அந்திக்கிறிஸ்து

அந்திக்கிறிஸ்து

அந்திக்கிறிஸ்து

1 வேத வசனங்கள்: தானியேல் 7:8, 21-26; 8:23-27, 9:26-27, 11:36-45, 2 தெசலோனிகேயர் 2:1-12; வெளிப்படுத்தல் 13:1-18; 17:16, 17; 19:19,20.

சுயசரிதை அந்திக்கிறிஸ்து தேவனுடைய ஸ்தானத்துக்கு தன்னை உயர்த்தி. தேவனுக்கு விரோதமாக செயல்பட்டு, தேவனுடைய சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு பகிரங்கமாய் இவ்வுலகை ஆளப்போகிறவன்.

2 கடைசி நாட்களில் அவன் புறஜாதிய தேசங்களிலிருந்து (சமுத்திரத்திலிருந்து) எழும்பி வருவான்

பழைய ரோம சாம்ராஜ்யத்திலிருந்து எழும்பவிருக்கும் பத்து இராஜ்யங்களடங்கிய புதிப்பிக்கப்பட்ட ரோம சாம்ராஜ்யம் அவனது வல்லமைக்கு ஆதாரமாக இருக்கும். அந்திக்கிறிஸ்து மிகவும் தந்திரமாக சமாதான உடன்படிக்கைகளை தேசங்களுடன் செய்து எல்லோரையும் தன் வசமாக்கிக்கொள்வான் எப்படி இருந்தபோதிலும், பதவி வெறி கொண்டு தனது பிரஜைகளிடமிருந்து தனது வல்லமையை பெருக்கிக்கொள்வான், தனது

இராஜ்யத்திற்கு விரோதமாய் செயல்படும் எல்லா மதங்களையும், மதக்கோட்பாடுகளையும் அழித்து அவைகளை கீழடக்குவான். இஸ்ரவேலரோடு உடன்படிக்கை செய்வான், அவர்களை தேவாலயத்தில் பலியிட அனுமதிப்பான், முடிவாக தானே தேவன் என, தேவாலயத்தில் தன்னையே ஆராதிக்கச் செய்வான். பொய்யான அற்புத அடையாளங்களுடன் அவனது ஆட்சிகாலம் ஏழு ஆண்டுகள் நீடிக்கும், அவன் தன்னை தேவனுக்கு சமமாக்கி, விசுவாச துரோகம் இழைப்பான். அவன் அந்நாட்களில் கள்ளத் தீர்க்கதரிசியாகிய இஸ்ரவேல் தலைவருடன் நெருங்கியிருப்பான். முடிவாக அவனது சாம்ராஜ்யம் எருசலேமில் உள்ள, விசுவாசிகளின் மீது திரும்பும், இயேசுக்கிறிஸ்து தனது இரண்டாம் வருகையில் எருசலேமில் உள்ள தனது விசுவாசிகளை விடுவிப்பார், அந்திக்கிறிஸ்துவையும், கள்ளதீர்க்கதரிசியையும் உயிருடன் பிடித்து அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலில் தள்ளுவார்.

3. மதிப்பீடு செய்தல்.

  • a) பத்து இராஜ்யங்களின் முடிவில் புறஜாதிய ராஜ்யங்களிலிருந்து அந்திகிறிஸ்து எழும்புவான் (வெளி 13:1)
  • b) ஏழு தலைகள், ஏழு மலைகள் ரோமை குறித்து பேசுகின்றன (வெளி 179)
  • c) ஏழு இராஜாக்கள்: அவர்களில் ஐந்து பேர் விழுந்தனர், ஒருவன் இருக்கிறான், ஒருவன் வரவேண்டும் (வெளி 17:10), ஐந்து விழுந்து போன ராஜாக்களும், ராஜ்யமும் எகிப்து, அசீரியா, கல்தேயா, பெர்சிய மற்றும் கிரேக்க சாம்ராஜ்யம். இருக்கிற இராஜ்யம் கி.பி 96 இல் இருந்த ராஜ்யம் ( இந்த ஆண்டில்தான் யோவான் இந்த புஸ்தகத்தை எழுதினார்) ரோம சாமராஜ்யம். ஏழாவது சாம்ராஜ்யம் புதிதாய் எழும்பவிருக்கும் புதிய ரோம சாம்ராஜ்யம்.
  • (d) பத்து கொம்புகள் குறுகிய காலத்துக்கு, அதிகாரம் பெறவிருக்கும், பத்து எதிர்கால இராஜ்யங்கள். (வெளி 17:12)
  •  e) அவன் சாம்ராஜ்யங்களை ஆழுகிறவன் (வெளி 13:2; ஒப், தானியேல் 7:4-6)
  • (f) அவனது வல்லமை, அதிகாரம் சாத்தானிடமிருந்து அளிக்கப்படும். (வெளி 13:2 ஒப், வெளி 20:2)
  • g) உலக இராஜ்யங்களை சாத்தான் அந்திகிறிஸ்துவுக்கு கொடுப்பான் (வெளி 13:2)
  • h) அந்திக்கிறிஸ்துவின் ஆழுகையின் திறவுகோள்கள், சாத்தான் வணக்கமும், அவனுக்குரிய ஆராதணைகளுமே, (வெளி 13:4,8)
  • i) அவன் மிகச்சிறந்த சொற்பொழிவாளன், அவன் தேவப் பகைஞன், மூன்றரை ஆண்டுகாலம் ஆழுபவன் (வெளி 13:5)
  • j) அவனது சாம்ராஜ்யம், உலக சாம்ராஜ்யமாயிருக்கும். (வெளி 13:7)
  • k) பாலஸ்தீனத்தை ஆழுகிற பிசாசு பிடித்தவன் (கள்ளத் தீர்க்கதரிசி) அந்திக்கிறிஸ்துவை உயர்த்துவான். (வெளி 13:11)
  • l) அந்திக்கிறிஸ்துவின் ஆழுகையில் மிகப்பெரிய அற்புதங்களும், அடையாளங்களும் நிகழும். (வெளி 13:13)
  • m) அந்திக்கிறிஸ்துவின் சிலை கட்டப்படும். அது பேசக்கூடியதாய் இருக்கும். அதை கண்டிப்பாய் வணங்க வேண்டும் மறுத்தால் மரண தண்டணை. (வெளி 13:14,15)
  • n) அந்திக்கிறிஸ்து உலகப்பொருளாதாரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, விற்பதற்கும் வாங்குவதற்கும் நெற்றியிலாவது, வலது கையிலாவது அடையாளம் ஒன்றை தரித்துக்கொள்ள வேண்டும் என்பான். (வெளி 13:16:17; ஒப், வெளி 14:9-11)
  •  o) அவனது எண் 666 இது ‘பூரணமான மனிதன் அல்லது ‘பூரணமான பாவம்’ என்பதை குறிக்கிறது. (வெளி 13:18)
  • p) தடைசெய்கிறவர் நீக்கப்படுகிறவரை அவன் வெளிப்படப் போவதில்லை. (2 தெசலோனிகேயர் 2:3-7)
  • q) அந்திக்கிறிஸ்துவின் ஆழுகையில் சாத்தானுடைய சகல வல்லமை, பொய்யான அற்புதங்கள், அடையாளங்களோடு இருக்கும். (2 தெசலோனிகேயர் 2:9)
  • r) அவன் அவிசுவாசிகள் அனைவரையும் வஞ்சிப்பான். (2 தெசலோனிகேயர் 2:10-12)
  •  s) இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில், அவன் உயிருடன் பிடிக்கப்பட்டு, அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே தள்ளப்படுவான். (வெளி 19:19,20)

4.அடிப்படைகள்:

a) சாத்தான் இப்பிரபஞ்சத்தை ஆழுகிறவன் (யோவான் 16:11)

b) உலகை ஆக்கிரமிப்பதும், சர்வதேசக்கொள்கைகளும் துவக்க முதல் சாத்தானுக்குறியவைகள் (ஆதியாகமம் 11:6-9)

c) பொய்யான அற்புதங்கள், அடையாளங்கள், குணமாக்குதல் போன்றவைகள் ஜனங்களை ஏமாற்ற சாத்தானின் உபாய தந்திரங்களாய் விளக்கிவருகின்றன. (யோவான் 8:44)

 d) தனிப்பட்ட ஒருவனை கடனாளியாக்கி அவனை அடிமைப்படுத்திகொள்கிறான் (நீதிமொழிகள் 22:7)

 e) தேவனின் ஆதீனத்திற்குள் நபரை சாத்தான் தனது பரந்த வல்லமையால் குழப்பம், மற்றும் தவறாய் புரிந்துகொள்ளுதலுக்கு வழிநடத்துகிறான் (ஆதியாகமம் 3:5, ஏசாயா 14:13,14)

f) பரிசுத்த ஆவியானவரால் உண்மை சபை மத்திய ஆகாயத்துக்கு எடுத்துகொள்ளப்படும் வரை அந்திக்கிறிஸ்து வெளிப்பட முடியாது காரணம் பரிசுத்தாவியானவர் அவனை தடை செய்து வைத்து இருப்பதால். (2 தெசலோனிக்கேயர் 2:3-7)

g) நியாதிபதியாகிய இயேசுக்கிறிஸ்துவை மனிதன் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் அவர் அவருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டியது அவசியம். (வெளி 20:12-15)

(h) குறிப்பிட்ட காலகட்டத்தில் மனுஷர் தேவனுக்கு முன்பாக மிகவும் கடினமுள்ளவர்களாய் காணப்படுவார்கள், காரணம் தேவன் அவர்களை தவறாய் புரிந்துகொள்ளுதலுக்கு ஒப்புக்கொடுப்பார். ( 2 தெசலோனிகேயர் 2:11, ரோமர் 1;28)

 i) அந்திக்கிறிஸ்து ஓர் தனிப்பட்ட நபர் அந்திக்கிறிஸ்துகள், (1 யோவான் 2:18) அந்திக்கிறிஸ்துவின் ஆவி (1 யோவான் 4:3) போன்ற வசங்களால் குழப்பமடைய வேண்டாம்.

5.உபத்திரவ காலத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தைப்போலவே, சாத்தான், அந்திக்கிறிஸ்து, கள்ளத்தீர்க்கதரிசி இவர்களின் திரித்துவம் இருக்கும்,

6. அந்திக்கிறிஸ்து வுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள்:

a) சாத்தானின் வித்து (ஆதியாகமம் 3:15)

 b) சிறிய கொம்பு (தானியேல் 7:8)

c) மூர்க்க முகமுள்ள ராஜா (தானியேல் 8:23)

d)வரப்போகிற பிரபு (தானியேல் 9:26)

e) பாழாக்குகிறவன் (தானியேல் 9:27)

(f) தனக்கு இஷ்டமானபடி செய்யும் ராஜா (தானியேல் 11:36)

g) பாவ மனுஷன் (2 தெசலோனிக்கேயர் 2:3)

h) கேட்டின் மகன் (2 தெசலோனிக்கேயர் 2:3)

i) அக்கிரமக்காரன் (2 தெசலோனிக்கேயர் 2:8)

j) அந்திக்கிறிஸ்து (1 யோவான் 2:22

(k) மிருகம் (வெளி 11:7)

7.அந்திகிறிஸ்து – குணாதிசியங்கள்:

a) அந்திக்கிறிஸ்து சாத்தானின் வித்து என அழைக்கப்படுகிறான். (ஆதியாகமம் 3:15) இயேசுக்கிறிஸ்து எப்படி கன்னிகையின் வயிற்றில் பிறந்தாரோ அப்படியே அந்திக்கிறிஸ்துவின் பிறப்பும் சாத்தானின் செயலின்படியே இயற்கைக்கு அப்பாற்பட்டதாயிருக்கும். (ஆதியாகமம் 6:2)

b) தானியேல் 9:26 ல் வரப்போகிற பிரபுவின் (அந்திக்கிரிஸ்துவின்) ஜனங்கள் எனக்கூறப்படுவதிலிருந்து, இவன் ரோம வம்சா வழியில் தோன்றுகிறவன் என கணிக்கலாம். காரணம் கி.பி.70 ல் ரோமர்கள் எருசலேம் தேவாலாயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினர்.

c) பாவமனுஷனாகிய அந்திக்கிறிஸ்துவை உபத்திரகால ஆரம்பத்தில் இனங்கண்டு கொள்ள இயலாது, அவன் அரசியல் மற்றும் பிரபலமாவதில் இக்கால ஆரம்பத்தில் செயல் படுவான். சபை பரிசுத்தாவியானவரால் மத்திய ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படும் வரை அவன் வெளிப்பட முடியாது. காரனம் பரிசுத்த ஆவியானவர் அவனைத்தடை செய்து வைத்துள்ளார். (2 தெசலோனிக்கேயர் 2:3-7), அவன் உபத்திரவகாலம் தொடங்கி மூன்றரை வருடங்கள் கழித்து தேவாலயத்தில் தன்னை தேவனாக உயர்த்தும்போது அவனது வேஷத்தை யூதர்கள் உணர்ந்து கொண்டு அவனுக்கு விரோதமாய் செயல்படுவார்கள். (வச.4-8)

d) தானியேல் 9:27 ல் அந்திக்கிறிஸ்துவுக்கும் இஸ்ரவேல் தேசத்தாருக்குமிடையே ஏழு வருடங்கள் சமாதான உடன்படிக்கை கையெழுத்தாகும் பொழுது, உபத்திரவ காலம் துவங்க இருக்கிறது. இஸ்ரவேல் அந்த உடன்படிக்கைக்கு கையெழுத்திடும்போது, தேவன் முழு உலகையும் அழிப்பதற்கு தனது கட்டளைகளை பிறப்பிக்கிறார். (ஏசாயா 28:14-22) வெளிப்படுத்தின விஷேசத்தின் நியாயத்தீர்ப்புகள் ஆரம்பமாகின்றன. அந்திக்கிறிஸ்து வெள்ளைக்குதிரையில் வெளிப்பட்டு பொய்யான சமாதானத்தை கொண்டுவருவான். (வெளி 6:1)

e) அந்திக்கிறிஸ்துவின் அதிகார எழுச்சி,

  • i) தானியேல் 8:23-25 ல் அந்திக்கிறிஸ்துவை சாமார்த்தியமுள்ள ராஜாவாய் பார்க்கிறோம். மற்றும் சூதகமுள்ளவானாயும் பார்க்கிறோம் (வச 23) பலவான்கள், பரிசுத்தவானகளையும் (யூதர்களை) யுத்தத்தினால் அழிக்கிறவன் எனப்பார்க்கிறோம் (வச 24) உபாயங்களாலும், வஞ்சகங்களாலும் தனது பதவியைப் பிடிப்பான் (வச. 25).
  • ii) தானியேல் 11:36-39 ல் அவன் விரும்புகிற அனைத்தையும் செய்கிறவனாயும், தன்னை தேவனுக்கு சமமாய் உயர்த்துகிறவனாகவும் (வச 36) தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், மதக்கோட்பாடுகளை அலட்சியம்பண்ண்கிறவனாகவும் இருப்பான் (வச 37). தன் முற்பிதாக்கள் அறியாத தேவனை அவன் கனம்பண்ணுவான் (வச 38) அந்த தேவன் அவனுக்கு வல்லமை அளிக்கிறதாய் இருக்கும் (வச 39) இந்த தேவன் சாத்தான் வனாந்தரத்தில் இயேசுக்கிறிஸ்து சோதிக்கப்பட்ட போது சாத்தான் வாக்குப்பண்ணின அனைத்தையும், சாத்தான் அந்திகிறிஸ்துவுக்குக் கொடுப்பான்.
  • iii) 2 தெசலோனிக்கேயர் 2:8-9 ல் அந்திக்கிறிஸ்துவின் வருகை சாத்தானின் செயலின் படி பொய்யான அற்புத அடையாளங்களோடு இருக்கும்.
  • (iv) உபத்திரவகாலத்தின் முதல் மூன்றரை ஆண்டு காலத்தில், பத்து இராஜ்யங்களாய் பிரிந்து கிடக்கும் உலக இராஜ்யங்களை, ஒரே உலக இராஜ்யமாய் ஒன்றிணைத்து தனது அரசியல் பலத்தை பெருக்கிக்கொள்வான். பத்துப்பேரில் மூன்று பேரை அகற்றுவதும் இதில் அடங்கும். (தானியேல் 7:23-24, வெளி 17:12-17).
  • v) அந்திக்கிறிஸ்து முதல் மூன்றரை ஆண்டுகாலங்களில் ஒரே உலக சபையை (இரகசியம் மகாபாபிலோனை) அழிப்பான், (வெளி 17:5, 16). வெளி 11 ல் தனக்கு மிகவும் பிரச்சனையாய் விளங்கின இரண்டு சாட்சிகளையும் கொலை செய்வான். இருந்தபோதிலும் அவனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து பரலோத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவர்.
  • vi) அந்திக்கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும்: தானியேல் 11:40-45 ல் அந்திக்கிறிஸ்து வடதிசை, தென்திசை, கீழ்த்திசை ராஜாக்களை கொலை செய்வான். என்றும் வச 45 ல் அவன் சாவுக்கேதுவான காயப்பட்டு உதவுவாரின்றி தன் இறுதி நிலைக்கு வருவான். இருந்தபோதிலும், வெளி 13:3 ல் சாவுக்கேதுவான அக்காயம் ஆற்றப்படும். இதினிமித்தம், அந்திக்கிறிஸ்து மரித்து சாத்தனின் வல்லமயால், உயிர்த்தெழுவான் என்றும் இவற்புத செயலால், அந்திக்கிறிஸ்துவை உலகமக்கள் கடவுளாக பாவித்து, வணங்குவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
  • vii) பாழாக்கும் அருவருப்பு:
    • அ) இந்த சம்பவம் உபத்திரவகாலத்தின் மத்தியில் நிகழும், அந்திக்கிறிஸ்து இஸ்ரவேலருடன் செய்த உடன்படிக்கையை மீறி இப்படிப்பட்ட செயலை செய்வான். (தானியேல் 9:27)
    • ஆ) இச்சம்பவம் தொடர்ந்து 1290 நாட்கள் நடைபெறும். (தனியேல் 12:11) இந்த வேதபகுதியில் பாழாக்கும் அருவருப்பு, தேவாலயத்தில் நிறுவப்படும், சிலை, அல்லது உருவத்தை உள்ளடக்கியது.
    • இ) இது யூதர்களை மலைக்கு ஓடிப்போகக் கூறும் எச்சரிப்பின் அடையாளமாய் இருக்கிறது. (மத்தேயு 24:15-16) அது பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக்காணும்போது எனக்கூறப்பட்டுள்ளது.
    • (ஈ) இது புறஜாதியார் எருசலேம் தேவாலயத்தை மேற்கொள்வதுடன் சம்பந்தப்பட்டுள்ளது. (வெளி 11:1-2)
    • உ) அந்திக்கிறிஸ்து தேவாலயத்தில் அமர்ந்து தன்னை தேவனாக காட்டப்போவதை குறிக்கிறது. (2 தெசலோனிக்கேயர் 2:3-4)
    • ஊ) அந்திக்கிறிஸ்துதாமே சரீரப்பிரகாரமாய் தேவாலயத்தில் அமரப்போவது இல்லை, அவனது பேசக்கூடிய உயிருடன் உள்ள சிலையை கள்ளத்தீர்க்கதரிசியின் மூலம் அங்கு வைப்பான் (வெளி 13:11-15)
    • எ) மிருகத்தின் 566 அடையாளம் அந்திக்கிறிஸ்துவுடன் சம்பந்தப்பட்டாது. எப்படி பரிசுத்தாவியானவர் விசுவாசிகளை முத்திரையிகிறாரோ அப்படியே அவிசுவாசி ஒவ்வொருவருக்கும், அந்திக்கிறிஸ்துவால் முத்திரையிடப்படுவார்கள். (வெளி 13:16-18). அந்த முத்திரையே ஜனங்கள் விற்க மற்றும் வாங்க அனுமதி அளிப்பதாக இருக்கும்.

8) 666 என்ற எண் பலவித தன்மைகளைக் கொண்டது.

அ) இது மிருகத்தின் பெயரைக்குறிக்கிறது.

ஆ) இது மிருகத்தின் பெயருக்குள்ள இலக்கம்.

இ) இவ்வெண் அம்மிருகத்தைக் காட்டுகிறது.

ஈ) இது 666 என்ற எண். 666 என்ற எண்ணும், அந்திக்கிறிஸ்துவின் பெயரின் இலக்கமும் சமமாயிருக்கும்,

9) முத்திரையைப் பெற்றுக்கொள்வதால் உண்டாகும் விளைவுகள்: முத்திரையை ஏற்றுக்கொள்ளும்போது, அந்திக்கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, உண்மை தேவனை மறுதளிப்பது ஆகும். முத்திரையை ஏற்றுக்கொள்கிற ஒவ்வொருவரும் உபத்திரவக்கால இரட்சிப்பை இழந்துபோவர்கள். மிருகத்தின் முத்திரைரையை தரித்துகொள்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும், தனிப்பட்ட நியாயத்தீர்ப்பு உண்டு. (வெளி 16:1-2) அவர்கள் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் பங்கடைவார்கள். (14:9-12)

10) அர்மகெதோன் யுத்தத்துடன் அந்திக்கிறிஸ்து வீழ்ச்சியடைவான். 2 தெசலோனிகேயர் 2:8 படி, இயேசுக்கிறிஸ்து அவனுடன் யுத்தம் செய்து, அவனுக்கு முடிவுண்டாக்குவார். அவன் உயிருடன் பிடிக்கப்பட்டு, அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் தள்ளப்படுவான். (வெளி 19:19-21).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *