சபை

சபை

சபை

சபை விளக்கம்:

1. ‘எக்ளீசியா’ என்ற கிரேக்கச்சொல்லின் மூல அர்த்தம் (“வெளியே அழைக்கப்பட்ட ஒருவர்”)

இந்த வார்த்தை வேதாகமத்தில் நான்கு விதங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.

அ) அரசாங்கப் பிரஜை (அப்போஸ்தலர் 19:32)

ஆ) இஸ்ரவேலின் சங்கம் (அப்போஸ்தலர் 19:38)

இ) ஜெபாலயம் (மத்தேயு18:17)

ஈ) கிறிஸ்துவின் சரீரம் (எல்லா விசுவாசிகளும்) (எபேசியர் 1:22,23, 5:25-7, கொலொசேயர் 1:18)

2. சபை கூறப்பட்ட பிரகாரம் ஓர் இரகசியம் (எபேசியர் 3:1-6, கொலொசேயர் 1:25,26, ரோமர்16:25,26), இரகசியம் என்பது – பழைய ஏற்பாட்டில் மறைக்கப்பட்டு, இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

3. சபை பெந்தெகொஸ்தே நாளில் துவங்கியது 32 கி.பி. அப்போஸ்தலர் 2) அது சபை எடுத்துக்கொள்ளப்படும் நாளில் பூமியிலிருந்து அகன்று போகும். (1 தெசலோனிக்கேயர் 4:17)

4.சபை யுகத்தில் உள்ள விசுவாசிகள், பழைய ஏற்பாட்டில் இல்லாத ஆவிக்குரிய நன்மைகளைப் பெற்று இருக்கிறார்கள்.

a) ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவுடனும், அவரது சரீரத்திலும் இணைக்கப்பட்டுள்ளனர்.

b) ஒவ்வொரு விசுவாசியிலும் இயேசுக்கிறிஸ்து வாசம் பண்ணுகிறார்.

c) பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு விசுவாசியிலும் வாசம் பண்ணுகிறார்.

 (d) ஒவ்வொரு விசுவாசியும் ஆசாரியனாய் செயல் பட்டு, ஜெபித்து, தேவனுக்கு நேரடி பணிவிடைக்காரராய் இருக்கிறார்கள்.

e) நமக்கு யூத வேதாகம ஒழுங்கின் படி (கேனான் அமைப்பு) முழு வேதாகமத்தையும் பெற்று இருக்கிறோம்.

f) விசுவாசிகள் நியாயப்பிரமானத்தினால் அல்ல பரிசுத்த ஆவியானவர் மூலம் வாழ கட்டளைப்பேற்றுள்ளனர்.

 g) ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவின் ஸ்தானாபதியாக இருக்கிறார்.

5. சபை இஸ்ரவேலுக்கு வேறு விதமாய் இருக்கிறது,

a) யூதர்களின் ஆரம்பம் ஆபிரகாமிலிருந்து தொடங்குகியது. ( ஆதியாகமம் 12:1-3). சபையின் ஆரம்பம் பெந்தெகொஸ்தே நாளிலிருந்து தொடங்குகியது ( அப்போஸ்தலர் 2; கலாத்தியர் 3:26-28)

b) இஸ்ரவேல் பூமியின் மீது வாக்குத்தத்த ஆசீர்வாதங்களாய் இருந்தது (உபாகமம் 28:1 14) சபையானது உன்னதங்களில் வாக்குத்தத்த ஆசீர்வாதங்களாய் இருக்கிறது (எபேசியர் 1:3; எபிரெயர் 3;1)

c) இஸ்ரவேலருக்கு தேவனுடன் இருந்த உறவு உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு இருந்தது (ஆதியாகமம் 17:7,8) சபைக்குரிய தேவனோடுள்ள உறவு மறு பிறப்பை அடிப்படையாக் கொண்டு இருக்கிறது. (யோவான் 1:12;13; 1 பேதுரு 1:23)

d) இஸ்ரவேலரைக் குரித்த தீர்க்கதரிசனங்கள் முக்கியமாக பழைய ஏற்பாட்டில் இருக்கிறது. சபையைக்குரித்த தீர்க்கதரிசனங்கள் புதிய ஏற்பாட்டில் மட்டும் இருக்கிறது.

e) இஸ்ரவேலர் எருசலேமில் ஆராதித்தனர் (சங்கீதம் 122:1-4) இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தில் எங்கு இரண்டோ மூன்றோ பேர் கூடுகிறார்களோ அங்கு சபை ஆராதணை நடைபெறுகிறது. (மத்தேயு 18:20)

 (f) இஸ்ரவேலர் நியாயப்பிரமாணத்திற்கு கீழாக வாழ்ந்தனர். (எசேக்கியேல் 20:10-12) சபை கிருபைக்கு கீழாக இருக்கிறது (யோவான் 1:17; ரோமர்6:14).

 g) இஸ்ரவேலரின் முடிவு பாலஸ்தீனாவிலேயே இருக்கிறது. (ஏசாயா 60:18-21) சபை பூமியிலிருந்து அகற்றப்படும். (I தெசலோனிக்கேயர் 4:13-18)

 h) இஸ்ரவேலருக்கு கிறிஸ்துவே ராஜாவும், மேசியாவுமாய் இருக்கிறார். கிறிஸ்துவே சபைக்கு தலையும், மணவாளனுமாய் இருக்கிறார்,

i) இஸ்ரவேல் யூதர்களை மட்டும் அடக்கமாய் கொண்டுள்ளது. சபையானது யூதர்கள், மற்றும் புறஜாதியாரால் உருவாக்கப்பட்டுள்ளது.

சபை ஆளுகை

1. வேதாகமத்தில் ஸ்தாபனங்கள் (ஸ்தாபன அமைப்பு) என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை.

2 ஸ்தாபனங்கள் நிறுவப்படும்போது அங்கு விசுவாசத்துரோகங்களுக்கும், தாழ்ந்த நிலையை அடைதலுக்கும் சாத்தியங்கள் உண்டு..

3. தேவனுடைய பரிசுத்த ஆவியனவர் சபையில் உள்ள விசுவாசி ஒருவருக்கு குறைந்த பட்சம் ஒரு ஆவிக்குரிய வரத்தையாவது கொடுத்து இருக்கிறார்.

4. இப்படி கொடுக்கப்பட்ட வரம் சரியாக பயன்படுத்தபடுமேயானால், கிறிஸ்துவின் சரீரமாகிய சபை மிகவும் நேர்த்தியாக செயல்படும் விளைவை கொண்டுவரும். விசுவாசிகள் தங்களுக்களிக்கப்பட்ட பிரத்தியேகமான வரங்களை பெற்றிராவிட்டால் அல்லது வேதாகமத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள தங்களது தகுதிகளை அடையத்தவறும்போது அவர்களால் தங்களது கடமைகளை சரிவர நிறைவேற்ற முடியாது.

5. ஒவ்வொரு ஸ்தல சபையும், அவர்களது தலைவர்களுடன் (போதகர்கள்,மூப்பர்கள்), மற்றும் நிர்வாகம் (கண்காணிகள்), மற்ற சபை அங்கங்கள் தங்களது ஆவிக்குரிய வரங்களுடன் செயல்பட்டு, தனித்து இயங்க வேண்டும்.

போதகர்கள்/மூப்பர்கள்

1.அப்போஸ்தலர் 20:17,28 ன் படி மூப்பர்கள், போதகர்கள், பேராயர்கள், (பிஷப்), கண்காணிகள் யாவரும் ஒருவரே. ஒவ்வொரு வார்த்தைகளும் சாதாரணமாக அவர்களது கடமைகளை குறிக்கும் சொல்லாக இருக்கிறது.

2. போதகரின் பொறுப்பு மற்றும் அவரது கடமைகள் குறித்து உபயோகிக்கப்படும் கிரேக்க வார்த்தைகள்:

a) ப்ரஸ்பட்ரோஸ் (மூப்பர்) – சபையில் அவர்களுக்கு அதிகாரம் உண்டு (ஒப்பிடுதல். மூப்பர்கள், பலங்கால பட்டணங்களில், பட்டண வாசலில் அமரும் ஞானமுள்ள நியாதிபதிகளாய் இருந்தனர்) அப்போஸ்தலர் 20:17.

b) பொய்மெனோஸ் டிடாஸ்கலோஸ் (போதகர் – ஆசிரியர்) மேய்ப்பனாயிருந்து, மந்தையையை மேய்த்து பாதுகாப்பவர். எரேமியா 3:15

c) எபிஸ்கோபோஸ் (பேராயர் – பிஷப் / கண்காணி) சபையின் தலைவர் / கண்காணி, அப்போஸ்தலர் 20.28, 1 தீமோத்தேயு 3:2; தீத்து 1:7.

d) டயாகோனோஸ் (ஊழியன் / அதிகாரி) – தழ்மையுள்ள ஊழியன்.

 3 மேற்கண்ட விபரங்கள் மூலம் முடிவாய் கூறுவது என்னவெனில், மூப்பர் என்பவர் ஒரு போதகர், அவர் பேராயரின் அலுவல்களைப்பெற்று, கண்காணி அல்லது சபையின் மேய்ப்பராய் இருந்து செயலாற்றுகிறார். அவர்கள் சபையில் உள்ள ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபட்டு, மந்தையாகிய சபையை மேய்த்து, உணவளித்து, பாதுகாத்து பராமரிப்பவர்களாய் இருக்கின்றனர்.

4. ஒரு மூப்பர், போதகர் / ஆசிரியர் அல்லது சுவிஷேசகரின் வரங்களை பெற்று இருத்தல் அவசியம்.

5.செயல்பாடு:

a) ஆழுகை (1தீமோத்தேயு 34,5; 1தீமோத்தேயு 5:17) – சபையில் உள்ள மூப்பர் /போதகர் தேவனுக்கு அடுத்த நிலையில் சபயில் அதிகாரம் செலுத்தக்கூடியவர்களாய் இருக்கிறார்கள்,

b) சரீரமாகிய சபையை பாதுகாக்க, வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை பிழையின்றி நெறிதவராது அறிவித்தல் அவசியம் (தீத்து 19)

c) சபையின் கண்காணிப்பு அவரது சபையை சரியாய் மேய்த்தலாய் இருத்தல் வேண்டும். (அப்போஸ்தலர் 20:28; யோவான் 21:16; எபிரெயர் 13:17; 1 பேதுரு 5:1-3)

d) மூப்பர்கள் பரிசுத்த ஆவியானவர் மூலம் சபைக்குக் கொடுக்கப்படுகின்றனர். (அப்போஸ்தலர் 20:28).

e) மூப்பர்களை நியமிக்கும்பொழுது அவர்கள் மீது மிகப்பெரிய பாரம் வைக்கப்படுகிறது. ( அப் 20:28: யோவா 21:16; எபி 13:17; 1பேது 5:1-3).

f) முதன் முதலில் மூப்பர்கள் அப்போஸ்தலரால் ஏற்படுத்தப்பட்டனர். ( அப்போஸ்தலர் 14:23)

g) பின்னர் மூப்பர்களை நியமிக்க, சபையின் ஒத்தாசை 1தீமோத்தேயு 3:1-7)

6. தகுதிகள்: (1தீமோத்தேயு 3 and தீத்து 1)அவசியப்பட்டது. (தீத்து1:5;

a) குற்றம் சாட்டப்படாதவன் நீங்கள் அநேக காரியங்களில் குற்றம் சுமத்தப்படலாம் நீங்கள் நிச்சயமாய் நம்புங்கள் அவைகள் அனைத்தும் உண்மையல்ல, நீங்கள் உங்கள் வாழ்வில் உள்ள பாவத்தைக்குறித்து மட்டும் கவனமான முடிவெடுத்தல் அவசியம்.

b) ஒரே மனைவியையுடைய புருஷனாயிருக்க வேண்டும். (உண்மையாய் இருத்தல், மற்ற பெண்களை இச்சியாது இருத்தல்) 1 தீமோத்தேயு 3:11. அவன் வேதாகமப்படி சட்டரீதியான நிலையில் விவாகரத்து செய்யலாம்..

c) விழிப்புடன் இருத்தல் – தெளிந்த புத்தியுடனிருத்தல், அமைதியாய் செயல்படுதல்,

d) ஜாக்கிரதையுடனிருத்தல் இச்சையடக்கத்துடன் இருத்தல்

e) நன்னடக்கையுள்ளவராக இருத்தல் -ஒழுங்கு மற்றும் நன்கு இணைந்து செயல்படுதல், நேர்மையுடன் இருத்தல்

(f) உபசரிப்பவராய் இருத்தல் – எப்பொழுதும் ஜனங்களை தங்களது வீட்டில் ஏற்றுக்கொள்ள ஆயத்தத்துடன் இருத்தல்

g) போதக சமர்த்தனாய் இருத்தல் – கருத்துடன் தேவனது வார்த்தைகளை பகிர்ந்துகொள்ளுதல்

h) மதுபான பிரியனாய் இருத்தல் கூடாது மதுபானத்திற்கு அடிமையாக இருத்தல் கூடாது,

 i) அடிக்கிறவனாய் இருக்கக்கூடாது – கோபக்காரனாய் இருத்தல் கூடாது.

j) இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனாய் இருக்கக்கூடாது – பண ஆசையுள்ளவனாய் இருத்தல் கூடாது.

(k) தொடார்ந்து விவாதம் பண்ணுதல் அல்லது தர்க்கிக்கிறவனாய் இருக்கக்கூடாது.

l) பிறர் பொருளை அபகரித்துக் கொள்கிறவனாய் இருக்கக்கூடாது.

(m) திருமணமானவராய் இருப்பாரேயானால், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள்

கௌரவமுள்ளவர்களாயும், அடக்கமுள்ளவர்களாகவும் இருத்தல் அவசியம்.

n) புதிய விசுவாசியாய் இருத்தல் கூடாது – இவர்களை ஊழியத்தில் கண்காணியாய் இருக்க பயிற்சித்தல் அவசியம் அவர்களை சிறுவர் பள்ளி, வாலிபர் குழுக்கள் இவைகளில் பயிற்சி அளித்து பின்னர் இப்படிப்பட்டவர்களை கண்காணி உத்தியோகத்திற்காக நியமனம் செய்யலாம்.

 o) அவிசுவாசமுள்ள உலகில், நற்சாட்சியைப்பெற்றிருத்தல் அவசியம்

7.போதகர்களை நியமிப்பது விவரிக்கப்பட்டுள்ளது (1 கொரிந்தியர் 12:28; எபேசியர் 4:11).

8 போதகர் மற்றும் போதக வரம் ஆண்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு இருக்கிறது. போதிப்பதற்கோ, அல்லது சபையில் உள்ள ஆண்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கோ பெண்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை. 1தீமோத்தேயு 2:12, 1கொரிந்தியர் 14:34-35

9. போதக அதிகாரம் கர்வத்திற்கு காரணமாய் இருக்கக்கூடாது, எல்லா தாழ்மையுடனும், ஊழியம் செய்யும் அடிப்படையை ஆதாரமாய் கொண்டுள்ளது. யோவான் 13:5 -17, 2 கொரிந்தியர் 10:8, கலாத்தியர் 6:3-5. போதக அதிகாரம் என்பது வேத வசங்களை கருத்துடன் போதித்து, எல்லோருக்கும் சத்தியத்தை தேளிவாய் காட்டவேண்டும்.

10. இதற்கு வயது வரம்பு இல்லை 1 தீமோத்தேயு 4:9-12.

11.போதகர் தனது கடமைகளை நிறைவேற்றத்தவரும் பொழுது;

a) அவருக்கு எச்சரிப்பு அளிக்கப்பட வேண்டும். அவர் தொடர்ந்து அப்படியே இருப்பார் எனில், சபையின் மூப்பர்கள் அவரைக் கடிந்துகொள்ள வேண்டும். தீத்து 2:15, 2 கொரிந்தியர் 13:10, 2 தீமோத்தேயு 4:2.

b) கர்த்தர் அவரை ஒழுங்குபடுத்துவார் 1தீமோத்தேயு 6:3-5, யாக்கோபு 5:19-20.

12. போதகரின் பிரதி பலன் (எபிரெயர் 6:10; 1 பேதுரு 5:4).

13.போதகர் கடமைக்கான திறவுகோல் வசனங்கள்: 1பேதுரு 5:4, எபேசியர் 3:7-13, தீமோத்தேயு 2:24-25, 3:1-9, கொலோசெயர் 1:23-29, தீத்து 1:6-9, 1 தெசலோனிக்கேயர் 2:19, 20, எபிரெயர் 13:7, 17, 6:10.

உதவிக்காரர்.

1.கிரேக்க வார்த்தை (டையாகோனொஸ் அல்லது டையாகோனெயோ) இதன் பொருள் ஊழியன்”, இவர்களது கடமை சபையில் ஊழியம் செய்வது, இதினிமித்தம் மூப்பர்கள் ஆவிக்குரிய காரியங்களை பார்த்துக்கொள்ள ஏதுவுண்டாகிறது. அப்போஸ்தலர் 6:1-7.

2.உதவிக்காரர்கள் சபையை நிர்வாகம் செய்கிறவர்கள், செயலாளர், பொருளாளர் பதவிகள் இதில் உள்ளடங்கும்.

3.உதவிக்காரருக்கு, நிர்வாகம் செய்யும் வரம் இருத்தல் அவசியம், உதவி செய்வது அல்லது ஊழியம் செய்வது இவர்களது கடமை.

4. தகுதிகள் ( 1தீமோத்தேயு 3)

a) பண பரிமாற்றத்தில் நேர்மையுடன் இருத்தல் வேண்டும்.

b) விதவைகளுடன் உள்ள தொடர்பில் கலங்கமற்ற ஒழுக்கநெறியை கடைபிடித்தல் அவசியம்.

c) ஆவிக்குரியவராயிருந்து மற்றும் தேவனுடன் நடக்கிறவராய் இருத்தல் வேண்டும்

d) ஞானமாயிருந்து உபதேசத்தால் நிறைந்து விளங்க வேண்டும்..

e) மூப்பர்களால் அதிகாரம் பெற்று இருத்தல் வேண்டும். (அப்போஸ்தலர்கள் தங்களது கரங்களை அவர்கள் மீது வைத்து அவர்களுக்கு அதிகாரம் அளித்தனர்)

f) கவனமாய் இருத்தல் அவர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களாயும், முதிர்ச்சியுள்ளவர்களாயும், மரியாதைக்குரியவர்களாயும் இருத்தல் வேண்டும்.

g) இருநாவுள்ளவர்களாகவோ, அல்லது இரு முகமுள்ளவுள்ளவர்களாகவோ இருத்தல் கூடாது. அவர்கள் எதை சொல்கிறார்களோ அதன் படி நடக்கிறவர்களாய் இருக்கவேண்டும்.

 h) மதுபான பிரியராய் இருக்கக்கூடாது, குடிகாரனாய் இருக்கக்கூடாது.

i) பண ஆசையுள்ளவராய் இருக்கக்கூடாது, காரணம் உதவிக்காரர் பணசம்பந்தமான காரியங்களில் ஈடுபடுகிறவர்.

j) கறைதிறையற்ற நிலையில் உபதேசத்தை பிடித்துக்கொள்ளவேண்டும். உபதேசத்தை பொருத்தமட்டில் பாரம்பரிய கருத்து மாறுபடக்கூடாது.

k) ஒரு நபர் பாவத்தைக்குறித்து ஆழமாய் உணர்த்தப்படும்பொழுது, அவருடன் இளகிய மனதுடனும், தெளிந்த புத்தியுடனும் ஈடுபடுதல் வேண்டும்.

l) சோதிக்கப்படுதல். அவர் எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டு பின்னர் உதவிக்காரராய் ஏற்படுத்தப்படலாம் – 1 தீமோ 3:10.

m) சபையில் உண்மையுள்ள வேலையாளாய் இருந்தால் மட்டுமே, உதவிக்கரருடைய பணிக்கு அவரை நியமணம் செய்யலாம்.

n) ஒரே மனைவியையுடைய புருஷனாய் இருத்தல் வேண்டும். (இதன் பொருள் மற்ற பெண்களுடன் இச்சைக்கேற்ற உறவு இருக்கக்கூடாது) – 1 தீமோ 11 அவர் சட்ட ரீதியாக, வேத நியமப்படி விவாகரத்து செய்யலாம்.

o) திருமணமானவரானால், அவரது மனைவி, மரியாதைக்குரியவளாயும், புறங்கூறாதவளாயும், இருத்தல் அவசியம், காரணம் உதவிக்காரர் தனது மனைவியுடன் பிறரிடம் சொல்லக்கூடாத விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டி வரலாம்.

Leave a Reply