வேதாகமம்: பகுக்கப்படுதல்

வேதாகமம்: பகுக்கப்படுதல்

வேதாகமம்: பகுக்கப்படுதல்

வேதாகமம்: பகுக்கப்படுதல் விளக்கம்: பகுப்பு – கேனன் (கிரேக்கச்சொல்) பொருள்; அளவு கோல், அல்லது பொதுவான அளவு கோல்

1. நாம் ஏன் வேதத்தைப் பகுக்க வேண்டும்?

a) காரணம் ஒவ்வொரு தலைமுறை விசுவாசிகளும், தேவனுடைய முழுமையான வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்ளும்படியாக.

b) மனிதர். எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையை பெற்றுக்கொள்ளும்படியாக (1 கொரிந்தியர் 2:16)

c) ஒடுக்கப்படுகிற காலங்களில், புனித வேதம் பாதுகாக்கப்பட்டு, வினியோகிக்க

 (d) ஜனங்கள் வேதம் என்றால் என்னவென்றும், வேதம் அல்லாதது எவையென்றும், தேவன் எப்படி நினைக்கிறார் என அறிந்து கொள்ளும்படியாக

2.பழைய ஏற்பாடு பகுக்கப்படுவதற்கான நிபந்தனைகள்

(a) தூண்டப்படுதல் அல்லது ஏவப்படுதல் குறித்த கேள்வி: (2 பேதுரு 1:21) -பழைய ஏற்பாட்டில் உள்ள ஒவ்வொரு புஸ்தகமும் தேவன் தமது சித்தத்தை தெரிவித்த உடனே, அதை தேவ மனுஷர்கள் பெற்றுகொண்டு அதை தேவனுடைய கட்டளையாக ஏற்றுக்கொண்டனர்.

b) உள்ளான ஆதாரத்தின் அடிப்படை (உபாகமம் 31:24-26, யோசுவா 1:8, நியாதிபதிகள் 3:4), நெகேமியா 8:1-8 ல் ஜனங்கள் தேவனுடைய வார்த்தையால் போதிக்கப்பட்டனர் எனக்காண்கிறோம். சிறைப்பட்டிருந்த தானியேல் வேதத்தை வாசித்து (எரேமியா 25:11 12, எரேமியா 29:10) எதிர்கால விடுதலை உண்டு என்பதைக்கண்டுகொண்டார். (தானியேல் 9:2, 5, 6. சகரியா 7:12)

c) மேற்கோள்கள் மூலம் எழுதப்பட்ட சாட்சியங்கள். புதிய ஏற்பாட்டில் இயேசுக்கிறிஸ்துவின் மேற்கோள்கள் மற்றவர்கள் அவைகள் தேவனுடைய வார்த்தை என அறிவித்தனர்.

d) ஜனங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப் பயன்பட்ட நியாயப்பிரமாணம்: (நெகேமியா 8:5)

e) காரணம் மற்றும் விளைவுகள் குறித்த நியாயப்பிரமாணம்: செய்தித்தொடர்பான காரியங்களில் தேவனால் செய்யப்பட்டவைகள் ஒவ்வொன்றும் பகுக்கப்பட்டவைகளால் இனங்கண்டுகொள்ளப்படுகின்றன.

(f) வெளி ஆதாரங்களின் அடிப்படை யூதர்கள் பாபிலோனுக்கு சிறையாகக் கொண்டு போகப்பட்டபடியால் ஆவிக்குரிய நிலையில் கீழான நிலைமைக்குச் சென்றார்கள் (2நாளாகமம் 36:11-21) அவர்கள் அங்கு சிறைவைக்கப்பட்ட காலத்தில், வேதாகம உபசேசத்தில், ஆவிக்குரிய மறுநம்பிக்கை உண்டென, எஸ்றா, நெகேமியா, மல்கியா, செருபாபேல், எடுத்துரைத்து யூதர்களை திடப்படுத்தினர். இது வேதாகமம் முறையாய் பகுக்கப்பட்டு இருந்தபடியால் அவர்கள் வேதாகமச் சத்தியங்களை முறைப்படி கூற முடிந்தது. பழைய ஏற்பாட்டு பகுப்பு முறை கி.மு. 425 ல் முடிவடைந்தது.

3.பழைய ஏற்பாட்டின் பகுப்பு: மூன்று பகுதிகள்:

a) டோரா அல்லது நியாயப்பிரமாணம் – பஞ்சாகமங்கள் ஆதியாகமம், யாதிராகமம், எண்ணாகமம், உபாகமம்.

b) நபீம் அல்லது தீர்க்கதரிசன புஸ்தகங்கள்: இப்புஸ்தகங்கள் இரு பிரிவுகளாய் பிரிக்கப்பட்டது. பாபிலோன் சிறையிருப்புக்கு முன் உள்ள தீர்க்கதரிசிகள், பின் உள்ள தீர்க்கதரிசிகள்.

c) கேத்துபிம் அல்லது எழுதப்பட்ட ஆகமங்கள் – இவைகள் இன்னும் மூன்று துணைப்பிரிவுகளாய் பிரிக்கப்பட்டன.

  • அ) பாடல் புஸ்தகங்கள்: சங்கீதம் மற்றும் யோபு
  • ஆ) ஐஞ்சுருள் அல்லது மெகில்லோத் பல வித பண்டிகைகாலங்களில் வாசிக்கப்படுவன.
  1. உன்னதப்பட்டு பஸ்கா பண்டிகை
  2. ரூத் – பெந்தெகொஸ்தே பண்டிகை
  3. பிரசங்கி – கூடாரப்பண்டிகை
  4. எஸ்தர் – பூரிம் பண்டிகை
  5. புலம்பல் – கி.மு 586 ல் எருசலேம் எருசலேம் வீழ்ச்சியடைந்ததை ஆண்டு தோறும் நினவு கூறும்போது வாசிக்கப்படும் புஸ்தகம்.
  • இ) சரித்திர ஆகமங்கள் தானியேல், எஸ்றா, நெகெமியா, மற்றும் நாளாகமப்புஸ்தகங்கள்.

4. பழைய ஏற்பாட்டு புஸ்தகங்களின் எண்ணிக்கை:

எபிரெய மொழி வேதாகமத்தில் 24 புஸ்தங்கள் மட்டுமே, இவை ஆங்கில வேதாகமத்தில் 39 புஸ்தகங்களாக ஒப்பிடப்படுகின்றன. 1,2 இராஜாக்கள், அநேக தீர்க்கதரிசன புஸ்தகங்கள், ஐஞ்சுருள்களில், ஒரே புஸ்தகமாக்கப்பட்டுள்ளன. உம் புதிய ஏற்பாட்டு புஸ்தகமாகிய மத்தேயுவில் சகரியாவின் மேற்கோள்கள் “எரேமிய கூறியது போல்” என குறிப்பிடப்பட்டுள்ளது. சகரியாப்புஸ்தகம் எரேமியா சுருளியில் இருந்ததே இதன் காரணம் (சகரியா 11:12-13)

5. பழைய ஏற்பாட்டு பகுப்பை வகைப்படுத்துதல்:

அ) ஹோமொலோகௌமெனா; இதில் அடங்கிய புஸ்தகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவைகள் பகுக்கப்பட்டவைகளாக எப்பொழும் அங்கீகரிக்கப்பட்டன.

ஆ) அண்டிலேகௌமியா: கீழ்க்கண்ட ஐந்து புஸ்தகங்களும் பகுப்புகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்த போதிலும், கி.பி. முதல் நூற்றாண்டு துவங்கி ஐந்தாம் நூற்றாண்டு வரை கீழ்க்காணும் காரணங்களுக்காக பகுப்புகளில் ஏற்றுக்கொள்ள வாக்குவாதங்கள் இருந்து வந்தன.

1) எஸ்தர்: இப்புஸ்தகத்தில் தேவனின் நாமம் எங்கும் குறிப்பிடப்படவில்லை

2) உன்னதப்பாட்டு. இப்புஸ்தகம் ஆதி சபைப்பிதாக்களால், பகுப்பில்

ஏற்றுக்கொள்ளப்பட மறுப்பு இருந்து வந்தது, காரணம் இப்புஸ்தகத்தில் காணப்படும் காதல் விவகாரங்கள் ஆகும்.

3) பிரசங்கி: சாலமோன் மனிதவாழ்வை மனிதன் காணும் வண்ணமாக பார்க்கிறார்.. இது யூதர்கள் மற்று வேதாகம உபதேசங்களுக்கு ஒத்துபோவதாய் இல்லை.

4) எசேக்கியேல்: 40-48 அதிகாரங்களில் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு முறண்பாடான கருத்துக்கள் காணப்படுகின்றன. எசேக்கியேல் 40-48 அதிகாரங்களில், வருடாந்திர பலிகள் லேவியர்கள் பயன்பாட்டிலிருந்து, ஆயிரம் வருட ஆழுகையில் செலுத்தப்படுவது குறிப்பிடப்பட்டுள்ளது

5) நீதிமொழிகள் ஒரு நீதிமொழி மற்ற நீதிமொழிக்கு முறன்பாடாக இருப்பதனால்’ இ) சூடேபிகிராஃபா இவைகள் தவறான புஸ்தகங்கள் தவறாய் எழுதப்பட்டு நிராகரிக்கப்பட்டவை. அவைகள் “யன்னேஸ் மற்றும் யம்பிரெஸ் என்பவர்களின் பொறுமை”, “மோசேயின் மந்திரப்புஸ்தகம் போன்றவை இதில் அடங்கும்.

ஈ) அப்போகிரைஃபா: இதில் அடங்கியுள்ள புஸ்தகங்கள் கி.மு. 425 க்குப்பிறகு எழுதப்பட்டு பகுப்புக்கு உட்படாமல் புறக்கணிக்கப்பட்டவைகள். அப்போகிரைஃபா புஸ்தகங்களாகிய 14 புஸ்தகங்களும் செப்துவஹிண்ட், இலத்தீன் வல்கேட் போன்ற வேதாகமங்களில் உட்புகுத்தப்பட்டுள்ளன. அவைகள் எபிரேய பகுப்பிற்குள் இடம் பெறவில்லை. தவறான போதனைகள் அப்போகிரைஃபாவில் இடம் பெற்றுள்ளன. அவைகள்

i) மரித்தவர்களுக்கு படைப்பவைகளும், அவர்களுக்காய் ஏறெடுக்கும் ஜெபங்களும் 2 மக்கபேயர் 12:42

ii) தற்கொலை செய்து கொண்டவர்களை நீதிபரராக்குதல் – 2 மக்கபேயர் 14:41

 iii) தானதர்மங்கள் மூலம் பிராயச்சித்தம் செய்தல் – பிரசங்கி 3:32, 4:1-11,

iv) தானதர்மங்கள் மூலம் கிடைக்கும் இரட்சிப்பு தோபித் 4:11 )

v)அடிமைகளை கொடுமைப்படுத்துதலை நீதியாக எண்ணுதல் பிரசங்கி 33:25-29.

wi) ஆத்துமாக்களின் முன் தாபரம் – சாலமோனின் ஞானம் 8:19-20

wil) மற்ற தவறான கோட்பாடுகள் மந்திரம் உச்சரித்தல், உத்தரிக்கும் ஸ்தலம், படுகொலை செய்தல், தூதர்களின் பரிந்துபேசும் வல்லமை போன்றவை.

6.பழைய ஏற்பாட்டு அப்போகிரைஃபா புஸ்தகங்களை புறக்கணித்தல்.

a) கீழ்க்கண்ட புஸ்தகங்கள் அப்போகிரைஃபா புஸ்தகங்களாகும். 182 எஸ்ட்ராஸ், தோபித், ஜூடித், எஸ்தருடன் சேர்க்கப்படவை, சாலமோனின் ஞானம், பிரசங்கி, பாரூக், எரேமியாவின் நிரூபம், அசரியாவின் ஜெபம், சூசன்னா, பெல்லும் இராட்சத மிருகமும், மனாஸ்ஸாவின் ஜெபம், 182 மக்கபேயர்.

b) எபிரேய பகுப்பில், அப்போகிரைஃபா புஸ்தகங்கள் இல்லை.

c) இயேசுக்கிறிஸ்துவோ அல்லது புதிய ஏற்பாட்டு வேத எழுத்தாளர் ஒருவரும் அப்போகிரைஃபா புஸ்தகங்களிலிருந்து ஓர் சிறிய மேற்கோள்கள் கூட காட்டவில்லை.

 d) ஆரம்ப கால சரித்திர எழுத்தாளர் ஜோசிபஸ் பரிசுத்த வேதாகமத்தில் அப்போகிரைஃபா புஸ்தகங்களை புறக்கணித்துள்ளார.

e) முதல் நான்கு நூற்றாண்டு காலங்களில், அப்போகிரைஃபா புஸ்தகங்களின் (தள்ளுபடி ஆகமங்கள்) பட்டியல் பகுக்கப்பட்ட வேதாகம அட்டவணையில் இடம் பெறவில்லை.

(f) அப்போகிரைஃபா புஸ்தகங்களில், தெய்வீக ஏவுதல்களோ, அல்லது தெய்வீக அதிகாரமோ பெற்று இருக்கவில்லை.

g) தீர்க்கதரிசிகளில் ஒருவர் கூட இப்படிப்பட்ட புஸ்தகங்களுடன் சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்லை.

h) இந்த புஸ்தகங்களில் சரித்திர பிழைகள், பூகோள பிழைகள், நாட்களை குறித்தப் பிழைகள் அநேகம் காணப்படுகின்றன.

i) அப்போகிரைஃபா புஸ்தகங்களின் போதனகள், உபதேசங்கள் மற்றும் கடைபிடிக்கும் ஒழுங்குகள் யாவும் பகுக்கப்பட்ட வேதாகமத்துக்கு முற்றிலும் முறண்பாடான கருத்துக்களை கொண்டதாய் இருக்கிறது.

7. புதிய ஏற்பாட்டு பகுப்பிற்கான நிபந்தனைகள்:

a) அப்போஸ்தலத்துவம்: புதிய ஏற்பாட்டு புஸ்தகங்கள் அனைத்தும், அப்போஸ்தலர்கள் அல்லது அவர்களுடன் நெருங்கிய சம்பந்த முடையவர்களால் எழுதப்பட்டது. (பேதுருவுடன் மாற்கும், பவுலுடன் லூக்காவும்) கி.பி 100 க்குள் எல்லா புஸ்தகங்களும் எழுதி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

b) எழுதப்பட்ட அணைத்துப்புஸ்தகங்களும் சபைகளுக்காக எழுதப்பட்டன – எழுதப்பட்டு அதைப்பெற்றுக்கொண்ட சபைகள் அதன் அதிகாரத்தை அங்கீகரித்தனர்.

c) பழைய ஏற்பாட்டு வேதாகமம், அப்போஸ்தல உபதேசங்களைச்சார்ந்து இப்புஸ்தகங்களின் உபதேசங்கள் அடங்கியிருக்கவேண்டும்..

d) புதிய ஏற்பாட்டு புஸ்தகங்கள் ஒவ்வொன்றிலும், ஏவப்பட்டு எழுதப்பட்டதற்கான உள் மற்றும் வெளி ஆதாரங்கள் இருக்கவேண்டும். புதிய ஏற்பாட்டு பகுப்பை அமைக்கும்போது ஆவிக்குரிய வரங்களை கொண்டு பகுத்தாராய்ப்பட்டு பரிசீலிக்கப்பட்டுள்ளது. (1கொரிந்தியர் 12:10)

e) அங்கீகாரம் – புதிய ஏற்பாட்டுப்புஸ்தகங்கள் ஒவ்வொன்றும் பகுக்கப்பட்ட புஸ்தகங்கள் என சபைப் பிதாக்களால் அங்கீகாரம் பெற்று இருக்கவேண்டும். லவோதேக்கேயா (336 கி.பி) தமஸ்கு 382 கி.பி) கார்த்தேஜ் (397 கி.பி) ஹிப்போ (419 கி.பி) இந்த நான்கு இடக்களில் நடந்த கவுன்ஸில்களில் புதிய ஏற்பாட்டுப்புஸ்தகங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

(f) உள்ளமைப்பு – ஒவ்வொரு புஸ்தகத்தின் உள்ளே உள்ள வார்த்தைகள் பக்திவிருத்திக்கேதுவாக இருக்கிறது என பொது மக்களால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. (கொலோசியர் 4:16, 1 தெசலோனிக்கேயர் 5:27, 1 தீமோத்தேயு 4:13, வெளிப்படுத்தல் 1:3)

8. புதிய ஏற்பாட்டு பகுப்பை வகைப்படுத்துதல்;

a) ஹோமொலோகௌமெனா ஏற்றுக்கொள்ளப்பட்ட புஸ்தகங்கள்

b) அண்டிலோகொமெனா சர்ச்சைக்குரிய புஸ்தகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன – யாக்கோபு, 2 பேதுரு, 2&3 யோவான், எபிரெயர்.

c) சூடேபிக்ரிஃபா – தவறாக எழுதப்பட்டவைகள் – பேதுருவின் சுவிஷேசம், தோமாவின் சுவிஷேசம், அந்திரேயாவின் நடபடிகள் போன்றவை.

d) அப்போகிரைஃபா – புறக்கணிக்கப்பட்டவைகள் – பவுலின் நடபடிகள், பர்னபா எழுதின நிருபம், ஹெர்மெஸின் மேய்ப்பர்கள், பன்னிரெண்டு பேர்களின் வெளிப்படுத்தல், பேதுருவின் வெளிப்படுத்தல்,

 

Leave a Reply