எசேக்கியேல் அறிமுகம்

எசேக்கியேல் அறிமுகம்

எசேக்கியேல் அறிமுகம்

ஆசிரியா : எசேக்கியேல்

காலம் : சுமார் கி.மு. 542 – 520 ( 535 – 571)

உயிரடையும எலும்புகள்

வானத்திலிருந்து கேள்வி, ‘மனுபுத்திரனே இந்த எலும்புகள் உயிரடையுமா?”

உலர்ந்த நம்பிக்கைகளின் முன் பதிலுரைக்கத் தயங்கிய அந்த மனுபுத்திரன், பதிலை கேள்வியெழுப்பினவருக்கே திரும்பக் கொடுத்தார். “தேவரீர் அதை அறிவீர்”

கேள்வி எழுப்பியவர் கட்டளையிட்டார். மனுபுத்திரன் கடமையைச் செய்தான். கண்முன் அதிசயம் நிகழ்ந்தது. உலர்ந்த எலும்புகள் உயிரடைந்து எழுந்தன…

இந்த எலும்புகள் எவை?

சிதறி மடிந்து, நம்பிக்கைச் சாறு உலர்ந்து போன இஸ்ரவேல்ல்லவா?

சிதறி செத்துக் கொண்டிருந்த யூதாவின் இறுதி காலங்களில் சிறையில் செய்தியுரைத்து வாழ்ந்த ஒரு மனுபுத்திரனே எசேக்கியேல் தீர்க்கதரிசி.

இவர் பிறந்தது ஆசாரிய குலம் ஆலயத்தில் திருப்பணியாற்ற வேண்டிய வயதில் ஆற்றங்கரையில் நாடு கடத்தப்பட்டிருந்தார். எசே 1: 1-ல் கூறப்படும் முப்பதாம் வருஷம் எசேக்கியேலின் வயதைக் குறிக்குமாயின் அவர் தமது 25-வது வயதில் நாடு கடத்தப்பட்டிருக்க வேண்டும். தாம் திருப்பணியாற்ற வேண்டிய எருசலேமின் பொற்கோவிலை. ஈர விழிகளுடன் பார்த்து விடை சொல்லியபடி கி.மு. 597-இல் நேபுகாத்நேச்சாரின் சிறைக் கைதிகளில் ஒருவராக எசேக்கியேல் எருசலேமை விட்டுப் புறப்பட்டார். அப்போது அவருடன் சுமார் 10,000 பேர் கைதிகளாகி இருந்தனர் (2இரா 24 : 10-14). இது நேபுகாத் நேச்சாரின் இரண்டாம் சிறைபிடிப்பு ஆகும். இதற்கு முன் கி.மு. 605-இல் ஒரு முறையும், பின்பு கி.மு. 586-இல் ஒரு முறையும் சிறைபிடித்தார்.

இவர் திருமணமானவராக இருந்தார். சுமார் கி.மு. 587-இல் சிறைவாச காலத்தில் தமது அருமையான மனைவியை இழந்தார் (எசே 24 : 18), இவரது ஊாழியக்காலம் சுமார் 22 ஆண்டுகள் எனக் கருதப்படுகிறது. இந்நூலில் 1:3, 24 24 ஆகிய இடங்களில் எசேக்கியேலின் பெயரைக் காணமுடியும். சிறையிருப்பில் செய்தியுரைத்த இவரைப் பற்றி சிறையிருப்பு கால வேதாகமக் குறிப்புகள் சில பற்றி குறிப்பிட வேண்டும்.

சில குறிப்புகள்

சுமார் கி.மு. 557 (608) யோயாக்கீம் யூத அரசராதல்

சுமார் கி.மு. 555 (608) தானியேலும் பாபிலோளிய குழுவும் சிறைசெல்லுதல்

சுமார் கி.மு. 546 (597) யோயாக்கீன் யூத அரசராதல் எசேக்கியேலும் குழுவும் பாபிலோனிய சிறைசெல்தல் சிதேக்கியா யூத அரசராதல்

சுமார் கி.மு. 542 – 518 (593-571) எசேக்கியேலின் தீர்க்கதரிசன ஊழியம்

சுமார் கி.மு. 535 (586) எருசலேமின் அழிவு

சுமார் கி.மு. 485 (536) கோரேசின் விடுதலை விளம்பரம்

1. சங்கீதம் 137-இல் சிறையிருப்பின் தொடக்க காலத்தில் யூத இனைஞர்கள் வரைத்த கண்ணீர் ஓவியத்தைப் பார்க்கலாம்.

2 சங்கீதம் 126-இல் சிறையிருப்பின் முடிவில் ஏற்பட்ட ஆனந்தக் களிப்பைப் பற்றி வாசிக்கலாம்.

3. இக்காலத்தில் தேவன் வருங்காலம் பற்றிய மாபெரும் வெளிப்பாடுகளை வழங்கினார். தானியேல் நூலிலும் எசேக்கியேல் நூலிலும் இவற்றின் பதிவுகளைக் காணமுடியும், இந்நூலின் கருத்தை பெரிய தீர்க்கதரிசன நூல்களுடன் ஒப்பிட்டு பின் வருமாறு வரிசைப்படுத்தலாம்.

பெரிய தீர்க்கதரிசன நூல்களுடன் ஒப்பிட்டு

  • ஏசாயா – தேவனின் இரட்சிப்பு
  • எரேமியா – தேவனின் நியாயத்தீர்ப்பு
  • எசேக்கியேல் – தேவனின் மகிமை
  • தானியேல் – தேவனின் அரசாட்சி

இந்நூலை எசேக்கியேல் தீர்க்கதரிசியே எழுதினார் என்பதற்கு அவர் தமது பெயரைக் குறிப்பிடுவதும், நான் என்ற தன்மைப் பெயர் பயன்பாடுமே போதுமான ஆதாரங்களாகும். இந்நூலில் தேவன் எசேக்கியேலை மனுபுத்திரன் என அழைப்பது (சுமார் 93 முறை) ஒரு சிறப்பம்சமாகும்.’

இந்நூலில் ஆசாரியத்துவம், பலிகள். தேவ மகிமை பற்றிய செய்திகள் அதிகமாக இடம் பெறுகின்றன. ஓர் ஆசாரியனின் பார்வையில் இவை முக்கிய இடம் பெற்றவையாக இருப்பதில் நமக்கு வியப்பு தோன்ற இடமில்லை, யூதாவின் ஆசாரிய தீர்க்கதரிசியான இவர் பாபிலோனின் கேபார் நதியோரத்தில் குடியிருக்க வைக்கப்பட்ட போதும் அங்கு அவரது சிறகுகள் முறிந்து விடவில்லை. தேவதரிசனத்தில் எருசலேமின் வீதிகளில் உலாவினார். அதன் அக்கிரமங்களைக் கண்டு குறித்து வைத்தார். சிறையிருந்த மக்கள் நடுவில் தொடர்ந்து யூதாவுக்கு வரும் அழிவையும் பின்பு வரும் மகிமையான வாழ்வையும் தீட்டினார்.

இவரது பிறந்த ஊர் எருசலேமுக்கு அண்மையான பகுதியாக இருக்க வேண்டும். இவர் அன்னிய நாட்டில் சிறைசென்ற போது எரேமியா தீர்க்கதரிசி சொந்த நாட்டில் சிறையிலிருந்து தீர்க்கதரிசனம் உரைத்தார். இவர் பாபிலோனின் வீதிகளில் நடந்து சிறைப்பட்ட மக்களுக்கு தேவ செய்தியைக் கூவியுரைத்த போது, எரேமியா சிறை முற்றங்களில்’ கட்டப்பட்டவராக தேவ செய்தியை உரைத்தார். இவருக்கு முன்பே சிறை சென்றிருந்த தானியேல் பாபிலோனில் அதிகார அரியணைகளில் அமர்ந்தபடியே வரப்போகும் அதிகாரம் பற்றி கூறி வந்தார். தானியேலைப் பற்றி மூன்றுமுறை எசேக்கியேல் குறிப்பிடுவார் (எசே 14 14, 20, 28 : 31,

“இந்நூலை மூன்று பகுதிகளாகப் பகுத்துக் காணமுடியும்.

முதல் பகுதி – பரிசுத்த நகர அழிவுக்கு முந்தியது (அதி 1-24)

இரண்டாம் பகுதி :- புறஜாதி நாடுகளுக்கான செய்தி (அதி 25-32)  பரிசுத்த நகர அழிவுக்குப் பிந்தியது (அதி 35-48)

மூன்றாம் பகுதி : இந்நூலில் எசேக்கியேல் செய்தியுரைத்து வாழ்ந்தது போல வாழ்ந்து செய்தியுரைத்தார். அதாவது பல செய்திகளைச் செய்முறைப் பாடமாக வாழ்ந்து விளக்கினார்.

சான்றுகள்;

1 390 நாட்கள் தேவ கட்டளைப்படியான உணவுண்டு படுத்து வாழ்ந்து காட்டினார் (அதி 4),

2. தாடியையும் தலையையும் சவரம்’ பண்ணினார் (அதி 5)

3. மனைவி இறந்த போது அழாமல் அடக்கிக் கொண்டார்.

 மகிமையை தள்ளிவிட்டு, இழந்து போன இஸ்ரவேல் மீண்டும் மகிமையை அடையும் அழகிய சித்திரத்தை இவர் சொல் வரிகளாகத் தீட்டுவார். தேவாலயம் இழந்த மகிமையை மீண்டும் பெற்று நிறைவதாக அதனைக் காட்டுவார் (எசே 43 : 22, 44 : 4), இவ்வாறு இந்நூல்

  •  கண்ணீர் சிந்தாத கடின வேதனையின் காவியம்….
  •  இளைஞன் ஒருவரின் இதய வேதனை….
  • அன்னிய தேசத்தில் ஆண்டவரின் சிறகடியில் நலமாயிருக்கும் அனுபவம்..
  • சிறையில் பிறந்த சொல் சிறகுகள்…
  • தேவனின் வருங்காலம் சுமந்த பொன் சொல் தேர்….
  • ஜீவனுள்ள வசனத்தின் உலகளாவிய தேரோட்டம் …..

என்றெல்லாம் பெயர் பெற தகுதி பெற்றது.

சிறைவாழ்விலும் தேவ கரமும், தேவ வார்த்தையும் இஸ்ரவேலுக்குச் சொந்தமாகி இருந்ததை அனுபவித்துச் சொல்வடிக்கும் எசேக்கியேல் இடிந்து கொண்டிருந்த எருசலேமின் மண் சிதறல்களால் வரும் வேதனைகளைச் சுமந்து கொண்டே வரப்போகும் மகிமையான எருசலேமின் அழகை ஓவியமாக்குகிறார். மண்மீது கட்டியிருந்த எருசலேம் மண்மேடானது. இன்றும் அது எங்கும் புத்துயிர் பெறவில்லை. ஆனால் எசேக்கியேலின் தேவாலய. நகர வரைபடங்கள் வேதாகமத்தின் பக்கங்களில் உயிருடன் இருக்கின்றன. விரைவில் மண்மீது கட்டியெழுப்பப்படும் நாளை எதிர்நோக்கி…

இந்நூலில் மேசியாவைப் பற்றிய செய்திகள் பல சான்று:

  • 21:26 – ஆளவருபவர்”
  • 34 11-31 – மேய்க்க வருபவர்

வருங்கால கோகு போர் பற்றிய குறிப்புகளை எசே 38, 39 அதிகாரங்களில் காணலாம். ஆயிரம் ஆண்டு ஆட்சி தேவாலயம் மற்றும் ஆராதனை பற்றிய குறிப்புகளை எசே 40-48 அதிகாரங்களில் வாசிக்கலாம்.

நரகத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டு நம்பிக்கை இழந்து கிடந்த நமது எலும்புகளின் பக்கத்தில் ஒரு மனுஷ புத்திரன் இறங்கி வந்தது நினைவிருக்கிறதா? யாரும் வர விரும்பாத பாதையில் முனகிக் கிடந்த நம்மிடம் வந்த அந்த மனுஷகுமாரனின் தூய பாதங்கள் தம்மைத் தேடி வந்த தூரம் எவ்வளவு? அவரால் உயிர் பெற்றோரே மீண்டும் எலும்புகள் நடுவில் படுத்து உறங்குவதோ? (எபே 2: 1, 5 : 14).

உலர்ந்து கிடக்கும் திருச்சபைகளின் எலும்புகள் உயிரடையுமா என கேள்வி எழுப்பும் ஊழியரே உமது கட மையைச் செய்ய தயாரா? பரலோகம் பதில்கொடுக்க எப்போதும் தயார்தான்.

உருவரை Outline

I. எசேக்கியேலின் அழைப்பும் கட்டளையும் 1: 1 – 3 : 27

1. எசேக்கியேலின் சூழல் 1-3

2. எசேக்கியேல் கண்ட தேவ தரிசனம் : 4-28 வர

  • (i) நான்கு ஜீவன்களும் தேரும் 1: 4-14
  • (ii) நான்கு சக்கரங்கள் 1 15-21
  • (iii) மண்டலத்தின் தோற்றம் : 22-28

3. எசேக்கியேலுக்கு அழைப்பு 2 : 1–10

4. எசேக்கியேலுக்குக் கட்டளை 3 : 1-27

II. யூதாவுக்கும் எருசலேமுக்கும் எதிராக தீர்க்கதரிசனம் 4 : 1 – 24 : 27

1. வரப்போகும் அழிவு பற்றிய தீர்க்கதரிசன அடையாளங்கள் 4:1-5:17

  •  (i) செங்கல்: எருசலேம் முற்றுகை பற்றி 4:1-3
  • (ii) படுத்துக் கொள்ளுதல் சிறையிருப்புக் காலம் 4 : 4-8
  • (iii) அப்பம்: பஞ்சம் 4 9-17
  • (iv) சவரம் செய்தல்: எருசலேம் மக்களின் அழிவு 5: 1-17

2. வருங்கால அழிவு பற்றிய செய்திகள் 6 : 1 -7: 27

3. வருங்கால அழிவு பற்றிய தீர்க்கதரிசனங்கள் 8 : 1 -11 : 25

  •  (i)தரிசனம் 1: தேவாலயத்தில் தீச்செயல் 8 : 1-18
  •  (ii) தரிசனம் 2: எருசலேம் குடிகளின் கொலை 9: 1-11
  • (iii) தரிசனம் 3: எருசலேமை விட்டு தேவமகிமை விலகுதல் 10 : 1 – 22
  • (iv) தரிசனம் 4. துன்மார்க்க பிரபுக்களும் அகன்றுவிடும் தேவ மகிமையும் 11:1-25

4. வரப்போகும் அழிவு பற்றிய தீர்க்கதரிசன குறியீடுகள் செய்திகள் உவமைகள் ஆகியன 12 : 1 – 24 : 27

  • (i) (எருசலேமின் சிறைபிடிப்பு பற்றி 12 : 1-16
  • (ii) வருங்கால துயர் பற்றி 12 : 17-28
  • (iii) பொய் தீர்க்கதரிசிகளைப் பற்றி 13 : 1-23
  • (iv) விக்கிரக ஆராதனை மூப்பர்களைப் பற்றி 14 : 1-23
  •  (v) பயனற்ற திராட்சைச் செடி. உவமை 15: 1-8
  • (vi) விபச்சார பெண் உவமை 16 : 1-63

(அ) அவளது இளமை 16 : 1-14

 (ஆ) அவளது பாவங்கள் 16 15-34

(இ) அவளது தீர்ப்பு 16 : 35-52

 (ஈ)அவளது சீர்படுதல் 16 : 53-63

  • (vii) இரண்டு கழுகுகள் உவமை 17 : 1-24
  •  (viii) திராட்சைக் காய் போதனை 18 : 1-32
  •  (ix) இஸ்ரவேல் பிரபுக்களுக்கான புலம்பல் 19 : 1-14
  • (x) இஸ்ரவேலின் உத்தமம் இல்லாமைப் பற்றியச் செய்தி 20 :1-31
  • (xi) வருங்கால சீர்படுத்துதல் பற்றிய வாக்குறுதி 20 : 32-44
  •  (xii) பற்றியெரியும் காடு 20 : 45-49
  • (xiii) வரப்போகும் வாள் 21 : 1-32
  • (xiv) புடமிடப்போகும் நியாயத்தீர்ப்பு 22 : 1-31
  • (xv) இரண்டு சகோதரிகள் பற்றிய உவமை 23 : 1-49
  • (xvi) கொதிக்கும் இறைச்சிப் பானை உவமை 24:1-14
  • (xvii) எசேக்கியேலின் மனைவியின் மரணத்திலிருந்து செய்தி 24 : 15-27

III புறஜாதி நாடுகளுக்கு எதிரான தீர்க்கதரிசனம் 25 : 132 : 32

1. அம்மோனுக்கு எதிராக 25 : 1-7 RES

2. மோவாபுக்கு எதிராக 25 : 8-11

3. ஏதோமுக்கு எதிராக 24 : 12-14

4. பெலிஸ்தியாவுக்கு எதிராக 25 : 15-17 5. : 19

5. திருவுக்கு எதிராக 26:1-28 :19) :

  •  (i) தீரு தள்ளப்படல் 26 :1-21
  • (ii) தீருவுக்கான புலம்பல் 27 : 1-36
  •  (iii) தீரு அதிபதியின் வீழ்ச்சி 28 : 1-10 (iv) தீரு ராஜாவுக்கானபுலம்பல் 28 -11-19

6. சீதோனுக்கு எதிராக 28 : 20-26

7. எகிப்துக்கு எதிராக 29 : 1-32 : 32

IV இஸ்ரவேலின் திரும்பச் சேர்ப்பு பற்றிய தீர்க்கதரிசனம் 33 : 139 : 29

1. எசேக்கியேல் காவல்காரனாக 33:1-33

2. இஸ்ரவேலின் மேய்ப்பர்கள் 34 : 1-31

  • (i) – பொய்யர் 34 : 1:-10
  •  (ii) மெய்யானவர் 34 : .11-31

3. இஸ்ரவேலின் மறுபிறப்பு 35 : 1 -36:38

  •  (i) ஏதோமின் அழிவு 35 : 1-15
  • (ii) புதிய உடன்படிக்கை 36 : 1-38

4. இஸ்ரவேல் உயிரடைதல் 37 : 1-14

5. இஸ்ரவேல் ஒன்றாதல் 37 : 15-28

6. கோகு மாகோகு போரில் வெற்றி 38 : 1 – 39 : 29

V. இஸ்ரவேலின் ஆயிரம் ஆண்டு ஆட்சி காலம் பற்றிய தீர்க்கதரிசனங்கள்

1. புதிய தேவாலயம் 40 : 1 – 43: 27

2. புதிய ஆராதனை 44 : 1 – 46 : 24

3. புதிய தூய நாடு 47: 1- 48: 35

  •  (i) தேசத்துக்கு உயிருட்டும் நதி 47 : 1-12
  • (ii) தேசத்தின் எல்லைகள் 47: 13-23
  • (iii) தேசத்தின் பகுப்பு 48: 1-35

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *