கிறிஸ்தவ வாழ்க்கை
1.தேவனை நாம் எப்படி திருப்திப்படுத்துவது?
a) சரியான காரியங்களை கேட்பதன் மூலம் (1 இராஜாக்கள் 3:9, 10)
b) வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வதன் மூலம். (எபிரெயர் 13:20, 21)
c) அவரது சித்தத்தை செய்வதன் மூலம் (எபிரெயர் 13:20, 21)
d) அவருடன் ஐக்கியப்பட்டு அவரோடு நடப்பதன் மூலம்.( எபிரெயர்11:5, ஆதியாகமம் 5:24)
e) தேவனைத் துதிப்பதன் மூலம் (சங்கீதம் 69:30,31)
f)தேவன் பலனளிப்பவர் என விசுவாசித்து அவரில் அமர்ந்து இருத்தல் மூலம் (எபிரெயர்11:6)
2. கிறிஸ்தவ வாழ்க்கை நடக்கையை உள்ளடக்கியது.
(a) சத்தியத்தில் நடத்தல் (2 யோவான் 4)
b) விசுவாசத்தின் மூலம் ஞானமாய் நடத்தல் (2 கொரிந்தியர் 5:7, கொலோசெயர் 4:5)
c) ஆவியில் நடத்தல் (கலாத்தியர் 5:16, 25)
(d) அன்பில் நடத்தல் (எபேசியர் 5;2)
e) புதிதாக்கப்பட்ட வாழ்க்கைக்கேற்ப நடத்தல் (ரோமர் 6:4)
f) அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்த்திரமாய் நடத்த்தல் (எபேசியர் 4:1)
g) கர்த்தருக்குப் பாத்திரமாய் நடத்தல் (கொலோசெயர் 1:10, 1 தெசலோனிக்கேயர் 2:12)
h) சீராய் நடத்தல் (ரோமர் 13:13)
i) நற்கிரியைகளை செய்து நடத்தல். (எபேசியர்2:10)
j) வெளிச்சத்தில் நடத்தல் ( எபேசியர் 5:8, 1 யோவான்1:7)
k) கிறிஸ்து இயேசுவுக்குள் நடத்தல் ( கொலோசெயர் 2:6)
l) ஞானமுள்ளவர்களைப்போல கவனமாய் நடந்து கொள்ளுதல் (எபேசியர் 5:15,16
m) சமய சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல் (1 தெசலோனிக்கேயர் 4:1)
3. கிறிஸ்தவ வாழ்க்கை புகழ்ச்சிக்குரிய நன்நடத்தையை வளியுறுத்துகிறது:
அ) விசுவாசிகளுக்கு கிறிஸ்துவில் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. (கலாதியர் 5:1), ஆனால் நமது நடத்தை கீழ்கண்டவாறு இருக்கக்கூடாது.
i) பெலவீனருக்கு இடறலாய் இருக்கக்கூதாது, (1 கொரிந்தியர் 8:9),
ii) மாய்மாலம் செய்யக்கூடாது (1 பேதுரு 2:16);
iii) பக்தி விருத்தியை கெடுப்பனவற்றை செய்யக்கூடாது (1 கொரிந்தியர் 10:23);
iv) அடிமத்தனத்துக்கு வழிநடத்தும் பழக்க வழக்கங்களில் ஈடுபடக்கூடாது (1 கொரிந்தியர் 6:12),
v) சுயாதீனத்தை மாம்சத்திற்கு ஏதுவாய் அனுசரிக்கக்கூடாது, (கலாதியர் 5:13);
vi) தங்களது மனசாட்சியை எதிர்க்கக்கூடாது (ரோமர் 14:5)
ஆ) தேவனோடுள்ள நம்முடையத் தொடர்பு:
i) அவருடைய நாமத்தில் செய்தல் (1 தீமோத்தேயு 6:1)
ii) தேவனுக்கு என செய்தல் (கொலோசெயர் 3:23)
iii) அவரது நாம் மகிமைக்கென செய்தல் (1கொரிந்தியர் 10:31)
iv) அவருக்குப் பாத்திரமாய் இருத்தல் (1 தெசலோனிக்கேயர் 2:12; 2 தெசலோனிக்கேயர் 1:5)
இ) மற்றவர்களுடன் நமக்குள்ள தொடர்பு:
i) நல்ல முன் மாதிரியுடன் இருக்கவேண்டும். (ரோமர்14:7; 1 தீமோத்தேயு 4:12)
ii) நமது அழைப்புக்குப் பாத்திரமாய் நடந்து கொள்ளவேண்டும். (எபேசியர் 4:1)
iii) யோக்கியமாய் நடந்து கொள்ளவேண்டும் (2 கொரிந்தியர் 8:21)
iv) பொல்லாங்காய் தோன்றுகிறவைகளை விட்டு விலகவேண்டும். (1தெசலோனிக்கேயர் 5:22)
v) பிறருக்கு உதவி செய்தல் வேண்டும். (ரோமர் 12:18; 15:2)
vi) தடுக்கிவிழ காரணமாய் இருக்கக்கூடாது (ரோமர் 14:13)
vii) ஒருவரின் பெற்றோரை கனப்படுத்துதல் வேண்டும். (கொலோசெயர் 3:20)
viii) அரசாங்கத்தை கனப்படுத்துதல் வேண்டும். (தீத்து 3:1)
(ix) அந்நிய நுகத்தில் அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படக்கூடாது (2 கொரிந்தியர்
(x) பிறரை நியாந்தீர்த்தல் கூடாது. ( ரோமர் 14:10-13)
(xi) நமது நடக்கையினாலே பிறர் தடுக்கிவிழச் செய்யக்கூடாது. (ரோமர் 14:15,21-23) 6:14)
(ஈ) நமது சுயத்தொடர்பு:
i) இச்சைக்கேதுவாய் இருக்கக்கூடாது, சுத்தமானதாய் இருக்கவேண்டும். (1தீமோத்தேயு 5:22, 1 பேதுரு 2:11)
ii) தீட்டுபடக்கூடாது. (1 கொரிந்தியர் 3:17; தீத்து 1:15)
iii) தன்னை குற்றவாளி என தீர்த்துக்கொள்ளக்கூடாது. ( ரோமர் 14:22)
iv) நல்ல கிரியைகளை செய்யவேண்டும் (தீத்து 3:8)
4.கிறிஸ்தவ வாழ்க்கை கடின உழைப்பை எதிர்பார்க்கிறது:
a) மற்றவர்களிடத்தில் அன்பு கூறுதல் (கலாத்தியர் 2:20, 2 கொரிந்தியர் 8:8) நம்மைவிட தாழ்வில் உள்ளவர்களுக்கு உதவிசெய்ய ஆர்வம் காட்டவேண்டும், விஷேசமாய் சுவிஷேசத்தை அவர்களுக் கொடுக்கவேண்டும்.
b) பரிசுத்தவான்களை (பிற விசுவாசிகளை) மிகக்கவனமாய் பார்த்துக்கொள்ள வேண்டும் (எபிரெயர் 6:11, 2 கொரிந்தியர் 7:12, 2 கொரிந்தியர் 8:16,17, 2 தீமோத்தேயு 1:17)
c) தேவனின் அடிப்படை சித்தாந்தங்கள், மற்றும் அவரது வாக்குத்தத்தங்களின் மீது மிகவும் ஆர்வத்துடன் அவைகளை சார்ந்துகொள்வது அவசியம். உதாரணமாக யாத்திராகம சந்ததியைப்போல், வாக்குத்தங்களை சார்ந்து இருக்கக்கூடாது, (எபிரெயர் 4:11)
(d) நமது அழைப்பை உறுதிப்படுத்துதல் – (2 பேதுரு 1:5, 2 பேதுரு 1:10) நாம் கிறிஸ்துவுக்காக ஆர்வத்துடனும், வைராக்கியத்துடனும் சாட்சி பகற வேண்டும்.
e) சரீர ஒற்றுமை ( எபேசியர் 4:3) சரீர ஒற்றுமையை பேணிக்காப்பதில் வைராக்கியமாய் இருக்க வேண்டும்.
f) தேவனது அங்கீகாரத்தைப்பெற்று இருக்கவேண்டும். (2 தீமோத்தேயு 2:15). நீங்கள் தேவனால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
g) கலங்கமற்ற வாழ்வைப் பெற்று இருக்க வேண்டும். (2 பேதுரு 3:14) தேவனுடன் நெருங்கி நடந்து தேவையற்ற சோதணைக்குரிய இடங்களில் நம்மை வெளிப்படுத்தாது இருக்கவேண்டும்.
5. கிறிஸ்தவ வாழ்வின் முக்கியத்துவங்கள்:
a) முதல் நபர் – இயேசுக்கிறிஸ்துவுக்கே நாம் எல்லாவற்றைக்கட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். கொலோசெயர் 1:16-18
b) முதன்மையாய் பெற்று இருக்க வேண்டியது தேவனுடைய இராஜ்ஜியம் இது மகாப்பெரிய வரமாய் இருக்கிறது. மத்தேயு 6:33
c) முதலாவது காணிக்கை – தன்னைத்தானே அற்பணிப்பது – 2 கொரிந்தியர் 8:5
d) முதலாவது மறுதளிப்பு தன்னைத்தானே மறுதளித்துக்கொள்வது மத்தேயு 75
e) முதலாவது ஒழுங்கு – ஜெப ஒழுங்கு – 1தீமோத்தேயு 2:1-4
(f) முதல் கட்டளை எல்லாவற்றையும் விட அதிகமாய் தேவனிடத்தில் அன்பு கூறுதால் மத்தேயு 22:37-38
g) முதல் மன்னிப்பு – தேவனுடன் நேரம் செலவளிப்பது கடினமாகக்கருதுதல் மத்தேயு 8:21-2
6. கிறிஸ்தவ வாழ்க்கை அநேக முதலீடுகளைக் கொண்டுள்ளது:
a) முதல் முதலீடு – இரட்சிப்பில் ஒரு விசுவாசி தனது ஜீவனை கர்த்தரிடம் அற்பணித்து அவரை நம்புவது (2 Timothy 1:12)
b) இரண்டாம் முதலீடு – கர்த்தர் தேவனது வார்த்தைகளை விசுவாசியுடன் முதலீடு செய்தல்-போதனைக்கும், படிப்பதற்கும். (2 Timothy 1:12)
c) மூன்றாம் முதலீடு – விசுவாசி தனது பயம், பிரச்சனைகள், மன அழுத்தங்கள் இவைகளை முதலீடு செய்கிறார் (1 Peter 4:19, 5:7, Psalm 55:22)
(d) நான்காம் முதலீடு – விசுவாசி சுவிஷேசத்தை அவிசுவாசியுடன் முதலீடு செய்கிறார். (Romans 1:14)