ஆதாமின் உடன்படிக்கை

ஆதாமின் உடன்படிக்கை:

1. ஆதாமின் உடன்படிக்கை, மனுக்குல வீழ்ச்சி மற்றும் திரும்ப சேர்த்துக்கொள்ளப்படுதல், சிருஷ்டி, இவைகளுடன் சம்பந்தப்பட்டது. கிறிஸ்து திரும்ப வரும்பொழுது சிருஷ்டி தனது அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும். (ரோமர். 8:21)

 • ரோமர் 8: 21 அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

ஆதாமின் உடன்படிக்கை

2. பாவத்தை, சாத்தான் (சர்ப்ப உருவெடுத்து) இவ்வுலகில் கொண்டு வந்து சபிக்கப்பட்டவனாய் இருக்கிறான், (ஆதியாகமம் 3:14)

 • ஆதியாகமம் 3: 14 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;

தேவன் சிருஷ்டித்த விலங்கினங்களுக்குள் மிகவும் அழகைப்பெற்று இருந்த சர்ப்பமானது மிகவும் பகைமைக்குறிய ஒன்றாய் மாறிவிட்டது. மோசேயினால் வனாந்திரத்தில் உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பம் (எண்ணா 21:5-9)

 • ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை,; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள். எண்ணாகமம் 21:5
 • அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை அனுப்பினார், அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள் அநேக ஜனங்கள் செத்தார்கள். எண்ணாகமம் 21:6
 • அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம், சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள், மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணினான். எண்ணாகமம் 21:7
 • அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை, கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். எண்ணாகமம் 21:8
 • அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான், சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப் பார்த்துப் பிழைப்பான். எண்ணாகமம் 21:9

நமது பாவத்திற்காக ஏற்படுத்தப்பட்ட கிறிஸ்துவை சித்தரிக்கிறதாய் இருக்கிறது. (2 கொரி. 5:21),

 • 2கொரிந்தியர் 5: 21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

வெண்கலம் நியாயத்தீர்ப்பையும், சர்ப்பம் பாவத்தையும் பிரதிபலிக்கிறது.

ஆதாமின் உடன்படிக்கை 1

3. மீட்பரைக்குறித்த வாக்குத்தத்தம்: (ஆதியாகமம் 3:15),

 • ஆதியாகமம் 3: 15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
 1. சேத்தின் வம்சா வழி மூலம் ஸ்திரீயின் வித்து தொடர்கிறது (ஆதியாகமம் 5:3-7).
 2. நோவா (ஆதியாகமம் 6:8-10),
 3. சேம் (ஆதியாகமம் 9:26,27),
 4. ஆபிரகாம் (ஆதியாகமம் 12:1-4),
 5. ஈசாக்கு (ஆதியாகமம் 17:19-21),
 6. யாக்கோபு (ஆதியாகமம் 28:10-14),
 7. யூதா (ஆதியாகமம் 49:10),
 8. தாவீது (2 சாமுவேல் 7:5-17),
 9. எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுக்கிறிஸ்துவில் நிறைவேறியது (ஏசாயா 7:9-14; மத்தேயு 1:20-23).

4. ஸ்திரீயானவளின் நியாயத்தீர்ப்பு (ஆதியாகமம் 3:16) நான்கு பகுதிகளாக உள்ளது.

 • a) பிள்ளை பேற்றின் போது வருத்தமும் வேதனையும் பெருகும்
 • b) பிள்ளைகளோடுள்ள உறவில் வருத்தம்
 • c) ஸ்திரீயானவளின் ஆசை புருஷனைப்பற்றியிருக்கும்
 • d) ஸ்திரீயானவள் புருஷனுக்கு அடங்கி நடக்கவேண்டும் (1 தீமோ. 2:11-14, எபே. 5:22-25, 1 கொரி, 11:7-9)

ஆதாமின் உடன்படிக்கை 2

5. புருஷன் மேல் உள்ள நியாயத்தீர்ப்பு (ஆதியாகமம் 3:17-19)

 • a) பூமியானது சபிக்கப்பட்டது
 • b) இந்த வாழவில் வருத்தம் தவிர்க்கமுடியாத ஒன்று
 • c) ஜீவனத்துக்கு வேண்டியவகள் அளிக்கப்பட்டு இருந்தபோதிலும், அதற்காக அவன் உழைக்க வேண்டியதாய் இருக்கிறது. (ஆதியாகமம் 3:17-19)
 • d) மனிதனுக்கு மரணம் நேரிட்டது. (ஆதியாகமம் 3:19)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *