தேவதூதர்கள்
தேவதூதர்கள் எத்தனை வகை உள்ளனர் அவர்களின் தோற்றம் போன்ற காரியங்களை இந்த கட்டுரையில் நாம் படிக்கலாம்.
1.தூதர்கள் இரண்டு வகையினராய் இருக்கின்றனர்.
அ) தெரிந்து கொள்ளப்பட்ட தூதர்கள் (1 தீமோத்தேயு 5:21)
இவர்கள் தேவனுடன் இருக்க தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்.
ஆ) விழுந்து போன தேவதூதர்கள்:
தேவனுக்கு விரோதமாய் கலகம் பண்ணி சாத்தானை பின்பற்றினவர்கள்
i) சிறைப்பட்டவர்கள் (யூதா 6, 2பேதுரு 2:4)
நோவா கால ஜலப்பிரளயம் முதல் அவர்கள் பூமியில் காணக்கூடிய வகையில் பூமியில் செயல் பட்டு வருகின்றனர்.
ii) பிசாசுகள்
தற்பொழுது பூமியில் செயல்பட்டு வருகின்றனர். (1 கொரிந்தியர் 10:20,21; மாற்கு 5:1-20)
2. தேவதூதர்களில் அநேக வகுப்பார் இருக்கின்றனர்.
a) கேருபீன்கள் (உயர்ந்த வகுப்பைச் சார்ந்தவர்கள்) ஆதியாகமம் 3:24; யாத்திராகமம் 25:19-20
கேருபீன்கள் ஆரம்பத்தில் தெய்வீக பரிசுத்தத்தை எதிர்த்தவர்கள் லூசிபர் (சாத்தான்) கேருபாய் இருந்தவன் (எசேக்கியல் 28:14)
b) சேராபீன்கள்:
(ஏசாயா 6.2)”சேராப்’ என்பதன் பொருள் ‘எரிகிகின்ற ஒன்று.
c) துரைத்தனங்கள், அதிகாரங்கள்
- மனித அதிகாரத்துடன் ஒப்பிடலாம், ஆனால் வழக்கப்படி அவைகள் விழுந்துபோன தேவதூதர்களை குறிப்பது ஆகும். (எபேசியர் 3:10. 6:12, கொலோசெயர் 1:16)
- அவர்கள் மனித வர்க்கத்தின் ஒரு பகுதியை அடக்கியாள்கிறார்கள், அவர்களால் மனுக்குலத்தின் தொனி, மற்றும் சிந்தனைகளை அடக்கியாள முடியும். (மாற்கு 5:1-20)
d) ஊழியம் செய்யும் தேவதூதர்கள்;
i) காப்பாற்றும் தேவதூதர்கள் (எபிரெயர் 1:14)
இவர்கள் விசுவாசிகளுக்கு பாதுகாப்பளிக்கின்றனர், பணிவிடை செய்கின்றனர்.
ii) தண்ணீர்களின் தூதன்: (வெளி 16:5)
தண்ணீர் சிறையைப்போல பயன்படுத்தப் படுகிறது. அபைஸ் (கிரேக்க மொழி) கீழேயுள்ள தண்ணீர் சிறையைக்குறிக்கிறது.
iI) பாதாளகுழியின் தூதன்: (வெளி 9:1,11)
அபைஸ் என்றழைக்கப்படும் பாதாளக்குழியில் விஷேசித்த பொறுப்பு வகிக்கும் தூதன்.
iv) அக்கினியின் தூதன்:
(வெளி 14:18)
v) நியாயத்தீர்ப்பின் தூதர்கள்:
(வெளி 8:2, அதிகாரங்கள் 15,16) – எக்காளங்கள், கோபக்கலசங்கள்.
vi) காவல் செய்யும் தூதர்கள்:
(தானியேல் 4,13)
3. தூதர்களின் தோற்றம்:
(a) தூதர்கள் மனிததோற்றத்தில் தோன்றமுடியும். (ஆதியாகமம் 18;1-2, எபிரெயர் 13:2)
b) தூதர்கள் பல விதத்தில் சித்தரிக்கப்படுகின்றனர்.
செட்டைகளுடன், அநேகக்கண்களுடன், அநேக முகங்களுடன் சித்தரிக்கப்படுகின்றனர். (ஏசாயா 6:2, எசேக்கியேல்
மற்றும் அடிக்கடி பிரகாசமுள்ள ஒளியுடன் தோன்றுகிறவர்கள் (மத்தேயு) 28:2-3)
c) தேவனுடைய கரத்திலிருந்து வந்தவைகளில் லூசிபர் (சாத்தான்) மிகவும் அழகுவாய்ந்த ஜீவியாய் இருக்கிறான் (எசேக்கியேல் 28:12-17)
d) தூதர்கள் சிரிய செட்டைகளுடன் காணப்படும் கொழுத்த சிவந்த மேனியுடையவர்கள் அல்ல. அல்லது சிவந்த நிற தோலும், கொம்பும், கூரிய வாலும் உடைய ஜீவிகளும் அல்ல.
4. பெயரிடப்பட்ட தூதர்கள்:
a) லூசிபர், அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி, தேவனுடைய சிங்காசனம் முழுவதையும் மூடுகிற கேருப் (ஏசாயா 14:12), இப்பொழுது அவன் பெயர் சாத்தான். குற்றம்சாட்டுகிறவன் / புகழ் இழந்தவன் (வெளி 12:10)
(b) காபிரியேல் – செய்தி அறிவிக்கும் தூதன் (தானியேல் 8:16, 9:21, லூக்கா 1:19, 26)
c) மிகாவேல்யுத்தம் செய்யும் தூதன் (வெளி 12:7, யூதா 9) இஸ்ரவேலை பாதுகாக்கும் தூதன் (தானியேல் 10:21, 12:1)
5. தூதர்களும் இயேசுக்கிறிஸ்துவும்
a) அவரது பிறப்பில் – (லூக்கா 2:9-15)
b) அவரது சோதனையில்-(மத்தேயு 4:11)
c) அவரது உயிர்த்தெழுதலில் (மத்தேயு 28:2)
(d) அவரது பரமேறுதலில் – (அப்போஸ்தலர் 1:10)}
e) அவரது இரண்டாம் வருகையில் – (மத்தேயு 13:37-39, 24:31, 25:31, 2 தெசலோனிக்கேயர் 1:7)
6. தூதர்களும் மனிதரும்:
a) சிருஷ்டிப்பின் போது தேவதூதர்கள் கவனித்தார்கள். (யோபு 38:7)
b) மோசேயிடம் தேவன் நியாயப்பிரமாணங்களை கொடுக்கும்போது தேவதூதர்கள் அங்கு இருந்தனர் (கலாத்தியர் 3:19, அப்போஸ்தலர் 753)
c) தூதர்கள் இப்பொழுது நம்மை கவனித்து வருகின்றனர் (1 கொரிந்தியர் 3:10, 1 தீமோத்தேயு 5:21, 1 பேதுரு 1:12)
d) தெரிந்து கொள்ளப்பட்ட தூதர்கள் ஒருவர் இரட்சிப்படையும் போது களிகூறுகின்றனர். (லூக்கா 15:7-10)