திருமண நிச்சயம் Engagement
ஆயத்தம்:
பொதுவாக மணமகள் வீட்டில் (அல்லது திருமண ஹாலில்) திருமண நிச்சயம் நடைபெறுவது வழக் கம். மணமகன் வீட்டார் வந்தவுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கலாம்.
ஆரம்ப ஜெபம்:
போதகரோ, அல்லது வந்திருக்கும் சிறப்பு விருந்தினர் ஒருவரோ ஜெபிக்கலாம்.
போதகர் கூறவேண்டியது:
இந்த திருமண நிச்சயத்திற்காக வந்திருக்கின்ற உங்கள் யாவரையும் இயேசுகிறிஸ்து வின் நாமத்திலே வாழ்த்தி வரவேற்கின்றோம். மாப்பிள்ளை வீட்டார் கொண்டுவந்துள்ள பரிசுப் பொருட்களை பெண் வீட்டாரிடம் கொடுக்கும்படி கேட்கிறேன்.
(நேரம் வீணாகாமலிருக்க ஆரம்பத்திலேயே இதை செய்துவிட வேண்டும்).
பாடல்கள்:
சில பாடல்களை பாடலாம்.
(மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த சிறப்பு ஆடை களை அணிந்து பெண் வந்து உட்கார்ந்த பின்பு கீழ்காணும் ஓர் வேத பகுதியை வாசிக்கலாம்).
வேத பகுதி வாசித்தல்:
- ஆதி 24:1-9;
- ஆதி.10-31;
- சங்கீதம் 45;
- ஆதி.2:18-24;
- ஆதி.50-67;
- நீதி.31:10-31.
செய்தி:
போதகரோ, அல்லது சிறப்பு விருந்தினர் ஒருவரோ சுருக்கமாக செய்தி கொடுக்கலாம்.
பின்பு போதகர் கூறவேண்டியது:
பின்பு போதகர் கூறவேண்டியது:
பிரியமானவர்களே!’ ___________
உடைய மகன் ___________ க்கும், ___________ உடைய மகள் ___________ க்கும் திருமண நிச்சயம் செய்யும்படி கூடி வந்திருக்கின்றோம். திருமணம் என்பது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் வாழ்க்கை ஒப்பந்தம். அதை உறுதி செய்துகொள்வதே திருமண நிச்சயம். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவருக் கொருவர் தங்களை அர்ப்பணித்து கணவன் மனைவி என்ற உறவில் இணைந்து வாழ வாக்குறுதி கொடுக்கும் புனிதமான செயல் இது. அதிக ஜெபத்துடன் சிந்தித்து தீர்மானிக்க வேண்டிய காரியம் இது.
பின்பு போதகர் கேட்க வேண்டியது (மணமகன் மணமகளைப் பார்த்து):
திருமணத்தில் இணைக்கப்பட ஆயத்தமாயுள்ள நீங்கள் இருவரும் தேவனுக்கு முன்பாகவும், இங்கே கூடிவந்திருப்போருக்கு முன்பாகவும் உங்கள் பூரண சம்மதத்தை தெரியப்படுத்த வேண்டியது அவசியமாயிருக்கிறது.
திருமணத்திற்கு முதல்படியாக இந்த திருமண நிச்சயம் இருக்கிறது.
மணமகனைப் பார்த்து:
_________ நீ ____________ ஐ திருமணம் செய்ய சம்மதிக்கிறாயா?
மணமகன் பதில்: ஆம் சம்மதிக்கிறேன்.
மணமகளைப் பார்த்து:
___________ நீ ___________ ஐ திருமணம் செய்ய சம்மதிக்கிறாயா?
மணமகள் பதில்: ஆம் சம்மதிக்கிறேன்.
போதகர் இருவரையும் பார்த்து கூறவேண்டியது:
திருமணத்தில் இணைக்கப்பட ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நீங்கள் இருவரும் உங்கள் தனிப்பட்ட காரியங்களிலும், பொது வாழ்விலும் கர்த்தருக்கும், சபைக்கும் புகழும் நற்கீர்த்தியும் உண்டாகத்தக்க விதத்தில் பயபக்தியுடன் நடந்துகொள்ள ஆலோசனை கூறுகின்றேன்.
உங்கள் இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாய் அமைய இன்றையிலிருந்தே நீங்கள் ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள். திருமணத்திற்காக ஆயத்தப்படுத்தும் எல்லாக் காரியங்களிலும் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட ஊக்கமாய் ஜெபியுங்கள்.
பின்பு போதகர் கூறவேண்டியது:
திருமண நிச்சயத்திற்கு அடையாளமாக மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவருக்கொருவர் பரிசுத்த வேதாகமத்தை பரிசாகக் கொடுப்பார்கள்.
இறுதி ஜெபமும், ஆசீர்வாதமும்:
இருவரையும் முழங்கால்படியிடச்செய்து போதகர் ஜெபித்து ஆசீர்வாதம் கூறுவார்.
கிறிஸ்துவில் நிறைவேறிய தீர்க்கதரிசனம்