இரட்சிப்பின் இரகசியம்

இரட்சிப்பு

இரட்சிப்பின் இரகசியம்

இரட்சிப்பை குறித்த ஜனங்களின் மனநிலை:

 • இரட்சிப்பு என்பது
 • பாவத்திலிருந்து விடுதலை 
 • ஞானஸ்நானம் எடுப்பது
 • ஞானஸ்நானம் எடுத்து சபைக்கு தவறாமல் வந்து பரலோகத்தில் போய் சேர்வது

இரட்சிப்பைக் குறித்து வேதம் என்ன கூறுகிறது?

1பேதுரு 4: 17

நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?

1பேதுரு 4: 18

நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

 1. நியாயத் தீர்ப்பு தேவனுடைய வீட்டில் துவங்கும்
 2. முந்தி நம்மிடத்தில் துவங்கும்
 3. நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிது

தேவனுடைய வீடு என்பது சபை குறிக்கிறது.

முந்தி நம்மிடத்தில் என்பது சபையில் உள்ள கர்த்தருடைய ஜனங்களை குறிக்கிறது.

நீதிமான் என்பது – நாம் நினைக்கிற படி இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு பாவங்களை அறிக்கை விட்டு ஞானஸ்நானம் பெற்று சபையில் இருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளை குறிக்கிறது.

நாம் நினைத்துக் கொண்டிருக்கிற கர்த்தருடைய ஜனங்கள் அதாவது நீதிமான்கள் இரட்சிக்கப்படுவது அரிது என்று வேதம் கூறுகிறது. ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்ட பின்பு தான் நீதிமான் ஆக்கப்படுகிறான் நீதிமானாக்கப்பட்ட ஒருவன் திரும்பவும் இரட்சிக்கப்பட வேண்டுமா?

பெற்ற இரட்சிப்பை இழக்க முடியுமா?

முடியும் என்று வேதம் கூறுகிறது.

ஆதாரம் 1:- 2 பேதுரு 1:9-10

இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.

ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.

தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து – இயேசுவை ஏற்றுக் கொண்ட பிறகு அவர் இரத்தத்தில் கழுவப்பட்ட ஒருவன் அதை மறந்து மீண்டும் பாவம் செய்கிறான் என்பதை இந்த வசனங்கள் கூறுகிறது.

ஆதாரம் 2:- 2 பேதுரு 2:20-21

கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.

அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

உலகத்தின் அசுத்தங்களுக்கு தப்பினவர்கள் மறுபடியும் அதில் சிக்கிக் கொள்ள முடியும். தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனைகளை விட்டு விலக முடியும் அதாவது மீண்டும் பாவங்கள் செய்ய முடியும் என்று இந்த வசனங்கள் கூறுகிறது.

ஆதாரம் 3:- 2 பேதுரு 3:14

ஆகையால், பிரியமானவர்களே இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.

இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது நாம் கறை, பிழை இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என இந்த வசனம் எச்சரிக்கிறது இதன் மூலம் கிறிஸ்துவின் வருகையின் போது நாம் கறை உள்ளவர்களும் பிழை உள்ளவர்களும் ஆக முடியும் என்பதை அறிகிறோம்.

இரட்சிப்பை பெற்றதற்குப் பின்பு பாவம் செய்யக்கூடாது

ஆதாரம் :- எபி 10:26-29

26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், 

27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். 

28 மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே. 

29 தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். 

இந்த வசனங்களையும் படித்துப் பாருங்கள் எபி 6:3-8; 12:4,15

இரட்சிப்பை அடைந்த பின்பு மனப்பூர்வமாய் பாவம் செய்வோமானால் பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனி இல்லை என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

அப்படியானால் 

 • இரட்சிப்பை பெற்றதற்குப் பிறகு நாம் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு இருக்கிறதா? 
 • பாவம் செய்யாமல் வாழ முடியுமா? 
 • பாவத்திற்கு தப்புவது எப்படி?

இந்தக் கேள்விகளுக்கு பதிலை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் இரட்சிப்பை குறித்த தேவனுடைய திட்டத்தை குறித்து நாம் முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டும்.

இரட்சிப்பு என்பது மூன்று விதங்களில் செயல்படுகிறது

 1. கடந்த கால இரட்சிப்பு
 2. நிகழ்கால இரட்சிப்பு
 3. எதிர்கால இரட்சிப்பு

A.1. கடந்த கால இரட்சிப்பு

இந்த இரட்சிப்பைக் குறித்து வேதம் பொதுவான இரட்சிப்பு என்று கூறுகிறது.

எபே 2:8

8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. 

ரோம 3:24

24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள், 

ரோம 5:1

1 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். 

யூதா 3

3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது. 

இதை தேவன் நமக்கு கிருபையினால் ஈவாக இலவசமாக நம்முடைய விசுவாசத்தைக் கொண்டு கொடுக்கிறார். 

எந்த விசுவாசம்

ஒரு மனிதன் தான் பாவி என்று ஒப்புக்கொண்டு தேவன் எனக்காக இந்த பூமியில் மனிதனாக வந்து என் பாவங்களை சுமந்து எனக்காக மரித்து என்னை விடுவித்து அவருடைய பிள்ளையாக மாற்றினார். அவர் எனக்காகவே மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து பரலோகம் சென்றார். என்னை பரலோகத்தில் சேர்க்க மீண்டும் வருவார். இதை விசுவாசித்து, இனி நான் பாவம் செய்ய மாட்டேன் அவருக்காக அவருடைய வார்த்தையின் படி வாழ என்னை ஒப்புக் கொடுக்கிறேன். என்று அவன் சொல்லுகிற போது இந்த விசுவாச வார்த்தைகளின் நிமித்தம் அவன் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு நீதிமானாக்கப்பட்டு இரட்சிப்பை பெறுகிறான். இதைத்தான் பொதுவான இரட்சிப்பு அல்லது கடந்த கால இரட்சிப்பு என்று கூறுகிறோம்.

இந்த இரட்சிப்பின் போது விசுவாசிக்கும் அந்த மனிதன் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், அவனுடைய பாவங்கள் எப்பேர்ப்பட்டதாக இருந்தாலும் அவைகள் அனைத்தையும் தேவன் மன்னித்து அவனை நீதிமான் ஆக்குகிறார். அதுவரை அவன் செய்த பாவத்துக்கு தண்டனை நீக்கப்படுகிறது.

B.1. நிகழ்கால இரட்சிப்பு 

நிகழ்கால இரட்சிப்பை குறித்து வேதம் கூறும் போது அதை பூரண இரட்சிப்பு என்று விவரிக்கிறது.

1கொரி 1:18

18 சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. 

பிலி 2:12

12 ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். 

ரோம 13:11

11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படிநடக்கவேண்டும், நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது

இந்த வசனங்கள் அப்போஸ்தலனாகிய பவுல் இரட்சிக்கப்பட்ட சபை விசுவாசிகளுக்கு எழுதியவை ஆகும். இரட்சிக்கப்பட்ட என்று நான் சொல்லும் இந்த வார்த்தை பொதுவான அல்லது கடந்து கால இரட்சிப்பைக் குறிக்கிறது. தேவனை விசுவாசித்து இரட்சிக்கப்பட்ட மனிதன் அந்த இரட்சிப்பில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டி உள்ளது அந்த இரட்சிப்பு பூரணம் அடைய வேண்டும் என்று வேதம் கூறுகிறது. இந்த வசனங்களில் உள்ள சில வார்த்தைகளை கீழே தருகிறேன் அதை நன்றாக கவனியுங்கள்.

இரட்சிக்கப்படுகிற நமக்கோ – கொரிந்து சபையில் உள்ள ஜனங்களுக்கு பவுல் கூறுகிறது இரட்சிக்கப்பட்ட நமக்கோ என்று அல்ல இரட்சிக்கப்படுகிற நமக்கோ என்ற இந்த வார்த்தை இரட்சிப்பு அனுதினமும் நம்மில் தொடர்கிறது என்பதை உறுதி செய்கிறது.

உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். பிலிப்பு சபை ஜனங்களுக்கு பவுல் சொல்லுவது இரட்சிப்பு நிறைவேறி விட்டது என்று அல்ல நிறைவேற என்று கூறுகிறார் எனவே இரட்சிப்பு நிகழ்காலத்தில் தொடர்கிற ஒன்றாக உள்ளது.

நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. ரோமபுரிய சபைக்கு பவுல் சொல்லுகிற போது இரட்சிப்பு சமீபமாய் இருக்கிறது என்கிறார் அது எதிர்காலத்தில் தான் நிறைவேற போகிறது என்பது இதன் பொருளாக உள்ளது.

C.1. எதிர்கால இரட்சிப்பு 

எதிர்கால இரட்சிப்பை குறித்து வேதம் கூறும் போது அதை நித்திய இரட்சிப்பு என்று விவரிக்கிறது.

எபி 9:28

கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.

இயேசு கிறிஸ்து இரட்சிப்பை கொடுப்பதற்கு இரண்டாம் வருகையில் தரிசனம் ஆவார் என்று கூறப்பட்டுள்ளது எனவே எதிர்காலத்தில் இரட்சிப்பு இருக்கிறது என்பதை இது உறுதி செய்கிறது.

1 பேதுரு 1:5

கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

கடைசி காலத்தில் இரட்சிப்பு வெளிப்படும் படி வைக்கப்பட்டிருக்கிறது என்று இந்த வசனம் விவரிக்கிறது.

எபி 1:14

இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?

இரட்சிப்பை இனிவரும் நாட்களில் தான் சுதந்தரிக்கப் போவதாக இந்த வசனம் கூறுகிறது.

இரட்சிப்பு என்பது பாவத்திலிருந்து பெரும் விடுதலையை குறிக்கிறது. ஒரு மனிதன் கடந்த கால பாவத்திலிருந்து விடுதலை பெறுவது மட்டும் அல்ல அவன் நிகழ்கால பாவத்திலிருந்தும் விடுவிக்கப்படுவது அவசியமாக உள்ளது. நிகழ்கால பாவத்திலிருந்து விடுவிக்கப்படுகிற நபருக்கு மட்டுமே எதிர்கால இரட்சிப்பு கிடைக்கிறது.

A.2. கடந்த கால இரட்சிப்பின் விளைவு

இந்தக் கடந்த கால இரட்சிப்பை ஒரு மனிதன் பெரும்போது அதுவரை அவன் செய்த எல்லா பாவத்தின் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுகிறான்.

ரோமர் 5:9

இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

கடந்த கால பாவத்திலிருந்து நம்மை விடுவிப்பது இயேசு கிறிஸ்துவின் இரத்தமே. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் கடந்த கால பாவத்திலிருந்து மட்டுமல்ல அதற்கான தண்டனையிலிருந்தும் நம்மை விடுவிக்கிறது. இந்த விடுதலை தேவன் அவருடைய கிருபையின் நிமித்தம் இரக்கத்தின் நிமித்தம் இலவசமாக கொடுப்பதாக உள்ளது.

கடந்த கால எந்த பாவத்தையும் தேவன் மன்னிக்கிறார் அதற்கு கணக்கு வைப்பதில்லை அதற்கான தண்டனையும் இல்லை எல்லாவற்றிலிருந்தும் விடுதலையை தருகிறார். ஆனால் நிகழ்கால பாவம் அப்படிப்பட்டது அல்ல. நிகழ்கால பாவத்திற்கு தேவன் இரக்கம் வைத்தால் மன்னிப்பு கிடைக்கும் என்றாலும் அதற்கான பாவக்கணக்கும் எழுதப்படும் அந்தப் பாவங்களுக்கான தண்டனையும் வழங்கப்படும்.

யோவான் 17:17

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

கடந்த கால பாவத்திலிருந்து விடுதலையைப் பெற இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தேவை அதைப்போலவே நிகழ்கால பாவத்திலிருந்து ஒரு மனிதன் விடுதலை பெற அல்லது நிகழ்கால பாவத்தில் ஒரு மனிதன் விழாமல் இருக்க வேதவசனம் தேவையாக உள்ளது. தேவனுடைய வார்த்தை மட்டுமே நிகழ்கால பாவத்திலிருந்து நம்மை பாதுகாக்கும். கூடுதலாக இந்த வசனங்களையும் வாசித்துப் பாருங்கள் மீகா 7:19; எபி 8:12; ஏசாயா 43:25.

கடந்த கால இரட்சிப்பு நம்மை கடந்த கால பாவ தண்டனையிலிருந்து மட்டுமே விடுதலை ஆக்கும்.

B.2. நிகழ்கால இரட்சிப்பின் விளைவு 

கடந்த கால இரட்சிப்பு நம்மை கடந்த கால பாவ தண்டனையிலிருந்து விடுதலை செய்வது போல நிகழ் கால இரட்சிப்பு நம்மை நிகழ்கால பாவ வல்லமையிலிருந்து விடுதலை ஆக்குகிறது.

எபி 12:1

ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;

கடந்த கால இரட்சிப்பைப் பெற்ற நமக்கு தொடக்கத்தில் தேவன் மீது வைராக்கியம் , வாஞ்சை , தாகம் , அர்ப்பணிப்பு போன்றவை அதிகமாக இருந்தன. இந்த செயல்பாடுகள் நிகழ்காலத்தில் அதிகரித்திருக்க வேண்டும் மாறாக அவை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது இதற்கு காரணம் நிகழ்கால இரட்சிப்பைக் குறித்த தெளிவு நமக்கு இல்லாமல் இருப்பதே ஆகும்.

எபி 12:4

பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே.

நிகழ்காலத்தில் பாவத்தை அறிந்தும் அதற்கு எதிர்த்து நிற்பது இல்லை. பாவம் என்பது தேவனுடைய சித்தத்தை அறிந்தும் அதை செய்யாமல் இருப்பதே ஆகும். பாவத்தின் வல்லமையிலிருந்து நம்மை இரட்சிப்பது தேவனுடைய வார்த்தையாகிய வசனமே ஆகும். வசனங்களுக்கு கீழ்படியாத வரைக்கும் பாவ வல்லமையில் இருந்து நம்மை பாதுகாக்க முடியாது.

C.2. எதிர்கால இரட்சிப்பின் விளைவு

கடந்த கால இரட்சிப்பு பாவ தண்டனையில் இருந்தும் நிகழ்கால இரட்சிப்பு பாவ வல்லமையிலிருந்தும் விடுவிக்கிறது. எதிர்கால இரட்சிப்பு நம்மை பாவ உலகத்திலிருந்தே விடுதலை செய்கிறது.

1 தெச 4:16-17

16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்

17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 

எதிர்கால இரட்சிப்பு என்பது உயிர்த்தெழுதலை குறிக்கிறது.

எதிர்கால இரட்சிப்பை தேவன் யாருக்கு தருகிறார் 

கடந்த கால இரட்சிப்பை பெற்ற மனிதன் நிகழ் கால இரட்சிப்பில் நிலைத்திருந்தால் அதாவது கடந்த கால பாவத்தின் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒருவன் நிகழ்கால பாவ வல்லமையினால் அகப்படாமல் இருந்தால் அவனுக்கே எதிர்கால இரட்சிப்பாகிய உயிர்த்தெழுதலில் பங்கு கிடைக்கிறது. கடந்த கால பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஒருவன் எதிர்கால இரட்சிப்பை சுதந்தரிப்பது அவனுடைய நிகழ்கால வாழ்க்கையை பொறுத்தே அமைகிறது.

கடந்த கால பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு நிகழ்கால பாவ வல்லமையை மேற்கொள்ள தவறி எதிர்கால இரட்சிப்பை இழந்த  தேவனுடைய பிள்ளைகளைக் குறித்து கீழே உள்ள வசனங்கள் கூறுகிறது.

மத்தேயு 7:22-23

22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 

23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். 

மூன்று இரட்சிப்பைக் குறித்து வேதத்தில் சொல்லப்பட்டுள்ளவை

கடந்த கால இரட்சிப்பு: 

 • யூதா 3 இதற்குப் பெயர் பொதுவான இரட்சிப்பு
 • இதைப் பெற இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் போதும்
 • இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் யாராயிருந்தாலும் சரி அவர்கள் இந்த இரட்சிப்பை பெற முடியும்

நிகழ்கால இரட்சிப்பு

 • இதற்கு வேதம் கூறும் பெயர் பூரண இரட்சிப்பு
 • ஏசா 33:6 – கடந்த கால இரட்சிப்பை பெற்ற ஒருவன் அதை நிகழ்காலத்தில் காத்துக் கொள்ள வேண்டும்.
 • மரணம் வரைக்கும் காத்துக் கொள்ள வேண்டும் அல்லது கிறிஸ்துவின் வருகை வரைக்கும் காத்துக் கொள்ள வேண்டும்.
 • எபி 6:2 – வேதத்தில் உள்ள மற்ற உபதேசங்கள் எல்லாவற்றை காட்டிலும் நிகழ்கால இரட்சிப்பை குறித்த உபதேசம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இதை காத்துக் கொண்டால் மட்டுமே எதிர்கால இரட்சிப்பு கிடைக்கும்.

எதிர்கால இரட்சிப்பு

 • எதிர்கால இரட்சிப்பை குறித்து வேதம் கூறும் போது அதை நித்திய இரட்சிப்பு என்று விவரிக்கிறது.
 • ஏசாயா 45:17- இது எதிர்காலத்தில் நடைபெறும் உயிர்த்தெழுதலை குறிக்கிறது.
 • எபி 5:9- நிகழ்கால இரட்சிப்பில் பூரணம் அடைந்தால் மட்டுமே இந்த இரட்சிப்பு கிடைக்கும்.
 • மத் 24:13- இதைத்தான் வேதம் முடிவு பரியந்தமும் நிலைத்திரு என்று கூறுகிறது.

ஆத்துமாவின் (என்னங்களில்) இரட்சிப்பு

இது நம்முடைய எண்ணங்களில் உண்டாகுகிறது 1 பேதுரு 1:9; 2 கொரி 10:5; ரோமர் 12:2

ஆவியின் (வார்த்தையில்) இரட்சிப்பு

ரோமர் 10:10; 8:10; நீதி 10:19; ராக் 3:2

சரீர (கிரிகைகளில்) இரட்சிப்பு

ரோமர் 8:10-13; 1 பேதுரு 1:15; 1 தெச 5:15

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *