துதி

துதி

துதி

துதி என்பது ஒருவரின் செயல்திறனைப் பாராட்டுவதற்கும், அவரைப் புகழ் வதற்கும் “துதித்தல்” ஒரு வெளிப் பாடாகும். நாம் ஒருவரைத் துதிக் கும்போது, அவர்கள் அற்புதமான வர்கள் என்றும், அவர்களது சாத னைகள் மேன்மையானவை என்றும் நாம் நினைப்பதை அவருக்கு வெளிப்படுத்துகிறோம். ஆண்டவ ருடைய குணநலன்களையும், அவ ரது வல்லமையையும் அங்கீகரிப் பதினால் நாம் அவரைத் துதிக் கிறோம்.

“ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும். என் ஜீவனுள்ள மட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப் பேன்” (சங். 63:3,4).

நாம் ஏன் தேவனைத் துதிக்கிறோம்?

  • 1. அவர் யார் என்பதினால்… “தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள், தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்” (சங். 47:6,7).
  • 2. அவர் என்ன செய்கிறார் என்பதினால்… “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் உள்ளமே, முழு அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்து மாவே கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மற வாதே. அவர் உன் அக்கிரமங்களை யெல்லாம் மன்னித்து, உன் நோய் களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங் களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது” (சங். 103:1-5).

யார் தேவனைத் துதிக்க வேண்டும்? Egiona

  • 1. கர்த்தரைத் தேடுபவர்கள். …கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்…” (சங். 22:26).
  • 2. சுவாசமுள்ள யாவும்….”சுவாச முள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலுயா” (சங். 150:6),

எப்போது நாம் தேவனைத் துதிப்பது?

  • 1. எக்காலத்திலும். “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயி லிருக்கும்” (சங்.34:1)
  • 2. எல்லாவற்றிலும். “எப்பொழு சந்தோஷமாயிருங்கள். இடை தும் விடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லா வற்றிலும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசு வுக்குள் உங்களைக் குறித்து தேவ னுடைய சித்தமாயிருக்கிறது” (1தெச. 5:16-18).

எங்கே நாம் தேவனைத் துதிக்க வேண்டும்?

  • 1. ஆண்டவருடைய மக்கள் மத்தியில், “உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன்…” (GTL. 2:12).
  • 2. ஜனங்களுக்குள்ளே. “ஆண்ட வரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீத்தனம் பண்ணுவேன்” (சங். 57:9).
  • 3. நமது படுக்கையில். “என் ஜீவனுள்ள மட்டும் நான் உம்மைத் துதித்து… என் வாய் ஆனந்தக் களிப் புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்” (சங். 63:4-6).

Leave a Reply