வேதமும் விசுவாசியும்

வேதமும் விசுவாசியும் வேதாகமும் விசுவாசியும்

இந்த தலைப்பின் (வேதமும் விசுவாசியும்) கீழ் நாம் வேதத்திற்க்கும் விசுவாசிக்கும் உள்ள தெடர்பு பற்றி அறிந்துக்கொள்ள இருக்கிறோம்.

1.வேதமும் – விசுவாசியும்: வேதம் விசுவாசிக்கு செய்ய கூடியவைகள்

a) பிரகாசிக்கப்பண்ணுகிறது (சங்கீதம் 119:130)

  • உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். சங்கீதம் 119:130

b) பேதையை ஞானியாக்குகிறது (சங்கீதம் 19:7)

  • கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7

c) விசுவாசத்தை உருவாக்குகிறது (யோவான்20:31)

  • இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. யோவான் 20:31
  1. i) நம்பிக்கையை உருவாக்குகிறது (Psaim 119:49, Romans 15:4)
  2. ii) கீழ்ப்படிதலை உருவாக்குகிறது (உபாகமம்17:19-20)

d) இருதத்தை சுத்திகரிக்கிறது (யோவான் 15:3, Ephesians 5:26)

  • நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். யோவான் 15:3

i) வழிகளை சுத்திகரிக்கிறது (Psalm 119:9)

  • வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே. சங்கீதம் 119:9

e) அழிவுக்குரிய பாதைகளிலிருந்து நம்மை காக்கிறது (சஙீதம் 17:4

  • மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன். சங்கீதம் 17:4

(f) ஜீவனை ஆதரிக்கிறது (மத்தேயு 4:4 உபாகமம் 8:3)

  • அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். மத்தேயு 4:4

g) விசுவாசத்தில் கட்டி எழுப்புகிறது (அப்போஸ்தலர் 20:32)

  • இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். அப்போஸ்தலர் 20:32

(h) ஆறுதல் படுத்துகிறது (சங்கீதம் 119:82. ரோமர் 15:4)

  • எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது. சங்கீதம் 119:82

i) கிருபையில் வளரச்செய்கிறது (1 பேதுரு 2:2-3)

  • சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, 1 பேதுரு 2:2
  • நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். 1 பேதுரு 2:3

j) எச்சரிக்கிறது (1 கொரிந்தியர் 10;11)

  • இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது. உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. 1 கொரிந்தியர் 10:11

k) இருதயத்தை களிகூறச்செய்கிறது (சங்கீதம் 119:18,111)

  • உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். சங்கீதம் 119:18
  • உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி. சங்கீதம் 119:111

l) பரிசுத்தமாக்குகிறது (யோவான் 17:17, எபேசியர் 5:26)

  • உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்: உம்முடைய வசனமே சத்தியம். யோவான் 17:17

2.வேதமும் – வசுவாசியும் : வேதம் எப்படி இருக்கவேண்டும்.

a) விசுவாசிக்கக்கூட்யதாகவும் (யோவான் 2:22) மற்றும் கீழ்ப்படியக்கூடியதாகவும்

  • அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும்இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். யோவான் 2:22

b) போதிப்பதற்கு நிலையானதாய் இருக்கவேண்டும் (பேதுரு 4:11)

  • ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன். ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன். எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக. அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். 1 பேதுரு 4:11

c) ஆர்வமுள்ளதாயிருக்க வேண்டும் (1 கொரிந்தியர் 1:31, 1பேதுரு1:16)

  • அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். 1 கொரிந்தியர் 1:31

d) பொதுவாய் எல்லோருக்கும் வாசிக்கக்கூடியதாய் இருக்கவேண்டும். (அப்போஸ்தலர்13:15)

  •  நியாயப்பிரமாணமும் தீர்கதரிசனஆகமமும் வாசித்துமுடிந்த பின்பு; சகோதரரே, நீங்கள் ஜனங்களுக்குப் புத்திசொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லும்படி ஜெபஆலயத்தலைவர்கள் அவர்களிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.அப்போஸ்தலர் 13:15

e) அறியப்பட்டதாயிருக்க வேண்டும் (2தீமோத்தேயு 3:15)

  • கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். 2 தீமோத்தேயு 3:15

f) தேவனுடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்ளப் படுவதாயிருக்கவேண்டும் (1 தெசலோனிக்கேயர் 2:13)

  • ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம். அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது. 1 தெசலோனிக்கேயர் 2:13

g) சாந்தத்துடன் (யாக்கோபு1:21) ஆராயப்படக்கூடியதாய் இருக்கவேண்டும் (யோவான் 5:39, அப்போஸ்தலர் 17:11)

  • ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். யாக்கோபு 1:21

h) நமது ஆவிக்குரிய எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடியதாய் இருக்கவேண்டும். (எபேசியர் 6:11,17)

  • நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். எபேசியர் 6:11
  • இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எபேசியர் 6:17

i) ஒவ்வொருவருக்கும் மற்றும் சிறுபிள்ளைகளுக்குக்கூட போதிக்கப்படக்கூடியதாய் இருக்க வேண்டும் (உபாகமம் 6:7, 11:19, நெகேமியா 8:7-8)

  • நீ அவைகளை உன் பிள்ளைளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, உபாகமம் 6:7

j) தொடர்ந்து பேசக்கூடியதாய் இருக்கவேண்டும் (உபாகமம் 6:7)

  • நீ அவைகளை உன் பிள்ளைளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, உபாகமம் 6:7

k) வஞ்சிப்பதற்கேதுவாய் பயன்படுத்தக்கூடாததாய் இருக்கவேண்டும். (2 கொரிந்தியர் 4:2)

  • வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம். 2 கொரிந்தியர் 4:2

3. அவிசுவாசிக்கு வேதம் எப்படி இருக்கவேண்டும்

a) மறுபடி ஜெனிப்பிக்கக்கூடியதாய் இருக்கவேண்டும்.(யாக்கோபு1:18, 1 பேதுரு 1:23)

  • அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார். யாக்கோபு 1:18

b) துரிதப்படுத்துவதாயிருக்க வேண்டும் (சங்கீதம் 119:50.93)

  • அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது. சங்கீதம் 119:50
  • நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன், அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். சங்கீதம் 119:93

c) ஆத்துமாவை ஆதாயப்படுத்துவதாய் இருக்க வேண்டும் (சங்கீதம் 19:7)

  • கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7

வேதமும் விசுவாசியும் என்ற இந்த பதிவைக் குறித்து மறக்காமல் கமான்ட் பன்னுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *