திருமண ஆராதனை

திருமண ஆராதனை (நிகழ்ச்சி நிரல் -மாதிரி)

 1. ஆரம்ப ஜெபம்
 2. பாடல் (மணமகளை அழைத்துவரல்
 3. ஜெபம்
 4. பாடல்
 5. வேத பகுதி
 6. வாழ்த்துரை (அவசியமானால் மட்டும்
 7. செய்தி
 8. திருமணத்தை நடத்தி வைத்தல்
 9. பாடல்கள் – (மணமக்கள் பதிவேட்டில் கையெழுத்திடல்)
 10. இறுதி ஜெபமும் ஆசீர்வாதமும்

திருமண ஆராதனை Wedding Ceremony

ஆராதனை ஆயத்தம்:

திருமண நாளில் குறிக்கப்பட்ட நேரத்தில் திருமண வீட்டாரும், இனத்தாரும், நண்பர்களும் ஆலயத்தில் கூடி வந்திருக்கும்போது முதலாவது மணமகனை கூட்டிவந்து அவருக்கென்று நியமித்த இருக்கையில் உட்கார வைக்க வேண்டும். பின்பு யாவரும் எழுந்து நிற்கும்போது மணமகளை கூட்டி வந்து மணமகனுக்கு இடது பக்கத்தில் நிற்க வைக்க வேண்டும் (மணமகளை கூட்டிவரும்போது ஒரு பாட்டுப் பாடலாம்).

ஆரம்ப ஜெபம்:

போதகரோ, அல்லது வந்திருக்கும் சிறப்பு விருந் தினர் ஒருவேரா ஜெபிக்கலாம்.

பாடல்கள்:

சில பாடல்களை பாடலாம்.

வேத பகுதி வாசித்தல்:

 • ஆதி.1:26-28; 2:18-24; 24:58-67:
 • சங் 45-10-17
 • நீதி.18:22:19:14;
 • யோ.2:1-11;
 • எபே.5.22-33;
 • 1 பேதுரு 3:1-7;
 • சங் 128:1-6,
 • மத் 19:4-6
 • 1 கொரி.7:3,4;
 • எபி.13:4
 • வெளி.19:7-9

இதில் ஏதாவது ஒரு வேத பகுதியை வாசிக்கலாம்.

போதகர் கூறவேண்டியது:


பிரியமானவர்களே, இந்த மணமகனும் இந்த மணமகளும் பரிசுத்த திருமண உடன்படிக் கையிலே ஐக்கியப்படுவதைக் காணவும், அவர்கள் செய்யப்போகும் பொருத்தனைகளைக் கேட்கவும், தேவ சமூகத்தில் நிற்கிற நாம் அவருடைய ஆசீர்வாதம் அவர்கள்மேல் தங்குவதற்காக ஜெபிக்ககவும் இங்கே கூடி வந்திருக்கிறோம்.
மனிதன் பாவம் செய்யாதிருந்த காலத்திலேயே திருமணம் தேவனால் ஏற்படுத்தப்பட்டு, தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டது. நமதாண்ட வராகிய இயேசுகிறிஸ்து கானா ஊரில் நடந்த திருமணத்திற்குச் சென்று தமது முதலாம் அற்புதத்தை செய்து திருமண வாழ்க்கையை அங்கீகரித்து மேன்மைப்படுத்திச் சிறப்பித்தார்.
திருமணமானது கிறிஸ்துவுக்கும் அவர் திருச்சபைக்குமுள்ள பரிசுத்த ஐக்கியத்தைக் காட்டுகிறதும், இது யாவருக்குள்ளும் மேன்மையான
ஒன்றாக இருக்கிறதென்றும் வேத வசனங்கள் கூறுகின்றன. ஆகையால் இதை அற்பமாய் எண்ணாமல் திருமணம் ஏற்படுத்தப்பட்ட காரணங்களை மனதில் கொண்டு பயபக்தியோடும், விவேகத்தோடும், தெளிந்த புத்தியோடும் தேவ பயத்துடனும் திருமணம் செய்ய வேண்டும்.

தேவ நாம மகிமைக்காக பிள்ளைகளைப் பெற்று, அவர்களைக் கர்த்தருக்கேற்ற பயபக்தியிலும், அறிவிலும், அன்பிலும் வளர்க்கவும், வாழ்விலும் தாழ்விலும், கணவன், மனைவி ஒருவரால் ஒருவர் பெறவேண்டிய அன்பையும், ஆதரவையும், பராமரிப்பையும் பாதுகாப்பையும், ஆறுதலையும் அடையவும் திருமணம் தேவனால் ஏற்படுத்தப்பட்டது.

இந்த பரிசுத்த நிலைமையில் சேர்க்கப்படும் படி இவ்விரண்டு பேரும் இப்பொழுது வந்திருக்கிறார்கள். ஆகையால் இவர்களை ஒருவரோடொருவர் ஒழுங்கின்படி சேர்க்கக் கூடாத நியாயமான காரணத்தை யாராகிலும் சொல்லக்கூடுமானால் இப்பொழுதே எழுத்தின்மூலம் அதைச் சொல்லக்கடவர். சொல்லாவிட்டால் இனி ஒருநாளும் சொல்லாதிருக் கக்கடவர்.

போதகர் கேட்க வேண்டியவை:

மணமக்களைப் பார்த்து:

நீங்கள் ஒழுங்கின்படி திருமணத்திலே சேர்க்கப்படக்கூடாத காரணம் உண்டென்று உங்களில் யாராகிலும் அறிந்திருந்தால் அதை இப்பொழுதே அறிவிக்க வேண்டுமென்று உங்கள் இருவருக்கும் கட்டளையிடுகிறேன்.
தடை ஒன்றும் கூறப்படாவிடில்

மணமகன் போதகரைப் பின்பற்றி சொல்ல வேண்டியது:

__________ ஆகிய நான் __________ வுடன் பரிசுத்த விவாகத்தில் இணைக்கப்படுவதற்குத் தடையான யாதொரு நியாயமான காரணத்தையும் அறியேன் என்று பயபக்தியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மணமகள் போதகரைப் பின்பற்றி சொல்ல வேண்டியது:


_________ ஆகிய நான் ___________
வுடன் பரிசுத்த விவாகத்தில் இணைக்கப்படுவதற்குத் தடையான யாதொரு நியாயமான காரணத்தையும் அறியேன் என்று பயபக்தியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

போதகர் மணமகனைப் பார்த்து கூறவேண்டியவை:

______________ நீ தேவ பிரமாணத்தின்படி பரிசுத்த திருமண நிலைமையில் ஒருமித்து வாழ இவளை உனக்கு விவாக மனைவியாக ஏற்றுக்கொண்டு, சுகத்திலும் துக்கத்திலும் இவளை நேசித்து, ஆதரித்துக் கனப்படுத்தி,
காப்பாற்றி நீங்கள் இருவரும் உயிரோடிருக்குமளவும் பிறர்முகம் பாராமல் இவளுக்கே புருஷனாக இருப்பாயா?

மணமகன்: இருப்பேன்.

போதகர் மணமகளைப் பார்த்து கூறவேண்டியவை:


___________ நீ தேவ பிரமாணத்தின்படி பரிசுத்த திருமண நிலைமையில் ஒருமித்து வாழ இவனை உனக்கு விவாக கணவனாக ஏற்றுக்கொண்டு, இவனுக்குக் கீழ்ப்படிந்து பணிவிடை செய்து, சுகத்திலும், துக்கத்திலும் இவனை நேசித்து, கனப்படுத்தி, காப்பாற்றி நீங்கள் இருவரும் உயிரோடிருக்குமளவும் பிறர்முகம் பாராமல் இவனுக்கே மனைவியாக இருப்பாயா?

மணமகள்: இருப்பேன்.

பின்பு போதகர் கேட்க வேண்டியது:

திருமணம் செய்ய இந்த மணமகளை இந்த மணமகனுக்கு கொடுக்கிறது யார்?
(பெண்ணின் தகப்பன் அல்லது அவர் சார்பாக வரும் ஒருவர் பெண்ணின் வலது கையைப் பிடித்து மணமக்னின் வலது கையில் கொடுக்க வேண்டும்).

மணமகன்:

(தன் வலது கையினால் மணமகளின் வலது கையைப் பிடித்து போதகர் சொல்லுகிற பிரகாரம் சொல்ல வேண்டியது).
இங்கு கூடிவந்திருக்கும் யாவரும் சாட்சியாக நிற்க __________ ஆகிய நான் ____________ ஆகிய உன்னை இன்றுமுதல் எனக்கு விவாக மனைவியாக ஏற்றுக்கொண்டு, தேவனுடைய பரிசுத்த பிரமாணத்தின்படி நன்மையிலும் தீமையிலும், வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும், மரணம் நம்மைப் பிரிக்குமளவும் உன்னை நேசிக்கவும் ஆதரிக்கவும் வாக்குக்கொடுக்கிறேன்.

மணமகள்:


(பின்பு மணமகள் தன் வலது கையினால் மணமகனின் வலது கையைப் பிடித்துக்கொண்டு போதகர் சொல்லுகிற பிரகாரம் சொல்ல வேண்டியது):

இங்கு கூடிவந்திருக்கும் யாவரும் சாட்சியாக நிற்க __________ ஆகிய நான் _____________ ஆகிய உன்னை இன்றுமுதல் எனக்கு விவாக கணவனாக ஏற்றுக்கொண்டு, தேவனுடைய பரிசுத்த பிரமாணத்தின்படி நன்மையிலும் தீமையிலும், வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும், மரணம் நம்மைப் பிரிக்கு மளவும் உம்மை நேசிக்கவும், ஆதரிக்கவும் உமக்கு கீழ்ப்படியவும் வாக்குக்கொடுக்கிறேன்.

மணமகன்:

(பின்பு மணமகன் மணமகள் கையைப் பிடித்துக் கொண்டு போதகர் சொல்லுகிற பிரகாரம் சொல்ல வேண்டியது):

நான் உன்னை திருமணம் செய்வதற்கு அடை யாளமாக உன்கையைப் பிடித்து உன்னை என் விவாக மனைவியாக ஏற்றுக்கொண்டு என் சரீரத்தினாலே உன்னை மேன்மைப் படுத்தி, எனக்கு உண்டான உலக சொத்துக்களையெல்லாம் உனக்கு சுதந்திரமாகக் கொ டுக்கிறேன். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஆமென்.

பின்பு போதகர் சொல்ல வேண்டியது:

________..யும், .____________..யும் பரிசுத்த விவாக நிலையில் ஒருமித்து வாழ சம்மதித்து தேவ சந்நிதியிலும் இந்த சபைக்கு முன்பாகவும் அதை அறிக்கையிட்டு ஒருவருக் கொருவர் வாக்குக் கொடுத்து உறுதிக்கு அடையாளமாக கைப்பிடித்து அறிவித்ததால், இவர்கள் கணவனும், மனைவியுமாயிருக்கிறார்களென்று பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அறிவிக்கிறேன், ஆமென்.

ஜெபம்:

சபையார் ஜெப நிலையிலிருந்து ஒரு பாடல் பாடும்போது மணமக்கள் முழங்கால்படியிட்டு ஜெபிக்க வேண்டும்.

போதகர்கள் அவர்கள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தபின்பு மூத்த போதகர் ஒருவர் மணமக்களை ஆசீர்வதித்து ஜெபிக்க வேண்டும்.

போதகர் சுடற வேண்டியது:

தேவன் இணைத்தவர்களை மனிதன் எவனும் பிரிக்காதிருக்கக்கடவன்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களைக் காக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உங்கள்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

….. உங்களுக்கு சமாதானம் கட்டளையிடக்கடவர் (எண்.6:24-26).

பதிவேட்டில் கையெழுத்திடலும், பாடலும்:


மணமக்கள் பதிவேட்டில் கையெழுத்திடும்போது சில பாடல்களை பாடலாம். மணமகன் சார்பாக ஒருவரும், மணமகள் சார்பாக ஒருவரும் சாட்சி கையெழுத்திட வேண்டும்.

இறுதி ஜெபமும், ஆசீர்வாதமும்:

அறிவிப்பு:

பவனி:

சபையார் யாவரும் எழும்பி நின்று ஒரு பாடல் பாடும்போது மணமக்கள் முன்செல்ல மற்றவர்கள் அவர்களைப் பின்பற்றி ஆலயத்தைவிட்டு வெளியே செல்வார்கள்.

ஏதேன்

ஆலயப் பிரதிஷ்டை Church Dedication

 

Leave a Reply