இயேசுக்கிறிஸ்துவைப் பற்றிய சாட்சிகள்

இயேசு கிறிஸ்து

இயேசுக்கிறிஸ்துவைப் பற்றிய சாட்சிகள்

இயேசுக்கிறிஸ்துவைப் பற்றிய சாட்சிகள் :

ஏசாயாவில் அவரைக்குறித்துள்ள தீர்க்கதரிசனங்கள்

 • 1) அவரது தெய்வத்துவம் (40:12-18, 51:13)
 •  2) அவர் மனிதனாய் பிறப்பது (7:14, 9:6)
 • 3) அவரது எளிமையான வாலிபம் (7:15, 9:1-2, 11:1, 53:2)
 • 4) அவரது ஊழியம் (11:2, 42:1)
 • 5) அவரது சாந்தம் (42:2)
 • 6) அவரது மிருதுத்தன்மை (42:3)
 • 7) அவரது கீழ்ப்படிதல் (50:5)
 • 8) அவரது செய்தி (61:1-2)
 • 9) அவரது அற்புதங்கள் (35:5-6)
 • 10) அவரது பாடுகள் (50:6, 52:13-15)
 • 11) அவர் புறக்கணிக்கப்படல் (53:1-3)
 • 12) அவரது துயரம் (53:4-5)
 • 13) அவரது பிரதிநிதித்துவ மரணம்(53:8)
 • 14) அவர் அடக்கம் செய்யப்படுதல் (53:9)
 •  15) அவரது உயிர்த்தெழுதல் (53:10)
 • 16) அவரது பரமேறுதல் (52:13)
 • (17) அவரது பிரதான ஆசாரியத்துவ ஊழியம் (53:12)
 • 18) அவர் உயர்த்தப்படுதல் (52:13-15)
 • 19) அவர் நியாதிபதியாகுதல் (63:1-6)
 • 20) அவரது இரண்டாம் வருகை (59:20-21)
 • 21) அவரது ஆயிரவருட ஆழுகை (9:6-7, 11:3-9)

இயேசுக்கிறிஸ்துவின் வழ்நாளில் தன்னைக்குறித்து உரிமை பாராட்டியவைகள்:

1) அவர் மோசேயின் நியாயப்பிரமாணத்தை மிகைப்படுத்தி தான் கூறுவதை திரும்ப எழுதவேண்டும் என்கிறார் (மத்தேயு 5:21–48)

2) அவரது முன்னான வாழ்க்கையில் அவர் தேவனாய் இருந்தார் என உரிமை பாராட்டுகிறார். “நான் இருக்கிறேன்” என்ற சொற்றொடரை தாராளமாய் தன்னைக்குறித்து உபயோகிக்கிறார். இச்சொற்றொடர் யெஹோவாவை மட்டும் குறிக்க பழைய ஏற்பாட்டில் பயன்படுத்த பட்ட சொற்றொடர் ஆகும். (யோவான் 6:35, 8:12,58, 10:7,11, 11:25, 14:6, 15:5)

3) அவர் சீஷர்களை தம்முடைய நாமத்தில் ஜெபிக்கச் சொன்னார். (யோவான் 14:14)

4) அவர் தான் பரலோகிலிருந்து வந்தேன், அவ்விடத்திற்கு திரும்ப செல்வேன் என்று கூறியிருக்கிறார். ( யோவான் 3:13, 6:33,42, 50-51, 62; 14:2-7)

5) அவர் மரணத்தில் உள்ள வல்லமையை உரிமை கொண்டாடினார். தன் ஜீவனை கொடுக்கவும், அதை திரும்பப் பெறவும் தனக்கு வல்லமை உண்டென கூறுகிறார். (யோவான் 10:17-18)

6) அவர் மரணம் தன்னை மேற்கொள்ளாது மூன்று நாளிலே நான் திரும்ப எழுப்புவேன் என்றார். (யோவான் 2:19)

(7) கடைசி நாளில் மரித்த அனைவரையும் உயிரோடு எழுப்புவேன் என்றார். (யோவான் 5:25-29, 11:25)

8) அவர் தன்னைக் குறித்து கூறும்பொழுது, தான் எல்லா மனிதரையும் நியாந்தீர்ப்பேன் என்றார். (மத்தேயு 25:31; யோவான்5:22)

9) அவர் தன்மீது நம்பிக்கை வைப்பது, தேவன் மீது நம்பிக்கை வைப்பதற்கு சமம் என்கிறார். இதினிமித்தம் தன்னை தேவனுக்கு சமமாக்கினார். (மத்தேயு 28:18-19. யோவான் 14:1)

10) தேவன் தம்மை ஒருவனுக்கு வெளிப்படுத்தினால் மட்டுமே அவன் அவரை அறிந்துகொள்ளமுடியும். (மத்தேயு1127; யோவான் 14:6)

11) அவர் ஆராதணையை ஏற்றுக்கொள்வது தன் உரிமை எனக்கூறுகிறார். அராதணை தேவனுக்கு மட்டுமே உரியது. இயேசு கீழ்க்கண்டவர்களின் ஆராதணையை ஏற்றுக்கொண்டார். நாத்தான்வேல் (யோவான் 1:49) பேதுரு (மத்தேயு 16:16) தோமா (யோவான் 20:28)

12) என்னைக் கண்டவன் பிதாவைக்கண்டான் என்றார் (யோவான் 14:9-10)

13) என்னை கனம் பண்ணுகிறவன் பிதாவையும் கனம்பண்ணுகிறான் என்று கூறினார். (CumarGOT 5:22-23)

14) பாவத்தை மன்னிக்க அவருக்கு அதிகாரம் உண்டு என்றார், மற்றும் தன்னை விசுவாசிப்பவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பேன் என்றார். (மத்தேயு92; யோவான் 10:28, 3:16-21, 6:35, 11:25)

15) தன்னை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு நித்திய நியாயத்தீர்ப்பு காத்திருக்கிறது என்றார். (யோவான் 3:36; மத்தேயு 25:41-46)

16) முழுமையான அதிகாரத்துடன் போதனை செய்தார். (மத்தேயு 7:29, மாற்கு 1:22, யோவான் 146)

(17) வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் தனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றார். (மத்தேயு 28:18)

18) நானும் என் பிதாவும் ஒன்று என்றார். ( யோவான் 10:30)

19) எல்லா வெளிப்பாடுகளும் தன்னில் நிறைவேறியுள்ளன என்று ஆணித்தரமாகக்கூறினார் யோனாவில் தன்னைக்குறித்து எதிர்பார்க்கப் படுகின்ற ஒற்றுமையை அவர் கண்டார். ( மத்தேயு 12:39-41, லூக்கா 11:29-32), சாலமோன் (மத்தேயு 12:42, லூக்கா11:31), தாவீது (மத்தேயு 12:3,4, மாற்கு 2:25-26; லூக்கா 6:3,4) மற்றும், ஏசாயா ( மத்தேயு 13:13,14,மாற்கு 4:12 and லூக்கா 8:10).

அவரது வாழ்நாட்களில் அவிசுவாசிகளின் இயேசுக்கிறிஸ்துவைப் பற்றிய சாட்சிகள்

1. யூதாஸ் ஸ்காரியோத் ( மத்தேயு 27:4) –

 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன்.

2. பொந்தியு பிலாத்து (யோவான் 19:46) –

 இவரில் நான் ஒரு குற்றத்தையும் காணேன்.

3. ஏரோது (லூக்கா23:15) –

அவரும் இவரிடத்தில் குற்றம் காணவில்லை, மரணத்திற்கு ஏதுவாக இவர் ஒன்றும் செய்யவில்லையே.

4. பிலாத்துவின் மனைவி ( மத்தேயு 27:19) –

அந்த நீதிமானுக்கு ஒன்றும் செய்யவேண்டாம்.

5. மரிக்கும் கள்ளன் ( லூக்கா 23:41) –

நம்மைப்போன்ற குற்றங்களை இவர் செய்யவில்லையே

6 கொல்கதாவில் இயேசுவை சிலுவையில் அறைந்த நூற்றுக்கதிபதி (லூக்கா 23:47) –

இவர் நீதிமானாய் இருந்தார்.

7.கொல்கதாவில் இயேசுவை சிலுவையில் அறைந்த ரோம சிப்பாய்கள் ( மத்தேயு 27:54) –

இவர் மெய்யாகவே தேவக்குமாரன் என்றனர்.

வெளிப்படுத்தின விஷேசத்தில் தன்னைக்குறித்து இயேசுக்கிறிஸ்து கூறியவைகள்

1.”நானே அல்ஃபாவும் ஒமேகாவும், முந்தினவரும் பிந்தினவருமாய் இருக்கிறேன் – இயேசிக்கிறிஸ்து எல்லாவறையும் அறிந்தவர் (1:11)

2. நானே ஆதியும் அந்தமுமாய் இருக்கிறேன்”. – அவர் நித்தியர் (1:17)

3 மரித்து மரணத்தை ஜெயம் கொண்டவர், நமது நித்தியத்தை நரகத்தில் கழிக்காமல் அதற்கு மீட்டு இரட்சிப்பவர். (1:18)

4. தம்முடைய வலது கரத்தில் சபையின் ஊழியர்களை ஏந்திக்கொண்டு சபைகளில் பிரசன்னராய் இருக்கிறவர். (2:1)

5. அவர் தனது தியாக மரணத்தை நித்தியத்துடன் இணைக்கிறார். (2:8)

6. அவர் இருக்கிறவரும், தேவனுடைய வார்த்தையை உடையவரும் (2:12)

7. அவர் இரட்சகர் மட்டுமல்ல அவர் நியாதிபதியும் கூட. (2:18)

8. சபை செயல்படும்படியாக, அவர் சபைக்கு பரிசுத்தாவியானவரைக் கொடுத்தார். (3:1)

9. அவர் பரிசுத்தர், உண்மையுள்ளவர், அதிகாரத்தை உடையவர். அவர் நமக்கு ஊழியம் செய்ய தருணங்களை கொடுக்கிறவரும் கூட (3:7)

10. அவர் இறுதி அதிகாரத்தைப் பெற்றவர், அவர் தேவனின் வெளிப்பாடாய் இருக்கிறவர் மற்றும் தேவனது சிருஷ்டிப்பின் ஆதாரமாய் விளங்குபவர். (3:14)

11. அவர் மனிதனை அழைக்கிறார். அனால் அவனது சுயசித்தை அவர் ஒருபோதும் வற்புறுத்துவது கிடையாது.

Leave a Reply