மனுஷிகத்தின் இரகசியம் : II. ஆவி

ஆவி

மனுஷிகத்தின் இரகசியம் : II. ஆவி

மனுஷனுடைய ஆவி குறித்து இன்று ஆராயுவோம்

  • …. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. 1தெசலோனிக்கேயர் 5:23

ஆவியின் தன்மைகள்

மனுஷனுடைய ஆவியில் பணிவு இருக்க வேண்டும்

  1. …. நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன். ஏசாயா 57:15
  2. மனிதனுடைய ஆவியில் நொறுங்குண்ட தன்மை இருக்க வேண்டும்.
  • …. சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். ஏசாயா 66:2

நொறுங்குண்ட தன்மை என்றால் என்ன?

  • நொறுங்குண்ட தன்மை என்பதற்கு தாழ்மையாய் இருக்க வேண்டும் என்று பொருள்.

தாழ்மை என்றால் என்ன?

  • மேட்டின்மை, பெருமை, கர்வம் இல்லாமல் இருப்பதையே தாழ்மை என்கிறோம்.
  1. மனுஷனுடைய ஆவியில் எளிமை இருக்க வேண்டும்.
  • … ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், …. மத்தேயு 5:3

ஆவி என்றால் என்ன?

மனுஷனுடைய ஆவியை வேதத்தில் ஜீவன், உயிர், மூச்சு , சுவாசம், பிராணன், காற்று போன்ற வார்த்தைகளில் ஆவியை குறிப்பிடுகின்றது ஆவி வார்த்தையாகும் சொல்லப்பட்டுள்ளது.
நாம் முந்தைய பாடத்தில் மனிதன் மூன்று கூறுகளால் படைக்கப்பட்டான் என்று பார்த்தோம் அதாவது நீர், மண், காற்று. இதில் நீர் என்பது ஆத்துமாவையும் மண் என்பது சரீரத்தையும் காற்று என்பது ஆவியையும் குறிப்பதாக உள்ளது.

சில உதாரணங்கள்:

ஜீவ சுவாசம் என்பது தேவனுடைய மூச்சு காற்று

  • தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7

உயிர் என்பது சர்வ வல்லவரின் சுவாசம்

  • ….. சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது. யோபு 33:4

காற்று என்பது பிராணன்

  • …. என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், …. யோபு 7:7

ஆவி என்பது சர்வ வல்லவரின் சுவாசம்

  • …. மனுஷரில் ஒரு ஆவியுண்டு. சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும். யோபு 32:8

சுவாசம் என்பது ஆவி

  • … அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார். யோபு 34:14
  • என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும், யோபு 27:2
  • …. நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை …ஏசாயா 2:22
  • ….. ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான ….ஏசாயா 42:5

யார் யாருக்கு ஆவி இருக்கிறது

எல்லோருக்கும் இருக்கிறது

  • …. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், …. அப்போஸ்தலர் 17:25

இயேசு கிறிஸ்துவுக்கு ஆவி இருந்தது

  • …. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் ….. லூக்கா 23:46
  • ….. இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். மத்தேயு 27:50
  • … அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: ….மாற்கு 8:12

ஆவி வார்த்தையாக எப்படி மாறுகிறது?

வசனம் ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கிறது

  • ….. வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. யோவான் 6:63

காற்றானது தொண்டைப் பகுதியில் ஏற்படும் அதிர்வுகளின் மூலம் வாயின் உதவியுடன் (பல், நாக்கு) வார்த்தை வெளிப்படுகிறது .
வார்த்தை எப்படி உண்டாகிறது என்பதை யோபு (யோபு 37:1-5) விளக்கமாக கூறியுள்ளார்.

ஆவி தீபமாக இருக்கிறது

  • மனுஷருடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது: நீதிமொழிகள் 20:27
  • உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105

தீபம் என்பது வார்த்தையை குறிக்கிறது.

குளிர் பிரதேசத்தில் வாழும் மனிதனுக்கும் வெயில் பிரதேசத்தில் வாழும் மனிதனுக்கும் உடலிலுள்ள வெப்ப அளவு ஒரே சீராக இருக்கும் அதாவது 98.4 டிகிரி செல்சியஸ். வாழும் இடங்களின் சூழல் வெவ்வேறாக இருந்தாலும் உடலின் வெப்ப அளவு ஒரே சீராக இருப்பதற்கு காரணம் தேவனுடைய ஆவி அவர்களுக்குள் இருப்பதே ஆகும்.

காற்று ஏன் சூடாக உள்ளது?

தேவன் அக்கினிமயமானவர் எனவே அவரின் சுவாசமும் (ஆவியும்) அக்கினியாகவே இருக்கும்.

  • அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன், அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன். எசேக்கியேல் 1:27

கர்த்தரின் சுவாசம் கந்தக தீயை போன்றது

  • …. கர்த்தரின் சுவாசம் கெந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும். ஏசாயா 30:33

கர்த்தருடைய வார்த்தை அக்கினியாக உள்ளது

  • ….. இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், …எரேமியா 5:14
  • …. அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது, …..எரேமியா 20:9
  • …. என் வார்த்தை அக்கினியைப்போலும், ….எரேமியா 23:29

இயேசு கிறிஸ்து வார்த்தையாகவும் ஒளியாகவும் இருக்கிறார்

  • ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1:1
  • அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. யோவான் 1:4
  • உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:9

ஆவி வார்த்தையாக மாறி செயல்படுகிறது எனவே வார்த்தையில் அதிக கவனம் தேவை.

  • … நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; ..யாக்கோபு 3:6
  • … நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது. அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. யாக்கோபு 3:8
  • …. சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது: தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். நீதிமொழிகள் 10:19
  • …. மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் ..மத்தேயு 12:36
  • … ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய், அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார். மத்தேயு 12:37

தேவனுடைய ஆவி
தேவ வார்த்தை

மனுஷனுடைய ஆவி
மனுஷ வார்த்தை

பிசாசின் ஆவி
பிசாசின் வார்த்தை

ஆவி வார்த்தையாகவும், வார்த்தை ஆவியாகவும் மாறி செயல்படும்.

  • ….. அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

1 பேதுரு 3:18

  • … அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.

1 பேதுரு 3:19

  • … வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது. என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.

யோபு 32:18

  • … இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன், என் ஆவி ஆராய்ச்சிசெய்தது. சங்கீதம் 77:6

தேவனுக்கு ஆவி ஆத்துமா சரீரம் இருக்கிறது அதுபோலவே பரிசுத்த ஆவியானவரும் உள்ளது எனவேதான் பரிசுத்த ஆவியை பரிசுத்த ஆவியானவர் என்று கூறுகிறோம். மனுஷனுக்கும் அப்படியே இருப்பதால் அவனை ஆவிக்குரியவன் என்று கூறுகிறோம்.

ஆவியின் செயல்பாடுகள்

ஆவி ஒரு மனுஷனுடைய ஆவி அல்லது ஆத்துமாவைக் குறிக்கும் பொதுவான வார்த்தை ஆகும். இதை பிராணன் என்றும் கூறலாம். “பிராணன் போய்” (ஆதி 25:8; யோபு 3:11; எரே 15.9) என்னும் வாக்கியம் மரித்துப் போவதைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியானவருக்கும் ஆவி என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது (யோவா 7:39).

வேதாகமத்தில் ஆவி என்னும் வார்த்தை மூன்று விதமான பொருளில்

பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவற்றின் விவரம் வருமாறு :

1. மனுஷருடைய பொதுவான ஆவி (மத் 5:3; ரோம 8:16; எபி 4:2).

இயேசுகிறிஸ்து தம்முடைய ஆவியை மனுஷருடைய பாஷையில் குறிப்பிட்டிருக்கிறார் (மாற் 2:8; யோவா 11:33). அப்போஸ்தலர் பவுலும் இதே பொருளில் ஆவியைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் (அப் 17:16; 2கொரி 243; கலா 6:18; 2தீமோ 4:22).

2. அசுத்த ஆவிகளையும் நல்ல ஆவிகளையும் குறிக்கும் வார்த்தை.

நல்ல ஆவி என்பது தேவதூதரை குறிக்கும் (சங் 104:4). அசுத்த ஆவிகள் என்பது பிசாசுகளை குறிக்கும் (மாற் 9:25; அப் 1912-17; வெளி 18:2).

3. தேவனுடைய ஆவியானவராகிய பரிசுத்த ஆவியானவரை குறிக்கும் வார்த்தை.

கர்த்தருடைய ஆவியானவர் சிம்சோன் மூலமாக கிரியை நடப்பித்தார். அவன் தன் கைகளினால் ஒரு சிங்கத்தை கொன்றுபோட்டான் (நியா 14:5-6).

தேவனுடைய ஆவியானவர் பெசலெயேலுக்கு ஆசரிப்புக்கூடாரத்தை கட்டும் ஞானத்தை கொடுத்தார் (யாத் 31:3).

கர்த்தருடைய ஆவியானவர் இஸ்ரவேல் தேசத்தை வழிநடத்துவதற்கு நியாயாதிபதிகளுக்கு ஆற்றலை கொடுத்தார் (நியா 310; 11:29).

தீர்க்கதரிசிகளுக்கு தீர்க்கதரிசன செய்திகளை ஆவியானவர் வெளிப்படுத்தினார் (எண் 24:2; எசே 1:5),
புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய ஜனங்களுக்கு மத்தியில் அசைவாடி அவர்கள் மூலமாக கிரியை நடப்பிக்கிறார். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களை ஆவியானவர் நிறைவேற்றுகிறார் (அப் 1:16; 216-21; 318; 28:25-27).

தேவனுடைய சித்தத்தை பூமியில் நிறைவேற்றுவதற்கு ஆவியானவர் தம்முடைய ஊழியக்காரர்களை ஏவி வழிநடத்துகிறார் (அப் 2:4; 19.6). பரிசுத்த ஆவியானவர் தம்முடைய பிள்ளைகளை அபிஷேகிக்கிறார் (அப் 10:44-48). பரிசுத்தப்படுத்துகிறார் (2கொரி 3:18; 2தெச 213) ஊழியப்பாதையில் வழிநடத்துகிறார் (அப் 10.19-20; 16.6-7).
பரிசுத்த ஆவியானவர் இயேசுகிறிஸ்துவின் ஆவியானவர் ஆவார் (2கொரி 3:17),

“ஆவி” என்னும் சொல்லின் பல்வேறு விதமான பயன்பாடுகள்

1. கர்த்தருடைய ஆவி

  • சங் 139:7;
  • சங் 14310;
  • ஏசா 301;
  • ஏசா 40:13

2. பரிசுத்த ஆவி

  • ஆதி 1:2;
  • ஏசா 48:16;
  • ஏசா எ:1;
  • சக 12:10

3. தூதர்கள் சங் 104:4

4. கேரூபீன்கள்

  • எசே 1:12-21;
  • எசே 10:17

5. பிசாசுகள்

  • லேவி 19:31;
  • லேவி 20.6)

6. வேறே ஆவிகள் சக 6:5)

7. தேவனுடைய பிள்ளையின் புதிய சுபாவம் 1கொரி 6:17

8. மாம்சமான யாவருடைய ஆவி

  • எண் 16:22;
  • எண் 27:16;
  • நீதி 1814;
  • நீதி 20:27;
  • நீதி 25:28;
  • பிர 3:21

9. தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வியாக்கியானங்கள்:

  • (1) காற்று (யாத் 15:8; 2இராஜா 19:7; ஏசா 37:7)
  • (2) சுவாசம் (ஆதி 617; ஆதி 7:15,22; 2சாமு 22:16; சங் 18.15)
  • (3) ஆவி (ஏசா 4:4; ஏசா 28.6; ஏசா 34:16)

10. ஆவிக்குரியவர்கள்

  • ஆதி 41:38;
  • எண் 11:17,25-29;
  • எண் 24:2;
  • ஏசா 3215;
  • ஏசா 421;
  • யாத் 28:3;
  • யாத் 31:3;
  • யாத் 35:31;
  • எண் 27:8;
  • உபா 349;
  • ஏசா 11:2;
  • எசே 2:2;
  • எசே 3:24

11. உயிர்ப்பிக்கிற ஆவி 1கொரி 15:45

12. காற்று எசே 379

13. மனம்

  • ஆதி 26:35;
  • நீதி 29:11;
  • எசே 11:5;
  • எசே 20:32;
  • தானி 5:20)

14. தைரியம் யோசு 2:11

15. கோபம் நியா 8:3

16. மனுஷன்

  • சங் 77:3,6;
  • சங் 106:33;
  • எசே 21:7;
  • தானி 243;
  • மல் 21516

17. தட்பவெப்பம் (ஆதி 3:8)

18. புசல்காற்று (எசே 1:4)

19.பெருங்காற்று (சங் 55:8)

20. காற்று (யோபு 41.16)

21. கடுங்கோடை (சங் 11:6)

22.திசை (1நாளா 9:24)

மனுஷனுடைய ஆவியின் சுபாவங்கள்

  • 1. கலக்கம் கொண்டிருத்தல் (ஆதி 4:8)
  • 2. உயிர்த்தெழுதல் (ஆதி 45:27)
  • 3. மனமடிவு (யாத் 6.9)
  • 4. உற்சாகப்படுத்துதல் (யாத் 35:21)
  • 5.எரிச்சல் (எண் 514,30)
  • 6. கடினம்
  • 7. மனக்கிலேசம் (சொமு 1:5)
  • 8.ஏவுதல் (2நாளா 36:22)
  • 9. தேவனுக்கு ஒப்புக்கொடுத்தல் (சங் 31:5)
  • 10. கபடமில்லாதிருத்தல் (சங் 32:2)
  • 11. நருங்குண்டது (சங் 34:18)
  • 12. நொறுங்குண்டது (சங் 51:17)
  • 13. தொய்ந்து போதல் (சங் 77:3)
  • 14. நிலைத்திருத்தல் (சங் 78:8)
  • 15. விசனப்படுத்துதல் (சங் 106:33)
  • 16. முன்கோபித்தல் (நீதி 14:29)
  • 17. அகந்தை (நீதி 16:18)
  • 18. தாழ்மை (நீதி 16:19)
  • 19. ஆளுகை செய்தல் (நீதி 16:32)
  • 20. முறிந்த (ஆவி) (நீதி 18:14)
  • 21. சஞ்சலம் (பிர 1:14)
  • 22. பொறுமை (பிர 7:8)
  • 23.நெருக்குதல் (யோபு 32:18)
  • 24. ஆராய்ச்சி செய்தல் (சங் 77.:6)
  • 25. இரகசியத்தைக் காப்பாற்றுதல் (நீதி 11.13)
  • 26.வழுவிப்போதல் (ஏசா 29:24)
  • 27. பெருமை (பிர 7:8)
  • 28. ஒடுங்கின ஆவி (ஏசா 6எ:3)
  • 29. உணர்வுள்ளது (யோபு 20:3; யோபு 32:8)
  • 30. தேவனுக்குரியதை அறிதல் (1கொரி 2:11)

பலவிதமான ஆவிகள்

  • 1. அசுத்தஆவி
  • 2.அடிமைத்தனத்தின் ஆவி
  • 3. அந்திக் கிறிஸ்துவினுடைய ஆவி
  • 4. அமைதலுள்ள ஆவி
  • 5. அறிவையும் கர்ததருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவி
  • 6. அதிகாரப் பிரபுவாகிய ஆவி
  • 7. ஆ லோசனையையும் பெலனையும் அருளும் ஆவி
  • 8.ஆவி
  • 9. ஏவுகிற ஆவி
  • 10. ஒடுங்கின ஆவி
  • 11. நருங்குண்ட ஆவி
  • 12. கர்த்தருடைய ஆவி
  • 13. கனநித்திரையின் ஆவி
  • 14. காவலிலுள்ள ஆவிகள்
  • 15. கிருபையின் ஆவி
  • 16. கிறிஸ்துவின் ஆவி
  • 17. குமாரனுடைய ஆவி
  • 18. சத்திய ஆவி
  • 19. சாந்தமுள்ள ஆவி
  • 20. சுட்டெரிப்பின் ஆவி
  • 21. ஞானத்தின் ஆவி
  • 22. ஞானத்தையும் உணர்வையும்
  • அருளும் ஆவி
  • 23. தலைவனுடைய ஆவி
  • 24. தாறுமாறுகளின் ஆவி
  • 25. தேவஆவி
  • 26. தேவர்களின் ஆவி
  • 27. தேவனால் விடப்பட்ட ஆவி
  • 28. தேவனிலிருந்து புறப்படுகிற ஆவி
  • 29. நல்ல ஆவி
  • 30. நித்திய ஆவி
  • 31. நியாயத்தின் ஆவி
  • 32. பணிந்த ஆவி
  • 33.பணிவிடை ஆவிகள்
  • 34. பணிந்தவர்களின் ஆவி
  • 35. பயமுள்ள ஆவி
  • 36. பரிசுத்த ஆவி
  • 37. பரிசுத்தமுள்ள ஆவி
  • 38.பலவீனப்படுத்தும் ஆவி
  • 39. பிசாசுகளின் ஆவி
  • 40. பிரபுக்களின் ஆவி
  • 41. புதிய ஆவி
  • 42. புத்தியுள்ள ஆவி
  • 43. புத்திர சுவிகாரத்தின் ஆவி
  • 44. பொய்யின் ஆவி
  • 45. பொல்லாத ஆவி
  • 46. மனுஷரின் ஆவி
  • 47. மிருகங்களுடைய ஆவி
  • 48. முறிந்த ஆவி
  • 49. யாக்கோபின் ஆவி
  • 50.விசேஷித்த ஆவி
  • 51. வேசித்தன ஆவி
  • 52. வேறே ஆவி
  • 53. ஜீவனுடைய ஆவி

மனுஷனுடைய ஆவி குறித்து உங்கள் கருத்துக்களை கமான்ட் டில் குறிப்பிடுங்கள்

மனுஷிகத்தின் இரகசியம் – ஆத்துமா

முறையான இறையியல் 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *