கிறிஸ்துவின் தெய்வீகம்

இயேசுவின் தெய்வீகம்

கிறிஸ்துவின் தெய்வீகம்

1. இயேசுக்கிறிஸ்து தேவனும் மற்றும் மனிதனுமாய் இருக்கிறார். அவரில் இவ்விருத்தன்மைகளும் பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட இணைப்பு தனிப்பட்டதாயும், நித்தியத்திற்குரியதாயும் இருக்கிறது. (பிலிப்பியர் 2:5 1,யோவான்1:1-14,ரோமர் 1:4, ரோமர் 9:5, 1 தீமோத்தேயு 3:16)

2. இயேசுக்கிறிஸ்து தெய்வீகத்தில் குறைவற்றவராய் இருக்கிறார், இது அவரது தெய்வீக குணநலன்களை உள்ளடக்கியது.

a) சர்வ வல்லமை (ஆதியாகமம் 1, வெளிப்படுத்தல் 1:5, 6,17:14,19:16)

b) நித்திய ஜீவன் (ஏசாயா 9:6, மீகா5:2, யோவான் 1:1-2, 8:58, கொலோசியர் 1:16 17,எபேசியர் 14 வெளிப்படுத்தல் 1:8)

c) பரிசுத்தம் (லூக்கா 1:35, அப்போஸ்தலர் 3:14, எபிரெயர் 7:26)

d) அன்பு (யோவான்13:1, 34, 1 யோவான் 3:15)

e) மாறாதவர் (எபிரெயர் 13:8)

f) சர்வ ஞானம் (மத்தேயு 9:4, யோவான் 2:25, யோவான் 18:4, 1 கொரிந்தியர் 4:5, கொலோசெயர் 2:3, வெளிப்படுத்தல் 2:23)

g) சர்வ வல்லமை (மத்தேயு 24:30, 28:18, 1கொரிந்தியர் 15:28, பிலிப்பியர் 3:2 1, எபிரெயர் 1:3.வெளிப்படுத்தல் 1:8)

h) சர்வ வியாபகம் ( மத்தேயு28:20, எபேசியர் 1:23, கொலோசெயர் 1:27)

i) சத்தியம் (யோவான் 14:6, வெளிப்படுத்தல்3:7)

3. கிறிஸ்து தேவகுமாரனாய் இருக்கிறார், அவர் பிதாவாகிய தேவனுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் சமமானவர் (மத்தேயு 28:19, 2 கொரிந்தியர் 13:14, 1 பேதுரு 1:2),

4.இயேசுக்கிறிஸ்துவின் தெய்வீகத்திற்கான ஆதாரங்கள்:

a) அவர் எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர் (யோவான் 1:3,10, கொலோசெயர் 1:16, எபிரெயர் 1:10)

b) அவர் எல்லாவற்றையும் பாதுகாக்கிறவர் (கொலோசெயர் 1:17, எபிரெயர் 1:3)

c) பாவத்தை மன்னிக்கிறார். (லூக்கா 5:21,24)

(d) மரித்தோரை உயிரடையச் செய்கிறவர் ( யோவான் 5:21,28-29, 11:42–43)

e) பரிசுத்தவான்களுக்கு பலன் அளிப்பவர் (2 கொரிந்தியர் 5:10)

f) கடைசி நாட்களில் இவ்வுலகை நியாந்தீர்க்கப்போகிறவர். (யோவான் 5:22)

g) ஆராதணையை ஏற்றுகொள்கிறவர். ( எபிரெயர் 1:6)

5. இயேசுக்கிறிஸ்து யெகோவாவாக இருக்கிறார்.

a) இயேசுக்கிறிஸ்து தேவனாய் இருக்கிறார். (ஏசாயா9:6; யோவான் 1:1; யோவான் 20:28 2 பேதுரு 1:1 ; தீத்து 2:13). யெகோவா தேவனாய் இருக்கிறார் (எரேமியா32:18; ஏசாயா 43:10; ஏசாயா 45:22; பிலிப்பியர் 2:10).

b) இயேசு இருக்கிறேன் என அறியப்படுகிறார். (யோவான் 8:24; 8:58, 13:19; 18:5). யெகோவாவும் இருக்கிறேன்’ என அறியப்படுகிறார். (ஏசாயா43:10; யாத்திரகாமம்3:13 14; உபாகமம் 32:39).

c) இயேசுக்கிறிஸ்து ஆதியும் அந்தமுமாய் இருக்கிறார். (வெளிப்படுத்தல் 117; 2:8; 22:13}. யெகோவாவும் ஆதியும் அந்தமுமாய் இருக்கிறார். (ஏசாயா44:6; 48:12; 41:4),

d) கன்மலையாய் இருக்கிறார். (1கொரிந்தியர் 10:4; ஏசாயா8:14; 1பேதுரு 2:6; மத்தேயு 16:18) யெகோவாவும் கன்மலையாய் இருக்கிறார்.(யாத்திராகமம் 17:6; ஏசாயா 17:10; 2 சாமுவேல்22-32; உபாகமம் 32:4).

e) இயேசுகிறிஸ்து இரட்சகராய் இருக்கிறார். (அப்போஸ்தலர் 2:21: 4:12; ரோமர்10:9; யூதா 25). யெகோவாவும் இரட்சகராய் இருக்கிறார். (சங்கீதம்106:21; ஓசியா13:4; ஏசாயா 45:21; 43:3,11).

(f) இயேசுக்கிறிஸ்து கர்த்தாதி கர்த்தராய் இருக்கிறார். (வெளிப்படுத்தல் 17:14; வெளிப்படுத்தல் 19:16; 1 தீமோத்தேயு 6:14-16). யெகோவாவும் கர்த்தாதி கர்த்தராய் இருக்கிறார். (சங்கீதம்136:1-3; உபாகமம் 10:17),

g) இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிகராய் இருக்கிறார் ( யோவான் 1:3; கொலோசெயர்1:15-17; எபிரெயர் 1:10], யெகோவாவும் சிருஷ்டிகராய் இருக்கிறார் (யோபு 334; ஏசாயா 40:28; ஆதியாகமம் 1:1).

h) இயேசுக்கிறிஸ்து ஒளியாய் இருக்கிறார் (யோவான் 8:12; யோவான் 1:9: லூக்கா 2:32) யெகோவாவும் ஒளியாய் இருக்கிறார் (மீகா 7-8; ஏசாயா 60:20; சங்கீதம் 27:1).

 i) இயேசுக்கிறிஸ்து நியாதிபதியாய் இருக்கிறார். (2 தீமோத்தேயு4:1; 2 கொரிந்தியர்5:10, ரோமர் 14:10). யெகோவாவும் நியாதிபதியாய் இருக்கிறார். (அதியாகமம் 18:25; யோவேல் 3:12),

j) இதன் படி இயேசுக்கிறிஸ்து தேவன் என்பது தெளிவாகிறது, (1 யோவான் 5:5) 6. பிதாவாகிய தேவனை முழுவதும் சார்ந்து இயேசுக்கிறிஸ்து இப்பூமியில் வாழ்ந்தார். (மத்தேயு 4:1-11, 27:42-43)

7. இயேசுக்கிறிஸ்துவின் பிறப்பினால், அவரின் தெய்வீகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அவர் பூமியில் வாழ்ந்த நாட்களில் சில குணாதிசியங்கள் பயன்படவில்லை, ஆனால் அவைகள் அழிக்கபடவோ, அல்லது அழிந்து போகவோ இல்லை. அப்படி அவரது தெய்வீகத்திலிருந்து ஏதாகிலும் அகற்றப்பட்டு இருக்குமேயானால், அது அவரது தெய்வீகத்தை அழிக்கும் தெய்வீகமாகும்.

8. இயேசுக்கிறிஸ்து மெய்யான மனிதனாய் விளங்கினார். இது அவரது தாகம், பசி, களைப்பு போன்ற சுபாவங்களை உள்ளடக்கியது, (யோவான் 19:28)

9.இயேசுக்கிறிஸ்துவுக்கு, ஆவி, ஆத்துமா, சரீரம் இருந்தது. ஆனால் பழைய பாவத்தன்மை இல்லை, அவர் பாவத்தன்மையற்றவராய் இருந்ததன் காரணம், கன்னிகையின் வயிற்றில் பிறந்ததால்

10.தேவன் மாமிசத்தில் தோன்றினார், அதன் பொருள் தேவன் மனுஷீகத்தை மட்டும் பெற்றிருந்தார் என்பது அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *