கிறிஸ்து

கிறிஸ்து

கிறிஸ்து

1. வேத வசனம்

அவர் (கிறிஸ்து) வார்த்தையாய் இருக்கிறார். யோவான் 1:1-5,14.

2.சுயசரிதை:

அவர் தேவனாய் இருந்து நித்தியகாலமாய் பிதாவாகிய தேவனுடனும், பரிசுத்தாவியானவருடனும், இருந்து வருகிறவராய் இருக்கிறார். ( யோவான் 1:1-5)

மனிதனாய் பிறந்த இயேசுக்கிறிஸ்து, பரிசுத்தாவியானவரால் கர்ப்பந்தரிக்கப்பட்டவராய் இருந்தார். (மத்தேயு 1:20)

யூதகுல கன்னிகையான மரியாளிடத்தில் (மத்தேயு 1:18) பெத்லேகேம் என்னும் ஊரில் கி.மு.6ம் வருடத்தில், பிறந்தார்.

அவரது உலகப்பிரகாரமான தந்தை யோசேப்பு. யோசேப்பும் (மத்தேயு 1:16) மரியாளும் (லூக்கா 3:23) தாவீதின் வம்சா வழியில் வந்தவர்கள், அதாவது சாலமோன் மற்றும் நாத்தான் மூலம் அவர்களது வம்சா வழி பிரிகிறது.

எட்டாம் நாளில் விருத்த சேதனம் செய்யப்பட்டார். (லூக்கா 2:21-24).

அவர்(கிறிஸ்து) அறிவிலும் கிருபையிலும் வளர்ந்தார். அவரது உறவின் முறையான யோவான் ஸ்நானகனால், யோர்தான் நதியில், அவரது ஊழிய துவக்கத்தில் ஞானஸ்நானம் பெற்றார். (மத்தேயு 3:13-17)

அதன் பின்னர், அவர் வனாந்திரத்திற்குச் சென்று, 40 நாளளவும், இரவும் பகலும் பிசாசானவனால் (சோதனைக்காரனால்) சோதிக்கப்பட்டார். (மத்தேயு 4:1-11)

அதைத்தொடர்ந்து மூன்று வருடங்கள் பாலஸ்தீனாவை சுற்றி நடந்து, வியாதிப்பட்டோரை குணமாக்கி, பிரசங்கம் செய்து, போதித்து மற்றும் ஆறுதல் படுத்தி, தேவனண்டை திரும்பிய அணைவருக்கும், ஊழியம் செய்து வந்தார்.

பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் ஸ்காரியோத் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு, மரிக்கும் முன்னர் யூதர்களாலும், ரோம ஆழுநர்களாலும் ஆறு நியாய விசாரணைகளால் துன்பமடைந்தார்.

சிலுவையின் மீது கி.பி. 32 ல் பஸ்கா தினத்தன்று தனது பூரணமான ஊழியத்தையும், பூமியில் அவரது வாழ்வையும் நிறைவு செய்துகொண்டு, இரட்சிப்பை உறுதிபடுத்தினார்.

தேவன் இயேசுக்கிறிஸ்துவை, மூன்றாம் நாளாகிய, முதற்பலனை சேர்க்கும் அந்நாளில் உயிருடன் எழுப்பினார்.

அவர் ஒலிவமலையில், பஸ்கா பண்டிகைக்கு பத்து தினங்களுக்கு முன்னர், பரமேறிச்சென்றார். (அப்போஸ்தலர் 1:8-11),

பரலோகில் பிதாவின் வலது பாரிசத்தில் புகழ்ச்சிக்குறிய இடம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அங்கிருந்து கொண்டு நமக்காய் பரிந்து பேசவும், அவரது சத்துருக்களை பாதபடியாக்கி போடவும் காத்துக்கொண்டு இருக்கிறார்.

இயேசுக்கிறிஸ்து, தனது பரிசுத்தவான்களுடன் 1000 வருடம் அரசாள பூமிக்குத்திரும்புவார். (வெளி 20:1-5)

 அவிசுவாசிகளை இறுதி நியாயத்தீர்ப்பில் நியாயந்தீர்ப்பார் (வெளி 20:11-15),

 விசுவாசிகள் தங்களது நித்தியத்தை இயேசுக்கிறிஸ்துவுடன் கழிப்பர்.

3.கருத்துக்கணிப்பு

இயேசுக்கிறிஸ்து ஒப்புயர்வற்ற குணாதிசயங்களைப் பெற்று இருந்தார்.

a) உலகை ஆள்பவராய் இருந்தபோதிலும், அவர் மனித பெலவீனங்களை உடையவரானார்.

b) முற்றிலும் நீதிபரராயிருந்த போதிலும், அவர் நமக்காக பாவமானார். (2 பேதுரு 3:9)

c) முழுவதும் அழகானவர். அவர் ஒருவரும் கெட்டுப்போவதை விரும்பவைல்லை (2 பேதுரு 3:9)

(d) அவர் முற்றிலும் அன்புள்ளவர் நாம் பாவிகளாய் இருக்கும்போதே அவர் நமக்கு இரட்சிப்பை ஏற்படுத்தினார். (ரோமர் 5:8)

e) நித்திய ஜீவனையடையவர், அவர் மரணத்திற்கு பாத்திரரானார். சிலுவை மரணத்திற்கு தன்னை முழுவதுமாய் அற்பணித்தார்.

f) எல்லாம் அறிந்தவர். ஆரம்ப முதல் கடைசி வரை, அனைத்தும் அவருக்குத் தெரியும்.

g) சர்வ வல்லமையுள்ளவர். இருந்த போதிலும் தான் பூரணமான தியாகபலியாவதற்கு, தன்னை அற்பணித்தார்.

h) எங்கும் நிறைந்தவர். இதன் பொருள் தனிப்பட்ட நிலையில், ஒவ்வொரு விசுவாசி வாழ்விலும் உதவி புரிய அவரால் முடியும். (மத்தேயு 28:19-20)

i) மாறாதவர். அவரது வாக்குத்தத்தங்களெல்லாம் உண்மையாய் இருக்கிறது, அவைகள் ஒருபோதும் மாறுவதில்லை. (எபிரெயர் 13:8),

சத்தியம்

பாதி உண்மைகளும் முழுப்பொய்களும் நிறைந்த இவ்வுலகத்தில், இயேசு முற்றிலும் உண்மையுள்ளவரும், சத்தியமுள்ளவருமாய் இருக்கிறார். (யோவான் 14:6)

4. அடிப்படைகள்

a) பூரண மனுஷனும், பாவத்தன்மையற்ற இயேசுக்கிறிஸ்து இரட்சிப்பை ஏற்படுத்த வல்லவரானார்.

b) இயேசுக்கிறிஸ்து எப்பொழுதும் தேவனின் பரிபூரண சித்தத்தை உறுபடுத்திக்கொண்டு கிரியை செய்தார். (யோவான் 10:30)

c) தேவன் (இயேசுக்கிறிஸ்துவவை) தமது குமாரனை சிலுவையில் கைவிட்டார். சர்வலோகத்தின் பாவத்தை கிறிஸ்துவில் நியாயந்தீர்க்கும்பொழுது அவரை கைவிட நேர்ந்தது.

d) கிறிஸ்துவுடன் நம்மை உன்னதங்களில் அமரச்செய்தார். (எபேசியர் 2:6

e) நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவிலுள்ள பிதாவின் அன்பை விட்டு நம்மை ஒன்றும் பிரிக்கமாட்டாது. (ரோமர் 8:35)

f) தேவனிடம் சேருவதற்கு இயேசுக்கிறிஸ்து ஒருவரே வழி (யோவான் 14:6)

g) விசுவாசிகளாய் உயிர்த்தெழுந்து நித்திய ஜீவகாலம் இயேசு கிறிஸ்துவுடன் இருப்போம். (1 தெசலோனிக்கேயர் 4:16,17) இப்பூமிக்கு

h) ஆயிரம் வருடம் எருசலேமிலிருந்து அரசாள இயேசுக்கிறிஸ்து திரும்ப வருவார். (வெளி 20:4)

i) சாத்தான் தோற்கடிக்கப்பட்ட சத்துரு. (கொலோசெயர் 2:15)

j) நாம் நம்மில் அன்பு கூறுகிறவராலே, முற்றிலும் ஜெயம் கொள்கிறவர்களாய் இருக்கிறோம். (ரோமர் 8:37)

 5. அவது நோக்கம்

a) அவர் பாவத்தினிமித்தம் தேவனின் பூரண தியாக பலியாய் வந்தார் (யோவான் 1:29)

b) அவர் உயர்த்தப்படும்படி வந்தார் (யோவான் 3:13-15)

c) வழ்வுக்கு அப்பமாக அவர் வந்தார். (யோவான் 6:50-51)

(d) நல்ல மேய்ப்பனாய் அவர் வந்தார் (யோவான் 10:10-11)

e) ஜனங்களுக்காய் மரிக்கும்படி அவர் வந்தார் (யோவான் 10:49-52)

 f) அவரது சிலுவை அவரது கிரீடத்திற்கு முன்பாக வந்தது (யோவான் 12:23-24)

g) சிலுவையில் நீதியும் நியாயத்தீர்ப்பும் சந்தித்தன, இதினிமித்தமே, தேவன் மனிதனை கிறிஸ்துவில் அன்புகூற சுதந்திரம் உண்டானது. (யோவான் 15:12-14)

Leave a Reply