விசுவாசிகளின் ஞானஸ்நானம் Believers Water Baptism
ஞானஸ்நானம் ஆராதனை – ஆயத்தம்:
ஒரு தொட்டியிலோ, குளத்திலோ, ஆற்றிலோ எங்கே ஒருவர் முழுவதும் மூழ்குவதற்கு போதுமான தண்ணீர்இருக்கிறதோ அங்கே ஞானஸ்நானம் கொடுக்கலாம்.
ஞானஸ்நானம் எடுக்க இருக்கின்றவர் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றிருக்கிறார் என்பதை போதகர் உறுதிசெய்து கொள்ள வேண்டும். திருமுழுக்கு என்றால் என்ன? ஏன் அதைப் பெற வேண்டும்? என்ற சத்தியங்களை அவர்களுக்கு ஏற்கனவே போதித்திருக்க வேண்டும்.
பொதுவாக ஞாயிறு காலை ஆராதனைக்குப் பின் ஞானஸ்நான ஆராதனை நடத்தலாம். சபையார் யாவரும் சாட்சியாக கூடி வந்திருக்கும்போது ஞானஸ்நானம் கொடுப்பது நல்லது.
அவசியத்தினிமித்தம் மற்ற நாட்களில் நடத்துவதில் தவறு இல்லை. முன்பே அறிவிப்புக் கொடுத்து அதன்படி
மாற்று உடைகளுடன் ஞானஸ்நானம் எடுப்பவர்கள் ஆயத்தமாய் வந்திருக்க வேண்டும்.
வேத பகுதிகள்:
- மத்.3:13-17 மாற்கு 16:15,16
- யோ.3:22.23: 4:2
- 1கொரி.10:1-4
- கொலோ. 2:12-15
- மத்.28:18-20
- யோ.1:25-34
- ரோ.6:3-5
- கலா.3.27
- அப்.2:37-41; 8:5-12; 9:17-20; 10:44-48; 16:30-33; 18:8; 22:3-17;
இதில் ஏதாவது ஒரு வேத பகுதியை வாசிக்கலாம்.
ஞானஸ்நானம் ஆராதனை
போதகர் சபையாரைப் பார்த்து நிற்கும்போது ஞானஸ்நானம் எடுப்பவர்களை முன் வரிசையில் நிற்க அழைக்க வேண்டும்.
பின்பு போதகர் கூறவேண்டியது:
இயேசுகிறிஸ்துவை தங்கள் ஆண்டவராக, இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ள இந்த
சகோதர, சகோதரிகள் இன்று ஞானஸ்நானம் பெற ஆயத்தமாக வந்திருப்பதற்காக சுர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம்.
ஞானஸ்நானம் ஆராதனை என்பது:
மதமாற்றம் செய்யும் வெறும் சடங்கு அல்ல. ஞானஸ்நானம் ஒருவனை கிறிஸ்தவனாக மாற்றும் அனுசாரமல்ல. ஏற்கனவே இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, மனந்திரும்பி பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்ற விசுவாசிக்கே ஞானஸ்நானம் கொடுப்பது வேத ஒழுங்கு.
ஞானஸ்நானம் பொருளற்ற ஓர் செயலுமல்ல. இது பொருள் நிறைந்த புனித சடங்கு, ஞானஸ்நானம் எடுப்பதின்மூலம் ஒருவர் தன்னை கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலோடு இணைத்துக்கொள்கிறார் (ரோமர் 6:4).
ஞானஸ்நானம் என்பது இயேசுவின் சுட்டளை:
நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்று இயேசு கட்டளை யிட்டுள்ளார் (மத்.28:19). ஞானஸ்நானம் எடுப்பதின்மூலம் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப் படிகிறோம். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் என்று இயேசு ஞானஸ்நானத்தின் அவசியத்தை இரட்சிப்புடன் இணைத்தே கூறியுள்ளார் (மாற்கு 16:16).
திருத்துவத்தில் ஒருவரான இயேசு மனிதனாய் அவதரித்ததினிமித்தம் நமக்கு முன்மாதிரியாக இருக்கும்படி “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக் கிறது” என்று கூறி ஞானஸ்நானம் பெற்றார் (மத்.3:15-17),
ஞானஸ்நானம் பெற தகுதியுள்ளவர்கள்:
மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவ மன்னிப்பை பெற்றவர்கள் (அப்.2:38).
இயேசுவின் சீடரானவர்கள் (மத்.28:19).
இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவர்கள் (அப்.8:36-38).
இயேசுகிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து வசனங்களை சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் (அப்.2:41; 16:31-33),
இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றவர்கள் (அப்.10:47,48).
ஞானஸ்நானம் எடுப்பதின்மூலம் நாம் பல காரியங்களை நிறைவேற்றுகிறோம்:
இயேசுகிறிஸ்துவின் மரணத்துடன் நம்மை இணைத்துக் கொள்கிறோம் (ரோமர் 6:3),
இயேசுகிறிஸ்துவின் அடக்கத்துடன் நம்மை ஐக்கியப்படுத்துகிறோம் (ரோமர் 6:4; கொலோ. 2:12).
அவருடைய உயிர்த்தெழுதலுடன் நம்மை சம் பந்தப்படுத்துகிறோம் (ரோ.6:4; கொலோ.2:12)
நாம் தேவனுடைய உடன்படிக்கை செய்துகொள்கிறோம் (1 பேதுரு 3:21).
தேவன் நீதிபரர் என்று அறிக்கையிடுகிறோம். (லூக்.7:29).
தேவனுடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறோம் (லூக்.7:30).
தேவனுடைய நீதியை நிறைவேற்றுகிறோம் (மத்.3:15).
இயேசுகிறிஸ்துவை தரித்துக்கொள்கிறோம் (கலா.3:27).
சபையார் சாட்சியாக நிற்க ஞானஸ்நானம் எடுக்க ஆயத்தமாக வந்திருப்பவர்களைப் பார்த்து போதகர் கேட்க வேண்டியது:
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனையும், அவருடைய ஒரேபேறான குமாரனான இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறாயா? அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்து பிறந்து பாவமற்ற பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து உலகத்தின் பாவத்திற்காக, உன் பாவத்திற்காக பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தருளினார் என்றும், பரமணடலத்திற்குச் சென்று சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்திலே வீற்றிருக்கிறார் என்றும், அவ்விடத்திலிருந்து உலகத்தின் முடிவிலே உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருகிறார் என்றும் விசுவாசிக்கிறாயா?
ஞானஸ்நானம் எடுப்பவர்:
ஆம், விசுவாசிக்கிறேன்.
போதகர்:
இயேசுகிறிஸ்து கல்வாரியில் சிந்தின இரத் தத்தின் வல்லமையினால் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா?
பதில்:
ஆம். இரட்சிக்கப்பட்டிருக்கிறேன்.
போதகர்:
பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறாயா? விசுவாசிகளுக்கு வாக்குப்பண்ணப்பட்டுள்ள பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வாயா?
பதில்:
ஆம், பெற்றுக்கொள்வேன்.
போதகர்:
பொதுவாயிருக்கிற பரிகத்த சபையும், பரிகத்தவான்களுடைய ஐக்கியமும் பாவமன்னிப்பும், சரீர உயிர்த்தெழுதலும், நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறாயா?
பதில்:
ஆம், விசுவாசிக்கிறேன்.
போதகர்:
இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதினிமித்தம் பாடுகள், கஷ்டங்கள் வந்தாலும் அவரை மறுதலியாமல் உன் மரண பரியந்தம் இயேசுவுக்கு சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்வேன் என்று வாக்குப் பண்ணுகிறாயா?
பதில்:
ஆம், வாக்குப்பண்ணுகிறேன்.
போதகர்:
இயேசுகிறிஸ்து உனக்குச் செய்த நன்மைகளை தைரியமாய் மற்றவர்களுக்கு சாட்சியாக அறிவிப்பேன் என்று வாக்குப்பண்ணுகிறாயா?
பதில்:
ஆம், வாக்குப்பண்ணுகிறேன்.
ஜெபம்:
ஞானஸ்நானம் எடுக்கப் போகின்ற ஒவ்வொருவர் மேலும் கைகளை வைத்து போதகர் ஜெபம்பண்ண வேண்டும்.
பின்பு முதலில் போதகர் தண்ணீரில் இறங்கி நிற்கும்போது ஒவ்வொருவராக சென்று ஞானஸ்நானம் பெற வேண்டும்.
ஞானஸ்நானம் கொடுக்கும்போது போதகர் ஒவ்வொருவருக்கும் கூறவேண்டியது:
___________ (பெயர்) உன் விகவாச அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறபடியே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே உனக்கு ஞானஸ்தானம் கொடுக்கிறேன்.
ஞானஸ்நானம் பெற்றவுடன் ஒவ்வொருவர் தலையிலும் கையை வைத்து போதகர் சொல்ல வேண்டியது:
முடிவுபரியந்தம் நிலைத்திரு. அப்பொழுது நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்வாய்.
இறுதி ஜெபமும், ஆசீர்வாதமும்:
எல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபின் போதகர் தண்ணீரில் நிற்கும்போதே இறுதி ஜெபம் செய்து ஆசீர்வாதம் கூறவேண்டும்.