ஆதாம்
இந்த தலைப்பு ஆதாம் குறித்து விரிவாக விளக்குகிறது.
1. வேத வசனம் :
ஆதியாகமம் 2:19 – 5:5.
2.சுயசரிதை:
- ஆதாம் (“செம் மண்”) முதல் மனிதன் சுமார் கி.மு. 4000த்தில் தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டான்.
- முதல் மனிதனாக சிருஷ்டிக்கப்பட்டபொழுது ஆறாவது நாளில் அவனது பெயருக்கேற்ப மண்ணினால் உருவாக்கப்பட்டான்.
- அவன் ஏதேன் என்னும் தோட்டத்தில் வைக்கப்பட்டான். அங்கு உணவு மிகக்கடின உழைப்பின்றி அளிக்கபட்டது,
- அவன் எல்லா மிருகங்களுக்கும் பெயரிட்டான். ஆனால் அவனுக்கு ஏற்ற துணை இன்னும் மிருகங்கள் இராஜ்ஜியத்தில் காணப்பட வில்லை.
- தேவன் ஆதாமின் விலா எலும்பு ஒன்றினால், ஏவாளை வடிவமைத்தார். அவர்கள் அறியாமையுள்ள காலப்பகுதியில் வாழ்ந்தனர்.
- அவர்களின் சுயசித்தத்தை பரீட்சை பார்ப்பதற்கென, தேவன் தோட்டத்தின் நடுவில் உள்ள நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை மட்டும் புசிக்கக்கூடாது எனக்கட்டளையிட்டிருந்தார்.
- இருப்பினும், ஏவாள் பிசாசு பயன்படுத்திய சர்ப்பத்தினால் கவர்ந்திழுக்கப்பட்டு நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசித்தாள்.
- ஆதாம் தேவனுக்கும், விழுந்துபோன ஏவாளுக்கும் இடையே தனது கீழ்ப்படிதலை தெரிந்து கொள்ளவேண்டியதாய் இருந்தது, அவன் ஏவாளுக்கு செவிகொடுத்து பாவம் மனுக்குலத்துக்குள் பிரவேசிக்க காரணமாய் அமைந்து விட்டான்.
- ஆதாம், ஏவாள், மற்றும் சர்ப்பம் நியாந்தீர்க்கப்பட்டு அவர்களணைவருக்கும் தண்டனை அளிக்கப்பட்டது
3. மதிப்பீடு செய்தல் ஆதியாகமம் 3:1-21.
அ) சாத்தான் அழகிய சர்ப்பத்துக்குள் வசித்தான் (3:1)
ஆ) தேவன் ஒருதலை பட்சமுள்ளவர் எனக்காட்ட முயன்றான் (3:1)
இ) ஏவாள் குழப்பமடைந்து தேவனுடைய கட்டளையை தவறாகப்புரிந்து கொண்டாள் (3:2-3)
ஈ) சாத்தான் ஏவாளிடம் பொய் சொன்னான் (3:4)
உ) சாத்தான் ஏவாளின் பெருமையைத் தூண்டுதல் (3:5)
(ஊ) ஏவாள் பாவம் செய்தல், அவள் ஆதாமை சோதனைக்குட்படுத்த அவன் தேவனுக்கு கீழ்படியாது போனான் (3:6-7)
எ) உடனடியாக அவர்கள் நிர்வானியானார்கள், அத்தி இலை ஆடைகளால் தங்கள் நிர்வானத்தை மறைக்க முயன்றனர். (3:7)
ஏ) தேவனிடமிருந்து தங்களை மறைத்துக்கொள்ள முயன்றனர். (3:8)
ஐ) விழுந்துபோன மனிதனைத் தேடி தேவனது முதல் தொடர்பு (3:9-10)
ஓ) ஆதாமும் ஏவாளும் தங்களது பாவத்திற்காக மற்றவர்களை குற்றப்படுத்துதல் (3:11-13)
ஓ) சர்ப்பம் நியாந்தீர்க்கப்படுதல் (3:14)
ஒள) ஏவாளின் தண்டணை (3:16)
க) ஆதாமின் தண்டணை (3:17-19)
ங) மண்ணுக்கே திரும்புவாய் (மரணமடைவாய்) என கூறப்படுதல் (3:19)
ச) தேவன் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் தோள் உடைகளை கொடுத்தல் (3:21)
4.அடிப்படைகள்:
அ) மனிதனை ஏமாற்றுவதற்கு சாத்தான் அநேக உபாயங்களை பயன்படுத்த முடியும். (ஆதி 3:1, வெளி 20:7-10)
ஆ) பிசாசின் தந்திரங்களை எதிர்த்து போராட வேத அறிவு மிகவும் அவசியம்.
இ) பெருமை மற்றும் பொய் இவை இரண்டும் மிகக்கொடிய பாவங்கள்.
ஈ) ஐக்கியத்திலிருந்து பிரிந்து வாழும் விசுவாசிகள் நம்மை பாவத்தில் வீழ்த்த முடியும். (1கொரிந்தியர் 5:6)
உ) மனித முயற்சிகள் ( பாவத்தை மூடி மறைக்க அத்திஇலைகளால் ஆடை உண்டாக்கின முயற்சி) தேவனால் அங்கிகரிக்கப்படுவதில்லை. சுய நீதியுடன் தேவனோடு ஐக்கியம் கொள்ள இயலாது (மத்தேயு 7:21-23)
(ஊ)இழந்து போனவைகளை தேவன் எப்பொழும் தேடுகிறவராய் இருக்கிறார். (லூக்.19:10)
எ) பாவியான மனுஷர் மற்றவர்களை குற்றப்படுத்துவார்கள் அல்லது பாவத்தை எதிர்கொள்வதை தவிர்த்து தனது நிலைமை குறித்தும், தான் வாழும் சூழலை குறித்தும் குறைகூறித்திரிவார்கள் (1 இராஜாக்கள் 18:17-18)
ஏ) தேவன் எப்பொழுதும் நியாத்தீர்ப்புக்கு முன்னதாக கிருபை அருளுகிறவராயிருக்கிறார். (ரோமர் 6:14)
ஐ) சுவிஷேச செய்தி கொடுக்கப்பட்டது, இரட்சிப்பு மனுக்குலத்திற்கு மட்டுமே, சாத்தானுக்கோ, மிருகங்களுக்கோ இரட்சிப்பு இல்லை (சங்கீதம் 49:12; வெளி 20:10)
ஓ) தனிப்பட்டவர்கள் மேல் உள்ள தண்டணைகள், தனிப்பட்டவருக்கென ஏற்படுத்தப்பட்டுள்ளது. மனிதனை ஆழும்படி முயற்சி செய்யும் பெண் (மனுஷி) தன்னைத்தானே ஆண்டுகொள்கிறாள். (நீதிமொழிகள் 24:12)
ஓ) தோல் ஆடைகளை கொடுத்த தேவன் அத்தோலையுடைய மிருகங்களை பலி செலுத்தி (இரத்தம் சிந்தி) அவைகளை மனுஷருக்கு கொடுத்தார். இரத்தம் சிந்துதவ் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை, பாவ மன்னிப்பின்றி தேவனிடம் சேருதல் இயலாத காரியம் (எபிரெயர் 9:22) (முதல் பலி செலுத்தினவர் தேவனே, இறுதி பலி செலுத்தினவரும் தேவனே) இதற்கிடையில் மனுஷன் ஏறாளமான பலிகளை செலுத்தியுள்ளான், செலுத்தி வருகிறான். ஒப்புயர்வற்ற பலி இயேசுவின் சிலுவை மரணமே!!