அகந்தை

அகந்தை அகந்தை – ARROGANCE

அகந்தை என்பது ஆணவம், கர்வம், வீண்பெருமை ஆகியவற்றின் கூட்டு பெயராகும். மனுஷரிடத்தில் இது காணப்படக் கூடாது.

நீதிமொழிகளும் அகந்தையும்

  1. நீதிமொழிகள் புஸ்தகத்தில் அகந்தைக்கு விரோதமாக பல ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.
  2. “அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு” (நீதி 11:2) 
  3. “அகந்தையினால்மாத்திரம் வாதுபிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்தில் ஞானம் உண்டு” (நீதி 13:10).
  4.  “மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்” (நீதி 14:3), 
  5. “அழிவுக்கு முன்னானது அகந்தை;விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” (நீதி 16:18). 
  6. “மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே (நீதி 21:4). 
  7. “அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்” (நீதி 21:24). 
  8. “மனுஷனுடையஅகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்” (நீதி 29:23).

மரியாளும் அகந்தையும்

  • மரியாள் கர்த்தரைத் துதித்து பாடியபோது, “இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைக் கர்த்தர் சிதறடித்தார்” (லூக் 1:51) என்று பாடினாள்.

பவுலும் அகந்தையும்

  • மரணத்திற்குப் பாத்திரமான சுபாவத்தைப் பற்றி பவுல் அட்டவணையிட்டுக் கூறும்போது “அகந்தையையும்” கூறியிருக்கிறார் (ரோமர் 1:30) 
  • கடைசி நாட்களில் மனுஷர் அகந்தையுள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் பவுல் தீமோத்தேயுவிற்கு எச்சரித்துக் கூறியிருக்கிறார் (2தீமோ 3:2). 

வேதத்தில் உள்ள அகந்தை 

  1. 1 சாமு 2:3 பேசாதிருங்கள் அகந்தையான பேச்சு 
  2. நெகே 9:10 ஜனங்களை அகந்தையாய் நடத்தினார்கள்
  3. யோபு 40:11 அகந்தையுள்ளவனையெல்லாம் தேடி
  4. சங் 73:8 அகந்தையாய்க் கொடுமைபேசுகிறார்கள் 
  5. சங் 119:51 அகந்தைக்காரர் என்னை மிகவும்
  6. நீதி 8.13 பெருமையையும் அகந்தையையும்
  7. நீதி11:2 அகந்தைவந்தால் இலச்சையும் வரு
  8. நீதி 13.0 அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும் 
  9. நீதி 14:3 அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு
  10. நீதி 16.18 முன்னானது அகந்தை விழுதலுக்கு
  11. நீதி 21:4 பார்வையும் அகந்தையான மனமுமுள்ள
  12. 21:24 அவன் அகந்தையான சினத்தோடே 
  13. ஏசா 29:23 மனுஷனுடைய அகந்தைநீதி
  14. ஏசா 3:16 குமாரத்திகள் அகந்தையாயிருந்து கழுத்தை
  15. ஏசா9:10 அகந்தையும் மனப்பெருமையுமாய்
  16. எரே 48:29 அவன் அகந்தையும் எரே
  17. எசே 49:16 இருதயத்தின் அகந்தையும் உன்னை
  18. எசே 7:10 மிலாறு பூக்கிறது அகந்தை
  19. செழிக்கிறது
  20. எசே 7:20 மகிமையை அகந்தைக்கென்று வைத்து
  21. தானி 4:37 நியாயமுமானவைகள் அகந்தையாய்
  22. ஓசி 5:5 இஸ்ரவேலின்அகந்தை அவர்கள் 
  23. ஓசி 7:10 இஸ்ரவேலின் அகந்தை அவர்கள்
  24. ஒப 1:3 இருதயத்தின்அகந்தை உன்னை அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார் 1:51
  25. லூக் ரோம 1:30 அகந்தையுள்ளவர்களுமாய் வீம்புக் 
  26. 2தீமோ 3:2 அகந்தையுள்ளவர்களாயும்

அகந்தைஎன்பதற்கான எபிரேய வார்த்தைகள்:-

பழைய ஏற்பாட்டில்அகந்தை” என்பதற்கான எபிரெய வார்த்தைகள்  -gay eh’ – 1343, ) -gah-av-aw’ – 1346,  – gaw-ohn’ – 1347, – gaw – bah’-1361, -gay-vaw” -1467, -zade’ – 2086, – zaw-done’ – 2087,  – mook – 4167 என்பவையாகும்.

அகந்தைஎன்பதற்கான கிரேக்க வார்த்தைகள்:-

புதிய ஏற்பாட்டில்அகந்தை” என்பதற்கான கிரேக்க வார்த்தை  – hypereephanos – 5244 என்பதாகும்.

 

 கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார்? என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தைஉன்னை மோசம்போக்குகிறது.

ஒபதியா 1:3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *