உதாரத்துவம்

உதாரத்துவம்

உதாரத்துவம்

உதாரத்துவம் குறித்து விரிவாக இந்த கட்டுரை ஆராய்கிறது…

“வானங்கள் தேவனுடைய மகி மையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக் கிறது” (சங்.19:1,2). வசனங்கள் 3,4ஐயும் வாசித்துப் பார்க்கவும்.

இந்தச் சங்கீதத்தின்மூலம், தேவனுடைய படைப்புக்கள் (வானமும், பூமியும்):

  • தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன
  • அவரது கரங்களின் கிரியையை அறிவிக்கின்றன
  • வார்த்தைகளைப் பொழிகின்றன
  • அறிவைத் தெரிவிக்கின்றன

என்று நாம் அறிகிறோம். நாம் தேவனுடைய படைப்பைக் கவனமாக ஆராய்வோமானால், அதிலிருந்து கற்றுக் கொள்ளலாம்.

பிரபஞ்சத்தின் ஒழுங்கின்மையி லிருந்து, ஒழுங்கைக் கொண்டுவர, இயல்பியல் விதிகள் இருப்பது போலவே, நமது வாழ்க்கையைக் கட்டுப்படுத்த தேவன் ஆவிக்குரிய விதிகளையும் செயல்படுத்தி யுள்ளார்.

இவற்றில் ஒன்றுதான் உதாரத்துவத்தின் விதியாகும்: “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப் பான்” (2கொரி. 9:6) என்று இது நமக்குப் போதிக்கிறது.

A. பங்குதாரர்கள்

தேவனின் உடன் பங்குதாரர் களாகிய நாம் (1கொரி. 3:9; 2கொரி. 5:20; 6:10) நமது பொறுப்புக்கள் எவையென்பதைப் புரிந்துகொள் வது அவசியம்.

1. தேவனே உரிமையாளர்

“பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்த ருடையது” (சங். 24:1). சங்கீதம் 89:11; யோபு 41:11; 1 நாளாகமம் 29:10-14 வசனங்களையும் பார்க்கவும்.

நாம் உரிமையாளர்கள் அல்லர், ஆனால் உக்கிராணிகளாக இருக்கிறோம். தேவனே அனைத்துக்கும் உரிமை யாளராக இருக்கிறார். உயிருள்ளதோ அல்லது உயிரற்றதோ படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் அவருக்கே சொந்தமானவை சொத்துக்கள், வேலைகள், குடும்பங்கள் என்று இந்த உலகில் நாம் தனிப்பட்ட முறையில் பெறக்கூடிய ஒவ்வொன்றும் அவருக்கே சொந்த மான து.

நாம் அனுபவிப்பதற்காக மட் டுமே அவர் இவையனைத்தையும் கொடுத்துள்ளார் (1தீமோ. 6:17); அவை இப்போதும் அவருக்கே சொந்தமானவை என்பதை உணரும் போது, தேவனே அவற்றுக்கான இறுதிப் பொறுப்பைக் கொண்டவர் என்ற உறுதியில் நிம்மதி பெறலாம்.

2. உக்கிராணத்துவம் நமக்குரியது நாம் உரிமையாளர்கள் அல்ல, உக்கிராணிகளே.

வேறு ஒருவருக்குச் சொந்தமானவற்றை நிர்வகித்து அவற்றைக் கண்காணிப்பவனே ஒரு நிர்வாகி. ஆண்டவரே அனைத்துக் கும் உரிமையாளர்; உக்கிராணிகளாக நாம் அவற்றை அவருக்காக ஆனால் நிர்வகிக்கிறோம், கண்காணிக்கிறோம். இந்த உக்கி ராணத்துவத்தில் நாம் உண்மை யுள்ளவர்களாக இருப்பது நம் முடைய பொறுப்பாகும்.

ஆண்டவர் நமக்குக் கொடுத்துள்ளவற்றை நிர்வகிப்பதிலும், கண்காணிப்பதிலும் நமக்குள்ள பொறுப்பைக் குறித்து நாம் அவ ருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் (மத்தேயு 25:14-30 வசனங்களை வாசிக்கவும்).

ஆண்டவருடைய உடமைகளைக் குறித்த இந்த உரிமை யாளர்- உக்கிராணி உறவை நாம் புரிந்துகொள்ளும்போது, உதாரத் துவமாகக் கொடுப்பது நமக்கு எளிதாகிறது.

ஆண்டவருக்கு முன்பாக, நமக்குச் சொந்தமான ஒவ்வொரு பொருளுக்கும் நாம் உக்கிராணியாக இருக்கிறோம்.

1.நமது ஜீவன் (அப். 17:25; 1கொரி. 6:19; கலா. 2:20; யோபு 33:4).

2.நமது நேரம் (சங். 90:12; எபே. 5:15,16; கொலோ. 4:5).

3.நமது தாலந்துகளும், திறமைகளும் (1பேதுரு 4:10; 1கொரி. 12:4-7, 11).

4. நமது உடமைகள் (மத். 6:19-21; Glamour. 3:1,2).

5. நமது நிதி (பணம்) (1தீமோ.6:6-10, 17-19; LDS. 6:24).

6.நற்செய்தி தரும் போதனை (1கொரி. 4:1; 9:16,17; 1தீமோ. 6:20).

என்றாலும்கூட, அநேக கிறிஸ்த வர்கள், தாங்கள் (தசமபாகம்) கொடுக்க விரும்பினாலும் கூட கொடுப்பதற்குச் சிரமப்படுகிறார்கள்.

ஆனால் ஒரு விசுவாசி நல்ல உக்கிராணத்துவத்தின் முழு ஆசீர் வாதங்களையும் பெற வேண்டு மானால், தன்னைத்தானே ஒப்படைக்க வேண்டும்; எந்தவித தயக்கமுமின்றி, ஒருவன் தனது முழு வாழ்க்கையையும், உடமை களையும், திட்டங்களையும், தேவ னுடைய சித்தத்திற்கும், நோக்கத் திற்கும் ஒப்படைக்க வேண்டும்.

நம்மைநாமே ஒப்படைக்கும் போதுதான் ஆண்டவர் அளித்த நமது உடமைகளின் ஒரு பகுதி யையோ (அல்லது பணத்தையோ ) கொடுப்பது என்பதின் பொருளைக் கற்றுக் கொள்கிறோம்.

B. ஆதித்திருச்சபையில் காணப்பட்ட உதாரத்துவம்

“விசவாசிகளெல்லாம் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள்.

காணியாட்சிகளை யும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ் வொருவனுக்கும் தேவையானதற்குத் தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்… ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவா யிருந்தது” (அப். 2:44,45 மற்றும் 4:32).

துவக்ககாலக் கிறிஸ்தவர்களின் இந்த அடிப்படையான மனோ பாவமே, பின்னர் கொடுப்பது பற்றி வெளிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு கருத்துக்கும் அஸ்திபாரமாக அமைந்தது.

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியபோது, கொடுப்பதற்குப் பல்வேறு முறைகள் தோன்றின. ஆனால் உக்கிராணத்துவத்தைப் பற்றி அதாவது அனைத்துமே தேவனுக்குச் சொந்தமானவை என்பது பற்றி அவர்கள் புரிந்து கொண்டுள்ளதையே இந்தப் பல்வேறு வகைக் கொடைகள் வெளிப்படுத்தின.

1. தேவையிலிருப்பவர்களைத் திருச்சபை தாங்கியது

ஆதித் திருச்சபையில் விசாரணைக்காரர்களாக இருப்பதற்கு சிறப்பான நபர்கள் தெரிந்தெடுக்கப்பட்டார்கள் விதவைகளுக்கும், தேவையிலிருப்பவர்களுக்கும் காணிக்கைகளையும், வெகுமதி களையும் பிரித்துக் கொடுப்பது இவர்களது பணியாக இருந்தது (அப்போஸ்தலர் 6:1-3 வசனங்களைப் பார்க்கவும்).

தேவை காணப் படும் இடங்களுக்குக் கொடுப்பவை சென்று சேருமாறு விசாரிப்பதே இவர்களது ஊழியமாக இருந்தது.

2. சபைகள் ஒன்றுக்கொன்று தியாக மனப்பான்மையுடன் கொடுத்துதவின

எருசலேமிலிருந்த யூத கிறிஸ்த வர்கள் பஞ்சத்தில் அவதிப்பட்ட போது, ஏழ்மையிலும் சித்திரவதை களிலும் துன்பப்பட்டுக் கொண் டிருந்த புறஜாதி சபைகள் அவர் களுக்குக் கொடுத்துதவின.

“அவர்கள் மிகுந்த உபத்திரவத் தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத் தார்கள்.

மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார் களென்பதற்கு, நான் சாட்சியாயிருக் கிறேன்” (2கொரி. 8:2,3), 1,4 வசனங் களையும் பார்க்கவும்.

3. திருச்சபை பயண ஊழியங்களை ஆதரித்தது

பவுல் அப்போஸ்தலன் ஒவ் வொரு இடமாகப் பயணம் சென்று புதிய சபைகளை நிறுவினார். சில வேளைகளில் அவர் தனது சொந்தத் தேவைகளுக்காக தனது கைகளால் உழைக்க வேண்டியிருந்தது (அப். 18:3; 2தெச. 3:7-9).

மற்ற வேளைகளில், பவுல் அப்போஸ்தலனைப் போன்று, பயண ஊழியங்களைச் செய்பவர் களுக்கு ஆதரவளித்ததின்மூலம், பிலிப்பி சபையினர், தேவனால் பாராட்டப்படும் ஈகைகளின் மெய் யான னார்கள். உணர்வை வெளிப்படுத்தி

“எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்க ளால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக… வரப்பற்றிக் கொண்ட படியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்” (பிலி 4:18).15-17 வசனங்களையும் படிக்கவும்.

4. கொடுப்பதற்கு இயலும்படி கிறிஸ்தவர்கள் உழைத்தார்கள்

“திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத் தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலை செய்து பிரயாசப்படக் கடவன்” (எபே. 4:28).

5.கொடுப்பது அவர்களது அன்புக்கு நிரூபணமாக இருந்தது

இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக…. ஆதலால், உங்கள் அன்பையும்… (கொடுப்பதின் மூலம்) அவர்களுக்குத் திருஷ்டாந்தப்படுத் துங்கள்” (2கொரி. 8:15,24). (7-15 வசனங்கள்; 1கொரிந்தியர் 16:1,2; 1யோவான் 3:17,18 வசனங்களையும் பார்க்கவும்.

C. கொடுப்பது பற்றிய தேவனுடைய பிரமாணங்கள்

1 கொரிந்தியர் 10:11 வசனத்தில் நாம் இஸ்ரவேலருக்குச் சம்பவித் ததைக் கொண்டு கற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. தேவனால் அவர்களுக்குக் கொடுக் கப்பட்ட பிரமாணங்களை நாம் செயல்படுத்த வேண்டும்.

அதே வேளையில் நாம் இஸ்ரவேலரும் (அவர்களது தலைவர்களும்) வனாந் தரத்தில் செய்த தவறுகளைச் செய்யாமல் தவிர்க்க வேண்டும். ஈகையைப் பொருத்தமட்டில், கொடுப்பதில் நமக்கு வழிகாட்டும் அற்புதமான முறைகளைக் காண லாம்.

1.நாம் சதவீத அளவோடு கொடுப்பதைத் துவக்க வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார்

“என் ஆலயத்தில் ஆகாரம் உண்டா யிருக்கும்படித் தசமபாகங்களை (10 சத வீதம் அல்லது பத்தில் ஒன்று) யெல்லாம் பண்ட சாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத் தின் பலகணிகளைத் திறந்து, இடங் கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோ வென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல். 3:10).

2. நாம் ஒரு திட்டத்தோடும் ஒழுங் காகவும் கொடுக்க வேண்டும்

“அப்பொழுது எசேக்கியா கர்த்த ருடைய ஆலயத்தில் பண்டகசாலை களை ஆயத்தப்படுத்தச் சொன்னான். அவர்கள் அவைகளை ஆயத்தப் படுத்தினபின்பு, அவைகளிலே காணிக் கைகளையும், தசம் பாகத்தையும், பரிசுத்தம் பண்ணப்பட்டவைகளையும் உண்மையாய் எடுத்து வைத்தார்கள்” (2நாளா. 31:11,12).

3. நாம் முதலாவதையும், மேன்மையானதையும் தேவ னுக்குக் கொடுக்க வேண்டும்

“உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண் டோடும்” (நீதி.3:9,10).

 

கர்த்தர் யோசுவாவை தெரிந்த்தெடுக்க காரணம் Video Message

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *