குற்றத்தின் இரகசியம்

குற்றம்

குற்றத்தின் இரகசியம்

குற்றம் இதைக் குறித்து படிக்க வேண்டியதன் அவசியம்

1தெசலோனிக்கேயர் 5: 23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

இயேசு கிறிஸ்துவின் ரகசிய வருகையில் நாம் காணப்பட வேண்டுமானால் குற்றம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். எனவே தான் இந்தக் குற்றத்தை குறித்து நாம் ஆராய வேண்டி உள்ளது.

முதல் மனிதன் செய்த பாவம் என்ன?

விலக்கப்பட்ட கனியை புசித்தது.

கனியை புசித்தது எப்படி குற்றமாகும்? 

இந்தக் கேள்விக்கான விடையை தேடுவதற்கு தான் குற்றத்தை குறித்து விரிவாக ஆராய வேண்டி உள்ளது.

குற்றம் 3 உட்பிரிவுகளைக் கொண்டது

மீறுதல் – 1 தெச 5:23 மீறுதல் (மனிதனுடைய ஆவியில் நடைபெறும்)

அக்கிரமம் –  யாத் 34:7 மீறுதல் (மனிதனுடைய ஆத்துமாவில் நடைபெறும்)

பாவம் – சங் 51:1-3 மீறுதல் அக்கிரமம் இவை இரண்டும் முழுமை பெறும் போது பாவம் (பாவத்தின் கிரியைகள்) வெளிப்படும்.

எனவே இவைகள் மூன்றையும் சேர்த்து ஒரே வார்த்தையில் சொல்வது தான் குற்றம் ஆகும்.

ஆதி பெற்றோரின் மீறுதல்

  • ஓசி 6:7; யோபு 31:33; ரோம 5:16
  • உடன்படிக்கையை மீறினார்கள்
  • மீறுதலை மூடினார்கள்

ஆதி பெற்றோருடைய அக்கிரமம்

  • யோபு 31:33; புல 5:7; 
  • அக்கிரமத்தை ஒளித்து வைத்தார்கள்
  • பிதாக்கள் என்ற வார்த்தை ஆதாமை குறிக்கிறது.
  • அக்கிரமம் செய்தார்கள்

ஆதி பெற்றோர் செய்த பாவம்

  • ஏசா 43:27; ரோம 5:12
  • பாவம் செய்தார்கள்

ஆதியாகம புத்தகத்தில் அவர்கள் பாவம் செய்தார்கள் என்று குறிப்பிடப்படவில்லை ஆனால் தீர்க்கதரிசனத்தில் (தீர்க்கதரிசன புத்தகத்தில்) அவர்களுடைய செய்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மீறுதல் என்றால் என்ன?

தேவன் செய்யாதே என்று சொன்னதை செய்வதற்கு பெயரே மீறுதல் ஆகும்.

அக்கிரமம் என்றால் என்ன?

தேவன் செய் என்பதை செய்யாமல் இருப்பதே அக்கிரமம் ஆகும்.

பாவம் என்றால் என்ன?

தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றாமல் இருப்பதே பாவம் ஆகும்.

ஆதியாகமம் 2: 9 தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.

ஆதியாகமம் 2: 15 தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

ஆதியாகமம் 2: 16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

ஆதியாகமம் 2: 17 ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

மேலே உள்ள வசனங்களில் மூன்று விருட்சங்களையும் மூன்று சட்டங்களையும் தேவன் கொடுத்துள்ளார்.

மூன்று விருட்சங்கள்:

  • சகல விருட்சம்
  • ஜீவ விருட்சம்
  • நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்

மூன்று சட்டங்கள்

  • வச.16இல் அனுமதி சட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • வச.17இல் இரண்டு சட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது
    • தடை சட்டம்
    • தண்டனை சட்டம்.

முழு வேதமும் கட்டளைகலாலும் சட்டங்கலாலும் தேவனால் கொடுக்கப்பட்டவை ஆகும். 

சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கலாம் என்று தேவன் கட்டளை கொடுத்து இருந்தார் ஆனால் அந்தக் கட்டளையை இவர்கள் நிறைவேற்ற வில்லை. நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்காதே என்று கட்டளை கொடுத்து இருந்தார் அதையும் அவர்கள் நிறைவேற்ற வில்லை.

தேவனுடைய வார்த்தையை மீறுவது அவருடைய சட்டத்தை மீறுவதாக பொருள்படுகிறது. தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றாமல் இருந்தது அவர்களுக்கு பாவமாக மாறினது.

நிர்வாணிகளானது எப்படி?

ஆதியாகமம் 3: 10 அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.

தேவன் ஆதமையும் ஏவாளையும் படைத்தபோது அவர்களை தம்முடைய மகிமையினாலும் மகிமையின் வஸ்திரத்தினாலும் மூடினார். அவர்கள் பாவம் செய்த போது தேவனுடைய மகிமை அவர்களை விட்டு விலகினது எனவே அவர்கள் மகிமையின் வஸ்திரத்தை இழந்து நிர்வாணிகள் ஆயினர்.

நம்முடைய சரீரத்தை தேவன் வார்த்தையினால் மூடி வைத்திருக்கிறார் நாம் வார்த்தையை மீறும் போதெல்லாம் தேவன் மூடின வஸ்திரத்தை இழந்து விடுகிறோம்.

இயேசு பிசாசை உரிந்தெடுத்தார்

கொலோசெயர் 2: 14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;

கொலோசெயர் 2: 15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

இந்த வசனங்களின் பொருள் இயேசு கிறிஸ்து சிலுவையில் பிசாசின் வல்லமையை மகிமையை அதிகாரங்களை அவனிடம் இருந்து எடுத்து விட்டார் என்பதாகும்.

பிசாசு நம்மை உரிந்து விடுகிறான்

நாம் எப்பொழுதெல்லாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் வாழ்கிறோமோ அல்லது தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றாமல் இருக்கிறோமோ அப்போதெல்லாம் தேவன் நமக்கு கொடுத்த எல்லாவற்றையும் இழந்து விடுகிறோம். நாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் இருப்பதும் அவருடைய சித்தத்தை செய்யாமல் இருப்பதும் பிசாசின் தந்திரமாக உள்ளது. 

பிசாசு தன்னுடைய தந்திரத்தின் வழியாக தேவன் நமக்கு கொடுத்த எல்லாவற்றையும் நாம் இழந்து போகும் படிக்கு செய்கிறான்.

ஆதாமும் ஏவாளும் விழுகைக்கு முன் சந்தோஷம் நீதியின் வஸ்திரம் உடையவர்களாக இருந்தனர் ஆனால் விழுகைக்குப் பிறகு ஒன்றும் இல்லாமல் நிர்வாணிகள் ஆயினர்.

மீறுதலின் விளைவு

ஆவியில் சமாதானம் நீங்கிவிடும் ஆதி 3:10; நீதி 12:25; 6:5

பாவம் புசிக்கும் போது சுவையாக இருந்தாலும் அதைக் குறித்த பயமும் கூடவே இருக்கும். பாவத்தை சுவைத்த பிறகு நம்முடைய ஆவியிலிருந்து சமாதானம் நம்மை விட்டு நீங்கிவிடும். ஆதாமும் ஏவாளும் ஆவியில் சமாதானத்தை இழந்தபடியினால் தான் தேவனுடைய சத்தத்தை கேட்டும் பயந்து தங்களை ஒழித்துக் கொண்டார்கள்.

ஆவியில் முறிவு ஏற்படும் நீதி 15:13

ஆவியில் முறிவு வரும் போது தான் நமக்குள் பயம் வரும். மீறுதல் குறித்த தெளிவு வராமல் ஆவியில் சமாதானம் வராது.

அக்கிரமத்தின் விளைவு

ஆத்துமாவில் சமாதானம் நீங்கிவிடும் ஆதி 3:7; நீதி 12:25

பாவத்தின் விளைவு

பாவம் தேவனுடைய சமூகத்தை விட்டு நம்மை விலக பண்ணும் ஆதி 3:8; ஏசா 64:6. இதன் காரணமாக சரீரத்தில் இருந்து நீதி விலகிவிடும். 

மீறுதலின் தண்டனை

  • ரோமர் 5:18; 5:14; யாத் 34:7
  • ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு
  • பாவம் செய்யாதவர்களையும் ஆளுகை செய்யும் (சன்மார்க்கர்)

அக்கிரமத்தின் தண்டனை

  • ஏசா 59:2; எபே 2:1
  • பிரிவினை

பாவத்தின் தண்டனை

  • ரோமர் 6:23; 3:23; 5:21
  • மரணம்

தேவனுடைய சித்தத்தை அறிந்து அதை செய்யாமல் இருந்தால் தேவனுடைய உறவில் முறிவு ஏற்படும். தேவனுடைய உறவில் நிலைத்திருந்தால் அவருடைய மகிமையின் ஒளி நம்மை மூடிக்கொள்ளும். தேவனுடைய உறவில் முறிவு ஏற்பட்டால் இருள் நம்மை சூழ்ந்து கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *