ஞானத்தின் இரகசியம்

ஞானத்தின் இரகசியம்

ஞானத்தின் இரகசியம்

யோபு 11: 6 உமக்கு ஞானத்தின் இரகசியம்  (யங்களை) வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்;……

இரகசியம் என்பதற்கு மறைவானது என்று பொருள். ஞானத்தை அடைவதற்கும் நித்தியஜீவனை பெறுவதற்கும் அதிக தொடர்பு உள்ளது. 

வேதமும் ஞானமும்

ஞானத்தை வேதத்தின் மூலம் மட்டுமே அறிய முடியும். வேதத்திற்கு தெய்வீக ஞான புத்தகம் என்ற பெயரும் உள்ளது. பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள அநேக காரியங்களும் நமக்கு புரியாமல் இருப்பதற்கு காரணம் ஞானம் இல்லாமல் இருப்பதே ஆகும். 

வேதத்தை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் தேவ பயம் அவசியம். அதுவே வேதத்தையும் தேவனையும் அறிவதற்கான திறவுகோல் ஆகும்.

சங்கீதம் 25: 14

கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.

மூன்று வித பயங்கள்

1. மனுஷ பயம்

நீதிமொழிகள் 29: 25

மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

2. பிசாசை குறித்த பயம்

மத்தேயு 14: 26

அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.

3. தேவ பயம் அல்லது கர்த்தருக்கு பயப்படுகிற பயம்

நீதிமொழிகள் 1: 7

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்.

தேவ பயத்தின் நன்மைகள்

 • தேவ பயம் ஞானத்தை கொடுக்கும்
 • ஞானத்தின் ஆரம்பம் நீதி 9:6
 • ஞானத்தை போதிக்கும் நீதி 15:33
 • ஞானத்தின் பொக்கிஷம் ஏசா 33:6

சில ஊழியர்கள் தேவ பயம் இல்லாமலே தங்களுடைய சுய ஞானம் சுய அறிவு தாலந்துகள் மூலம் திறமையாக ஊழியம் செய்கின்றனர் இது தேவ பயத்தின் வழியாக தேவ ஞானத்தால் செய்யப்படும் ஊழியம் அல்ல.

ஞானம் 3 உட்பிரிவுகளைக் கொண்டது

 • அறிவு 
 • புத்தி 
 • விவேகம்

அறிவு

கற்றுக் கொள்வதின் மூலம் அறிவு கிடைக்கிறது.

புத்தி 

கற்றுக்கொண்டதை புரிந்து கொள்வதின் மூலம் புத்தி கிடைக்கிறது.

விவேகம்

புரிந்து கொண்டதை அல்லது விளங்கிக் கொண்டதை செயல்படுத்துவதன் மூலம் விவேகம் கிடைக்கிறது.

வேதத்தில் மூன்று வித ஞானம் சொல்லப்பட்டுள்ளது

1. அஞ்ஞானம் 1 கொரி 2:5,13

 • இதை மனுஷ ஞானம் சுய ஞானம் என்றும் கூறலாம்
 • இந்த ஞானம் சிலருக்கு பிறந்தது முதல் இருக்கும்.
 • இதற்கு கல்வி செல்வம் எதுவும் தேவையில்லை
 • உதாரணமாக படிப்பு அறிவு இல்லாத ஒருவர் நன்கு கணக்குகளை பார்ப்பார்
 • வேதம் இவர்களை அஞ்ஞானிகள் என்று கூறுகிறது

2. விஞ்ஞானம் 

 • இதை உலக ஞானம் பிரபஞ்ச ஞானம் என்றும் கூறலாம்.
 • இவர்களைத்தான் விஞ்ஞானிகள் என்று கூறுகின்றனர்.
 • இவை உயர்ந்த கல்வியின் மூலம் கிடைக்கிறது 1 கொரி 3:19-21
 • உலக ஞானம் அழிந்து போகக் கூடியது 1 கொரி 2:6
 • உலக ஞானத்தில் ஒரு மனிதன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அது அழியக் கூடியதே.

3. மெய்ஞானம் கொலோ 2:2-3 

 • இதைத்தான் தேவ ஞானம் என்று கூறுகிறோம்.
 • தேவனுக்கு உரிய ரகசியத்தை அறிந்து கொள்ளக் கூடிய ஓர் உணர்வு
 • அந்த உணர்வின் பூரணம் தான் ஐஸ்வரியம் பொக்கிஷம்
 • தேவனையும் தேவனின் தெய்வீகத்தையும் அறிந்து கொள்வது மெய்ஞானம் ஆகும்.
 • தேவனைக் குறித்த பூரணத்தையும் அறிவது மெய்ஞானம்
 • இந்த ஞானத்தை உடையவர்களுக்கு மெய்ஞானிகள் என்று பெயர்.
 • தேவனையும் தேவனுடைய தெய்வீகத்தையும் அறிந்து கொள்ளும் மெய்ஞானிகளுக்கு மட்டுமே நித்திய ஜீவன் கிடைக்கும் இதுவே ஞானத்தின் இரகசியம். யோவான் 17:3

A. அஞ்ஞானம் விஞ்ஞானம் 

 • இவை இரண்டும் மனிதனுக்கு நன்மை தரக்கூடியது போல தோன்றினாலும் உண்மையில் அது தேவனை விட்டு பிரிக்க கூடியதாகவே இருக்கிறது.
 • இவைகள் மனிதனுடைய ஆறாம் அறிவில் செயல்படுகிறது.

ஆறு அறிவு 

ஒரு அறிவு 

 • தொடு உணர்வு மட்டும்
 • உடல் மட்டும்
 • மரம் செடி கொடிகள்

இரண்டு அறிவு

 • தொடு உணர்வு
 • சுவை உணர்வு
 • உடல் , வாய் உள்ளவை
 • மண்புழு வகைகள்

மூன்று அறிவு 

 • தொடு உணர்வு
 • சுவை உணர்வு
 • நுகர் உணர்வு
 • உடல் , வாய் , மூக்கு
 • எரும்பு வகைகள் 

நான்கு அறிவு 

 • தொடு உணர்வு
 • சுவை உணர்வு
 • நுகர் உணர்வு
 • காட்சி உணர்வு
 • உடல் , வாய் , மூக்கு , கண்கள்

ஐந்து அறிவு 

 • தொடு உணர்வு
 • சுவை உணர்வு
 • நுகர் உணர்வு
 • காட்சி உணர்வு
 • கேட்கும் உணர்வு
 • உடல் , வாய் , மூக்கு , கண்கள் , செவிகள்
 • விலங்குகள் , பறவைகள்

ஆறு அறிவு 

 • தொடு உணர்வு
 • சுவை உணர்வு
 • நுகர் உணர்வு
 • காட்சி உணர்வு
 • கேட்கும் உணர்வு
 • பேச்சு உணர்வு
 • பகுத்தறிவு
 • உடல் , வாய் , மூக்கு , கண்கள் , செவிகள்
 • மனிதன்

சில குறிப்புகள் 

கடவுள் இல்லை என்பவனை உலகம் பகுத்தறிவு உள்ளவன் என்றும் வேதம் மூடன் என்றும் கூறுகிறது.

மெய் அறிவு இல்லாதவர்களை அதாவது தேவனை அறிகிற அறிவு இல்லாதவர்களை வேதம் மிருகம் என்று கூறுகிறது. ஒரே 10:14,21

தேவப் பிள்ளைகளை விட மற்றவர்கள் அறிவாளிகளாக இருக்க காரணம் 

அறிவு என்பது உலக ஞானத்தை குறிக்கிறது மெய் அறிவு என்பது தேவனை அறிகிற அறிவை குறிக்கிறது. இந்த உலகத்தில் உள்ள மனிதர்களில் அதிகப்படியாக உலகம் ஞானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் இவர்களை விஞ்ஞானிகள் பெரும் பட்டதாரிகள், தொழிலதிபர்கள், நிபுணர்கள், ஆய்வாளர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

லூக்கா 16: 8 

அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.

எசேக்கியேல் 28: 3 

இதோ, தானியேலைப்பார்க்கிலும் நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல.

இந்த வசனம் பிசாசை குறித்து பேசுகிறது தானியலை பார்க்கிலும் நீ ஞானவான் என்று பிசாசை குறித்து சொல்லப்பட்டுள்ளது. இங்கு சாலமோனின் பெயரைக் குறிப்பிடாமல் தானியலின் பெயரை குறிப்பிட காரணம் சாலமோன் உலக ஞானம் உள்ளவன் தானியேல் மெய்ஞானம் உள்ளவன். தேவனை அறிகிற அறிவு தானியங்களை விட பிசாசிடம் அதிகமாக உள்ளது. இதன் பொருள் தானியலை விட பிசாசு தேவனை அதிகமாக அறிந்தவன் என்பதாகும்.

எசேக்கியேல் 28: 17 

உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப்பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.

பெருமையின் நிமித்தம் பிசாசு தன்னுடைய மெய் ஞானத்தை கெடுத்துக் கொண்டான்.

நம்மை விட உலகத்தில் அதிக ஞானம் இருக்க காரணம் 

1யோவான் 5: 19 

நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.

உலகம் முழுவதும் பிசாசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உலக ஞானத்தை கேட்டால் பிசாசு உடனடியாக கொடுத்து விடுவான் ஆனால் தேவனுடைய பிள்ளைகளுக்கு மெய்ஞானத்தை தேவனிடத்தில் கேட்டால் அவர் கொடுப்பது இல்லை காரணம் அவரை அறிந்து கொள்ளுவது தான் மெய்ஞானம் அவரை அறிகிற வரைக்கும் நமக்கு மெய்ஞானம் கிடைக்காது.

B. தேவ ஞானம் 

1கொரிந்தியர் 2: 7 

உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.

தேவ ஞானம் என்றால் என்ன?

 1. கிறிஸ்துவே தேவ ஞானம் – 1 கொரி 1:24,31
 1. கிறிஸ்துவுக்குள் தேவன் ஞானம் இருக்கிறது – கொலோ 2:3
 1. தேவனுடைய வார்த்தையே தேவ ஞானம் – ஞான போஜனம் ஞான பானம் ஞானப்பால் என்று வேதத்தில் குறிப்பிடுவது எல்லாம் தேவனுடைய வார்த்தையை குறிப்பதாகும். – 1 கொரி 10:4; 1 பேதுரு 2:3

மெய்ஞானத்தின் அளவுகள் மற்றும் விலை மதிப்புகள்

 1. மெய்ஞானம் விலை மதிப்பு இல்லாதது (யோபு 28:12-23,28)
 1. ஞானத்தின் நீளம் ஆழம் உயரம் (யோபு 11:6-9)
 1. பிதாவின் ஞானம் ( தானி 2:20-21)
 1. ஆவியானவரே ஞானம் (ஏசாயா 11:2; 1 கொரி 12:8-12)

தேவ ஞானத்தை விளங்கிக் கொள்ளுவது எப்படி?

வெளிப்பாடு மூலமே தேவ ஞானத்தை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

வெளிப்பாடு என்றால் என்ன?

வேத வசனங்களை அறிவது தான் வெளிப்பாடு ஆகும்.

 1. வேதத்தை தேடுவதன் மூலம் (ஏசாயா 34:16)
 1. வேதத்தை ஆராய்வதன் மூலம் (யோவான் 5:39)
 1. வேதத்தை தியானிப்பதன் மூலம் (சங்கீதம் 1:2)

வார்த்தையைக் கொண்டு வார்த்தையின் மூலம் வார்த்தையை ஆராய்வதே மெய்ஞானம்

வெளிப்பாட்டின் அடையாளம்

 1. ஆத்துமாவில் ஜீவன் உண்டாகும் (சங்கீதம் 19:7)
 1. ஆவியில் அக்கினி உண்டாகும் (ரோமர் 12:11)
 1. சரீதத்தில் நீதி (வெளிச்சம்) உண்டாகும் (மத் 5:16; ரோமர் 12:9-21)

மெய்ஞானம் மனிதனை ஞானவனாக மாற்றுகிறது

 1. ஞான ஆத்துமா (சங்கீதம் 90:12; நீதி 14:33)
 1. ஞான ஆவி (நீதி 10:13,31) இதில் குறிப்பிடப்படும் உதடு வாய் என்கிற சொல் வார்த்தையை குறிக்கிறது. வார்த்தை என்பது ஆவியை குறிக்கிறது (வசனம் ஆவியாயும் ஜீவனுமாயும் இருக்கிறது)
 1. ஞான சரீரம் (கொலோ 4:5; சங்கீதம் 119:35)

ஜனங்களை சத்தியவான்களாகவும் பரிசுத்த ஜாதியாகவும் பரிசுத்த மார்க்கமாகவும் மாற்றி அதில் நிலைத்திருக்கும் படிக்கு வழி நடத்தி செல்வதே ஊழியம் ஆகும்.

கீழே தரப்படும் சில வசனங்களை நீங்கள் வாசித்து பாருங்கள்

கொலோ 1:28; 1 கொரி 2:6; 8:1; 8:20; நீதி 8:1

கொலோ 1:28 ல் இயேசு கிறிஸ்துவே ஞானம் – இயேசு கிறிஸ்துவை ஒரு மனிதன் நேசித்தால் அவன் மெய்ப்பொருளை அடைகிறான்.

ஞானத்தின் இரகசியம் pdf download

Leave a Reply