வேதாகம கால திருச்சப
திருச்சபை எப்படி இருக்கவேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்…..
அந்த பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள் (அப் 17:11)
வேதாகம கால திருச்சபை
- உற்சாகப்படுத்தி உபயோகப்படுத்தும் திருச்சபை (அப் 9:27)
- அழைப்பின் நோக்கத்தை அறிந்திருக்கும் திருச்சபை (அப் 6:4)
- மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்திருக்கும் திருச்சபை (அப் 11:26)
- உலகத்தோடு ஒத்துப்போகாதிருக்கும் திருச்சபை (அப் 2:40)
- விவேகத்துடன் வேகமாய் செயல்படும் திருச்சபை (அப் 8:4; 9:20)
- உல்லாசத்தை உதறித்தள்ளும் திருச்சபை (பிலி 3:7-11)
- பரமனின் மகிமையை விரும்பும் திருச்சபை (அப் 2:1-5)
- கவனமாய் செயல்படும் திருச்சபை (எபே 5:15)
- கரிசனையோடு முன்னேறும் திருச்சபை (அப் 6:2-5)
- தேவன் கொடுத்த
- உடமைகள், ஆத்துமாக்கள், வல்லமை வரங்கள், அபிஷேகம் அனைத்தும் தேவன் கொடுத்த தரிசனத்தை நிறைவேற்றி ஜெயமாய் முடிக்கவே!
- தரிசனத்தின் பங்காளியாயிருக்கும் திருச்சபை (அப் 6:2-4)
- சவாலுக்கு பதில் சவால் விடும் திருச்சபை (அப் 4:18,19)
- பிரிவினையை ஒன்றாக்கும் திருச்சபை (எபே 2:19-22)
- வேற்றுமையிலும் ஒற்றுமையாயிருக்கும் திருச்சபை (1கொரி 3:9,22,23)
- உலகத்தைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் திருச்சபை (அப் 19:26)
- ஆவியானவரால் அனுதினமும் நடத்தப்படும் திருச்சபை (அப் 8:26-29)
- அறுவடையைக் குறித்த தரிசனப் பார்வையைப் பெற்ற திருச்சபை (அப் 9:35)
- எதிரிகளின் பயமுறுத்தல்களை முறியடித்து முன்னேறும் திருச்சபை (அப் 4:31)
- தேவ பாரத்தை இருதயத்தில் பெற்றிருக்கும் திருச்சபை (அப் 8:14-17)
- தரிசனத்தோடும், ஊழியரோடும் இணைந்து செயல்படும் திருச்சபை (அப் 13:2,3)
- தேவனுக்காக இழப்பதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும் திருச்சபை (அப் 5:41; 15:25)
- சாதாரணமானவர்களை அசாதாரணமானவர்களாய் மாற்றும் திருச்சபை (அப் 4:13; 5:15; 4:4)
- கண்களில் கண்ணீரும், இருதயத்தில் வாஞ்சையும், முழங்கால்களில் பெலனும் குன்றாத திருச்சபை
கற்றுக்கொள்கிற கிறிஸ்தவர்கள் வளருகிற கிறிஸ்தவர்கள்; கற்பதை நிறுத்தும்போது வளருவதை நிறுத்துகிறார்கள் – ஜான் வெஸ்லி
- உயிர் பெற்ற திருச்சபை (எபே 2:1; 2கொரி 5:17; வெளி 1:18)
- உயிர்மீட்சியடைந்த திருச்சபை (எபே 2:42-47)
- உணர்வுள்ள திருச்சபை (அப் 2:37)
- உணவு தரும் திருச்சபை (அப் 20:20)
- உறவுள்ள திருச்சபை (அப் 2:42-44)
- உற்சாகமூட்டும் திருச்சபை (அப் 14:22; 16:15)
- உபயோகிக்கும் திருச்சபை (1கொரி 12:11)
- உயர்த்தும் திருச்சபை (அப் 5:13)
- உலகை ஜெயிக்கும் திருச்சபை (அப் 6:10)
- உத்தரவாதமுள்ள திருச்சபை (அப் 12:5)
- உண்மையுள்ள திருச்சபை (1தீமோ 1:12; 2தீமோ 2:2)
- உருவாக்கும் திருச்சபை (அப் 6:8)
- உலகத்திற்கு அனுப்பிய திருச்சபை (அப் 13:2)
- உறுதியான திருச்சபை (மத் 16:18)
- உலகத்தைக் கலக்கிய திருச்சபை (அப் 17:6)
- உலகத்திற்கு ஒத்துப்போகாத திருச்சபை (அப் 2:40)
- உன்னதமான திருச்சபை (அப் 9:31)
- உபத்திரவத்தை சகித்த திருச்சபை (அப் 8:1,3: 14:22)
- உக்கிராணத்தைக் காத்துக்கொண்ட திருச்சபை (அப் 14:22; தீத்து 1:7-9)
- உலகத்திற்கு இயேசுவைக் காண்பித்த திருச்சபையாக இருந்தன. (அப் 8:4; 11:26)
ஆதி திருச்சபையினர்…
- ஒருமனமாய் கூடி ஜெபித்தனர் (அப் 2:1-36)
- எதிர்ப்புக்கு அஞ்சாதிருந்தனர் (அப் 4:1-23)
- உபத்திரவத்திலும் ஜெபத்தை விடாதிருந்தனர் (அப் 4:24-31)
- சபையாரது தவறுகளைத் தட்டிக்கேட்டனர் (அப் 5:1-11)
- அற்புத அடையாளங்களை நடப்பித்தனர் (அப் 5:12)
- அதிசயங்களைக் கண்கூடாகக் கண்டனர் (அப் 5:12)
- எதிர்ப்புகளிலும் விசுவாசத்தை கைவிடாதிருந்தனர் (அப் 5:18-24
- எளியவர்களை விசாரித்து உபசரித்தனர் (அப் 6:1)
- ஜெபிப்பதிலும் போதிப்பதிலும் தரித்திருந்தனர் (அப் 6:4)
- ஞானத்திலும் சாட்சியிலும் நிறைந்திருந்தனர் (அப் 6:3)
தேவனுடன் கொள்ளும் ஆழமான தொடர்பின் மிக உயர்ந்த விளைவு ஆத்தும வாஞ்சையே எனலாம். இந்த தணியாத வாஞ்சைதான் சுயநலமற்ற அன்பின் உன்னத வடிவம்.
- சந்தோஷத்திலும் ஆவியிலும் நிரப்பப்பட்டனர் (அப் 13:52)
- இரத்த சாட்சியாய் மரிக்கவும் துணிந்திருந்தனர் (அப் 7:54-60)
- தேவதூதனால் வழிநடத்தப்பட்டனர் (அப் 8:26)
- பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டனர் (அப்8:29)
- தனி ஜெபத்தில் வளர்ந்து இருந்தனர் (அப் 9:10-18)
- பயபக்திக்குரிய ஜீவியம் செய்தனர் (அப் 10:1-4)
- ஊழியத்தால் அரசாங்கத்தை கலங்க வைத்தனர் (அப் 12:18-23)
- மந்திரவாதிகளை கலங்க வைத்தனர் (அப் 13:6-13)
- அசுத்த ஆவிகளை விரட்டி மக்களை விடுவித்தனர் (அப் 16:16-18)
- மனுஷ மகிமையை விரும்பாதிருந்தனர் (அப் 14:15)
- ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட்டனர் (அப் 14:28)
- ஒருவருக்கொருவர் நற்சாட்சி பெற்றிருந்தனர் (அப் 16:2)
- பாடுகளின்போது உண்மையாயிருந்தனர் (அப் 16:25-28)
- விக்கிரகங்களைக் கண்டு மனங்கொதித்தனர் (அப் 17:16-32)
- இயேசுவை கிறிஸ்து என்று பிரசித்தப்படுத்தினர் (அப் 17:1-3)
நூறுபேரில் ஒருவன் வேதாகமத்தைப் படிப்பான்; மற்ற தொண்ணூற்றொன்பது பேர் கிறிஸ்தவனைப் படிப்பார்கள் – டி.எல்.மூடி
- காவலில் இருந்தபோதும் பிரசங்கித்து வந்தனர் (அப் 21:40)
- குடும்பமாய் ஊழியஞ்செய்தனர் (அப் 21:8-9)
- கிரமமாய் ஊழியஞ்செய்தனர் (அப் 18:23)
- தேவ சித்தம் நடக்க காத்திருந்தனர் (அப் 21:14)
- எதிரான மனிதர்களாலும், பிசாசுகளாலும் அறியப்பட்டிருந்தனர் (அப் 19:13-17)
மேலும்…
- ஒருமனமாய் ஊழியஞ்செய்தனர் ஆர்வத்தோடு ஊழியஞ்செய்தனர்
- தைரியத்தோடு ஊழியஞ்செய்தனர்
- மனப்பூர்வமாய் ஊழியஞ்செய்தனர்
- தேவனைக் கனப்படுத்தி ஊழியஞ்செய்தனர்
- உபவாசத்தோடு ஊழியஞ்செய்தனர்
- தியாகத்தோடு ஊழியஞ்செய்தனர்
- தரிசனத்தோடு ஊழியஞ்செய்தனர்
கிறிஸ்தவர்களின் வாழ்க்கையின்மூலம் வெளிப்படுகிற நற்கிரியைகளை வைத்துதான் மக்கள் கிறிஸ்தவத்தை நிதானிக்கின்றனர் – மாக்ஸ்வெல்
- அற்புத அடையாளங்களோடு ஊழியஞ்செய்தனர்
- எல்லா மக்களுக்கும் ஊழியஞ்செய்தனர்
- எல்லா இடங்களிலும் ஊழியஞ்செய்தனர்
- தேவ சித்தத்தோடு ஊழியஞ்செய்தனர்
- தேவ வழிநடத்துதலோடு ஊழியஞ்செய்தனர்
- ஆத்தும பாரத்தோடு ஊழியஞ்செய்தனர்
- தேவ நாம மகிமைக்கென்று ஊழியஞ்செய்தனர்
ஆவிக்குரிய மனிதன் தான் சந்திக்கும் போராட்டத்தில் அதை எப்படிக் கையாளுகிறான் என்பதை வைத்தே அவனுடைய ஆவிக்குரிய முதிர்ச்சி இருக்கிறது.
- உண்மையுள்ளவர்களாயிருந்தனர்
- உபத்திரவங்களைச் சகித்தனர்
- இரத்த சாட்சியாக மரிக்க ஒப்புக்கொடுத்தனர்
- தேவனுக்குக் கீழ்ப்படிந்தனர்
- கற்றுக்கொள்ள வாஞ்சையாயிருந்தனர்
- கடைபிடிக்க விருப்பமாயிருந்தனர்
- விசேஷித்த குணங்களுடையவர்களாயிருந்தனர்
- குறிக்கோள் உடையவர்களாயிருந்தனர்
- கொடுக்கிறவர்களாயிருந்தனர்
- தேவன்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தனர்
- தெய்வீக குணமுள்ளவர்களாயிருந்தனர்
சோதிக்கப்படாத ஆயிரம் கிறிஸ்தவர்களைக் காட்டிலும் சோதிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவன் சிறந்தவன் – மார்ட்டின் லூத்தர்
- பணிவு உடையவர்களாயிருந்தனர்
- ஒருவருக்கொருவர் மன்னிக்கிறவர்களாயிருந்தனர்
- மாய்மாலமற்றவர்களாயிருந்தனர்
- வல்லமை உடையவர்களாயிருந்தனர்
- பொறுமை உள்ளவர்களாயிருந்தனர்
- பெருமை இல்லாதவர்களாயிருந்தனர்
- பரிசுத்தத்தின்மேல் வாஞ்சையுள்ளவர்களாயிருந்தனர்
- பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களாயிருந்தனர்
- நன்றியுள்ளவர்களாயிருந்தனர்
- செயல்படுகிறவர்களாயிருந்தனர்
- மனதுருக்கம் உள்ளவர்களாயிருந்தனர்
தேவனைப் புகழ்ந்துகொண்டே இருப்பது மட்டுமல்ல; தேவனால் புகழப்படும்படி வாழ்வதே உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை
- வாழ்க்கையில் இயேசுவைப் பிரதிபலிக்கிறவர்களாயிருந்தனர்
- தேவ அன்பினால் நிறையப்பட்டவர்களாயிருந்தனர்.
- தேவ சித்தம் செய்கிறவர்களாயிருந்தனர்
- தேவனால் நடத்தப்படுகிறவர்களாயிருந்தனர்
- சுயத்தை சிலுவையின்மேல் அறைந்தனர்
- சத்தியத்தில் வாழ்ந்தனர்
- சிலுவை சுமக்க ஒப்புக்கொடுத்திருந்தனர்
- மனப்பூர்வமாய் ஜெபித்தனர்
- சபைக்கு உத்தரவாதமுள்ளவர்களாயிருந்தனர்
- ஆத்தும பாரம் உடையவர்களாயிருந்தனர்
- இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுகிறவர்களாயிருந்தனர்
பறவைகளைப்போல வானத்தில் பறக்கக் கற்றுக்கொண்டாலும், மீன்களைப்போலக் கடலில் நீந்த கற்றுக் கொண்டாலும் சகோதரராக ஒருமித்து வாழ இன்னும் கற்றுக்கொள்ளவில்லை – மார்ட்டின் லுத்தர்கிங்
- எழுப்புதலை வாஞ்சிக்கிறவர்களாயிருந்தனர்
- ஒழுக்கமுடையவர்களாயிருந்தனர்
- கடமைகளைச் சரியாய் நிறைவேற்றுகிறவர்களாயிருந்தனர்
- பரிசுத்த கிரியை உடையவர்களாயிருந்தனர்
- மற்றவர்களுக்கு ஆசீர்வாதமுள்ளவர்களாயிருந்தனர்
- பிரதிஷ்டை உள்ளவர்களாயிருந்தனர்
- துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்கிறவர்களாயிருந்தனர்
- சத்தியத்தை தைரியமாய் சொல்கிறவர்களாயிருந்தனர்
- பூரண கிருபை பெற்றவர்களாயிருந்தனர்
- பணத்தை முக்கியத்துப்படுத்தாதவர்களாயிருந்தனர்
- இயேசுவை தங்களோடு வைத்துக்கொண்டனர்
- இயேசுவை உயர்த்திக் காண்பிப்பதில் கவனமாயிருந்தனர்
- மனிதரால் வரும் மகிமையைத் தேடாதிருந்தனர் தேவனை முக்கியப்படுத்தியிருந்தனர்
- கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாயிருந்தனர்
- தேவனுக்குப் பயப்படுகிறவர்களாயிருந்தனர்
- அற்புதங்கள் நடக்கும்போது தங்களை மறைத்துக் கொண்டனர்
மிஷனரி தரிசனமில்லாமல் மிஷனரிகளை அனுப்பாத சபை உயிரற்ற சபை; நற்செய்திப்பணியில் உற்சாகமற்ற சபை உறைந்து போகும். ஆஸ்வால்டு ஜே. ஸ்மித்
வேதாகம கால திருச்சபை குறித்த உங்கள் பார்வையை பதிவிடுங்கள்