பாழாக்கும் அருவருப்பு
உபத்திரவகாலத்தில் எருசலேம் தேவாலயத்தில் அந்திக்கிறிஸ்துவால் எழுப்பப்படும் சிலையே “பாழாக்கும் அருவருப்பு” என அழைக்கப்படுகிறது.
அந்திக்கிறிஸ்துவின் பெருமையை அடிப்படையாகக்கொண்டு “காலங்களையும், பிரமாணங்களையும் மாற்றி அமைத்து தவறான ஆயிரவருட ஆழுகையை ஆரம்பிப்பது ஆகும். தானியேல் 7:8-25.
தானியேல் 9:26-27 ல் உள்ள வேதபகுதி இதைக்குறித்து விளக்கம் அளிக்கிறது
அ) அவன் புதிதாய் உருவாக இருக்கும், ரோம சாம்ராஜ்யத்திலிருந்து எழும்புகிறவன்,
ஆ) அவன் 7 வருடம் இஸ்ரவேலருடன் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்துவான்.
இ) அவன் மூன்றறை வருடம் கழிந்த பின்னர் சமாதான உடன்படிக்கையை (உடைப்பான்) மீறுவான்.
ஈ) இக்காலக்கட்டத்தில் அவன் தேவாலயத்தைத் தீட்டுப்படுத்தி மீந்திருக்கும் ஜனங்களை உபத்திரவப்படுத்தத் தொடங்குவான்.
பாழாக்கும் அருவருப்பு மிருகத்தின் சொருபத்திற்கு ஒப்பாக ஓர் சிலையை உண்டாக்கி தேவாலயத்தில் வைப்பதிலிருந்து ஆரம்பமாகிறது.
தானியேல் 12:11 பாழாக்கும் அருவருப்பிலிருந்து தேவராஜ்யம் 1290 நாட்கள் கழித்து வரும் எனக் கூறுகிறது.
அ) 1260 நாட்களிலில் இரண்டாம் வருகை சம்பவிக்கும்.
ஆ) 30 நாட்கள் தேசங்கள் மற்றும் இதர நியாயத்தீர்ப்புகள் நிகழும்.
பாழாக்கும் அருவருப்பை குறித்து விசுவாசிக்கும் யூதர்களுக்கு இயேசுக்கிறிஸ்து எச்சரிப்பய் உபத்திரவ காலத்தில் அதைக்காணும் போது ஒடிப்போகக்கூறுகிறார். மத்தேயு 24:15
அந்திக்கிறிஸ்துவின் வருகையும் அவனது கிரியையும் குறித்த உண்மையை அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய்கிறது” என்று 2தெசலோனிக்கேயர் 2:3-12 (7) ல் வாசிக்கிறோம்.
தெய்வத்துவத்தின் இரகசியத்திற்கு எதிரானது 1 தீமோத்தேயு 3:16
அந்திக்கிறிஸ்துவின் ஆவி” இயேசுக்கிறிஸ்து இந்நாட்களில் கிரியை செய்து வருகிறார் என்பதை மறுதலிக்கிறது. 1 யோவான் 2:18, 23: 4:32 யோவான் 7.
உபத்திரவ காலத்தின் மத்திய பகுதியில் தேவாலயத்தை தீட்டுப்படுத்தும். வண்ணமாய் அந்திக்கிறிஸ்து பாழாக்கும் அருவருப்பைக் கட்டி எழுப்புவது வெளிப்படுத்தல் 13:14ல் கூறப்பட்டுள்ளது.
சரித்திர பூர்வமான உதாரணங்கள்:
அ) அந்தியோகஸ் எப்பிப்பேனஸ் (கி.மு. 168 ஜூன் முதல் 165 டிசம்பர் வரை) ஜீயஸ் ஒலிம்பஸ் சிலையை தேவாலயத்தில் நிறுவியது.
ஆ) கலிகுலா (கி.பி.37-41) தனது சிலையை தேவாலயத்தில் நிறுவ முயற்சி செய்தது.