நிலைத்திருத்தல்


நிலைத்திருத்தல்

நிலைத்திருத்தல்

1.நிலைத்து + இருத்தல் = நிலைத்திருத்தல் இந்த வார்த்தை பூரண பராமரிப்பு, தேவைகளை சந்திப்பது, போஷிப்பது, மற்றும் ஐக்கியம் குறித்து பேசுகிறது. உபாகமம் 33:27-28

[table id=1 /]

[table id=2 /]

2. தேவனுடைய பராமரிப்பில் வாழ்தல் என்பது “நிலைத்து இருத்தல் என்பதின் திறவுகோலாய் இருக்கிறது. யோவான் 13:17

Tamil Bible

நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள். யோவான் 13:17

Tamil Bible ERV

நீங்கள் இவற்றை அறிந்துகொண்டால், அவற்றைச் செய்யும்போது மகிழ்ச்சியடைவீர்கள். யோவான் 13.17

3. “நிலைத்து இருத்தல்” என்பதன் பொருள் ஒவ்வொரு விசுவாசியின் வாழ்வில், எல்லா பகுதியிலும் அவசியமான ஒவ்வொரு தேவைகளுக்கும் அளிக்கப்படும் முழுமையான பராமரிப்பு ஆகும். சங்கீதம் 23:1,5, 91:1-10 யோவான் 15:4; யாக்கோபு 1:2-4.

Tamil Bible

 கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். சங்கீதம் 23:1

 என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. சங்கீதம் 23:5

யோவான் 15:4 

 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன், கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். 

யோவான் 15:4 ERV

நீங்கள் என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன். எந்தக் கிளையும் தனியாகக் கனிகொடுக்க இயலாது. அது செடியிலேயே தொடர்ந்து இருக்கவேண்டும். இதுபோலத்தான் நீங்களும். நீங்கள் தனியாக இருந்து கனிதர முடியாது. என்னோடு சேர்ந்தே இருக்கவேண்டும். 

4. உலகப்பிரகாரமான பிரச்சனைகள் அநித்தியமானவைகள், பலதரப்பட்டவைகள், ஆனால் அவைகளுக்கு உண்டானத்தீர்வு முழுமையானது. ஆதியாகமம் 50:20 ரோமர் 8:28.

5. நாம் அவரில் நிலைத்து இருக்கும்பொழுது மட்டுமே, இயேசுக்கிறிஸ்து நமது வீடாகிய இருதயத்தில் தரித்து இருக்கமுடியும். எபேசியர் 3:16,17, கொலோசியர் 3:15,16

ஆதாம் 

இயேசுவின் நாமம்

Leave a Reply