ஜெபம்
ஜெபம்: “அவன் என்னை நோக்கிக் கூப்பிடு வான், நான் அவனுக்கு மறுஉத்தரவு 5 அருளிச் செய்வேன்… என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்”(சங் 91:15,16). தேவனோடு நாம் ஜெபத்தில் செல வழிக்கும் நேரம், இந்த உலகம் அறிந்ததிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததும், வரலாற்றையே மாற்றக் கூடியதுமான வல்லமையைச் செயல் படுத்தக் கூடியது.
பலவகையான ஜெபங்களைப் பற்றி வேதாகமம் விவரிக்கிறது; ஆனால் இந்தப் பாடத்தில் நாம் முதலில் தனிப்பட்ட ஜெபத்தைப் பற்றிப் பார்ப்போம். தேவனோடு நாம் தனிப்பட்டவர்களாக எவ் வளவு நேரம் செலவழிக்கிறோமோ, அதைப் பொறுத்தே சரீரமாகக் கூடி ஜெபிப்பதுவும் சக்திள்ளதாக அமைகிறது.
A.மறைவான இடம்
“நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்” (மத்.6:6).
ஆண்டவர்தாமே நாம் அந்தரங்கமாக ஜெபிக்க வேண்டுமென்று நமக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தகைய “அந்தரங்க ஜெபம்” கீழ்க்கண்டவற்றை உறுதிப்படுத்து கிறது:
1. சரியான நோக்கங்கள் (மத். 6:5)
2. தேவனோடு பிதாவானவர் என்ற முறையில் சரியான உறவு (லூக்கா 11:11-13)
3. தேவன் செவிசாய்ப்பார் என்ற மெய்யான நம்பிக்கை (சங். 55:16,17).
4.மாய்மாலங்களை அகற்றுதல் (மாற் 7:6,7).
தேவனோடுள்ள உரையாடலின் மூலம் நாம் நமது உணர்வுகளையும், பாரங்களையும் வெளிப்படுத்தும் போது, அந்த ஜெபம் துதியின் வடிவில் இருக்கலாம் (சங்.34:1-4); பாவ அறிக்கையாகவும் (1 யோவான் 1:9), வேண்டுகோளாகவும் (மத். 7:7), நன்றி கூறுதலாகவும் இருக்கலாம் (எபே. 5:4-20).
B. ஜெபத்தைக் குறித்த ஐந்து கட்டளைகள்
1. எப்போதும் விழித்திருந்து ஜெபிக்க வேண்டும்
“ஆகையால் இனிச் சம்பவிக்கப் போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படு வதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்” (லூக்கா 21:36). மாற்கு 13:35-37 வசனங்களையும் பார்க்கவும்.
2.சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள்
“நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவின முள்ளது” (மத், 26:41),
3.ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்
அவர் அவர்களை நோக்கி: அறுப்புமிகுதி, வேலையாட்களோ கொஞ் சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள் ளுங்கள்” (லூக்கா 10:2).
4. அதிகாரத்திலுள்ளவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள்
“நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக் காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங் களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத் திரங்களையும் பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத் தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு, ராஜாக்களுக் காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும்” (1 தீமோ. 2:1,2).
5.உங்கள் விரோதிகளுக்காக ஜெபம் பண்ணுங்கள்
“உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர் வதியுங்கள்; உங்களை நித்திக்கிறவர்களுக் காக ஜெபம் பண்ணுங்கள்” (லூக்கா 6:28).
C. எப்போது ஜெபிப்பது?
ஜெபித்த அநேகரைப் பற்றிய முன்மாதிரிகளை வேதாகமம் எடுத்துக் கூறுகிறது (1 நாளா. 4:10). அநேக விசுவாச பிதாக்கள் ஒவ் வொரு நாளும் ஜெபிப்பதற்காக சில குறிப்பிட்ட வேளைகளை ஒதுக்கி வந்துள்ளதை நாம் காணலாம்; பெரும்பாலும் காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளை ஒதுக்கிவைத்தார்கள்.
“நானோ தேவனை நோக்கிக் கூப்பிடு வேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார். அந்தி சந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்” (சங். 55:16,17). தானியேல் 6:10 வசனத்தையும் பார்க்கவும்.
ஒழுங்கான, முழு இருதயத் தோடு ஏறெடுக்கப்படும் ஜெபத்துக் கான – பொருளற்ற சமயச் சடங்காச்சாரங்களை ஒதுக்கி, ஏறெடுக்கப் படும் ஜெபத்துக்கான தினசரி ஒழுங்குக்குச் சிறந்த முன்மாதிரியை ஆண்டவராகிய இயேசுவானவரின் ஜெபங்களில் காணலாம்.
1. அதிகாலையில்… (மாற்கு1:35)
2. இரவு முழுவதும்… (லூக்கா 6:12)
3. ஒவ்வொரு வேளை உண வுக்கு முன்பும்… (மாற்கு 6:41).
D. என்ன ஜெபிப்பது?
1.நமக்காக…
“யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி; தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக் கொண்டான்; அவன் வேண்டிக் கொண் டதைக் தேவன் அருளினார்” (1 நாளா. 4:10).
2. ஒருவருக்காக ஒருவர்
… உங்கள் குற்றங்களை ஒருவருக் கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்” (யாக். 5:16).
3. கிறிஸ்துவின் சரீரமாகிய சபை யின் ஊழியங்களுக்காக….
“கடைசியாக, சகோதரரே, உங்க ளிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும்… எங்க ளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்” (2 தெச.3:1,2).
4.வியாதியஸ்தர்களுக்காகவும், துன்பப்படுபவர்களுக்காகவும்…
“உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்… உங்க ளில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பா னாக; அவர்கள் கர்த்தருடைய நாமத் தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்… நீங்கள் சொல்த மடையும்படிக்கு… ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்…” (யாக். 5:13-16).
5. பாவத்தின் பிடியில் விழுந்தவர் களுக்காக…
“மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒரு வன் கண்டால், அவன் வேண்டுதல் செய்யக் கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்…” (1 யோவான் 5:16).
E. ஜெபத்தில் உதவி
“அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சு களோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோமர் 8:26).
பரிசுத்த ஆவியானவருடைய நோக்கத்தின் ஒரு பகுதி நமக்குப் போதிப்பதும் (லூக்கா 12:12), ஜெபத்தில் நமக்கு வழிகாட்டுவதும் (ரோமர் 8:27), நமது விசுவாசத்தில் நமக்கு உதவுவதுமே (எபே. 3:16,17)!
பரிசுத்த ஆவியானவர் சில வேளைகளில் சிறப்பான முறையில் ஒரு விசுவாசியின் ஜெபத்தை அபி ஷேகிப்பார்; இது “ஆவியிலே ஜெபம் பண்ணுதல்” என்று அழைக்கப் படுகிறது (யூதா 20; எபே.6:18).
நமது ஜெபத்தில் நமக்கு உதவுவதற்காக பரிசுத்த ஆவி யானவர் விசுவாசிக்கு ஒரு தனிச் ஆவி சிறப்பான ஈவையும் அளித்துள்ளார்:
பலபாஷைகளைப் பேசும் வரம் ஜெபத்தில் ஆண்டவரோடு அந் நிய பாஷையில் பேசுதல். 1 கொரிந்தியர் 12:4-11 வசனங்களைப் பார்க்கவும்.
செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்… நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்” (நீதி 15:8,29).
F. இணைந்த ஜெபம்
ஜெபத்தில் இருவர் ணைந்து ஜெபிப்பது சில மெய்யான சிலாக் கியங்களை அளிக்கிறது: “அல்லா மலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப் போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமி யின் ஒருமனப்பட்டிருந்தால், பரலோ கத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்.18:19).
G. சபையார் ஜெபித்தல்
இரண்டு பேர் ஜெபிக்கும் போதே மாபெரும் வல்லமை வெளிப்படக்கூடுமானால், ஆண்ட வருடைய மக்கள் சபையாகக் கூடி ஜெபிக்கும்போது எவ்வளவு பலன்கள் விளையும்? அப்போஸ் தலர் 4:24 வசனத்தைப் பார்க்கவும்.
இன்று தேவன் தமது மக்களை ஜெபிக்கும்படி அழைக்கிறார். ஜெபத் தின்மூலம் தனிப்பட்ட வாழ்க்கை யிலும், குடும்பங்களிலும், சமூகங் களிலும், நாடு நகரங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதே திருச் சபையின் பணியாகும்.
One comment on “ஜெபம்”
Babu PB
June 14, 2023 at 10:07 pmPraise the lord Brother 🙏
இந்த ஜெபத்தை பற்றின ஆராய்ச்சி மிகவும் பிரயோஜனமாக உள்ளது… அநேக காரியங்களை கற்றுக் கொள்ள ஆவியானவர் உதவி செய்தார்
கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியர்களையும் ஆசீர்வதிப்பாராக….ஆமென்