ஐக்கியம்
A. ஐக்கியத்தின் நோக்கம்
கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடிவரும் ஐக்கியம் மிகவும் இன்றியமையாதது ஏனென்றால்…
1. விசுவாசி ஊக்குவிக்கப்படு கிறான்; கிறிஸ்துவில் வளர்ச்சி பெறுகிறான்.
“நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக் குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும், உங்களிலும் என் னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்க ளோடேகூட நானும் ஆறுதலடையும் படிக்கும், உங்களைக் காண வாஞ்சையா யிருக்கிறபடியினாலே…” (ரோமர் 1:10,11).
2.இயேசுவானவர் தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதை உலகம் அறிந்துகொள்கிறது.
“நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர் களுக்குக் கொடுத்தேன்.
ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும் படிக்கும், என்னை நீர் அனுப்பினதை யும், நீர் என்னில் அன்பாயிருக்கிறது போல அவர்களிலும் அன்பா யிருக்கிறதையும் உலகம் அறியும் படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்” (யோவான் 17:22,23)
B. ஐக்கியத்திற்கான நிபந்தனைகள்
1.ஒருவருக்கொருவர் அடிப்படை யான ஒப்படைப்பு
“சகோதர சிநேகத்திலே ஒருவர் மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக் கொள்ளுங்கள்” (ரோமர் 12:10).
அடிப்படையான நம்பிக்கை இல்லாவிட்டால் ஐக்கியம் உண்டா காது. ஒப்படைப்பின் அளவைப் பொறுத்தே ஐக்கியத்தின் நெருக்கம் வேறுபடும்.
2. நமது ஒப்படைப்பு “அகாபே அன்பின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.
“அகாபே” என்பது ஒருவழி அன்பாகும்; எந்த நிலைமையிலும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலும் காட்டப்படும் அன்பாகும். எனவே இத்தகையதோர் ஒப்படைப்பு மற்ற நபரின் குணநலக் குறைவுகளினால் பாதிக்கப்பட மாட்டாது.
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்பா யிருங்கள்; நான் உங்களில் அன்பா யிருந்ததுபோல நீங்களும் ஒருவரி லொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்” (யோவான் 13:34).
3. மெய்யான ஐக்கியம் கிறிஸ்துவை மையமாகக் கொண்டது.
ஒருவருக்கொருவர் நாம் கொண் டுள்ள ஐக்கியம், கிறிஸ்துவுக்குள் நாம் பொதுவாகக் கொண்டுள்ள ஒப்படைப்பை அடித்தளமாகக் கொண்டுள்ளது.
….எங்களுடைய ஐக்கியம் பிதா வோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது” (1யோவான் 1:3). பிலிப்பியர் 2:1,2 வசனங்களையும் பார்க்கவும்.
4. ஒளியில் நடத்தல்
நமது ஐக்கியத்திற்காக நாம் ஒருவருக்கொருவர் திறந்த மனமுள்ளவர்களாகவும், நேர்மையும், உண்மையுமுள்ளவர்களாகவும் நடந்து கொள்வது அவசியமாக இருக்கிறது. நாம் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியிருக்கும்:
1. நம்முடைய சொந்தப் பாவங் களை மற்றவர்களிடம் அறிக்கை செய்தல் அல்லது அன்போடு மற்றவர்களின் பாவங்களை மூடுதல்.
“நாம் அவரோடே ஐக்கியப் பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாகயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம்.
அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளி யிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1யோவான் 1:6,7). மத்தேயு 18:15 வசனத்தையும் பார்க்கவும்.
2. ஒளிக்குக் கீழ்ப்படிதல் தேவன் கொடுத்துள்ள பொதுவான மற்றும் குறிப்பான கற்பனைகள்.
3. முகமூடிகளையோ அல்லது பொய்யான போர்வைகளையோ அகற்றுதல். உலகத்தாரின் ஐக் கியமோ பெரும்பாலும் மாய்மால முள்ளதாக இருக்கிறது – நடிப்பே காணப்படுகிறது; இந்த ஐக்கியம் மெய்யானதல்ல.
“ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப் படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிற படியால், சுத்த இருதயத்தோடே ஒருவரி லொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்” (1பேதுரு 1:22),
5. மற்றவரின் நலனில் மெய்யான அக்கறை கொண்டிருத்தல்
சுய இலாபத்திற்கான எந்தவித மறைவான நோக்கமும் நம்மிடம் காணப்படக் கூடாது. வாங்குவதி லல்ல, கொடுப்பதிலே நாம் வாஞ்சை யுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
“ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத் தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக் கடவீர்கள். அவனவன் தனக் கானவைகளையல்ல, பிறருக்கானவை களையும் நோக்குவானாக” (பிலி.2:3,4).
6.உயிரையே கொடுக்கக்கூடிய அளவு தியாக உணர்வுள்ளவர்களாக இருத்தல்
“நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:12,13).
வெறும் சரீரப்பிரகாரமான வாழ்க்கையோடு வாழ்க்கை முடிவடைந்துவிடுவதில்லை. நமது உடமைகள், தனிப்பட்ட ஆர்வங் கள், கொடுக்கும் முக்கியத்துவங்கள் இவையும் வாழ்க்கையின் அம்சங் களே (யாக். 2:15,16).
நமக்குரியவற்றை மட்டுமின்றி, நம்மையும் வெளிப் படையாகப் பகிர்ந்துகொள்ளச் சித்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒருவர் தன்னைப் பற்றி எவ்வளவு தூரம் வெளிப்படுத்தச் சித்தமுள்ளவராக இருக்கிறாரோ, அந்த அளவே அவரைப் பற்றி நாம் அறிந்துகொள்ள முடியும்.
C. திருச்சபையில் ஐக்கியம் என்பது….
1. அனைத்துப் பொருட்களையும் பகிர்ந்தளித்தல்
அவர்களது ஐக்கியத்தின் வளர்ச்சியின் மூன்று படிகளை அப்போஸ்தலர் 4:32 வசனத்தில் காணலாம்
முதலாவதாக, அவர் கள் ஒரே இருதயமுள்ளவர்களாக (ஆவி) இருந்தார்கள்; அடுத்ததாக ஒரே மனமுள்ளவர்களாக (உள்ளம்) இருந்தார்கள்; இறுதியாக அனைத்துப் பொருட்களும் அவர்களுக்குப் பொதுவானதாக இருந்தன.
“விசுவாசிகளெல்லாரும் ஒருமித் திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். காணியாட்சி களையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத் தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்” (அப். 2:44,45),
2. தங்கள் ஜீவனைக் கொடுத்தல்
“கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில் லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.
அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப் பற்றி நான் மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல் லாரும் நன்றியறிதலுள்ளவர்களா யிருக்கிறார்கள்” (ரோமர் 16:3,4).
3. சகோதரருக்கு ஊழியம் செய் வதற்காக அர்ப்பணித்தல்
“சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயா நாட்டிலே முதற் பலனானவர்களென்றும், பரிசுத்தவான் களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார் களென்றும் அறிந்திருக்கிறீர்களே” (1கொரி. 16:15),
4.தேவையிலிருக்கும் மற்றவர் களுக்கு உதவும் வாய்க்காலாக இருத்தல்
சமநிலைப் பிரமாணத்தின்படியே அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத் திலே உங்களுடைய செல்வம் அவர் களுடைய வறுமைக்கு உதவுவதாக” (20mm. 8:15). 1கொரிந்தியர் 16:17 வசனத்தையும் பார்க்கவும்.
5.வேதனையில் பங்குகொள்ளுதல்
“ஆகிலும் நீங்கள் என் உபத் திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது” (பிலி. 4:14).
6. தியாக மனப்பான்மையுடன் கொடுத்தல்
“அவர்கள் மிகுந்த உபத்திரவத்தி னாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சி யும் கொடுக்க, தாங்களே மனதுள்ள வர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்” (2 கொரி.8:2,3).
7. உதாரத்துவத்தைச் செயல் படுத்துதல்
“பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்” (3யோவான் 5). எபிரெயர் 13:2 வசனத்தையும் பார்க்கவும்.
8. ஒருவருக்கொருவர் ஊக்கமளித்து, கட்டியெழுப்புதல்
“நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையா யிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர் களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந் தோம்” (1தெச. 2:8). 2 தீமோத்தேயு 3:10-14 வசனங்களையும் பார்க்கவும்.
D. ஐக்கியத்தின் பலன்கள் ஆதிகால திருச்சபையில் ஐக்கி யத்தின் விளைவுகளாவன:
- தேவனைப் பற்றிய பயம் (அப்.2:43);
- மகிழ்ச்சி (அப். 2:46);
- அனைத்து மக்களிடமும் தயவு (அப். 2:47);
- புதிய விசுவாசிகள் சேர்க்கப் படுதல் (அப். 2:47);
- அனைத்து தேவைகளும் சந்திக்கப்பட்டன (பிலி. 4:19);
- தலைமைத்துவம் உருவாகியது (1 கொரி. 16:15,16).
கர்த்தரை நேசிப்பதற்கான அடையாளங்கள் Video Message