பிசாசுத்துவத்தின் இரகசியம்
பிசாசுத்துவம் என்பது பிசாசின் ஆழ்துவத்தைக் (ஆவி, ஆத்துமா, சரீரம்) குறிக்கும் சொல்லாக உள்ளது. பிசாசு என்பது ஒருமை சொல்லாகும் பிசாசுத்துவம் என்பது அவனுடைய ஆள்துவத்தை குறிப்பதாகும்.
பிசாசை குறித்து படிக்க வேண்டியதின் அவசியம்
இந்தக் கேள்விக்கு பதில் தேடுவதற்கு நாம் கீழே உள்ள வசனத்தை படிக்க வேண்டும்.
2கொரிந்தியர் 2: 11
சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
சாத்தான்
- மோசம் போக்குவரவன்
- தந்திரம் உள்ளவன்
அவனுடைய தந்திரத்தை அறிந்தால் மட்டுமே நாம் அவனால் மோசம் போகாமல் இருக்க முடியும்.
பிசாசின் தந்திரத்தை ஏன் அறிந்து கொள்ள வேண்டும்.
தேவன் மனிதர்களை தம்முடைய வசத்தில் வைத்துக் கொள்ள விரும்புவது போலவே பிசாசும் விரும்புகிறான். எனவே மனிதர்களை அவன் தன் வசப்படுத்த அவர்களை மோசம் போக்குகிறான்.
வெளிப்படுத்தின விசேஷம் 12: 9
உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
பிசாசு தன்னுடைய தந்திரத்தின் மூலம் உலகம் முழுவதையும் மோசம் போக்குகிறான். எனவே அவன் தந்திரங்களை நாம் அறிந்து கொண்டால் மட்டுமே அவனிடத்தில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்க முடியும் அதற்காக அவனுடைய தந்திரங்களை நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
பிசாசுத்துவம் எப்படி இயங்குகிறது அவனுடைய தந்திரங்கள் என்ன?
இந்தக் கேள்விக்கான பதிலை நாம் காண வேண்டுமானால் பிசாசு யார் அவன் எங்கு இருந்தான் என்பது குறித்து முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
பிசாசு யார் அவன் எங்கு இருந்தான்?
இதை அறிந்து கொள்ள தூதர்களை குறித்து நாம் அறிய வேண்டியது அவசியமாக உள்ளது.
முதல் நிலை தூதர்கள்
- கேருபீன்கள்
- சேராபீன்கள்
- நான்கு ஜீவன்கள்
எசே 10:1,20-22; ஏசா 6:2
கேருபீன்களும் சேரா பீண்களும் பிதாவின் சிங்காசனத்தின் வலது புறமும் இடது புறமும் இருப்பார்கள். இந்த இரண்டு பிரிவினரை தான் வேதம் நான்கு ஜீவன்கள் என்று கூறுவதாக சொல்லப்படுகிறது. கேருபீன்கள் வலது புறமும் இடது புறமும் இருப்பார்கள். சேராபீன்கள் எதிர்ப்புறத்தில் இருப்பார்கள்.
இரண்டாம் நிலை தூதர்கள்
- இருபத்தி நான்கு முப்பர்கள்
வெளி 4:10; 5:8
சிலர் இவர்களை 12 கோத்திர பிதாக்கள் என்றும் 12 அப்போஸ்தலர்கள் என்றும் கூறுகின்றனர் ஆனால் அது தவறான உபதேசம் ஆகும். காரணம் கானான் தேசத்திற்குளே பிரவேசிக்க தகுதி இல்லாத கோத்திர பிதாக்கள் தேவனுடைய சமூகத்தில் வருவதற்கு தகுதி அற்றவர்கள் ஆவர். மேலும் கோத்திர பிதாக்களை விட முற்ப்பிதாக்கள் சிறந்த பரிசுத்தவான்களாக வாழ்ந்தனர்.
இவர்களில் 12 அப்போஸ்தலர்கள் இருப்பதற்கான சாத்தியமும் இல்லை. காரணம் 12 அப்போஸ்தலர்களில் ஒருவனான யோவான் இந்த சம்பவத்தை எழுதும் போது பூமியில் இருந்தான் என்பதை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. எனவே இந்த 24 மூப்பர்களும் உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே தேவனால் படைக்கப்பட்ட தூதர்களை குறிப்பதாகவே உள்ளது.
மூன்றாம் நிலை தூதர்கள்
- ஆயிரமாயிரம் ஆன பொதுவான தூதர்கள்
வெளி 5:11; எபி 12:12; தானி 7:10
இந்த மூன்றாம் நிலை தூதர்களில் மூன்று பிரதான தூதர்கள் உள்ளனர்.
மீகாவேல் – யுத்தம் செய்யும் தூதன். இவனை பிதாவாகிய தேவனுடைய தூதன் என்றும் அழைக்கின்றனர்.
காபிரியேல் – செய்திகளை பரிமாற்றும் தூதன். இவனை பரிசுத்த ஆவியானவரின் தூதன் என்று அழைக்கின்றனர்.
கேரூப் – ஆராதனை கூட்டத்திற்கு தலைவன். இவனை கிறிஸ்துவின் தூதன் என்று அழைக்கின்றனர். மற்ற தூதர்களை விட இவனுக்கு அதிகமான பொறுப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தன.
- ஆராதனை கூட்டத்திற்கு தலைவன்
- தேவனுடைய பொக்கிஷங்களுக்கு பாதுகாவலன்
- தேவனுடைய புத்தகங்களுக்கு பொறுப்பாளன்
- காப்பாற்றுவதற்கான பொறுப்பு
இவனுடைய பெயரை தான் லூசிபர் என்று கூறுகின்றனர். லூசிபர் என்றால் ஒளிவீசுபவன் என்று பொருள். இவனைத்தான் விழுந்து போன தூதன், பிசாசு, சாத்தான், வலுசர்வம், அந்தகாரலோகாதிபதி என்று வேதம் கூறுகிறது. இவன் தேவனுக்கு எதிர்த்து நின்று கழகம் செய்து விழுந்து போனான். மனம் திரும்ப வாய்ப்பு கொடுத்தும் எதிர்த்து நிற்கிறவனாகவே இருந்தான்.
கேரூப் என்ற தூதர் பிசாசாக மாற காரணம்
சிங்காசன பதவி ஆசை (ஜீவனத்தின் பெருமை)
எசே 28:2; ஏசா 14:13-14 பரலோகத்தில் பரமசீயோன் உள்ளது இந்தப் பரமசீயோனில் பரம எருசலேம் ( பிதாவாகிய தேவனுடைய ராஜ்ஜியம்) உள்ளது. இதன் மையத்தில் கொடுமுடி உள்ளது இந்த கொடுமுடியின் உன்னதத்தில்தான் ஆராதனை கூடம் இருந்தது. இவ்வளவு உன்னதமும் உயரமான இடத்தில் இருந்த தேவனுடைய சிங்காசனத்தின் மீது பேராசை கொண்டான் எனவே தள்ளப்பட்டான்.
தேவனால் கொடுக்கப்படாத எந்தப் பதவியும் நம்மை மேலே அல்ல கீழே தள்ளும் என்பதை நினைவில் கொள்ளவும்.
செல்வம், பண ஆசை (கண்களின் இச்சை)
எசே 28:4-5,16
எசேக்கியேல் 28: 4
நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன் பொக்கிஷசாலைகளில் சேர்த்துக்கொண்டாய்.
எசேக்கியேல் 28: 5
உன் வியாபாரத்தினாலும் உன் மகா ஞானத்தினாலும் உன் பொருளைப் பெருகப்பண்ணினாய்; உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று.
எசேக்கியேல் 28: 16
உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.
அவனுடைய வசத்தில் இருந்த பொன்னும் பொருளும் அவனுடைய இருதய மேட்டின்மைக்கு வழிவகை செய்தது எனவே தள்ளப்பட்டு போனான்.
எந்த ஒரு மனுசனிடமும் பொண்ணும் பொருளும் ஆஸ்தியும் அந்தஸ்தும் பதவியும் புகழும் பெருகுகிறதோ அவனுடைய இருதயம் மேட்டின்மைக்கு நேராக வழிவிலக செய்யும். எனவே ஊழியர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.
அழகு மற்றும் அழகின் மோகம் (மாம்சத்தின் இச்சை)
எசே 28:12-13,17 அவனுடைய அழகின் பெருமையினால் தள்ளப்பட்டு போனான். நாம் பார்த்த இந்த மூன்று காரியங்களும் பிசாசின் ஆயுதங்களும் தந்திரங்களுமாய் இருக்கிறது.
பிசாசை குறித்த சில தகவல்கள்:-
பிசாசுகள் தீர்க்கதரிசனம் சொன்ன சம்பவங்கள்
- சாத்தான் சர்ப்பத்தின் மூலமாக ஆதாமிற்கும், ஏவாளுக்கும் நித்திய ஜீவனைப் பற்றியும், மனுஷன் தேவனைப் போல (ஆதி 3:4-5) ஆவது பற்றியும் சொன்ன சம்பவம்.
- சவுல் இங்கு தீர்க்கதரிசனம் உரைப்பது. (1சாமு 18:10)
- அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ சாமுவேலின் ஆவியோடே பேசியது. அந்த ஆவி சவுலுடைய மரணத்தையும், அவனுடைய குமாரருடைய மரணத்தையும் அறிவித்த சம்பவம். (1 சாமு 28:7-25; 1நாளா 1013-14; ஏசா 8:19-20)
- ஆகாபின் பொய்கூறிய தீர்க்கதரிசிகள். (1இராஜா 22:6-28)
- எரேமியாவின் கள்ளத்தீர்க்கதரிசிகள். (எரே 23:15-19,32; எரே 27:9-11; எரே 281-17)
- எசேக்கியேலின் கள்ளத்தீர்க்கதரிசிகள். (எசே 13)
- பிற்காலத்து கள்ளத்தீர்க்கதரிசிகள். (மத் 24:1-14,24; 2தெச 2:8-12; 1தீமோ 4; 2பேதுரு 2; வெளி 13:11-18; வெளி 16:13-15; வெளி 19:20; வெளி 2010)
பிசாசுகளின் தன்மைகள்
- பிசாசு தீங்கு செய்யும் (நியா 9:23; 1சாமு 18:9-10).
- பிசாசு ஞானமும், விவேகமுள்ளவை (1இராஜா 22:22-24; அப் 16:16).
- வல்லமையுள்ளவை (மாற்கு 5.1-18).
- பிறருடைய சரீரங்களில் ஆவிகளாக இருக்கும். (வெளி 16:13-16).
- இவை தூதர்கள் அல்ல. (அப் 23:8-9).
- இவை மனுஷர்களும் அல்ல. இவை மனுஷனைப் பிடிக்கும். மனுஷரிடத்திலிருந்து இவற்றைத் துரத்திவிடலாம். (மத் 10:8; மாற்கு 16:17).
- இவை தனிப்பண்புடையவை (மாற்கு 16:9).
- இவற்றிற்கு அறிவு உள்ளது. (மத் 8:29; லூக்கா 4:41; அப் 19:15).
- இவற்றின் விசுவாசம் உள்ளது. (யாக் 219)
- இவை உணர்வுள்ளவை. (மத் 8:29; மாற்கு 5:7).
- இவை ஐக்கியமாக இருக்கும். (1கொரி 10:20-21).
- இவற்றிற்கு உபதேசங்கள் உள்ளன. (1தீமோ 4.1).
- இவற்றிற்கு சித்தம் உண்டு. (மத் 12:43-45).
- அற்புதங்களைச் செய்யும் வல்லமையுடையவை. (வெளி 16:13-16).
- இவை உணர்ச்சிவசப்படக்கூடியவை. (அப் 8:7).
- இவற்றிற்கு ஆசைகள் உண்டு. (மத் 8:28-31).
- பிசாசு களுக்கு ஆவியும், ஆத்துமாவும் உண்டு.
பிசரசுகளின் கிரியைகள்
- இவை மனுஷரைப் பிடித்து அவர்களை ஊமையும், செவிடுமாக்கும். (மத் 9:32-33; மாற்கு 9:25)
- மனுஷரைக் குருடாக்கும். (மத் 12:22)
- கொடிய வேதனைப்படுத்தும். (மத் 15:22)
- சந்திரரோகியாய் கொடிய வேதனைப்படுத்தும். (மத் 4:23-24; மத் 1714-21; மாற்கு 5:1-18)
- அசுத்தமானவை. (லூக்கா 4:36)
- இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையுள்ளவை. (மாற்கு 5:1-18)
- தற்கொலை பண்ணுவதற்குத் தூண்டுதல். (மத் 17:16; யோவான் 1010)
- அலைக்கழித்தல். (மாற்கு 9:20)
- இச்சைகளை உண்டுபண்ணுதல். (யோவான் 8:44; எபே 24-3; 1யோவான் 245-17)
- பொய்யான ஆராதனையை உண்டாக்குதல். (லேவி 17:7; உபா 32:17; 2 நாளா 11.15; சங் 106:37; 1கொரி 10:20; வெளி 9:20)
- மனுஷரைத் தவறுபண்ண வைப்பது (1யோவான் 4:1-6; 1தீமோ 41)
- மனுஷருக்கு வியாதியையும், ரோகத்தையும் உண்டாக்குதல் (மத் 4:23-24; அப் 10:38)
- உபத்திரவப்படுத்துதல். (மத் 4:23-24; மத் 15:22)
- வஞ்சித்தல் (1தீமோ 4:1-2; 1யோவான் 4:1-6)
- பொய்கூறுதல். (1இராஜா 22:21-24)
- மந்திரவித்தைகளைச் செய்தல் (2நாளா 33:6)
- வஞ்சிக்கிற உபதேசங்களைக் கூறுதல். (1தீமோ 4:1)
- துன்மார்க்கம் பண்ணுதல். (லூக்கா 11:26)
- பயப்படுதல்.(2தீமோ 1:7)
- மனுஷரை இப்பிரபஞ்சத்தை நேசிக்க வைத்தல். (1யோவான் 2:15-17; 1கொரி 212)
- அடிமைத்தனத்திற்குட்படுத்துதல். (ரோமர் 8:15)
- பொல்லாங்கு செய்தல். (1இராஜா 22:21-24; மத் 13:36-43)
- முரட்டாட்டம் பண்ணுதல். (மத் 17:5)
- வஞ்சித்தல். (யோவான் 13:2; 1இராஜா 22:21-23)
- ஒடுக்குதல் (அப் 10:38)
- பாவம் செய்தல். (யோவான் 8:44; 1யோவான் 3:8)
- உபத்திரவம் பண்ணுதல். (1பேதுரு 5:8; வெளி 2:10)
- பொறாமைப்படுதல். (சாமு 16:14; 1சாமு 18:8-10)
- கள்ளத்தீர்க்கதரிசனங் கூறுதல். (1சாமு 18:8-10; 1இராஜா 22:21-24)
- மனுஷனுக்கும், தேவனுக்கும் எதிராகத் தீமையான காரியங்களைச் செய்தல்.
பிசாசுகளின் திறமைகள்
- உபதேசம் பண்ணக்கூடியவை. (1தீமோ 4:1).
- திருடக்கூடியவை. (மத் 13:19; லூக்கா 8:12).
- சண்டை பண்ணக்கூடியவை. (எபே 4:27; எபே 6.10-18; 1பேதுரு 5:8).
- உக்கிரகமாகக் கோபப்படக்கூடியவை. (மத் 8:28; வெளி 12:12).
- குறிசொல்லக்கூடியவை. (லேவி 20:27; அப் 16:16).
- நட்பாகப் பழகக்கூடியவை. (லேவி 20.6,27).
- தங்கள் இஷ்டப்பிரகாரம் மனுஷருக்குள் போகும், மனுஷரைவிட்டு வெளியே வரும். (மத் 12:43-45).
- பிசாசுகள் பிரயாணம் பண்ணக்கூடியவை. (1இராஜா 22:21-24; மாற்கு 5:7,12).
- பிசாசுகள் பேசும். (மாற்கு 1:34; மாற்கு 5.12; அப் 8:7).
- மரித்துப்போனவர்களைப் போல நடிக்கும். (2சாமு 28:3-9; 1நாளா 1013; ஏசா 819; 2.UT 18.31).
- சரீரத்தில் பிசாசுகள் புகுந்து கொள்ளும் போது அவை பலவிதமான பிசாசின் கிரியைகளை வெளிப்படுத்தும்.
பிசாசின் பெயர்கள்
- பிசாசுகள் (Devils) (மாற்கு 16:17)
- குறிசொல்லுகிற ஆவிகள் (Familiar spirits) (லேவி 20.6)
- அசுத்த ஆவிகள் (Unclean spirits) (மாற்கு 1:27)
- பொல்லாத ஆவிகள் (Evil spirits) (லூக்கா 7:21)
- வஞ்சிக்கிற ஆவிகள் (Seducing spirits) (1தீமோ 41).
பிசாசுகளைப் பற்றிய பொதுவான செய்திகள்
- பிசாசுகள் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலும், பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் விசுவாசிகள் பிசாசுகளைக் கட்டுப்படுத்தலாம். (மத் 816-17; மத் 12:28; மாற்கு 16:17; லூக்கா 10:17; அப் 19:15).
- ஆயிரக்கணக்கான பிசாசுகள் ஒரே சமயத்தில் ஒரு மனுஷனுக்குள் புகுந்து கொள்ள முடியும். (மாற்கு 5.9)
- விசுவாசிகள் பிசாசுகளைக் கண்டறிந்து, அவற்றைச் சோதித்து, அவற்றிற்கு எதிர்த்து நின்று அவற்றைத் துரத்த வேண்டும். (1யோவான் 4:1-6; 1கொரி 12:10; எபே 4:27; எபே 6:10-18; 1பேதுரு 5:8-9).
- பிசாசுகளிடம் (மத் 8:29). சாதாரணமான விவேகத்தை விட அதிக விவேகம் உள்ளது.
- பிசாசுகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கிற இடம் பாதாளம். (லூக் 8:31; வெளி 9:1-21).
- பிசாசுகள் ஆள்தத்துவப் பண்புடையவை. (லூக்கா 8:26-33).
- பிசாசுகள் மற்ற சரீரங்களில் ஆவிகளாக இருக்கும். (மத் 12:43-45).
- பிசாசுகள் சாத்தானின் தூதர்கள். (மத் 12:26-29).
- இவை எண்ணிக்கையில் மிகுந்தவை. (மாற்கு 5.9).
- பிசாசுகள் மனுஷருக்குள்ளும், மிருக ஜீவன்களுக்குள்ளும் புகுந்து கொண்டு அவர்களை ஆளுகை செய்யும். (மாற்கு 5:1-18) அவர்களுடைய சரீரங்களில் புகுந்து விடும். (மத் 12:43-45; லூக்கா 8:32).
- பிசாசினால் பிடிக்கப்படுவதும் (Demon possession), பிசாசின் தாக்குதலுக்குள்ளாவதும் (demon influence) வெவ்வேறு காரியமாகும். (மத் 4:23-24; மத் 16:21-23).
- பிசாசுகளுக்குத் தங்களுடைய முடிவைப் பற்றி தெரியும். (மத் 8:31-32) தங்கள்மீது அதிகாரம் உள்ளவர் யாரென்பதும் அவற்றிற்குத் தெரியும். (அப் 19:13-17).
- பிசாசுகள் தேவனுக்குப் பயப்படும். (யாக் 2:19).
- பிசாசுகள் மனுஷனுக்கு அங்கவீனத்தை உண்டுபண்ணும். (மத் 12:22; 1745-18).
- பரிசுத்தவான்கள்மீது தாக்குதலைத் தூண்டும். (எபே 610-18).
- மனுஷருடைய சிந்தனைகளையும், செயல்களையும் தூண்டும். 1தீமோ 4:1-5; 2பேதுரு 2:10-12).
- அவிசுவாசிகள் பிசாசுகளோடு ஓரளவு ஒத்துப்போகிறார்கள். (எபே 2:1-3).
- ஜெபத்தினாலும், உபவாசத்தினாலும் பிசாசுகளைத் துரத்தலாம். தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை ஒருவர் அணிந்து கொள்ளும்போது பிசாசுகள் அவரைத் தாக்காது. (மத் 17:21; எபே 6:10-18).
- பிசாசுகளின் ஆவிகள் வியாதிகளையும், அசுத்தங்களையும், மார்க்கபேதங்களையும் மனுஷர் மத்தியிலே பரப்புகிறது.
- பிசாசுகளின் கிரியைகளிலிருந்து விடுதலை பெறவேண்டுமானால் அவற்றுக்கு எதிர்த்து நின்று அவற்றைத் துரத்திவிட வேண்டும்.
பிசாசின் தலை நசுக்கப்பட்டுவிட்டதா?
இல்லை. மேலே அவனுடைய காரியங்களை நாம் பார்த்தோம் அவன் தலை நசுக்கப்பட்டு இருந்தால் அவனுடைய கிரியைகள் முடிவுக்கு வந்திருக்கும் இன்னும் அவனுடைய தலை நசுக்கப்படவில்லை. இந்த செய்தியை கீழே உள்ள வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.
ரோமர் 16: 20
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
வெளிப்படுத்தின விசேஷம் 12: 15
அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 12: 16
பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது.
வெளிப்படுத்தின விசேஷம் 12: 17
அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.
ஆதி 3:15 இன் விளக்கம் என்ன?
ஆதியாகமம் 3: 15
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
அவர் உன் தலையை நசுக்குவார் இதன் பொருள்
நான் மேலே உள்ள வசனங்களை வாசித்தால் அது நடந்து முடிந்த சம்பவத்தை அல்ல இனி நடக்க இருக்கும் சம்பவத்தை குறித்த செய்தியாக இருக்கிறது. ஆயிரம் வருட அரசாட்சியின் காலத்துக்குப் பிறகு பிசாசு நிரந்தரமாக நரகத்தில் தள்ளப்பட போகிறான் அந்த சம்பவமே அவன் தலை நசுக்கப்படுகிற சம்பவமாக உள்ளது.
நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் இதன் பொருள்
எபேசியர் 6: 15
சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;
ஏசாயா 52: 7
சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம்பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.
மேலே உள்ள வசனங்களை நாம் வாசிக்கும் போது பாதங்கள் என்பது ஊழியத்தையும் ஊழியக்காரர்களையும் குறிக்கும் வார்த்தையாக உள்ளது. எனவே ஊழியத்தையும் ஊழியர்களையும் நசுக்குவாய் என்பதே இதன் பொருளாக உள்ளது.
சிலுவையில் இயேசு பிசாசுக்கு செய்தது என்ன?
சம்பவம் : 1. பிசாசின் கிரியைகளை அழித்தார்.
1யோவான் 3: 8
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் பிசாசின் கிரியைகளை அழித்தார். இதன் பொருள் மனிதர்கள் பிசாசின் கிரியைகளை அழிக்க அதிகாரம் உடையவர்களாக இயேசு மாற்றினார் என்பதே ஆகும். ஆவினாலும் வார்த்தையினாலும் நாம் பிசாசின் கிரியைகளை அழிக்க முடியும். ஆனாலும் பிசாசை அழிக்கவோ கட்டவோ நமக்கு அதிகாரம் இல்லை. அவனைத் துரத்துவதற்கு மட்டும் நமக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் : 2. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த பிரிவினையை அகற்றினார்
எபேசியர் 2: 14
எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,
சம்பவம் : 3. நியாயப்பிரமாணத்தை ஒழித்தார்
எபேசியர் 2: 15
சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
சம்பவம் : 4. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான பகையை அழித்தார்
எபேசியர் 2: 16
பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
சம்பவம் : 5. சமாதானத்தை உண்டு பண்ணினார்
எபேசியர் 2: 17
அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.
பிசாசின் முடிவுகள்
அந்திக்கிறிஸ்துவின் முடிவு (ஆத்துமாவில் செயல்படுகிறவன்)
இவன் கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுவான் (1 யோவா 4:3; வெளி 19:20). கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் சத்தியத்திற்கு விரோதமாகவும் நம்முடைய ஆத்துமாவில் செயல்படுவான்.
கள்ள தீர்க்கதரிசியின் முடிவு (ஆவியில் செயல்படுகிறவன்)
இவன் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகவும் மனுஷனுடைய ஆவிக்கு விரோதமாகவும் செயல்படுவான் (2 பேது 2:2; வெளி 19:20). பரிசுத்த ஆவியானவர் கண்டித்து உணர்த்துவார் கள்ள தீர்க்கதரிசி கண்டிப்பது இல்லை.
வலு சர்பத்தின் முடிவு (சரீரத்தில் செயல்படுகிறவன்)
இவன் பிதாவாகிய தேவனுக்கு விரோதமாகவும் நம்முடைய சரீரத்துக்கு விரோதமாகவும் செயல்படுகிறவன் (ஏசா 14:12; வெளி 20:9-10)
பிசாசின் அழிவு எப்போது?
நாம் ஏற்கனவே படித்த படி மனிதர்கள் பிசாசை கட்டவோ பாதாளத்தில் தள்ளவோ அழிக்கவோ அதிகாரம் உடையவர்கள் அல்ல. இவைகளைச் செய்யும் அதிகாரம் மீகாவேல் தூதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வெளிப்படுத்தின விசேஷம் 20: 2
பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங்கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
ஆயிரம் வருடம் முடிந்த பிறகு சில காலம் மீண்டும் அவன் பூமியில் விடப்படுகிறான்
வெளிப்படுத்தின விசேஷம் 20: 7
அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
அதன்பிறகு அவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாக முழுவதுமாக எரிகிற அக்கினியும் கந்தகமும் ஆன அக்கினி கடலிலே நிரந்தரமாக தள்ளப்படுகிறான் இதுவே அவனுடைய அழிவு ஆகும்.
வெளிப்படுத்தின விசேஷம் 20: 10
மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.