதாரம் வசனங்கள்

 

 • அப்போஸ்தலர் 5:3

பேதுரு அவனை நோக்கி; அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? 

 

 • அப்போஸ்தலர் 5:4

அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பு அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான். 

 

 • 2 தீமோத்தேயு 3:16

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, 

பிதா தேவன் என்பதற்கான ஆதாரம் வசனங்கள்

 

 • 1 கொரிந்தியர் 8:6

பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு. அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 

கலாத்தியர் 1:1

 •  மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும், 

இயேசு கர்த்தர் என்பதற்கான ஆதாரம் வசனங்கள்

 

 • லூக்கா 2:11

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். 

 

 • பிலிப்பியர் 2:11

பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். 

 

 • மத்தேயு 28:6

அவர் இங்கே இல்லை, தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். 

பரிசுத்த ஆவியானவர் கர்த்தர் என்பதற்கான ஆதாரம் வசனங்கள்

 

 • 2 கொரிந்தியர் 3:17

கர்த்தரே ஆவியானவர். கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. 

 

 • 2 கொரிந்தியர் 3:18

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். 

பிதா கர்த்தர் என்பதற்கான ஆதாரம் வசனங்கள்

 

 • அப்போஸ்தலர் 3:22

மோசே பிதாக்களை நோக்கி; உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார். அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. 

 

 • சங்கீதம் 2:7

தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன், கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன், 

மூவரும் ஆளுகை அதிகாரம் வல்லமை ஆகியவற்றில் சமமாக இருக்கின்றனர் மூவரும் தேவனாக இருக்கின்றனர் மூவரும் கர்த்தராக இருக்கின்றனர் என்றாலும் தேவனுடைய திட்டத்தை பூமியில் செயல்படுத்துவதற்கு பிதாவின் சித்தத்தை மாத்திரமே செயல்படுத்துகின்றனர். தேவனுடைய தூதர்களுக்கும் இதே சட்டம் பொருந்தும் அவர்கள் பூமியில் என்ன காரியம் செய்வதாக இருந்தாலும் அது பிதாவின் சித்தத்தின்படி செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *