அடக்க ஆராதனை Burial Service

அடக்க ஆராதனை

அடக்க ஆராதனை Burial Service

 ஆராதனை ஆயத்தம்:

அடக்க ஆராதனை – சடலம் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கு இருபக்கமும் இறந்தவரின் நெருங்கிய குடும்ப அங்கத்தினரை உட்காரச் செய்யலாம்.

வீட்டில் ஆரம்ப ஜெபம்:

அடக்க ஆராதனையின் போது துக்கத்தோடுள்ள குடும்ப மக்களுக்கும் வந்திருக்கும் அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும்படியான வார்த்தைகளை பயன்படுத்தி மன உருக்கத்துடன் ஜெபிக்க வேண்டும்.

பாடல்:

மரணம் உயிர்த்தெழுதலைக்குறித்த பாடல் ஒன்று பாடலாம்.

வேத பகுதிகள்:

சந்தர்ப்பத்திற்கேற்றவாறு கீழ்க்காணும் வேத பகுதிகளில் ஒன்றை வாசிக்கலாம்.

 • யோபு 19:25-27
 • யோ.14:1-6
 • தானி.12:2,3
 • யோ.5:19-29
 • ரோமர் 8:18-24
 • 1கொரி.15:12-26 2 கொரி.5:1-10.
 • பிலி.3:10-15
 • வெளி.21:3,4.
 • ரோமர் 14:7-9
 • 1 கொரி. 15:35-49
 • 1 தெச.4.13-18
 • வெளி.14:13-18

மரித்தவர் குழந்தையாக இருந்தால்:

 • மத்.18:1-5, 10-14;
 • மாற்கு
 • 2 சாமு.12:18-23: 9:36,37; 10:13-16.

வாலிபனாக இருந்தால்:

 • மத்.9:18,19; 23:26;
 • மாற்கு 5:22-24; 35-42,

முதியவராக இருந்தால்:

 • யோபு 5:17-26;
 • சங்.39:4-13; 90:1-10;
 • பிர.12:1-7: 2 தீமோ.4:6-8.

சாட்சி நேரம்:

குடும்ப அங்கத்தினர், அவருடன் நெருங்கி பழகிய நண்பர்கள். சபை போதகர், மரித்தவரிடம் கண்ட நல்ல காரியங்களை சாட்சியாக பகிர்ந்து கொள்ளலாம்.

அனுதாப செய்திகளை வாசித்தல்:

தங்கள் அனுதாபத்தை தெரிவித்து வந்துள்ள தந்திகளை, கடிதங்களை அதற்கென்று ஏற்படுத்தப்பட்ட நபர் வாசிக்கலாம்.

தேவ செய்தி:

போதகரோ, அல்லது போதகர் கேட்டுக்கொண்ட ஒருவரோ மரணம், உயிர்த்தெழுதல், கிறிஸ்தவ நம்பிக்கையைக் குறித்த ஆறுதல் செய்தியை சுருக்கமாக கொடுக்கலாம். கூடி வந்துள்ளவர்கள் தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை விளங்கிக் கொள்ளக்கூடிய அளவில் ஓர் நற்செய்தியாகவும் அது அமைய வேண்டும்.

ஜெபம்:

யோவான் 14:1-6 வசனங்களை வாசித்து முடிவான ஜெபம் செய்யலாம்.
பின்பு வந்திருக்கும் நண்பர்கள், யாவரும் உடலுக்கு இறுதி மரியாதை செய்யும் வண்ணமாக வரிசையாக வந்து பார்த்துப்போக ஒழுங்கு செய்ய வேண்டும்.
கடைசியாக குடும்ப அங்கத்தினர் இறுதி மரியாதை செய்வார்கள். பின்பு கல்லறைக்கு உடல் எடுத்து செல்லப்படும்.

கல்லறையில்…

சடலத்தை கல்லறைக்கு கொண்டு சென்றபின் பெட்டியை குழிக்கு அருகில் வைக்கவும்.

பாடல்:

ஒரு பாடல் பாடலாம்.

வேத பகுதி:

கீழ்க்காணும் வேத பகுதிகளுள் ஒன்றை வாசிக்க லாம்.

 • 1 கொரி.15:50-58; 15:35-44;
 • 1 தெச.4:13-18

சரீரத்தை கல்லறைக்குள் இறக்கியபின் ஒப்புக்கொடுத்து போதகர் கூறவேண்டியது:

மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது. வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று. அது இருந்த இடமும் இனி அதை அறியாது (சங்.103: 15,16).
நமது அருமை சகோதரன் ____________ (பெயர்) இங்கே இல்லை. இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசில் இருப்பாய் என்று வாக்குப்பண்ணின கர்த்தருடைய பரிசுத்த சமூகத்திற்குப் போய்விட்டார். இவர் இந்த உலகத்தில் வாழ்வதற்காக கர்த்தர் கொடுத்த கூடாரமாகிய சரீரத்தைத் தான் இங்கு பார்க்கிறோம்.
மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட சரீரம் மண்ணுக்குத் திரும்புகிறது. கர்த்தர் தந்த ஆவி கர்த்தரிடம் சென்றுவிட்டது. சர்வ வல்லமையுள்ள தேவன் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்தத்தக்க தம்முடைய
வல்லமையான செயலின்படியே நம்முடய அற்பமான சரீரத்தை தம்முடைய மகிமையான சரீரத்துக்கொப்பாக மறுரூபப்படுத்துவார்.

குழியில்போட மண்வெட்டியால் மண்ணை எடுத்து போதகர்:

“இயேசுகிறிஸ்துவின் வருகையிலே இந்த சரீரம் உயிர்த்தெழுந்து நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும் என்று உறுதியாய் நம்பி இவருடைய சரீரத்தை மண்ணுக்கு மண்ணாகவும், சாம்பலுக்கு சாம்பலாகவும், புழுதிக்குப் புழுதியாகவும் ஒப்புக்கொடுக்கிறோம்” என்று கூறி போடவும்.
பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்….. என்று ஆவியானவர் திருவுளம்பற்றுகிறார் (வெளி.14:13).

இறுதி ஜெபம்:

அறிவிப்பு:

துக்க நிவிர்த்திக் கூட்ட நாளையும், நேரத்தையும் அறிவிக்க வேண்டும்.

அடக்க ஆராதனை மாதிரி பிரசங்கம்

அடக்க ஆராதனை பிரசங்கம் 1

வேத பகுதி : 1 தெச.4:13-18

பொருள் : மரணம் நித்திரை போன்றது.

தலைப்பு : மரித்தவர்களுக்காக துக்கப்பட வேண்டாம்.

 • உலக மக்களுக்கு மறுமையைப் பற்றிய நம்பிக் கை இல்லை.
 • இவ்வுலக வாழ்விற்குப்பின் நித்திய வாழ்வு உண்டு என்று இயேசு சொன்னார் மத்.24:46).
  • பாவிகள் நரகத்திற்கும், பரிசுத்தவான்கள் பரலோகத்திற்கும் போகிறார்கள்.
 • மரித்த பரிசுத்தவான்களுக்காக துக்கப்பட வேண்டாம்.
  • அவர்கள் வியாதி, துன்பம் வேதனையற்ற பரலோகத்திற்கு போய்விட்டார்கள்.
 • தேவ பிள்ளைகளுக்கு மரணம் ஓர் தூக்கத்தைப் போன்றதுதான்.
 • இயேசுவின் வருகையில் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது உயிர்த்தெழுவார்கள் (1 கொரி. 15:51,52).
 • பின்பு உயிரோடிருக்கும் பரிசுத்தவான்களும் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்
 • நித்திய நித்தியமாய் இயேசுவுடன் இருப்போம்.

அடக்க ஆராதனை பிரசங்கம் 2

வேத பகுதி : வெளி.14:13

பொருள் : கிறிஸ்துவுக்குள் மரிப்பது பாக்கியமானது

தலைப்பு : மரித்த பரிசுத்தவான்கள் இயேசுவுடன் இருக்கிறார்கள்.

 • உலகில் நீண்டநாள் வாழ்வது பாக்கியம் என சிலர் எண்ணலாம்.
 • இந்த உலகம் பாடுகளும், வேதனைகளும், வியாதிகளும், சகல தீமைகளும் நிறைந்தது. எவ்வளவு சொத்து சேர்த்து வைத்தாலும் மரிக்கும் போது ஒன்றும் கூடவராது.
 • நிர்வாணமாய் வந்தோம் – நிர்வாணமாய்போவோம்.
 • கிறிஸ்துவுக்குள் மரிக்கின்றவர்கள் பாக்கியவான்கள்.
 • அவர்களுக்கு பாடுகள், துன்பங்கள். வியாதிகள் இனி இல்லை. அருமையான பரலோகத்தில் அவர்கள் இளைப்பாறுகிறார்கள்.
 • அவர்களுடைய நற்கிரியைகளுக்கு பரலோகில் பலன் கொடுக்கப்படும் (மத்.25:34-40)

எதற்கெல்லாம் பலன்?

 • பசித்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்கள்,
 • தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தார்கள்.
 • அந்நியரை உபசரித்தார்கள்,
 • ஆடையில்லாதவர்களுக்கு ஆடை கொடுத்தார்கள்,
 • வியாதிஸ்தரை சந்தித்து ஆறுதல் கூறிவந்தார்கள்.
 • சிறைப்பட்டவர்களை சென்று விசாரித்தார்கள்.

அடக்க ஆராதனை பிரசங்கம் 3

வேத பகுதி : வெளி.20:12-15

பொருள் : மரணத்திற்குப் பின் ஓர் நித்திய வாழ்வு உண்டு.

தலைப்பு : ஜீவ புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்கள்.

 1. உலக வாழ்க்கை குறுகியது.
 2. மரித்தோர் அனைவரும் தேவனுக்கு முன் நின்று கணக்கு கொடுப்பார்கள் (வச.12). (சாதாரண மக்கள், தலைவர்கள், உயர்அதிகாரிகள் அனைவரும்)
 3. இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் பெயர் ஜீவ புத்தகத்திலே எழுதப்படும் (வச.12,15). இதில் பெயரெழுதப்பட்டவர்கள் மட்டும் பரலோகம் செல்வார்கள்.
 4. நாம் செய்த கிரியைகள் யாவும் எழுதப்பட்ட புத்தகங்கள் உண்டு (வச.12). அந்தந்த கிரியைகளுக்கேற்ற பலன் அடை வார்கள்.

Leave a Reply