ஆலயப் பிரதிஷ்டை Church Dedication

ஆலயப் பிரதிஷ்டை

ஆலயப் பிரதிஷ்டை Church Dedication

ஆயத்தம்:

ஆலயப் பிரதிஷ்டை – சபைப் போதகரும், மண்டல தலைமைப் போதகரும் ஸ்தாபனத் தலைவரும் (பேராயர்) ஆலய வாசலண்டை நிற்பார்கள். சபையார் யாவரும் ஆலயத்திற்குமுன் கூடி வந்திருப்பார்கள்.
ஸ்தோத்திரப் பாடல் ஒன்று பாடலாம்.

சபைப் போதகர் கூற வேண்டியது:

இந்த ஆலயத்தை கர்த்தருடைய நாம மகிமைக்காக பிரதிஷ்டை செய்யும்படி கூடிவந்துள்ளோம். நம்முடைய மண்டல தலைமைப் போதகர் இந்த ஆலய பிரதிஷ்டை ஆராதனையை முன்னின்று நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மண்டலத் தலைமைப் போதகர் கூற வேண்டியது:

இந்த சபைப் போதகர் (பெயர்..________ அவர்களுக்கும், இந்த சபை விசுவாசிகளாகிய உங்கள் யாவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஆலயத்தை பிரதிஷ்டை செய்யும்படியாக வந்திருக்கின்ற நமது ஸ்தாபனப் தலைமைப் போதகர் ___________ (பெயர்) அவர்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
வேத பகுதி ஒன்றை வாசிக்கக் கேட்போம்.

வேத பகுதிகள்:

 • சங்.122:1-9, 24:7-10 1
 • 1இரா.8:11,22-30
 • மத்.21:12-16
 • எபே.2:13-22
 • 2 நாளா.7:1-5
 • இரா.7:51
 • ஆகாய் 2:9
 • 1 கொரி.3:9-17
 • யாத்.40:33-35
 • சங்.84
 • 2 நாளா.6:1,2,4,14, 17-20, 391; 6:19-7:3

இதில் ஏதாவது ஒரு வேத பகுதியை வாசிக்கலாம்.
மண்டல தலைமைப் போதகர் மேலே உள்ள வேத பகுதிகளுள் ஒன்றை வாசிக்க, ஒருவரை கேட்டுக் கொள்வார்.

ஜெபம்:

ஜெபிக்கும்படி ஒருவரை மண்டல தலைமைப் போதகர் கேட்பார்.

ஜெபித்து முடித்தபின் மண்டல தலைமைப் போதகர் கூறுவது:

நமது ஸ்தாபனத்தின் தலைவர் _________ (பெயர்) இந்த ஆலயத்தை திறந்து வைப்பார்கள்.

ஸ்தாபனத் தலைவர்:

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! இந்த ஆலயத்தை தேவ நாம மகிமைக்காக கட்ட இந்த சபைப் போதகருக்கும், சபை மக்களுக்கும் கர்த்தர் கொடுத்த தரிசனத்திற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

இதற்கான பொருளாதார சகாயத்தை தேவன் கட்டளையிட்டதற்காக கர்த்தரைத் துதிக்கின்றோம்.

இந்த வட்டாரத்திலுள்ள மக்கள் மெய் தேவனாகிய இயேசுகிறிஸ்துவை தொழுதுகொள்ளுவதற்காக, இந்த சபையின் ஆராதனைகள் நடைபெற இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

கர்த்தர் வருமளவும் இதில் தொடர்ந்து ஆராதனைகள் நடக்க பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே இந்த ரிப்பனை வெட்டி
இந்த ஆலயத்தைத் திறந்து வைக்கிறேன்.

ஸ்தாபன தலைமைப் போதகர், மண்டல தலைமைப் போதகர், சபைப் போதகர் முன்செல்ல பாட லுடன் சபையார் யாவரும் ஆலயத்திற்குள் சென்று நிற்க வேண்டும்.

துதியும், ஆராதனையும்:

ஒரு பாடலையும், சில பல்லவிகளையும் பாடி சில
நிமிடங்கள் கர்த்தரை ஆராதிக்கலாம்.

மண்டல தலைமைப் போதகர் கூறுவது:

இப்பொழுது நமது ஸ்தாபனத் தலைவர் ஆலய பிரதிஷ்டை ஜெபம் செய்வார்கள்.

ஸ்தாபனத் தலைவர்:

முதலாவது சபைப் போதகரையும், அவருடைய குடும்பத்தையும் முன்னால் வரும்படி அழைத்து அவர்களுக்காக ஜெபிப்பார். பின்பு ஆலயத்தை பிரதிஷ்டை செய்து ஜெபிப்பார்.

வரவேற்புரை:

சபைப் போதகர் யாவரையும் வரவேற்று சபையின் ஆரம்பம், வளர்ச்சியைக் குறித்து சுருக்கமாகப் பேசுவார்.

வேத பகுதி:

முதலில் குறிப்பிட்டுள்ள வேத பகுதிகளுள் ஏதாவது ஒன்றை வாசிக்கலாம்.

வாழ்த்துச் செய்தி:

சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துச் செய்தி வழங்குவார்கள்.

காணிக்கை சேகரித்தல்:

ஒரு பாடல் பாடும்போது சிறப்புக் காணிக்கை சேகரிக்கப்படும்.

சிறப்பு செய்தி:

ஸ்தாபனத் தலைமைப் போதகரோ அல்லது அவர் நியமித்த சிறப்பு பிரசங்கியாரோ தேவ செய்தி கொடுப்பார்கள்.

சிறப்பு ஜெபம்:

இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஏற்றுக்கொள்ளவும், வியாதியஸ்தருக்காகவும், பல்வேறு தேவைகளுக்காகவும் சிறப்பு ஜெபம் ஏறெடுக்கப்படலாம்.

இறுதி ஜெபமும், ஆசீர்வாதமும்:

சபை வளர்ச்சியில் ஊழியரின் பங்கு

ஆராண்

Leave a Reply