வீடு பிரதிஷ்டை
ஆயத்தம்:
வீடு பிரதிஷ்டை ஆராதனைக்கு வந்திருக்கும் அனைவரையும் வீட்டிற்குமுன் கூடி வரும்படி அறிவிப்புக் கொடுக்க வேண்டும்.
பாடல்:
தோத்திரப்பாடல் ஒன்றைப் பாடலாம்.
ஜெபம்:
போதகர் கேட்டுக்கொள்ளும் ஒருவர் ஜெபிப்பார்.
போதகர் கூறவேண்டியது:
இந்த வீட்டைக் கட்ட அருமை சகோதரர் __________ (பெயர்) அவர்களுக்கும், அவர்கள் வீட்டாருக்கும் கர்த்தர் உதவி செய்ததற்காக நாம் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த உலகத்தில் நாம் வாழுகின்ற காலத்தில் இந்த வாழ்க்கைக்குத் தேவையான பல நன்மைகளை கர்த்தர் ஈவாகத் தந்து நம்மை ஆசீர்வதிக்கிறார். ஆவிக்குரிய நன்மைகளைப் பெற்று வாழும் கர்த்தருடைய மக்கள் உலகப்பிரகாரமான நன்மைகளைப் பெற்று வாழவும் அவர் விரும்புகின்றார்.
போதுமான பணம் இருந்தாலும் எல்லாரும் வீட்டைக் கட்ட முடிகிறதில்லை. வீட்டைக் கட்டுகிற அநேகர் அதில் குடியிருக்க இயலாமல் போகிறது. இந்த அருமை குடும்பத்தார் வீட்டைக் கட்டவும், இதில் குடியிருக்கவும் கர்த்தர் கிருபை செய்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துகின்றோம். கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா (சங்.127:1). இந்த வீட்டை திறந்து வைத்து தேவ பிள்ளைகள் இதில் சுகத்தோடு குடியிருக்க இதை பிரதிஷ்டை செய்யும்படி கூடிவந்துள்ளோம்.
(போதகர் ரிப்பனை வெட்டி வீட்டை திறக்கலாம். அல்லது அதற்கென்று அழைக்கப்பட்டுள்ள நபர் ரிப்பன் வெட்டி வீட்டை திறக்கலாம்).
வீட்டை திறந்து வைக்கிறவர் கூறவேண்டியது:
தேவ மக்கள் குடியிருப்புக்காக பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே இந்த ரிப்பனை வெட்டி இந்த வீட்டை திறந்து வைக்கிறேன்.
ஒரு பாடல் பாடிக்கொண்டே போதகரும், சிறப்பு விருந்தினரும் முன்செல்ல மற்ற அனைவரும் பின்சென்று வீட்டில் எல்லா அறைகளிலும் பிரவே சித்து நிற்க வேண்டும். பாடல் முடிந்தவுடன் சில நிமிடங்கள் கர்த்தரைத் துதித்து ஆராதிக்க வேண்டும். பின்பு பிரதிஷ்டை ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டும். பிரதிஷ்டை ஜெபம் முடிந்தபின் வீட்டிற்குள்ளேயே ஆராதனை தொடர்ந்து நடத்தலாம். யாவரும் உட்கார வசதியில்லையென்றால் வீட்டிற்குமுன் போடப்பட்டுள்ள பந்தலில் ஆராதனையை தொடரலாம்.
பாடல்:
ஒன்று அல்லது இரண்டு பாடல்களை பாடலாம்.
வேத பகுதிகள்:
- சங்.127:1
- 2 சாமு.7:18-29
- மத் 7:24-27 ; உபா.28:1-14
- சங்.91:1-16
- லூக்.10:38-42; 19:1-10.
இதில் ஏதாவது ஒரு வேத பகுதியை வாசிக்கலாம்.
வரவேற்புரை:
வீட்டுச் சொந்தக்காரர் யாவரையும் வரவேற்றுப் பேசுவார். இந்த வீட்டைக் கட்ட கர்த்தர் எப்படி உதவி செய்தார் என்று சுருக்கமாக சாட்சி கூறலாம்.
வாழ்த்துரை:
ஒரு சிலர் வாழ்த்துரை வழங்கலாம்.
தேவசெய்தி:
போதகரோ, சிறப்பு விருந்தினரோ தேவ செய்தி கொடுக்கலாம்.
நன்றியுரை:
வீட்டுச் சொந்தக்காரர் நன்றி கூறுவார்.
ஜெபமும் ஆசீர்வாதமும்: