காயீனும் ஆபேலும்
காயீனும் ஆபேலும் :
1. இரட்சிப்பும் ஆராதணையும், ஜலப்பிரளயத்திற்கு முன்னே இருந்து வந்தன, தேவனுடன் உறவுகொள்ள, அன்றும், இன்றும் ஒரே மார்க்கமே இருந்து வருகிறது, அது இயேசுக்கிறிஸ்துவின் இரத்தம் மூலமே.
பழைய ஏற்பாட்டில் சிலுவையை முன்னோக்கிப்பாற்த்தனர், புதிய ஏற்பாட்டு காலத்தில், சரித்திரப்பூர்வமாய் பின்னோக்கிப் பார்க்கிறோம். எபிரெயர் 9:22,எபேசியர் 1:7, 1 பேதுரு 1:18,19)
காயீனின் வழி:
இரத்தமின்றி, மறுபிறப்பின்றி, இரட்சிப்பின்றி, நல்நடக்கை, நற்கிரியை மூலம் ஸ்தாபிக்கப்பட்ட தவறான மதம். ஓர்க்குடும்பம் தவறு எது சரி எது எனப்போதிக்க ஏற்படுத்தப்பட்டிருந்தது, மற்றும் தேவனிடம் தொடர்பு கொள்வது எப்படி என்றும் ஆதாமும் ஏவாளும் போதித்தனர். ஆதாமும் ஏவாளும் மறுபடி பிறந்து, ஆவிக்குரிய காரியங்களை தனது பிள்ளைகளுக்கு போதித்து இருக்கவேண்டும்.
2. ஆராதணை
a) எங்கு ஆராதணை செய்வது?
ஆதியாகமம் 43 ல் மற்றும் 4:16 ல் ஆராதணை செய்வதற்கு ஓர் இடம் உண்டு எனப்போதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் இருவரும் ஓர் குறிப்பிட்ட இடத்தில் ஆராதிக்க காணிக்கைகளை கொண்டுவந்தனர். ஆதியாகமம் 3:24 ஐ மதிப்பிடும்பொழுது, அவர்கள் ஆராதிக்கச்சென்ற இடம், கேரூபீனால் காவல் செய்யப்பட்ட, ஏதேன் தோட்டத்தின் நுழைவாயில் ஆகும். அபேல் மிருகத்தின் இரத்தத்துடன் வந்தான். காயீன் தனது சொந்த நற்கிரியையினால் தேவனை ஆராதிக்கத் தலைப்பட்டான்.
b) எப்பொழுது ஆராதணை செய்வது?
ஆதியாகமம் 43 ல் “சில நாள் சென்ற பின்” இதன பொருள் தக்க சமயத்தில், எண்ணப்பட்டு குறிப்பிட்ட நாள் வந்தபோது அந்த நாள் ஓய்வு நாளாகவோ, ஞாயிற்றுக்கிழமையாகவோ இருந்திருக்கலாம். c) ஆராதிக்கும் முறைமைகள் ஆதியாகமம் 44ல் ஆபேல் தனது மந்தையின் தலயீற்றுக்கள், அவைகளில் கொழுமையானவற்றை கொண்டுவந்தான். இதினிமித்தம் தேவன் திருப்தி படுத்தப்பட்டார்.
3. காயீனும் ஆபேலும்
a) காயீன் –
இதன் பொருள் பெற்றுக்கொள்ளுதல” ஏவாள் சிறிது குழப்பத்துடன் தனது முதல் குமாரனுக்கு பெயரிட்டாள். ஏவாள் இரண்டு வம்சா வழி உண்டு என்பதை அறிந்து இருந்தாள். அத்தியிலை வம்சா வழி, தோலுடை வம்சா வழி சாத்தானின் வித்து, ஸ்திரீயின் வித்து. எப்படியிருப்பினும் காயீன் சாத்தானின் முதல் வித்தானவன்.
b) ஆபேல் –
இதன் பொருள் ஒன்றமில்லாமை’ – அவன் கிருபையைச் சார்ந்து இருந்தான் மற்றும் மறுபடி பிறத்தலின் முதல் வம்சா வழியாய் இருந்தான்.
c) தொழில்:
காயீன் நிலத்தைப்பயிரிடுகிறவன், ஆபேல் மேய்ப்பனாயிருந்தான். (யோவான் 1:29 cf ஆதியாகமம் 3:21}
4.காயீனின் காணிக்கை:
காயீன் மிகச்சிறந்த நிலையில் நிலத்தில் பயிர் செய்கிறவனாய் இருந்து, சிறந்த காய்கறிகள், பூமியின் கனி வர்க்கங்களை கொண்டு வந்தான்.
அ) பலியின் மாதிரி;
i) இரத்தமில்லாத பலி (எபிரெயர் 9:12)
ii) நெற்றியின் வியர்வை – இது காயீனின் சொந்த கடின உழைப்பை காட்டுகிறது – மனித நன்மை (ஏசாயா 64:6)
iii) இது சபிக்கப்பட்டது (ஆதியாகமம் 3:17)
iv) தேவன் ஏற்றுக்கொள்ள கூடாததாய் இருந்தது. (தீத்து 3:5)
ஆ)சம்பந்தப்படுத்துதல்:
i) காயீன் பாவத்தை புரிந்துகொள்ள தவறிவிட்டான் மற்றும் பாவத்திற்கான தண்டனை அவனது சுயத்தேவையாகவே இருந்தது,
ii) மனிதனுடைய சாபத்தை அவன் மறுதளித்தான்.
iii) தேவன் உதவ முன் வரும்பொழுது அதை அவன் மறுக்கிறான்.
iv) காயீனின் தைரியம்: நான் இதை செய்தேன் -இது சுய நீதியை காட்டுகிறது.
v) காயீன் குணப்படுதலை விரும்பாமல், மேற்பூச்சாய் மூட விரும்பினான். (மத்தேயு 23:27,28).
இ) மதம் இயேசுக்கிறிஸ்துவின் இரத்தத்தை உதாசீனப்படுத்தி, நற்கிரியைகளையே வகையறுக்கிறது.
5.ஆபேலின் காணிக்கை:
ஆபேல் மேய்ப்பனாய் இருந்தான், அவன் தனது மந்தையின் தலையீற்றுகளில் கொழுமையானவைகளை கொண்டு வந்தான். (எபிரெயர் 11:4, 1யோவான் 3:12)
கிருபையின் அடிப்படை:
அறிமையுள்ள ஓர் நபரின் இரத்தம் மூலம் தொடர்பு கொள்ளுவது, இது ஆபேல் நல்ல தோற்றத்தையும், காயீன் விரும்பப்படாத தோற்றத்தையும் உதையவர்களாய் இருந்தார்கள் என்பதல்ல, தெய்வீக சத்தியமே அடிப்படையாய் இருக்கிறது. இரத்தம் மற்றும் இரத்தம் இல்லாத இதை மட்டுமே அடிப்படையாய்க்கொண்டது தெய்வீக கிரியைகள் மற்றும் மனுஷீகக் கிரியைகள்
6.(ஆதி 4:5) தேவன் காயீனுடன் செயல்படுகிறார்.
தெய்வீக இரட்சிப்பை மனிதன் மறுதலிப்பதின் பொருள், ஓர் தனிப்பட்ட மனிதனின் தெய்வீக மறுதளிப்பை காட்டுகிறது. காயீனின் பிரதி செயல்பாடு, அவன் மிகவும் கோபமடைந்தான், அவன் முக நாடி வேறுபட்டது, ஆபேல் ஏற்றுக்கொள்ளப்பட்டான். இது காயீன் ஆபேல் மேல் பொறாமை கொள்ளச் செய்தது, மற்றும் இது இரண்டாம் தலை முறையில் இச்சைக்கு முதலிடம் கொடுக்க வைத்தது.
ஆதியாகமம் 4:6,7 வசனங்களில் காயீனுக்கு தேவன் மாற்று உபகாரம் செய்கிறார்; தேவன் காயீனைப்பார்த்து ஏன் கோபத்துடனும் வருத்தத்துடனும் காணப்படுகிறாய்?
“நீ நன்மை செய்தால்” (முழுமையான நன்மை) இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்தல், “நீ ஏற்றுக்கொள்ளப் படமாட்டாயோ?”, இல்லையெனில் (மனித நன்மையை பெரிதாய் கருதுவாய் என்றால்) பாவ நிவாரணப் பலி (இயேசுக்கிறிஸ்து) உன் வீட்டு வாசற்படியில் படுத்து இருக்கும். ( இரட்சிப்பு உன் கதவு திறக்கப்பட்டுள்ள வரையில், அது உனக்கு கிடைப்பதாய் இருக்கிறது. (வெளி 3:20).
தேவ சித்தம் நீ இரட்சிப்படைவது (2 பேதுரு 3.9) நீ அவனை ஆண்டுகொள்வாய்” காயீன் முதற் பிறந்த படியால், அவனுக்கு சில உரிமைகள் இருந்தன. அ) ஆண்டுகொள்வது ஆ) ஆசாரியத்துவம் இ) இரண்டு மடங்கு நன்மை பெறுவது
காயீன் இவைகளை பெற்றுக்கொண்டதாய் தெரியவில்லை, காரணம் அவன் தேவனால் அங்கீகரிக்கப்படவில்லை. அவன் திரும்பவும் தேவனை நிராகரிக்கிறான். அவனது பொறாமை வேறுப்பிற்கும், வெறுப்பு கொலை செய்வதற்கும் வழி நடத்தியது.
7. காயீனும் ஆபேலும் மனிதவர்க்கத்திற்கு பிரதி நிதிகளாய் இருந்து வருகின்றனர்.
காயீன் அவிசுவாசிகளுக்கும், ஆபேல் விசுவாசிகளுக்கும் பிரதிநிதிகளாய் விளங்குகின்றனர், (யோவான் 3:36)