இயேசுக்கிறிஸ்து : முதல் மற்றும் இரண்டாம் வருகை:
1.பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் இயேசுக்கிறிஸ்துவின் முதல் மற்றும் இரண்டாம் வருகையை பகுத்து புறிந்து கொள்வது அவர்களுக்குக் கடினமாய் இருந்தது. (1 பேதுரு 1:10,11)
1பேதுரு 1: 10 உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்;
1பேதுரு 1: 11 தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.
2.பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம், இயேசுக்கிறிஸ்துவின் வருகை, அடிக்கப்படும்படி கொண்டு போகப்படும் ஆட்டுகுட்டியைப்போல வாய்திறாவாதிருந்தார். எனக்கூறுகிறது, (ஏசாயா 53:7)
ஏசாயா 53: 7 அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
3.பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம், இயேசுக்கிறிஸ்துவின் வருகை, ஜெயம் கொள்ளுகிற ராஜாவாகவும், யூதா கோத்திரத்து சிங்கமாகவும் இருக்கும். (ஏசாயா 11:1-12)
4. ‘பரலோக இராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது’ என்று தமது முதல் பிரசங்கத்தை செய்து, தனது ஊழியத்தை இப்பூமியில் இயேசு தொடங்கினார். (மத்தேயு 4:17) இது அவரது முதல் மற்றும் இரண்டாம் வருகையை இணைக்கிறதாய் இருக்கிறது.
5. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் மேசியா கீழ்க்கண்டவாறு இருப்பார் என காட்டுகிறது:
a) கன்னிகையினிடத்தில் பிறப்பார். (ஏசாயா 7:14)
(b) யூதா கோத்திரமாய் இருப்பார் (ஆதியாகமம் 49:10)
c) அவர் தாவீதின் வீட்டைச் சார்ந்தவராய் இருப்பார். ( ஏசாயா 11:1, எரேமியா 33:21)
d) தியாக பலியாக மரிப்பார் (Isaiah 53:1-12),
e) சிலுவையில் அறையப்படுவார் (சங்கீதம் 22:1-21).
f) மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுவார் ( சங்கீதம் 16:8-11}
g) இரண்டாம் வருகையில் பூமிக்குத்திரும்புவார். (சகரியா 8:3)
h) பிதாவாகிய தேவனின் வலது பார்சத்தில் அமருவார். (சங்கீதம் 110:1)
6.சபையை எடுத்துகொள்ள மீண்டும் வருவது குறிப்பிடத்தக்கது. (1தெசலோனிக்கேயர் 4:14-18)
இது பழைய ஏற்பாட்டில் வெளிப்படுத்ததப்படவில்லை இது சபையைக்குறித்த இரகசிய உபதேசமாய் இருக்கிறது. (கொலோசெயர் 3:4-5)
7. இரண்டாம் வருகைக்குறிய நாள் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரிருளால் மறைக்கப்பட்டுள்ளது.
a) இயேசுக்கிறிஸ்து திரும்ப வரும்பொழுது, ஒவ்வொரு கண்ணும் அவரைக்காணும் (மத்தேயு 24:29-30) கிறிஸ்து உலகின் ஒளியாய் இருக்கிறார். அவர் திரும்பும் இவ்வுல்கம் பாவ இருளால் மூடப்பட்டு இருக்கிறது.
b) இவ்விருள் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது, நமது அனைவரின் பாவத்தை சுமக்கும்போது ஏற்பட்ட இருளுக்கு ஒப்பாயிருக்கும் (மாற்கு 15:53)
c) வட தேசத்து அரசனால், சிறையாக்கப்பட்டு எருசலேமில் இருக்கும் யூத விசுவாசிகளை தமது இரண்டாம் வருகையில் இயேசு விடுவிப்பார் (தானியேல் 11. சகரியா 12:1-3, 14:1-4)
d) இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நாளை சுட்டிக்காட்டும் மற்ற வேத பகுதிகள், பூமியின் மீது முழுமையான இருளை சுட்டிக்காட்டுகிறது, (ஏசாயா13:9-10, எசேக்கியல் 32:7-8, யோவேல் 2:10-11, யோவேல் 3:14-15, ஆமோஸ் 5:18, சகரியா 14:6. மத்தேயு 24:29-30, லூக்கா 21:25-27, வெளிப்படுத்தல் 6:12-17)
8. இயேசுக்கிறிஸ்துவின் இரு வருகைகளையும் முன்னறிவித்தவர்கள்.
முன்னறிவிப்பவர்கள்’ – என்பவர்கள் பழங்காலத்தில், அரசர் ஓரிடத்திற்கு வருமுன்னர், முன்னாகச்சென்று, அவர் வருகையை அங்குள்ளோருக்கு அறிவிப்பவர்கள் ஆகும். இங்கு அரசராக இயேசுக்கிறிஸ்துவை குறித்து நாம் படிக்கிறோம்.
அ) முதல் வருகையை அறிவித்தவர்கள்.
- i) மனித அறிவிப்பாளர் -யோவான் ஸ்நானகன் (மத்தேயு 3)
- ii) தூத அறிவிப்பாளர் – தேவ தூதர்கள் (லூக்கா 2:1-15)
ஆ) இரண்டாம் வருகையை அறிவிப்பவர்கள்.
- i) மனித அறிவிப்பாளர்கள் – மோசேயும், எலியாவும் (வெளிப்படுத்தல் 11)
- ii) தூத அறிவிப்பாளர் – பலமுள்ள தூதன் (வெளிப்படுத்தல் 10)