பரலோகம்

பரலோகம்

பரலோகம்

“… தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய்… ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு” (பிர. 5:2,7).

பரலோகம் எனப்படுவது எது?

1. பரலோகம் தேவனுடைய இருப்பிடம்

“தேவன் பரலோகத்தின் உன்னதங் களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங் களின் உயரத்தைப் பாரும்…” (யோபு 22:12). உபாகமம் 26:15 வசனத்தையும் பார்க்கவும்.

2. பரலோகம் தேவனுடைய சிங்கா சனத்தின் இடமாக இருக்கிறது

“கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவ ருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளு கிறது” (சங். 103:19). ஏசாயா 66:1 வசனத்தையும் பார்க்கவும்.

3. பரலோகம் தேவனுடைய பரிபூரண மகிமையின் இடமாக இருக்கிறது

“நான் பார்த்துக் கொண்டிருக்கை யில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப் போலத் துப்புரவாகவும் இருந் தது; அவருடைய சிங்காசனம் அக்கினி ஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது; அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது…” (தானி. 7:9,10). அப்போஸ்தலர் 7:55 வசனத்தையும் பார்க்கவும்.

4. பரலோகம் நீதியுள்ளவர்களாக மரித்த விசுவாசிகளின் இருப் பிடமாக இருக்கிறது

“பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை யல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்” (2கொரி.5:1).

5. பரலோகம் அனைத்து விசுவாசிகளின் வருங்கால இருப்பிடமாக இருக்கிறது 

“இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக் குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்” (வெளி. 7:9,10).

B. பரலோகம் எப்படிப்பட்டது?

நமது கற்பனைக்கு அப்பாற் பட்ட ஓர் அற்புதமான இடம்தான் பரலோகம் (1கொரி. 2:9; 13:12). பரலோகம் பரிசுத்தமான, மகிமை நிறைந்த மற்றும் அழிவில்லாத ஓரிடமாகும்.

பரலோகம் எப்படியிருக்கிறது என்பதைப் பற்றி வேதாகமம் முழுமையாக விவரிக்காவிட்டாலும், அது எப்படிப்பட்டது என்பதற்கு சில அம்சங்களைச் சுட்டிக்காட்டி யுள்ளது. இதோ: 

1. மகிமை நிறைந்த ஓரிடம்

“அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள்…” (மத். 13:43).

2.தொடர்ந்து ஆராதனை நடைபெறும் ஓரிடம்

“இவைகளுக்குப் பின்பு, பரலோ கத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்:

“அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம் முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரி யது…. அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம் போலவும், பலத்த இடிமுழக்கம் போலவும், ஒரு சத்த முண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமை யுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம் பண்ணுகிறார்…” (வெளி. 19:1-6).வெளிப் படுத்தல் 5:11,12 வசனங்களையும் பார்க்கவும்.

3. முடிவற்ற ஓரிடம்

“இவ்விதமாய், நம்முடைய கர்த்த ரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து வினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்” (2 பேதுரு 1:11). 1பேதுரு 1:4 வசனத்தையும் பார்க்கவும்.

4. தீமையின் கறைபடாத ஓரிடம் 

“தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்த கத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்” (வெளி. 21:27). எபேசியர் 5:5 வசனத்தையும் பார்க் கவும்.

பரலோகத்திலிருந்து வருகிற புது எருசலேமைப் பற்றி வெளிப்படுத்த லின் புத்தகம் விவரிக்கிறது. அங்கே கீழ்க்கண்டவைகள் இராது:

  • 1.இரவு (22:5)
  •  2.சாபம் (22:3)
  • 3.வருத்தம் (21:4)
  • துக்கம், அலறுதல் (21:4)
  • மரணம் (21:4)

ஏனெனில் பரலோகத்தின் இயல்பு, தேவனுடைய இயல்பால் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக் கிறது. தேவன் எப்படிப்பட்டவர் என்பது பற்றிய அவரது னத்தின் பூரண பிரசன் வெளிப்பாடாக இருக்கிறபடியால், அது பரலோகம் பரிசுத்தமும், பூரண மகிமையும் நிறைந்த, முடிவற்ற ஓர் இடமாக இருக்கிறது.

C.பரலோகத்துடனுள்ள நமது பிணைப்பு

விசுவாசிகளாக நாம் பரலோகத் துடனான ஒரு சிறப்பான பிணைப் பில் இந்த உலகத்தில் வாழ்கிறோம். ஏனென்றால்:

1. நாம் பரலோகத்திற்குரியவர்கள்

“நீங்களோ… ஜீவனுள்ள தேவ னுடைய நகரமாகிய பரம எருசலேமி னிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற் பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும்… வந்து சேர்ந்தீர்கள்” (எபி. 12:22,23). பிலிப்பியர் 3:20 வசனத்தையும் பார்க்கவும்.

2.நாம் அங்கே உன்னதங்களிலே அமர்த்தப்பட்டிருக்கிறோம்

 “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங் களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்” (எபே. 2:7),

3. நமது ஜீவனின் ஆதாரம் அங்கே இருக்கிறது

“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித் திருக்கிறார்” (எபே.1:3). கொலோசெயர் 3:1-4 வசனங்களையும் பார்க்கவும்.

4. நமது பெயர்கள் அங்கே எழுதப்பட்டுள்ளன

“ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப் படாமல், உங்கள் நாமங்கள் பர லோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்…” (லூக்கா 10:20). எபிரெயர் 12:23 வசனத்தையும் பார்க் கவும்.

5.அங்கு வாழும் ஒருவரால் நாம் அனுப்பப்படுகிறோம்

“நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல… நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்பு கிறேன்” (யோவான் 17:16,18). 2 கொரிந்தியர் 5:20 வசனத்தையும் பார்க்கவும்.

6.நாம் அதையே நோக்கியிருக்கிறோம்

“மேலும் காணப்படுகிறவைகளை யல்ல, காணப்படாதவைகளை நோக்கி யிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவை கள், காணப்படாதவைகளோ நித்திய  (2. corin 4:17,18). எபிரெயர் 11:9,10,14-16 வசனங்களை யும் பார்க்கவும்.

7. நமது பொக்கிஷம் அங்கே இருக்கிறது

“அவர்… அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்திரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி… நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்… அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது” (1 பேதுரு 1:4,5), மத்தேயு 6:19-21 வசனங்களையும் பார்க்கவும்.

8.நாம் அங்கே அழைக்கப்பட்டிருக்கிறோம்

….ஒன்று செய்கிறேன், பின்னான வைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி. 3:13,14).

இயேசுவானவர்தாமே, தாம் பரலோகத்திற்குத் திரும்பிச் செல்லு முன்னர், ஒவ்வொரு விசுவாசிக்கும் தனிச் சிறப்பான ஒரு வாக்குத் தத்தத்தை அருளியுள்ளார்: “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவ னிடத்தில் விசுவாசமாயிருங்கள், என் னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ் தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந் தால், நான் உங்களுக்குச் சொல்லி யிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக் காக ஆயத்தம்பண்ணப் போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்” (யோவான் 14:1-3),17:24 வசனத்தையும் பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *