இராஜ்யத்துக்குரிய வாழ்க்கை
இந்தக் கட்டுரையில் நாம் இராஜ்யத்துக்குரிய வாழ்க்கை குறித்துக் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.
A.அதிகாரத்தில் மாற்றம்
சாத்தானின் ஆளுகையிலிருந்தும், தலைமைத்துவத்திலிருந்தும் நாம் விடுவிக்கப்பட்டுள்ளோம். நாம் இப்போது முற்றிலும் புதியதோர் அதிகாரத்தின்கீழ் – ஆண்டவராகிய இயேசுவினுடைய அதிகாரத்தின் கீழ் – இருக்கிறோம்.
ஆண்டவருக்குள் தனது புதிய வாழ்க்கையில் ஒரு விசுவாசி வளரத் துவங்கும்போது, தேவனுடைய இராஜ்யத்தின் வாழ்க்கையை அனுப விப்பதற்கு ஒரே வழி, இயேசு வானவரோடு சரியான உறவு கொண்டிருப்பதுதான் என்பதைக் கண்டுகொள்கிறான் (எபே. 1:17; பிலி. 3:10).
ஆண்டவரோடுள்ள நமது புது வாழ்க்கையின் துவக்கத்திலேயே, இந்த உறவு இரு தெளிவான அம்சங் களைக் கொண்டுள்ளது:
1.மீட்பர்
இயேசுவானவரோடு நாம் கொள்ளக்கூடிய முதல் உறவு இதுவே. இயேசுவானவரை மீட்ப ராக, நமக்காக மரித்து, சாத்தானின் இராஜ்யத்திலிருந்து காப்பாற்றியவ ராக நாம் முதன்முதலில் அறிந்து கொண்டாலன்றி, தேவனை நமது பிதாவாகவும், நண்பராகவும் அறிந்துகொள்ள முடியாது. இயேசு வானவர் இவற்றிலிருந்து நம்மை மீட்டுள்ளார்:
1. தேவனின் நியாயத்தீர்ப்பு (1தெச. 1:10; 5:9; ரோமர் 5:9).
2. சாத்தானின் வல்லமை (அப். 26:18; கொலோ. 1:13; எபி. 2:14,15; 1யோவான் 3:8).
3. நமது சொந்த இயல்பு (பிலி. 3:19; 2 கொரி. 5:14,15; தீத்து 3:3-6; 1 பேதுரு 1:18).
“அவர் குமாரனாயிருந்தும்… தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி…” (எபி. 5:8,9), எபிரெயர் 2:10; 2 தீமோத்தேயு 1:10 வசனங்களையும் பார்க்கவும்.
2. ஆண்டவர்
இயேசுவானவரை நமது மீட்ப ராக அறிந்துகொள்வது நம்மைத் தேவனுடைய இராஜ்யத்துக்குள் கொண்டுவருகிறது. ஆனால் அவரோடுள்ள நமது உறவு அதோடு முடிவடைந்து விடுவதில்லை.
நாம் அவரது இராஜ்யத்துக்குள் வரும்போது, அந்த உறவு அற்புத மான புது மாற்றங்களைப் பெறு கிறது. இப்போது நாம் அவரை மீட்பராவும், ஆண்டவராகவும் மட்டுமல்ல, நமது ஆண்டவராகவும் அறிகிறோம்! அவர் நமது இராஜ் யத்தில் இராஜாவாக இருக்கிறார் (GlamCour. 2:6).
“ஆதலால், தேவனுடைய ஆவியி னாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டா னென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக் கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்” (1கொரி. 12:3). யோவான் 13:13; ரோமர் 1:5; 1 கொரிந் தியர் 8:6; 1 கொரிந்தியர் 4:5 வசனங் களையும் பார்க்கவும்.
நாம் ஒளியின் இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும்போது, நாம் எதற் காகப் படைக்கப்பட்டுள்ளோமோ ஆண்டவரோடுள்ள அந்த அன்பான உறவை அனுபவிக்கலாம்.
இதன் காரணமாகவே, இயேசுவானவர் நமது வாழ்க்கையின் ஆண்டவராக ஆகும்போது, நமது வாழ்க்கையில் அவரது ஆளுகை-பாவத்தின் குழப் பத்திலிருந்து நம்மை விடுவித்து, தெய்வீக ஒழுங்குக்கும், சமாதானத் திற்கும் கொண்டுவருவதை நாம் காண்கிறோம். கொலோசெயர் 2:9,10; 1 கொரிந்தியர் 8:6 வசனங்களையும் பார்க்கவும்.
B.முன்மாதிரியான குடிமகன்
*கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” (பிலி. 2:5). இயேசு இராஜ்யத்தின் இராஜா வாக இருந்தபோதிலும், ஓர் ஊழிய னாக ஆனார். அவரது இராஜ் யத்தின் மெய்யான குடிமகன் எப்படி யிருப்பான் என்பதற்கு, அவரே முன்மாதிரியாக இருக்கிறார்.
“நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவின துண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக் கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல, நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” (யோவான் 13:13-15). யோவான் 13:5-17; மத்தேயு 20:26-28; லூக்கா 22:27 வசனங் களையும் பார்க்கவும்.
C.இராஜாவின் பிரஜைகள்
கிறிஸ்துவினுடைய இராஜ்யத் தின் உறுப்பினர்களாகிய நாம் அவ ரோடுகூட ஒரு எசமான் – ஊழியன் உறவுக்குள் பிரவேசிக்கிறோம் (மத். 6:24).
இயேசுவானவர் தமது பிதாவின் சித்தத்தைச் செய்யவே வந்தார் (எபி. 10:5-9). தமது தினசரி வாழ்க் கையில், இராஜ்யத்தின் வாழ்க்கை முறையான தேவனைப் பிரியப் படுத்தும்படி வாழ்வதை – வெளிப் படுத்தினார் (எபே.5:8-10) அவர் ஒரு ஊழியனின் இருதயத்தைப் பெற் றிருந்தது போல, நாமும் ஒரு ஊழி யனின் இருதயத்தைப் பெற வேண்டும்.
ஊழியனாயிருப்பது ஒருவர் மற்றவரைவிட தாழ்ந்தவர் என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதால் அநேக கிறிஸ்தவர்கள் இந்தக் கருத்தை விரும்புவதில்லை. ஆனால் வேதாகமத்தில், நாம். எதிரும் புதிருமான நான்கு காரியங்ளைக் காண்கிறோம்:
1. அடிமைத்தனத்தில் சுயாதீனம் இருக்கிறது
“இப்பொழுது நீங்கள் பாவத்தி லிருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவ னுக்கு அடிமைகளானதினால், பரிசுத்த மாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ 6:22). நித்தியஜீவன்” (ரோமர் 16-23 வசனங்களையும், 12:1 வசனத்தையும்; 1 கொரிந்தியர் 7:22; 2 கொரிந்தியர் 3:17; எபேசியர் 6:6-8; 1 பேதுரு 2:16 வசனங்களையும் பார்க் கவும்.
2.ஊழியனாக இருப்பதில் மேன்மை இருக்கிறது
“உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். தன்னை உயர்த்து கிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” (மத். 23:11,12). 20:26,27; மாற்கு 9:35; 10:43; யோவான் 12:26 வசனங் களையும் பார்க்கவும்.
3. தாழ்மையில் உயர்வு இருக்கிறது
“ஆகையால் இந்தப் பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்” (மத். 18:4).
லூக்கா 18:14; நீதிமொழிகள் 29:23; யாக்கோபு 4:10; 1 பேதுரு 5:5,6; மத்தேயு 19:30 வசனங்களையும் பார்க்கவும்.
4.பணிவதில் அதிகாரம் இருக்கிறது
இயேசுவானவரைப் பார்க்க வந்த நூற்றுக்கு அதிபதி (100 போர் வீரர்களுக்குத் தளபதி) இந்தக் கருத்தைப் புரிந்துகொண்டான்.
“நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான்; மற்றொருவனை வாவென்றால் வரு கிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான்…” (லூக்கா 7:7,8).
அந்த நூற்றுக்கதிபதி அதி காரத்தின் கீழிருந்தபடியால், அவ னால் அதிகாரம் செலுத்த முடிந்தது; அவன் மனப்பூர்வமாக இயேசுவின் அதிகாரத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தான். 1-10 வசனங்களையும், யாக்கோபு 4:7 வசனத்தையும் பார்க் கவும்.
தேவனுடைய இராஜ்யத்தின் பணிவதும், வாழ்க்கை முறை தேவனுக்குக் கீழ்ப்படிவதுமான மனோபாவங்களைக் கொண்டது (மத்தேயு 12:50; எபேசியர் 6:6; எபிரெயர் 13:21; 1 யோவான் 2:17; 1தெசலோனிக்கேயர் 4:1 வசனங் களைப் பார்க்கவும்).
நாம் நம்மை ஆண்டவருடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுக்கிறோம் – வேண்டா வெறுப்பாக அல்ல பயத்தாலோ அல்லது கடமையுணர்வால் அல்ல ஆனால் கீழ்க்கண்டவற்றுக்காகவே:
1. தேவன் நமக்குச்செய்துள்ள அனைத்துக்காகவும்…(ரோமர் 12:1; எபே. 4:1; தீத்து 3:4-7).
2. அப்படிச் செய்வதில் நாம் நிறைவைக் காண்பதினால்…(சங். 40:8).
3. அன்பின் காரணமாக… (யோவான் 14:15; 1 யோவான் 5:3).
D. இராஜ்யத்தின் கனிகள்
“மேலும், தம்முடைய ராஜ்யத் திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திர ராய் நடக்க வேண்டுமென்று, தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லு கிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறு தலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந் திருக்கிறீர்கள்” (1 தெச. 2:11,12). 2 தெச லோனிக்கேயர் 1:5 வசனத்தையும் பார்க்கவும்.
மத்தேயு 21:43 வசனத்தில் தேவனுடைய ராஜ்யம் “அதற்கேற்ற கனிகளைத் தருகிற” மக்களுக்குக் கொடுக்கப்படும் என்று இயேசு வானவர் கூறுவதைக் காண்கிறோம். அநேக வேத வசனங்களில் இராஜ் யத்தின் கனிகள் எவையென்று கூறப் பட்டுள்ளன:
- அன்பு, சந்தோஷம், சமாதானம் (கலா.5:22,23).
- நற்குணம், நீதி, உண்மை (எபே. 5:9; யாக். 3:13-17).
- நீதி, சமாதானம், சந்தோஷம் (ரோமர் 14:17; எபி. 12:11).
நாம் தேவனால் படைக்கப்பட்டவர்களாக இருக்கிறபடியால், நாம் அவரது இராஜ்யம் மற்றும் அதன் வாழ்க்கை முறைக்காகவும் கூட படைக்கப்பட்டுள்ளோம்.
நம்மில் பரிசுத்த ஆவியானவர் செய்துள்ள மறுபிறப்பின் அதிசயத் தினுடைய இயல்பான வெளிப் பாடே இராஜ்யத்தின் கனிகள் (கலாத்தியர் 5:22 வசனத்தைப் பார்க்கவும்).
ஆண்டவருடைய இராஜ்யத்தின் பிரஜைகளாக நம்முடைய பொறுப்பு, நாம் இப்போது எப்படிப் பட்ட மனந்திரும்பிய மக்களாக இருக்கிறோமோ அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வதே! (1பேதுரு 2:11,12).
“சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்து கொள்ளவும்… உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்” (கொலோ. 1:10,11). 2:6 வசனத்தையும் எபேசியர் 4:1; 6:8-10 வசனங்களையும் பார்க்கவும்.
இராஜ்யத்துக்குரிய வாழ்க்கை என்ற இந்தக் கட்டுரையை குறித்து உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யவும்.
வசனத்தின் நிமித்தம் வரும் உபத்திரவம் video message