திரும்பி வரும் இயேசு
“…நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரி விக்கிறீர்கள்” (1கொரி. 11:26).
திரும்பி வரும் இயேசு
A. அவர் திரும்பி வருவதைப் பற்றிய வாக்குத்தத்தம்
இந்த உலகத்திற்குத் திரும்ப வரும் யேசுவானவரின் இரண்டாம் வருகையைப் பற்றி ஒவ்வொரு கிறிஸ்தவனும் அறிந்திருப்பது மிக முக்கியமானது. புதிய ஏற்பாட்டின் நூலாசிரியர்கள் 300 முறைகளுக்கு மேல் அவரது இரண்டாம் வருகையைப் பற்றித் தெளிவான நிச்சயத்துடன் குறிப்பிட்டுள்ளார் கள். இரண்டாம் வருகையைப் பற்றி நாம் முதலாகத் தெரிந்துகொள்ள வேண்டிய காரியம் அது நிச்சய மாக நிகழவிருக்கிறது என்பதே!
1. இயேசுதாமே தமது இரண்டாம் வருகையைப் பற்றிக் கூறினார்
“அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமை யோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்” (மத். 24:30). யோவான் 14:2,3 வசனங்களையும் பார்க்கவும்.
2.தேவதூதர்கள் அதை முன்னறிவித்தார்கள்
“அவர் போகிறபோது, அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ வெண்மை யான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று; கலிலே யராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்” (அப். 1:10.11).
3. ஆதிக் கிறிஸ்தவர்கள் இதைப் பற்றிக் கூறி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டினார்கள்
“ஏனெனில், கர்த்தர்தாமே ஆர வாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர் கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப் போம். ஆகையால் இந்த வார்த்தை களினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்” (1தெச. 4:16-18). வெளிப் படுத்தல் 1:7 வசனத்தையும் பார்க்கவும்.
4. பரிசுத்த ஆவியானவர் இதற்குச் சாட்சி கூறுகிறார்
“இதற்கு நம்மை ஆயத்தப்படுத்து கிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே (2கொரி.5:5).
“இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையா யிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமி யின் நற்பலனை அடைய வேண்டு மென்று, முன்மாரியும் பின்மாரியும், வருமளவும் நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து உங்கள் இருதயங் களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே” (யாக். 5:7-8). எபிரெயர் 10:37 வசனத்தையும் பார்க்கவும்.
B. இயேசுவானவர் எப்படித் திரும்ப வருவார்?
1.சற்றும் எதிர்பாராதவிதமாக
“சகோதரரே, இவைகள் நடக்குங் காலங்களையும் சமயங்களையுங் குறித்து உங்களுக்கு எழுத வேண்டுவ தில்லை. இரவிலே திருடன் வருகிற விதமாய்க் கர்த்தருடைய நாள் வரு மென்று நீங்களே நன்றாய் அறிந்திருக் கிறீர்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும் போது… அழிவு சடுதியாய் அவர்கள் மேல் வரும்…” (1தெச. 5:1-3). 4-11 வசனங்களையும் பார்க்கவும்.
2.மின்னலைப் போல
“மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்” (மத். 24:27). லூக்கா 17:24 வசனத்தையும் பார்க்கவும்.
3. அவர் சென்றதுபோல அப்படியே
“…இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத் துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப் படியே மறுபடியும் வருவார்…” (அப். 1:10,11).
4.மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும்
“அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமை யோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்” (லூக்கா 21:27).
5. அனைவருடைய கண்களுக்கும் முன்பாக
“இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்பு வார்கள். அப்படியே ஆகும், ஆமென்” (வெளி. 1:7).
C. வருகையில் நிகழவிருக்கும் தெளிவான காரியங்கள்
1. காலங்களின் இரகசியம் நிறைவேறும்
“இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறி வித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப் போகிறபோது தேவ ரகசியம் நிறை வேறும்…” (வெளி. 10:6,7). ரோமர் 16:25,26 வசனங்களையும் பார்க்கவும்.
2.ஆண்டவருடைய மக்கள் தங்கள் முழு மகிமைக்குள் பிரவேசிப்பார்கள்
“நம்முடைய குடியிருப்போ பரலோ கத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்த ராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக் கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின் படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” (பிலி. 3:20,21), 1 கொரிந்தியர் 15:35-53 வசனங்களையும் பார்க்கவும்.
3. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள்
“கர்த்தராகிய இயேசுவை எழுப்பின வர் எங்களையும் இயேசுவைக் கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்கு முன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக் கிறோம்” (2கொரி. 4:14). யோவான் 6:40; 11:25 வசனங்களையும் பார்க் கவும்.
4. இன்னும் உயிரோடிருக்கும் விசு வாசிகள் கூட்டிச் சேர்க்கப்படு வார்கள்
“வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனை முதற்கொண்டு மறுமுனை மட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்’ (மத். 24:31).
5. படைப்பு அதன் தளையி லிருந்து விடுவிக்கப்படும்
“மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக் கொண் டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டி யானது அழிவுக்குரிய அடிமைத்தனத் தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவ னுடைய பிள்ளைக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது” (ரோமர் 8:19-21). 22ஆம் வசனத்தை யும், ஏசாயா 35:1-7 வசனங்களையும் பார்க்கவும்.
6.விரோதிகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்
“அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத் தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். எல்லாச் சத்துருக் களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப் போடும் வரைக்கும், அவர் ஆளுகை செய்ய வேண்டியது” (1கொரி. 15:24,25). 2தெசலோனிக்கேயர் 1:7-10; 2:8 வசனங்களையும் பார்க்கவும்.
7. சாத்தான் கட்டப்படுவான்
“ஒரு தூதன் பாதாளத்தின் திறவு கோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக் கொண்டு வானத்தி லிருந்திறங்கி வரக் கண்டேன். பிசா சென்றும் சாத்தானென்றும் சொல்லப் பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து…” (வெளி. 20:1,2). 3,7-10 வசனங்களையம் வாசிக்கவும்.
8. நியாயத்தீர்ப்பு வழங்கப்படும் “உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்
களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப் படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக் கிறதே. தேவனை அறியாதவர்களுக்கும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர் களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்… அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையி லிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்” (2தெச. 1:6-10).
9. என்றுமே அழிக்கப்படாதபடி ஒரு இராஜ்யம் உருவாக்கப்படும்
“அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை… அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்” (தானி. 2:44). வெளிப்படுத்தல் 19:15,16 வசனங் களையும் பார்க்கவும்.
திரும்பி வரும் இயேசு pdf